Friday, March 15, 2024

கோடி_கோடியாய்_கடன்

கோடி_கோடியாய்_கடன்

வைத்திருந்தாலும் கவலைப்படாமல் மகா பெரியவா சொன்ன இந்த பரிகாரத்தை கேளுங்களேன். கடன் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போகும்.

எவ்வளவு பெரிய கஷ்டத்திற்கும் மிக மிக சுலபமான தீர்வை கொடுக்கக் கூடிய மகா சக்தியை கொண்டவர் தான் மகா பெரியவா. இந்த மகா பெரியவா சொன்ன பரிகாரங்களை செய்து பலன் அடைந்தவர்கள் ஏராளமானோர். அப்படி ஒரு பக்தனுடைய கதையைத்தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். 

மகா பெரியவாவை பார்ப்பதற்கு ஏராளமான பக்தர்கள் மடத்திற்கு வருகை தருவார்கள். நிறைய கூட்டம் இருக்கும். அந்த வரிசையில் ஒரு பக்தன் கண்களில் கண்ணீரோடு முகத்தில் வாட்டதோடு வந்து மகா பெரியவா அவர்களைப் பார்த்து ஆசீர்வாதம் வாங்கிக்கொண்டு, குங்குமத்தை பிரசாதமாகவும் வாங்கிக் கொண்டு செல்கின்றான்.

இதேபோல மூன்று நாட்களும் நகர்ந்து சென்றது. மூன்று நாட்களும் மகா பெரியவா, கஷ்டத்தில் வந்த அந்த ஒரு பக்தனை கவனித்துள்ளார். நான்காவது நாளும் அந்த பக்தன் கஷ்டத்தோடு வந்து, சொல்ல வந்த கஷ்டத்தை சொல்லாமல் பிரசாதத்தை வாங்கிக் கொண்டு மஹா பெரியவாவை கடந்து சென்ற போது, மகா பெரியவா அந்த பக்தனின் கைபிடித்து இழுத்து, கூப்பிட்டு ‘சொல்ல வந்த கஷ்டத்தை ஏன் சொல்லாமல் செல்கிறாய்’ என்று கேட்டபோது, பின்பு கண்கலங்கி கஷ்டத்தை அப்படியே சொல்லத் தொடங்கினான் அந்த பக்தன்.

‘தீர்க்கவே முடியாத பணக்கஷ்டம். அள்ளி அள்ளிக் கொடுத்த எங்களுடைய குடும்பம் இப்போது கிள்ளி கொடுப்பதற்கு கூட எதுவும் இல்லாமல் நிற்கின்றது. அன்றாட வாழ்க்கையை நடத்திச் செல்ல முடியாத எனக்கு கோடி கோடியாக இருக்கும் கடனை அடைப்பதற்கான வழியே தெரியவில்லை. என்ன செய்வது என்றே புரியவில்லை’. என்றவாறு கஷ்டத்தோடு கண்கலங்க பிரச்சனைகளை கொட்டி தீர்த்தார் அந்த பக்தன்.

எல்லா பிரச்சனைகளையும் பொறுமையாக கேட்டுக் கொண்ட மகா பெரியவா கஷ்டத்தில் வந்த அந்த பக்தனை பார்த்து, ‘உன்னுடைய வீட்டில் ஒரு கிணறு இருக்கிறது அல்லவா? அந்த கிணறில் நிரம்ப தண்ணீர் இருக்கிறது அல்லவா? என்று கேட்கின்றார்’. இவருடைய கஷ்டத்திற்கும் கிணற்றில் இருக்கும் தண்ணீருக்கும் என்ன சம்பந்தம் என்று அங்கு உள்ளவர்களும் யோசிக்க தொடங்கி விட்டார்கள். இருந்தாலும் மகா பெரியவா சொல்கின்ற விஷயத்தை செவிகொடுத்து கேட்க வேண்டும். அதுதானே மரியாதை. அதுதானே பக்தி.

என்னுடைய வீட்டில் கிணறு இருக்கிறது அது நிரம்ப இளநீர் போல சுவையான தண்ணீரும் இருக்கிறது என்று சொல்கிறான் அந்த பக்தன். ‘இன்னும் ஒரு சில நாட்களில் ஆடி மாதம் வரப்போகின்றது. பக்தர்கள் கோவிலுக்கு திரளாக செல்வார்கள். வெயில் சமயம் என்பதால் பக்தர்களுக்கு உதவியாக இருக்கும் வகையில், உன் கிணற்றில் இருந்தே தண்ணீர் எடுத்து பாதை முழுவதும் தண்ணீர் பந்தல் அமைத்து விடு. தண்ணீர் பந்தல் அமைக்கும் போது பானையில் தண்ணீர் நிரப்பும்போது ஹரே கிருஷ்ணா! ஹரே ராம! மந்திரத்தை மனதார உச்சரித்துக் கொண்டே இரு.’ என்று ஒரு பரிகாரத்தை சொல்கிறார் மகா பெரியவா.

பக்தனும் இதைக் கேட்டுக் கொண்டு மகா பெரியவா சொன்னது போலவே பரிகாரத்தை செய்து விட்டான். தாகத்தில் வந்த பக்தர்களுக்கு தண்ணீரும் கிடைத்தது. இந்த பரிகாரம் செய்து முடித்த ஒரு சில நாட்களிலேயே பக்தனின் சொந்த ஊரான அந்த கிராமத்திலிருந்து ஒரு செய்தி வருகின்றது. ஏதோ ஒரு பூர்வீக சொத்து பத்திரம் பக்தனின் தாத்தா பெயரில் உள்ளது.

