Monday, November 28, 2022

காசி

 காசி

காசி என்பதை ஊராகப் பாக்காமல் அதை ஒரு வாய்ப்பாகப் பார்க்க வேண்டும்.

காசி என்பது 168 மைல் பரப்பளவில் சிவபெருமானால் (சிவசக்தியால்) அமைக்கப்பட்ட ஒப்பற்ற, நினைப்ப தற்கே அரிய ஓர் சிவ சக்தி யந்திரம்.

வருடத்தின் எல்லா நாட்களும், ஒரு நாளின் எல்லா மணிநேரமும் ஓய்வின்றி செயல்படும் ஒப்பற்ற சிவ சக்திநிலை இங்கே இருப்பதாக அனைவரின் நம்பிக்கை.

சிவன் வடிவமைத்த காசியின் 168 மைல் சுற்றளவில் 468 சக்தி மையங்கள்.

அவற்றில் 108 அடிப்படை சக்தி மையங்கள். இதில் 54 ஆண்தன்மை நிறைந்த சக்தி வடிவங்கள், 54 பெண் தன்மை நிறைந்த சக்தி மையங்களாக சிவனால் அமைக்கப்பட்ட தென்பது வரலாறு.*

நிலவின் சுழற்சிக் கணக்கில், மூன்று வருடத்திற்கு ஒரு முறை 13 மாதங்கள் இருக்கும். நம் சூரிய குடும்பத்தில் இருப்பது 9 கோள்கள். 4 திசைகள் அல்லது பஞ்ச பூதங்களில் ‘ஆகாஷ்’ தவிர்த்து நான்கு அடிப்படைக் கூறுகள். ஆக, 13*9*4 = 468.
நம் உடலில் இருக்கும் சக்தி சக்கரங்கள் 114. இதில் 2 நம் உடல் தாண்டி இருக்கிறது.
மீதம் இருக்கும் 112ல், 4 சக்கரங்களுக்கு நாம் ஏதும் செய்ய அவசியம் இருக்காது.
மற்ற 108ம் சரியாய் இருந்தால், இந்த நான்கும் தானாய் மலர்ந்திடும்.
இந்த 108ல் 54 பிங்களா (ஆண்தன்மை), 54 ஈடா (பெண் தன்மை). அதனால் 108 அடிப்படை சக்தி ஸ்தலங்களில் 54 சிவன், மற்றும் 54 தேவி கோவில்கள் காசியில் அமைக்கப் பட்டன.

காசி நகர அமைப்பே வடிவியல் (geometry) அளவிலும் கணிதவியல் அளவிலும் மிகக் கச்சிதமான, அற்புதமான வடிவமைப்பு. பிரபஞ்சத்தின் சிறு அம்சமான மனிதனும், அந்தப் பிரபஞ்சமும் தொடர்பு கொள்வதற்கான மிக நேர்த்தியான அமைப்பு. இது முழு உயிரோட்டத்தில் இயங்கும் ஒரு மாபெரும் மனித உடலின் பிரதிபலிப்பு. முழு உயிரோட்டத்தில், முழுமையான சக்தி அமைப்பில் ஒரு உடல் இயங்கினால், அதுவே பிரபஞ்சத்தை அவனிற்குத் திறந்து வைக்கும்.

இப்படி பிரபஞ்சத்துடன் தொடர்பு கொள்ளக் கூடிய இடமாகத்தான் சிவசக்தியினால் காசி உருவானதாம்.

இங்கே ஒருவர் வாழமுடிந்தால், பிரபஞ்சத்துடன் இவ்வழியில் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள முடிந்தால், எவர் தான் காசியை விட்டு வெளியேற சம்மதிப்பார்..?

468 கோவில்களில், 108 போக, மீதத்தில் 56 விநாயகர் கோவில்கள், 64 யோகினி கோவில்கள், 12 சூரியன் கோவில்கள், 9 நவதுர்கை கோவில்கள், 9 சண்டி கோவில்களும் அடங்கும்.
இதில் 56 விநாயகர் கோவில்கள் 8 திசைகளில், 7 பொதுமையம் கொண்ட வட்டத்தில் அமைக்கப் பட்டிருக்கிறது.

இந்த வட்டத்தில் நடக்க ஆரம்பித்தால், இதன் முடிவு காசி விஸ்வநாதர் கோவிலில் முடியும்.

அதோடு சூரியனின் 12 கோவில்களும் தக்ஷிணாயனத்தில் இருந்து உத்தராயணத்திற்கு நகரும் சூரியனின் திசையை ஒத்து இருக்கிறது.

இப்படி படைப்பை உற்று நோக்கி, ஒவ்வொரு மாறுதலுக்கும் ஏற்ற வகையில் இயங்கும் வண்ணம் காசி அமைக்கப்பட்டது.

