Showing posts with label வாழ்வில் என்றும் சுபிட்சத்தை பெற உதவும் மீனாட்சி அம்மன் காயத்ரி மந்திரம். Show all posts
Showing posts with label வாழ்வில் என்றும் சுபிட்சத்தை பெற உதவும் மீனாட்சி அம்மன் காயத்ரி மந்திரம். Show all posts

Friday, April 8, 2022

வாழ்வில் என்றும் சுபிட்சத்தை பெற உதவும் மீனாட்சி அம்மன் காயத்ரி மந்திரம்

#வாழ்வில் என்றும் சுபிட்சத்தை பெற உதவும் மீனாட்சி அம்மன் காயத்ரி மந்திரம் 🌺

 தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கோவில்கொண்டு இவ்வுலகையே காத்து ரட்சிக்கும் அன்னை மீனாட்சி அம்மனை வழிபடுவதன் பலனாக நாம் பல அற்புத நன்மைகளை பெற முடியும். தமிழகத்தில் உள்ள 366 மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்களின் மூலக் கோயிலாக உள்ளது மதுரை மீனாட்சி அம்மன் கோவில். அதோடு 248 சக்தி பீடங்களில் ஒன்றாக இந்த கோவில் உள்ளது. அகிலத்தை காக்கும் மீனாட்சி அம்மனை வழிபடுவோருக்கு வாழ்வில் என்றும் சுபிட்சம் நிலைக்கும் என்பது நம்பிக்கை. அந்த வகையில் மீனாட்சி அம்மனை வழிபடும் சமயத்தில் அவளுக்குரிய காயத்ரி மந்திரம் அதனை கூறுவது நமக்கு சிறப்பு சேர்க்கும்.

🌺 மீனாட்சி அம்மன் காயத்ரி மந்திரம் 🌺

ஓம் உந்நித்ரியை வித்மஹே ஸுந்தப ப்ரியாயை தீமஹி தந்நோ மீனாதேவீ ப்ரசோதயாத் 

 செவ்வாய் மற்றும்
வெள்ளிக்கிழமைகளில் இந்த மந்திரத்தை 108 முறை ஜெபிப்பதன் பலனாக பெண்களுக்கு அழகு கூடும், அற்புதமான கணவன் அமைவார், வீட்டில் சுபிட்சம் பெருகும், மன நிம்மதி அதிகரிக்கும். 

 மீனாட்சி அம்மன் வழிபாடு :

மதுரையை ஆண்ட மலையத்துவச பாண்டியன் மன்னனுக்கு சக்தியாகிய பார்வதி தேவி மகளாக பிறந்தார். அவருக்கு மீனாட்சி என்கிற பெயரை சூட்டி வளர்த்தார் மலையத்துவஜ பாண்டியன். திருமண வயதை அடைந்த மீனாட்சி வீரத்தில் சிறந்து விளங்கினார். அனைத்து நாட்டு மன்னர்களையும் போரில் வென்று இறுதியில் கைலையிலிருக்கும் சிவபெருமானிடம் போரிட்டபோது, அந்த சிவனே தனது வருங்கால மணாளன் என்பதை உணர்ந்தார். மீனாட்சியிடம் அந்த சிவபெருமானும் தோற்றார். இருவரும் மனமொத்து மதுரை மாநகரில் திருமணம் செய்த பிறகு, மீனாட்சி – சுந்தரேஸ்வரர் என்கிற பெயரில் மதுரை நகரிலேயே கோவில் கொண்டுள்ளனர். சக்தியின் வடிவமான மீனாட்சியை வழிபடுபவர்களுக்கு வாழ்வில் அனைத்து மங்களங்களும் உண்டாகிறது என்பது பக்தர்களின் அனுபவ பூர்வமான உண்மையாக இருக்கிறது. 

மீனாட்சி அம்மன் வழிபாட்டிற்குரிய தினங்கள் :

மங்களங்கள் வழங்கும் தேவியான மீனாட்சியை அனைத்து தினங்களிலும் வழிபடலாம் என்றாலும் வாரத்தில் வருகின்ற புதன் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் வழிபடுவது மிகவும் சிறப்பானதாகும். மேலும் சித்திரை மாதத்தில் வருகின்ற சித்ரா பௌர்ணமி தினத்தில் மீனாட்சி அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் அர்ச்சனை செய்து வழிபடுவது வாழ்வில் நன்மைகள் அதிகம் ஏற்பட செய்யும் ஒரு சிறந்த வழிபாடாக இருக்கிறது. 

மீனாட்சி அம்மன் வழிபாடு பலன்கள்:

 மீனாட்சி அம்மன் நவகிரகங்களில் புதன் கிரகத்தின் அம்சம் கொண்டவராக இருக்கிறார். எனவே ஜாதகத்தில் புதன் கிரக தோஷங்கள் இருப்பவர்கள் மீனாட்சி அம்மனுக்குரிய காயத்ரி மந்திரங்களை ஜெபித்து, வழிபாடு செய்வதால் தோஷங்கள் நீங்கி, நன்மைகள் உண்டாகும். வறுமை நிலை நீங்கி செல்வங்கள் பெருகும். தொழில், வியாபாரங்களில் நஷ்டங்கள் ஏற்படாமல் நல்ல வருமானமும் உண்டாகும். கல்வி, கலைகளில் சிறந்து விளங்க முடியும். திருமணமாகாத ஆண்கள் மற்றும் பெண்கள் சிறந்த வாழ்க்கைத்துணை அமையப் பெறுவார்கள். மன அமைதி கிடைக்கும்...🌺

Featured Post

எண்ணம்_போல_வாழ்க்கை

#எண்ணம்_போல_வாழ்க்கை... ஒருமுறை, ஒரு பிச்சைக்காரன் ரயிலில் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் போது, ​​ சூட் மற்றும் பூட்ஸ் அணிந்த ஒரு தொழிலதிபர...