அந்த சொத்தை விற்றால் ஒரு பெரிய தொகை கிடைக்கும் என்ற ஒரு செய்தி. அந்த பக்தனும் சொத்து விவகாரங்களை சரியாக முடித்து சொத்தை விற்று கைக்கு வந்த பணத்தை கடனாளிகளுக்கு திருப்பி கொடுத்துவிட்டான். போக மீதம் ஒரு சிறு தொகையும் இவனுடைய கையில் இருப்பு இருந்தது. பாருங்கள் எவ்வளவு அற்புதமான பரிகாரம். ஒரு தண்ணீரை தானமாக கொடுத்ததற்கே இவனுடைய தீரா பரம்பரை கடன் தீர்த்து விட்டது. மகா பெரியவாரிவா அவர்கள் நிகழ்த்திய பல அற்புதங்களில் இதுவும் ஒன்று.

நமக்கு எவ்வளவு கஷ்டம் இருந்தாலும் சரி, நம்மிடம் இருக்கக்கூடிய பொருளை அந்த இறைவனின் பெயரைச் சொல்லி தானமாக கொடுக்த்து அடுத்தவர்களுக்கு உதவும் போது போது, நம் கஷ்டம் தீருவதற்கு ஏதாவது ஒரு வழியை அந்த இறைவன் நமக்கு கொடுப்பான். நீங்களும் இதை பின்பற்றித்தான் பாருங்களேன்.