இது தவிர சிவன், சப்தரிஷிகளை உலகின் வெவ்வேறு மூலைக்கு அனுப்பிய போது, அவர்கள் அவரைப் பிரிய மனமில்லாமல் ஏங்கியதால், அவர்களுக்கு ‘சப்தரிஷி’ பூஜையை கற்பித்து, அதை அவர்கள் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் செய்தால், சிவனுடன் இருக்கும் உணர்வைப் பெறுவார்கள் என்றும் சொல்லி அனுப்பினாராம்.
இன்றளவிலும் இப்பூஜை விஸ்வநாதர் கோவிலில் இரவு 7 மணியளவில் நடைபெறுவது இக்கோவிலின் சிறப்பு.
அப்பூஜையை உணர்ந்தால் தான் புரியும். அப்பூஜையை செய்பவர்களுக்கு அதன் மகத்துவம் தெரியவில்லை எனினும், அதைச் சிறிதும் பிசகாமல் செய்வதால், அவ்விடத்தில் நம்பற்கரிய சக்தி உருவாகிறது.
அக்காலத்தில், இந்தப் பூஜை ஒரே நேரத்தில், காசியின் 468 கோவில்களிலும் செய்யப்பட்டது. இதன் தாக்கத்தை வார்த்தைகளில் அடக்கிட முடியாது. இப்படியொரு மாபெரும் உயிரோட்டத்தில் காசிதிளைத்திருந்ததை நாம் அனுபவிக்காமல் போனது, நம்முடைய மிகப்பெரும் துரதிர்ஷ்டம் என ஆன்றோர்கள் கூறுகிறார்கள்.
இதை நாம் கவனித்துப் பார்த்தால், எல்லையில்லாமல் வளர வேண்டும் என்கிற ஆசை ஒவ்வொரு மனிதனுக்கும் உண்டு.

இது வெறும் ஆசையாய் இருந்தால் போதாது என்று, அதை நிறை வேற்றிக் கொள்வதற்குத் தேவையான கருவியாய் காசி உருவாக்கப்பட்டது.

இது ஒரு சக்தி உருவம்...

இந்த உருவத்திற்கு ஏற்றாற்போல், அதைச் சுற்றி ஒரு ஊர் தானாக உருவானது. அதனால் காசி என்பதை ஊராகப் பாக்காமல், அதை ஒரு வாய்ப்பாகப் பார்க்க வேண்டும். இந்த மகத்தான வாய்ப்பை உணர்ந்துதான், ஆயிரமாயிரம் ஆண்டுகளாக மக்கள் காசியை இன்றும் போற்றி வருகின்றனர்.

ஓம் நமசிவாய.

ஸ்ரீ குருவாயூரப்பன் திருவிளையாடல்

🪷ஸ்ரீ குருவாயூரப்பன் திருவிளையாடல் 

ஒரு ஏழைப் பெண்மணி தென்னை மட்டையிலிருந்து கயிறு பிரித்து வியாபாரம் செய்து வந்தாள். அவளுக்கு நெடுநாட்களாகக் குழந்தைப் பேறு இல்லை. மிகவும் வருந்திய அவள் குருவாயூரப்பனிடம் தனக்குக் குழந்தை உண்டானால் கயிற்றுப் பிரியால் துலாபாரம் செய்வதாய் வேண்டிக் கொண்டாள்.

சிறிது நாட்களிலேயே அவள் கருவடைந்தாள். வியாபாரமும் செழிக்கத் தொடங்கியது. குழந்தைக்கு ஆறு மாதமானதும் பிரார்த்தனையை நிறைவேற்ற குருவாயூர் சென்றாள். இப்போது வசதியாய் இருப்பதால் கயிற்றுத் துலாபாரம் செய்தால் கேவலம், கதலித் துலாபாரம் செய்யலாம் என்று முடிவு செய்தாள். குழந்தையைத் துலாபாரத் தட்டில் கிடத்தி, மற்றொரு தட்டில் கதலிப் பழத்தை வைத்தார்கள்.

குழந்தையின் எடையை விட பத்து மடங்கு கதலியை வைத்தும், தட்டு சமநிலையை அடையவில்லை. கோவில் சிப்பந்தி அவளிடம், “ஏதோ தப்பு நடந்திருக்கிறது, என்ன பிரார்த்தித்தாய்?” என்று கேட்டனர். 

அவளும், “ஏழையாய் இருக்கும் சமயம் கயிறு வேண்டிக் கொண்டேன், இப்போது அவன் அருளால் வசதி பெருகிவிட்டது, அதனால் கயிற்றுத் துலாபாரம் செய்தால் கேவலம், கதலித் துலாபாரம் செய்யலாம் என்று செய்தேன்” என்று கூறினாள்.