சிவாலய ஓட்டம்

'வாட்டம் தீர்க்கும் சிவாலய ஓட்டம்'....''சிவாலய ஓட்டம்'':8-3-2024.'நாடும் நகரமும் நற்றிருக் கோயிலும்
தேடித் திரிந்து சிவபெரு மான்என்று
பாடுமின் பாடிப் பணிமின் பணிந்தபின்
கூடிய நெஞ்சத்தைக் கோயிலாக் கொள்வனே' என்கிறது திருமூலரின் திருமந்திரம்.ஆம்!அதற்கேற்ப சிவபெருமானைத்தேடி,சிவராத்திரி நாளில் ஓடி  சிவனருளை நாடிப்பெற்றுக்கொள்கின்றனர்.இப்படி சிவனை நாடி,திருமுறைப் பாடி,ஓடி ஓடிச்சென்று வழிபடுகிறார்கள்.தற்போது சிவராத்திரி நன்னாளில்  நடந்தும்,ஓடியும்,சைக்கிள் மூலமாகவும்,கார்,பைக் மூலமாகவும் சென்று வழிபடுகிறார்கள்.கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 12 சிவாலயங்களை மாசி மகா சிவராத்திரி அன்று அடியவர்கள் காலை முதல் துவங்கி சிவராத்திரி இரவு மறுநாள் அதிகாலைவரை ஓடிச் சென்று வழிபடுவதே சிவாலய ஓட்டம் ஆகும்.சிவாலய ஓட்டமானது சுமார் 118 கிமீ தூரத்தை உள்ளடக்கியது.சிவராத்திரிஅன்று காலையில் காவி வேட்டியும் காவித்துண்டும் அணிந்து,ருத்திராட்சம் அணிந்து, வெறுங்காலுடன் சிறிய
 விபூதி பை எடுத்துக்கொண்டு,பனை ஓலை விசிறியுடன் சிவாலய ஓட்டம் ஓட ஆரம்பிப்பர்.திருநீற்றுப்பையில் அந்தந்த சிவாலயங்களில் தரும் திருநீற்றை வைத்துக்கொள்வார்கள்.'அண்டத்தவர் பணிந்து ஏத்தும் ஆலவாயான் திருநீறு'' அல்லவா அது.கையிலிருக்கும் விசிறியால் கருவறையில் இருக்கும் சிவலிங்கத்துக்கு வீசி,பூஜை செய்கிறார்கள்.சிவாலய ஓட்டம் நிகழ்ச்சியின் முதற்கோயிலான முஞ்சிறை என்ற திருமலையில் ஈசனை வணங்கி விட்டு ஓட ஆரம்பிப்பர் அடியவர்கள்.அப்போதிலிருந்து பன்னிரண்டாவது கோயிலான திருநட்டாலம் ஆலய தரிசனம் முடிக்கும்வரை 'கோவிந்தா,கோபாலா...தாணு நாதா..சிவாயநம...இடைமருதா
ஐயாறா...ஆரூரா...கூத்தபிரானே..அருணாசலா சோணாசலா', ''அப்பனே..சிவனே..வல்லபா சங்கர நாராயணா'' எனும் கோஷங்களை ஒலித்தபடியே இருப்பார்கள்.சிவாலய ஓட்ட 12 சிவாலயங்கள் பின்வருமாறு:''முஞ்சிறை திருமலை சூலபாணி மகாதேவர் திருக்கோயில்,திக்குறிச்சி மகாதேவர் திருக்கோயில்,திற்பரப்பு மகாதேவர் திருக்கோயில்,திருநந்திக்கரை நந்தீஸ்வரர் திருக்கோயில்,பொன்மனை தீம்பிலாங்குடி மகாதேவர் திருக்கோயில்,திருபன்னிபாகம் சிவன் திருக்கோயில், கல்குளம் நீலகண்ட சுவாமி திருக்கோயில்,மேலாங்கோடு சிவன் திருக்கோயில்,திருவிடைக்கோடு மகாதேவர் திருக்கோயில், திருவிதாங்கோடு சிவன் திருக்கோயில்,திருபன்றிகோடு மகாதேவர் திருக்கோயில்,திருநட்டாலம் சங்கர நாராயணர் மற்றும் அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில்'' என்பனவாகும்.பாண்டவர்களின் தருமர் ஒருமுறை ராஜகுரு யாகம் ஒன்றை நிறைவேற்ற புருஷா மிருகத்தின் (வியாக்ரபாதர்) பால் தேவைப்பட்டது.அந்த ராட்சத மிருகத்துக்கு சிவன் மீது மிகுந்த பக்தியும்,விஷ்ணு மீது மிகுந்த வெறுப்பும் உண்டு.இதனால் வியாக்ரபாத
மகரிசிக்கு சிவனும்,விஷ்ணுவும் ஒன்று என உணர்த்த நினைத்த கண்ணபிரான் பீமனிடம் புருஷா மிருகத்தின் பால் கொண்டு வர கட்டளையிட்டார்.கட்டுரையாக்கம்:குமரி.சிவ.அ.விஜய் பெரியசுவாமி.,கூடவே 12 ருத்திராட்சங்களை பீமனின் கையில் கொடுத்து,உனக்கு ஏதாவது ஆபத்து வந்தால் இதில் ஒரு ருத்திராட்சத்தைக் கீழே போட்டுவிட்டு 'கோபாலா கோவிந்தா' எனச்சொல் என்று கூறி அனுப்பி வைத்தார்.பீமன் புருஷாமிருகத்தை தேடி கானகம் வந்தான்.அன்று மகா சிவராத்திரி நன்னாள்.அங்கே புருஷாமிருகம் சிவதவத்தில் முறளியடத்துப் பாறை எனும் முஞ்சிறை திருமலையில் சிவபூஜை செய்து கொண்டிருந்தது.''சோணாசலா அருணாசலா...மகாதேவா..திருக்கயிலை நாதா..தாணு நாதா..இடைமருதா..கூத்தபிரானே..ஆரூரா..ஐயாறா' என சொல்லி சிவபூஜையில் ஆழ்ந்திருந்தது.அங்கு பீமன் சென்று ''கோபாலா..கோவிந்தா'' என்று கூறி புருஷா மிருகத்தை சுற்றிவந்து அதன் சிவராத்திரி சிவபூஜைக்கு இடையூறு செய்தான்.''கோபாலா..கோவிந்தா'' என பீமன் திருமாலின் திருநாமத்தைக் கூறியபடியே ஓடினான்.திருமாலின் திருநாமத்தைக் கேட்டதும் புருஷாமிருகம் மிகவும் கோபமடைந்து பீமனை துரத்த ஆரம்பித்தது.உடனே பீமன் ஒரு ருத்திராட்சத்தை அந்த இடத்தில் போட்டான்.உடனே அந்த இடத்தில் ஒரு சிவலிங்கம் உருவாகியது.உடனே புருஷாமிருகம் ''சோணாசலா அருணாசலா ..மகாதேவா..திருக்கயிலை நாதா..தாணு நாதா..இடைமருதா..கூத்தபிரானே..ஆரூரா..ஐயாறா' எனச் சொல்லி சிவலிங்க பூஜையை தொடங்கி விடுகிறது.சிறிது நேரம் கழித்து பீமன், ‘கோபாலா
கோவிந்தா’ என குரல் எழுப்பி பால் பெற முயன்றபோது  புருஷாமிருகம் கோபமுற்று மீண்டும் பீமனை துரத்திச் சென்று பற்றிக்கொள்ள எத்தனிக்கும்போது அடுத்த ருத்திராட்சத்தை அங்கு போட்டுவிட்டு ஓடத்தொடங்கினான் பீமன்.இதனால் அந்தஇடத்திலும் ஒரு சிவலிங்கம் உருவானது.உடனே பீமனை விடுத்து சிவலிங்க பூஜையில் ஆழ்ந்தது புருஷாமிருகம்.மறுபடியும் பீமன் ஓட,புருஷாமிருகம் துரத்த,பீமன் ருத்திராட்சம் போட, இவ்வாறு 12 ருத்திராட்சங்களும் 12 சிவத்தலங்களை
உருவாக்கி விடுகிறது.இதில் 12வது ருத்திராட்சம் விழுந்த திருநட்டாலத்தில் ஈசனுடன் கிருஷ்ணர் இணைந்து சங்கர நாராயணனாக புருஷாமிருகத்துக்கு திருக்காட்சி அளித்தார்.கூடவே ஈசன் அர்த்தநாரீஸ்வரர் திருக்கோலத்திலும் அருளினார்.கட்டுரையாக்கம்:தென்குமரி.சிவ.அ.விஜய்
பெரியசுவாமி,இதன்படி சிவவிஷ்ணு ஐக்கியத்தை உணர்ந்த புருஷாமிருகம் அரியும்
அரனும் ஒன்றே என்பதனை உணர்ந்து 'அருணாச்சலனே..திருக்கயிலை நாதனே..சங்கர நாராயணா..சிவனே..மகாதேவா' என்றும் 'கோபாலா கோவிந்தா' 'அப்பனே சிவனே வல்லபா' என்றும் கூறி நட்டாலத்தில் தோன்றிய சங்கர நாராயணரைத் துதித்து சந்தோஷக் களிப்பில் தருமரின் யாகத்துக்கு பால் அளிக்க ஒத்துக்கொண்டது.இன்றும் திருநட்டாலத்தில் இரு கோயில்கள் உள்ளன.ஒன்றில் ஈசன் அர்த்தநாரீஸ்வர
மகாதேவர் எனும் திருநாமத்திலும்,இன்னொரு ஆலயத்தில் சங்கர நாராயணராகவும் அருள்கிறார்.சிவாலய ஓட்டம் தொடர்புடைய திருக்கோயில் தூண் சிற்பங்களில்
பீமனைத் துரத்தும் புருஷாமிருகத்தை நாம் காணலாம்.இந்த புராண நிகழ்வின் அடிப்படையில் ஆண்டுதோறும் மகாசிவராத்திரி நன்னாளில் அடியவர்கள் சிவாலய புருஷாமிருகம் 'சோணாசலா அருணாசலா ..மகாதேவா..திருக்கயிலை நாதா..தாணு நாதா..இடைமருதா..கூத்தபிரானே..ஆரூரா..ஐயாறா' என சிவபூஜை செய்ய,பீமன் 'கோபாலா கோவிந்தா’ எனக் குரல் எழுப்ப புருஷாமிருகம் பீமனை துரத்த என மஹாசிவராத்திரி நன்னாளில் இப்படி பன்னிரண்டு சிவாலயங்களும் உருவானதால் இந்நிகழ்வினை நினைவு கூறும்வகையில் ஆண்டுதோறும்  மஹாசிவராத்திரி நன்னாளில் ''சோணாசலா அருணாசலா .மகாதேவா..திருக்கயிலை நாதா..தாணு நாதா..இடைமருதா..கூத்தபிரானே..ஆரூரா..ஐயாறா' , 'கோபாலா கோவிந்தா’ ,'மகாதேவா சிவனே வல்லபா சங்கரநாராயணா' என்றும் கூறி அடியவர்கள் இந்த பன்னிரு சிவாலயங்களிலும் வழிபடுகிறார்கள்.இதனையே 'சிவாலய ஓட்டம்' என்கிறார்கள்.பன்னிரு சிவாலயங்களும் மஹாசிவராத்திரி நன்னாளில் உருவானதால் இந்த பன்னிரு சிவாலயங்களிலும் மாத சிவராத்திரி,மகா சிவராத்திரி நன்னாட்கள் வெகுச்சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.சிவராத்திரி நாட்களில் இந்த தலங்களில் வழிபட கிரக தோஷங்கள்,பழவினைகள் அகன்று பதினாறுவகை நற்பேறுகளும் கிட்டும் என்கிறார்கள். தற்போது சிவராத்திரி நாளில் சைக்கிள் மற்றும் வாகனங்களில் சென்றும் வழிபடுகிறார்கள்.இருந்தாலும் முறைப்படி ஓடிச் சென்று வழிபடுவது மிகச்சிறப்பாம்.உடம்பில் சட்டை அணியாமலும்,காலில் செருப்பு அணியாமலும்,காவி அல்லது மஞ்சள் வேட்டி அணிந்து,ருத்திராட்சம் கழுத்தில் அணிந்து,விபூதி தரித்து,ஒரு திருநீற்று பையும்,கையில் ஒரு விசிறியும் வைத்துக்கொண்டு ''சோணாசலா அருணாசலா ..மகாதேவா..திருக்கயிலை நாதா..தாணு நாதா..இடைமருதா..கூத்தபிரானே..ஆரூரா..ஐயாறா' , 'கோபாலா கோவிந்தா’ ,'மகாதேவா சிவனே வல்லபா சங்கரநாராயணா'' என்றும் கோஷத்தை
ஒலித்தபடியே  பன்னிரண்டு சிவாலயங்களையும் சிவராத்திரி நாளில் தரிசிப்பர்.இவர்களை 'சிவ கோவிந்தன்மார்' என்று அழைக்கிறார்கள்.திருநீற்றுப் பையில் அந்தந்த ஆலயங்களில் தரும் திருநீற்றை
வைத்துக்கொள்கிறார்கள்.அதுபோல கையில் இருக்கும் விசிறியால் கருவறையில் உள்ள சிவலிங்கத்துக்கு வீசி பூஜை செய்கிறார்கள் இந்த சிவகோவிந்தன்மார்கள்.வாழ்க்கை ஓட்டத்துக்கான சகல நலன்களையும்,வளங்களையும் மகாசிவராத்திரி சிவாலய ஓட்டத்தின்மூலம் பெற்றுய்யலாம் என்கிறார்கள்.சிவாலய ஓட்ட பக்தர்களுக்கு வழியெங்கும் மோர்,காபி,பானகம்,சுண்டல்,கஞ்சி
தானம்,தினைக்கஞ்சி,எரிசேரி,புளியோதரை,எலுமிச்சை சாதம் என பலப்பல தானங்களையும் பொதுமக்கள் செய்கிறார்கள்.முற்காலங்களில் சிவராத்திரி அன்று மாலையில் சிவாலய ஓட்டத்தினை பக்தர்கள் தொடங்குவார்கள்.தற்போது சிவராத்திரி அன்று காலையிலேயே பக்தர்கள் சிவாலய ஓட்டத்தினை
தொடங்குகிறார்கள்.சிவாலய ஓட்ட முதற்கோயிலான முஞ்சிறை திருமலை சூலபாணி மகாதேவர் திருக்கோயில் நாகர்கோயில் -திருவனந்தபுரம் சாலையில் உள்ள
மார்த்தாண்டத்தில் இருந்து தேங்காய்பட்டணம் செல்லும் வழியில் 6 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.இங்கு பக்தர்களின் சிவாலய ஓட்டத்திற்கு தேவையான விசிறி,திருநீற்று பைகள் கிடைக்கின்றன.முஞ்சிறையில்
இருந்து அடுத்துவரும் சிவாலய ஓட்டத் திருத்தலமான திக்குறிச்சி மகாதேவர் திருக்கோயில்10 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.திக்குறிச்சியில் இருந்து அடுத்துவரும் திருத்தலமான திற்பரப்பு வீரபத்திரர் மகாதேவர் திருக்கோயில் அருமனை எனும் ஊர்வழியாக 14 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.திற்பரப்பிலிருந்து அடுத்துவரும் திருநந்திக்கரை நந்திகேஸ்வரர் திருக்கோயில் குலசேகரம் சந்திப்பு வழியாக 8 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.திருநந்திக்கரையில் இருந்து பொன்மனை தீம்பிலான்குடி மகாதேவர் திருக்கோயில் 7கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.பொன்மனையில் இருந்து அடுத்துவரும் திருப்பன்னிப்பாகம் கிராதமூர்த்தி மகாதேவர் திருக்கோயில் குமாரபுரம்,முட்டைக்காடு வழியாக 11கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.திருப்பன்னிப்பாகத்திலிருந்து 6
கிலோமீட்டர் தூரத்தில் கல்குளம் எனும் பத்மநாபபுரம் நீலகண்ட சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது.கல்குளத்தில் இருந்து அடுத்துவரும் சிவாலய ஓட்டத்திருத்தலமான மேலாங்கோடு காலகாலர் திருக்கோயில் 3 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.மேலாங்கோடு திருத்தலத்தில் இருந்து அடுத்துவரும் திருவிடைக்கோடு எனும் வில்லுக்குறி சடையப்பர் திருக்கோயில் 6 கிலோமீட்டர்
தூரத்தில் அமைந்துள்ளது.திருவிடைக்கோடு திருத்தலத்திலிருந்து 8 கிலோமீட்டர் தூரத்தில் திருவிதாங்கோடு நீலகண்ட சுவாமி திருக்கோயில்
அமைந்துள்ளது.திருவிதாங்கோடு திருத்தலத்தில் இருந்து கோழிப்போர் விளை,பள்ளியாடி வழியாக 6 கிலோமீட்டர் தூரத்தில் திருப்பன்றிக்கோடு பக்தவச்சலர் திருக்கோயில் அமைந்துள்ளது.திருப்பன்றிக்கோடு திருத்தலத்தில்
இருந்து சிவாலய ஓட்டத் திருத்தலத்தின் நிறைவுக் கோயிலான திருநட்டாலம் சங்கரநாராயணர்,அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் 4 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.பன்னிரு கோயில்கள் பற்றியும் சுருங்கப்  பார்த்துவிடுவோம்:
''முஞ்சிறை திருமலைக்கோயில்'':
இதுவே சிவாலய ஓட்டத்தின் முதல் கோயிலாகும்.குன்றின் மேல் அமைந்துள்ளது.திருமலை நாயக்கர் மன்னர் இத்தல ஈசனின் அருளால் அவரது தாய் உதிச்சிக்கு மகவாய் பிறந்தார்.பிரணவத்தின் பொருள் தெரியாத பிரம்மனை முருகப்பெருமான் இங்கு சிறைபிடித்து வைத்ததால் இத்தலம்  முஞ்சிறை ஆயிற்று.அப்போது பிரம்மனின் முன்தோன்றிய வடிவமே இத்தல ஈசன் சூலபாணியாம்.இங்கு ஈசன் மகாதேவர் என்றும் சூலபாணி என்றும் அழைக்கப்படுகிறார்.பக்தர்களின் சிவாலய ஓட்டத்திற்கு தேவையான திருநீற்று பை,விசிறி முதலியன இங்கு கிடைக்கும்.நாகர்,அய்யப்பன் சன்னதிகளும் உள்ளன.மாசி கும்பாஷ்டமி,கார்த்திகை மாத விருட்சிகாஷ்டமி,பங்குனி திருவிழா சிறப்பாம்.நாகர்கோயில் -திருவனந்தபுரம் சாலையில் உள்ள மார்த்தாண்டத்தில் இருந்து தேங்காய்பட்டணம் செல்லும் வழியில் 6 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.

''திக்குறிச்சி கோயில்'':
இங்கு ஈசன் மகாதேவன் எனப்படுகிறார்.நந்தி கிடையாது.ஆம்!அருகில் உள்ள தாமிரபரணி நதிக்குள் நந்தி இருப்பதாக ஐதீகம்.சாஸ்தா,காலபைரவர்,ஆகாய யட்சி சன்னதிகளும் உள்ளன.மார்கழி திருவாதிரையில் ஆறாட்டு விழா நடக்கிறது.சிவராத்திரி நாளில் பெண்கள் இங்கு தீபம் ஏற்றி வழிபடுகிறார்கள்.முஞ்சிறையில்
இருந்து திக்குறிச்சி மகாதேவர் திருக்கோயில் 10 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.கட்டுரையாக்கம்:குமரி.சிவ.அ.விஜய் பெரியசுவாமி

''திற்பரப்பு திருக்கோயில்'':
 இங்கு மூலவருக்கு தீபாராதனை செய்யும்போது இடது பக்கமாக சுற்றிச்செய்கிறார்கள்.மூலவர் வீரபத்திரர் என்னு திருநாமத்தில் அருள்கிறார்.நந்தி சற்று விலகி வடக்கு நோக்கிய வண்ணம் உள்ளது.இங்கு பூரணை புஷ்கலை  சாஸ்தா,நவநீத கிருஷ்ணன்,ஜுரதேவர்,பத்திரகாளிக்கும்,புளியமர இசக்கி அம்மனுக்கும் தனிக்கோயில்கள் அருகிலேயே உள்ளன.பங்குனியில் பெருவிழா நடைபெறுகிறது.ருத்ர பூஜை,ருத்ர கலச பூஜை,மிருதுஞ்சய ஹோமம்  இங்கு சிறப்பாம்.திக்குறிச்சியில் இருந்து அருமனை எனும் ஊர்வழியாக 14 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.

''திருநந்திக்கரை கோயில்'':
 மூலவர் நந்திகேஸ்வரர்.அவரின் எதிரில் நந்தி ஆழமான குழிக்குள் உள்ளது.நாகர்,கண்ணன்,சாஸ்தா,பரசுராமர் சன்னதிகளும் உள்ளன.இத்தல மேற்குச்சுற்று சுவரில் கொட்டாரம் யட்சி ஓவியவடிவில் அருள்கிறாள்.திற்பரப்பிலிருந்து குலசேகரம் சந்திப்பு வழியாக 8 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.

''பொன்மனை கோயில்'':
 மூலவர் தீம்பிலான்குடி மகாதேவர்.மூலவரின் சிரசில் வெட்டுப்பட்ட வடு உள்ளது.நாகலிங்க மரங்கள் அதிகம் உள்ளன.நாகர்,யட்சி,சாஸ்தா சன்னதிகளும் உள்ளன.மாதாந்திர ஆயில்யம்,பங்குனி ஆறாட்டு  விழா சிறப்பாம்.திருநந்திக்கரையில் இருந்து  7 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.

''திருப்பன்னிப் பாகம்  கோயில்'':
 மூலவர் கிராதமூர்த்தி மகாதேவர்.சாஸ்தா,காலபைரவர்,லிங்கவடிவ நிர்மால்ய தேவர் சன்னதிகளும் உள்ளன.இங்கு அக்காலத்தில் பூஜையின் போது புல்லாங்குழல் இசைக்கப்பட்டதாம்.பொன்மனையில் இருந்து  குமாரபுரம்,முட்டைக்காடு வழியாக 11கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.

''கல்குளம் பத்மநாபபுரம் கோயில்'':
மூலவர் நீலகண்டர்.அம்பாள் ஆனந்தவல்லி என்பதாம்.பன்னிரு சிவாலய ஓட்ட திருக்கோயில்களில் இங்கு மட்டும்தான் அம்பாளுக்கு தனி சன்னதி அமைந்துள்ளது.சாஸ்தா,நடராஜர்,பூதத்தான்,மாடன் தம்புரான் சன்னதிகளும் உள்ளன.ஐந்துநிலை ராஜகோபுரம்  மிக அழகாம்.திருப்பன்னிப்பாகத்திலிருந்து 6
கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.

''மேலாங்கோடு கோயில்'':
 வேளிமலை அடிவாரத்தில் இக்கோயில் உள்ளது.மூலவர் காலகாலர் எனப்படுகிறார்.இங்கு வெடிவழிபாடு நேர்ச்சை உண்டு.அருகிலேயே அக்கா இசக்கி,தங்கை இசக்கி கோயில்கள் உள்ளன.நாகர்,பூதத்தான் சன்னதிகளும் உள்ளன.கல்குளத்தில் இருந்து 3 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.

''திருவிடைக்கோடு திருக்கோயில்'':
 வில்லுக்குறி என தற்போது இத்தலம் அழைக்கப்படுகிறது.மூலவர் சடையப்பர்.பதினெண் சித்தர்களில் ஒருவரான இடைக்காடர் இன்றும் ஈசனை அனுதினமும் வழிபடுகிறாராம்.நாகர்,சாஸ்தா சன்னதிகளும் அமைந்துள்ளன.மாசி கும்பாஷ்டமி,ஆயில்யம்,அமாவாசை,ஆனி துவாதசி வழிபாடு சிறப்பாம்.மஹாசிவராத்திரியில் 114 படி அரிசி சமைத்து 156கட்டி சாதமாக படைத்து பக்தர்களுக்கு வழங்குகிறார்கள். மேலாங்கோடு திருத்தலத்தில் இருந்து 6 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. 

''திருவிதாங்கோடு கோயில்'':
 மூலவர் நீலகண்டர் எனும் மகாதேவர்.ஈசான சிவன் என்றும் அழைக்கிறார்கள்.கஜசம்காரர்,புருஷாமிருகம் சிலை மிகவும் அழகு.சாஸ்தா,நாகர் சன்னதிகளும் உள்ளன.மஹாவிஷ்ணுவுக்கும் தனி ஆலயம் உள்ளது.திருவிடைக்கோடு திருத்தலத்திலிருந்து தக்கலை,கேரளபுரம் வழியாக தெற்கில் 8 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.

''திருப்பன்றிக்கோடு கோயில்'':
 மூலவர் பக்தவச்சலர் எனும் மகாதேவர்.வள்ளி தெய்வானை முருகர்,சாஸ்தா,நாகர் ,நிர்மால்ய தேவர் சன்னதிகளும் உள்ளன.ஒருமுறை பூமியை மீட்க வேண்டி வராஹம் எனும் பன்றி வடிவம் எடுத்த திருமால்  பின்னர் இத்தலத்தில் ஈசனை வழிபட்டே தம் சுய உருவினை மீண்டும் அடைந்தார். அஷ்டமி வழிபாடு இங்கு சிறப்பு.மாசி மாத அஷ்டமியில் குன்னம்பாறை சாஸ்தா கோயிலில் இருந்து களப கும்பம் கொண்டு வந்து சிவபெருமானுக்கு அபிசேகம் செய்கிறார்கள்.இங்கு அம்பாள் சந்நதி உள்ளது.கார்த்திகை மாத தேய்பிறை அஷ்டமியில் தொடங்கி இங்கு பெருவிழா நடக்கிறது.கார்த்திகை மாத வளர்பிறை அஷ்டமியில் ஆறாட்டு விழா சிறப்பாக நடைபெறுகிறது.திருவிதாங்கோடு திருத்தலத்தில் இருந்து கோழிப்போர்
விளை,பள்ளியாடி வழியாக 6 கிலோமீட்டர் தூரத்தில்  அமைந்துள்ளது.

''நட்டாலம் கோயில்'':
நட்டாலத்தில் மகாதேவர் கோயில் எனும் அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் ஒன்றும்,சங்கர நாராயணர் கோயில் ஒன்றுமாக இருக்கோயில்கள் உள்ளன.புருஷாமிருகத்துக்கும்,பீமனுக்கும் சிவபெருமான் சங்கரநாராயணராக திருக்காட்சி கொடுத்த தலம் இதுவாகும்.கருவறையில் லிங்கவடிவில் சங்கரநாராயணர் உள்ளார்.பங்குனியில் ஆறாட்டு விழா சிறப்பாம்.திருப்பன்றிக்கோடு திருத்தலத்தில் இருந்து 4 கிலோமீட்டர் தூரத்தில்
அமைந்துள்ளது.
சிவராத்திரி நன்னாளில் விரதமிருந்து இரவு முழுவதும் கால்வலிக்க சிவாலயஓட்டம் ஓடி பன்னிரு சிவாலயங்களையும் வழிபடும் பக்தர்களுக்கு வாழ்வில் பதினாறுவகை நற்பேறுகளும் கிடைக்கும் என்கிறார்கள்.
'நாடும் நகரமும் நற்றிருக் கோயிலும்
தேடித் திரிந்து சிவபெரு மான்என்று
பாடுமின் பாடிப் பணிமின் பணிந்தபின்
கூடிய நெஞ்சத்தைக் கோயிலாக் கொள்வனே' என்பது திருமூலர் வாக்காகும்.அதற்கேற்ப சிவராத்திரி நன்னாளில் சிவாலய ஓட்டம் ஓடி சிவபெருமான் ஆலயங்களைத் தரிசித்து வாழ்வின் வாட்டம் போக்குவோம்.மஹாசிவராத்திரி நன்னாளில் சிவாலய ஓட்டம் பங்கேற்கும் அத்தனை சிவகோவிந்தன்மார்களின்,அடியார்களின் திருப்பாதத்தை என் இதயத்தில் தாங்குகிறேன்.அனைவருக்கும் ''மஹாசிவராத்திரி விரதம்'' சிறப்பாய்  பூர்த்தியடைய அம்மையப்பனை இறைஞ்சுவோம்.
''ஆரூர் அமர்ந்த அரசே போற்றி
சீரார் திருவையாறா போற்றி
ஏகம்பத்துறை எந்தாய் போற்றி
பாகம் பெணுரு ஆனாய் போற்றி
தென்தில்லை மன்றினுள் ஆடி போற்றி
காவாய் கனகத் திரளே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி''.."நேற்றைய வாழ்வு அலங்கோலம்,அருள் நெஞ்சினில் கொடுத்தது
நிகழ்காலம்,வரும் காற்றில் அணையாச் சுடர்போலும்,அருள் கந்தன் தருவான்
எதிர்காலம்,எனக்கும் இடம் உண்டு,அருள் மணக்கும் முருகன்
மலரடிநிழலில்"

பழையமுதும்...மாவடுவும்

*பழையமுதும்...மாவடுவும்!!!*

ரங்கநாத பெருமான் பள்ளி 
கொண்டிருக்கும் ஸ்ரீரங்கத்தில் 
எல்லா நாளுமே திருநாள் தான். 

அதில் வித்தியாசமான, ஆனால் 
எல்லோரையும் நெகிழ வைக்கும் 
திருவிழா ஒன்று பங்குனி 
பிரம்மோற்ஸவத்தின் மூன்றாம் 
நாள் நடைபெறுகிறது.

பழைய சோறும், மாவடுவும் என்று 
புகழப்படும் இந்த திருவிழாவில் 
கலந்து கொள்ள ரங்கநாத 
பெருமான் ஶ்ரீரங்கம் விட்டு ஜீயர்புரம் என்ற ஊருக்கு கிளம்பி செல்கிறார். அங்கு சவரத் தொழிலாளர்களின் மண்டகப்படி பெருமாளுக்கு நடைபெறுகிறது. அந்த விழாவில் முகம் திருத்தும் தொழிலாளி ஒருவர் ரங்கநாத பெருமாளுக்கு எதிரே கண்ணாடி காட்டி கண்ணாடியில் தெரியும் ஆண்டவரின் பிம்பத்திற்கு முகம் திருத்தம் செய்வது போன்று ஒரு நிகழ்வு நடைபெறுகிறது. 
அதன்பிறகு முகம் திருத்தும் 
தொழிலாளிக்கு மரியாதை செய்யப்படுகிறது.

இந்த திருவிழாவில் ரங்கநாதருக்கு நைவேத்தியமாக பழைய சோறும், 
மாவடுவும் அளிக்கப்படுகிறது. 
வெண்ணையும் மண்ணையும் உண்ட அந்த ஆதிமூல பெருமானுக்கு பழைய சோறு, மாவடுவும் விருந்தளிக்கப்படுகிறது என்று 
நீங்கள் ஆச்சரியப்படலாம். ஆம், 
இதன் பின்னால் நெஞ்சை உருக்கும் ஒரு கதை உள்ளது.

ஏழைகளுக்கு உதவும் பரந்தாமன் 
அன்றோ திருமால், அவன் ஒரு 
ஏழைப் பாட்டிக்காக அவளின்
பேரனின் வடிவம் தாங்கி வந்த
திருவிளையாடலைத்தான் பார்க்க
இருக்கிறோம்.

ஜீயர்புரம் என்பது காவிரிக்கரை 
அருகே உள்ள அழகான கிராமம். 
அந்த ஊரில் ரங்கநாதரையே 
சர்வகாலமும் நினைத்து வாழும்
ஒரு பாட்டி இருந்து வந்தாள்.
இளமையிலேயே கணவனை 
இழந்த அவளுக்கு இரண்டே 
உறவுகள் தான். ஒருவர் ரங்கநாத 
பெருமாள், மற்றொருவர் அவளின் 
பேரன் ரங்கன். ஏழ்மையிலும் இறைவனை மறக்காத அந்த பாட்டி, உட்கார்ந்தால் 'ரங்கா' எழுந்தால் 'ரங்கா' என்றே வாழ்ந்தவள். அவளுக்கும் ஒருநாள் சோதனை வந்தது. அந்த சோதனை வழியே அவளை ஆட்கொள்ள எண்ணினார் கார்வண்ணன். அன்று பாட்டியின் பெயரன் முகம் திருத்திக்கொண்டு வருவதாக சொல்லிக்கொண்டு காவிரிக்கரைக்கு சென்றான். அங்கு முகம் திருத்தி விட்டு காவிரியில் இறங்கி குளித்தான்.
மென்மையாக ஓடிக்கொண்டிருந்த காவிரி ஊழி வெள்ளம் பாய்ந்ததைப் போல பெருகி வரத்தொடங்கியது. பெருகிய வெள்ளத்தில் பாட்டியின் 
பேரன் ரங்கன் இழுத்துச் 
செல்லப்பட்டான். 

நேரமாகியும் திரும்பாத பேரனை 
எண்ணி பாட்டி கவலைப்பட்டாள். 
ரங்கநாத பெருமாளை தொழுது 
அழுது காவிரிக்கரைக்கு சென்றாள். அதே வேளையில் காவிரி இழுத்துச் சென்ற ரங்கன் ஸ்ரீரங்கத்தின் அம்மா மண்டபத்துக்கு அருகே கரை ஒதுங்கினான். உயிர் பிழைத்த 
ரங்கன், ஸ்ரீரங்கத்து ஆண்டவனை 
தரிசித்து காப்பாற்றியதற்கு நன்றி 
சொன்னான். தன்னை எண்ணி 
இந்நேரம் பாட்டி அழுவாளோ 
என்று பதறி ரங்கநாதரிடம் 
முறையிட்டான். உடனே கிளம்பினான். பேரன் செல்லும் வரை பாட்டி துடிப்பாளே என்று பரந்தாமனும் எண்ணினார். பக்தரை காக்கும் பரந்தாமன் பொறுப்பாரா?

காவிரியின் வெள்ளம் கண்டு 
அழுது புலம்பிக் கொண்டிருந்த 
பாட்டியை ஆற்றுதல் படுத்த 
கிளம்பினார் பரந்தாமன். ஆம், 

பாட்டி அழுது கொண்டிருந்த 
ஜீயர்புரத்து காவிரி கரையருகே 
முகத்திருத்தம் செய்த முகத்தோடு 
குளித்து எழுந்த நிலையில் 
பாட்டியின் பேரன் ரங்கனாகவே 
வந்தார் பெருமாள். பாட்டி மகிழ்ந்தாள். பேரனை கட்டி அணைத்து வீட்டுக்கு கூட்டி சென்றாள். பசித்திருந்த 
பேரனுக்கு பழைய சோறும் 
மாவடுவும் அளித்து சாப்பிட 
சொன்னாள். பரந்தாமன் சாப்பிட்டுக் கொண்டிருந்த அதே வேளையில் உண்மையான பேரன் ரங்கன் வந்துவிட்டான். பாட்டி திகைத்தாள். அடியவருக்கு அடைக்கலம் தரும் பெருமான் சிரித்தபடியே மறைந்தான்.
பாட்டியும் பேரனும் ரங்கநாத 
பெருமானின் அருளை எண்ணி 
தொழுதார்கள். 

அவரின் திருவுளம் எண்ணி 
அழுதார்கள். அன்று பக்தையை 
ஆறுதல் படுத்த வந்து பழைய 
சோறும், மாவடுவும் உண்ட 
ரங்கநாத பெருமாள் இன்றும் 
அதை நினைவூட்ட ஆண்டுதோறும் 
பிரம்மோற்ஸவ விழாவில் இதை 
நடத்தி வருகிறார். ஏழைக்கு
ஏழையான நம்பெருமாள் என்றுமே 
நம்மை காப்பார் என்பதையே இந்த நிகழ்ச்சி காட்டுகிறது .

Featured Post

எண்ணம்_போல_வாழ்க்கை

#எண்ணம்_போல_வாழ்க்கை... ஒருமுறை, ஒரு பிச்சைக்காரன் ரயிலில் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் போது, ​​ சூட் மற்றும் பூட்ஸ் அணிந்த ஒரு தொழிலதிபர...