கோவில் சிப்பந்திகள்,“ உன்னிடம் எவ்வளவு கோடி இருந்தாலும், பிரார்த்தித்த வேண்டுதலையே அப்பன் ஏற்பான்” என்று கூறினார்கள். பழங்களை இறக்கிவிட்டு கயிற்றை ஏற்றினார்கள், என்ன ஆச்சர்யம்! 

தராசு கீழே இறங்கியது. அப்பன் பொருட்களில் உயர்வு, தாழ்வைப் பார்ப்பதில்லை, அன்புடன் சமர்ப்பிக்கும் எதையும் ஏற்பான் என்பதற்கு இந்த லீலை உதாரணம்.

ஸ்ரீ க்ருஷ்ணா உன் திருவடிகளே சரணம் !


தர்ப்பை புல் என்றவுடனே


÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷
தர்ப்பை புல் என்றவுடனே ஏதோ சாங்கித்திற்கான புல் என்று என்னவேண்டாம் .அதன் இன்னொரு பக்கம்  பார்ப்போம்.
÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷

தர்ப்பைப் புல்லை நாட்டு மருந்து கடைகளிலும், கிரகணத்தின்போது கோயில்களிலும் பார்த்திருப்போம். இதன் மகத்துவம் ஏராளமானது. தர்ப்பைப் புல் புண்ணிய பூமி தவிர வேறு எங்கும் முளைக்காது. தர்ப்பைப் புல் வளர தண்ணீர் தேவையில்லை. தண்ணீல் இல்லாமலும் வளரும் இது, பல நாட்களுக்கு தண்ணீரிலேயே போட்டு வைத்தாலும் அழுகாத தன்மை கொண்டது. சூரிய கிரகணத்தின் போது இதற்கு வலிமை அதிகம்.

இதன் காற்றுப்படும் இடங்களில் தொற்றுநோய்கள் அண்டாது. அதனால்தான் கிரகண காலத்தில் இந்த தர்ப்பைப் புல்லை நாம் பயன்படுத்தும் உணவுப் பொருட்கள், மளிகைப் பொருட்கள், குடிநீர்களில் போட்டு வைக்கின்றோம். இந்த புல்லில் காரமும், புளிப்பும் இருப்பதால் செப்பு ஐம்பொன் உலோக படிமங்களை இந்த புல்லின் சாம்பலில் தேய்க்கிறார்கள். அவ்வாறு செய்வதால் அதன் ஓசை திறன் குறையாமல் இருக்குமாம்.

தர்ப்பைப்புல் சுவையில் இனிப்பு மற்றும் துவர்ப்புச் சுவையுடையது. குளிர்ச்சியான வீரியமுடையது. சீரணத்தின் இறுதியில் இனிப்புச் சுவையாக நிற்க்கக் கூடியது. மூவகை தோஷங்களாகிய வாதபித்தகபங்களை அவற்றின் சீற்றத்திலிருந்து கீழிறக்கி சமநிலைப் படுத்துவதனால் தர்ப்பை ஒரு அருமருந்தாக நாம் குறிப்பிடலாம். சில சர்க்கரை உபாதை நோயாளிகளுக்கு உடலில் எரிச்சலுடன் மஞ்சள் நிறம் கலந்த சிறுநீர் காணப்படும். இதற்கு ஹாரித்ரமேஹம் என்று ஆயுர்வேதம் கூறுகிறது. மேலும் சிலருக்கு துர்நாற்றமுள்ளதாகவும், மஞ்சிட்டை (மஞ்சள்நிறம்) கலக்கிய நீர் போன்றதுமாக சிறுநீர் வெளியேறும் நிலையில் அதற்கு மாஞ்சிஷ்டமேஹம் என்றும் துர்நாற்றம், சூடு, இரத்தம் போன்றும் சிறுநீர் வெளியேறுவதும் இரக்தமேஹமென்றும் கூறப்படுகிறது.

இந்த மூன்று வகையான சிறுநீர் உபாதைகள் அனைத்தும் பித்ததோஷத்தினுடைய சீற்றத்தின் விளைவாக ஏற்படுவதால் அதுபோன்ற நிலைகளில் தர்ப்பைக் குடிநீர் அருந்துவது பித்தத்தினால் ஏற்படக் கூடிய சர்க்கரை உபாதையை குறைப்பதுடன் சிறுநீரகம் மற்றும் சிறுநீர் பாதையில் ஏற்படும் தொற்று உபாதைகளையும் குணப்படுத்தும் சக்திவாய்ந்த ஒரு குடிநீர் ஆகும்.

சுமார் 15 கிராம் தர்ப்பைப்புல்லை ஒரு லிட்டர் தண்ணீரில் கொதிக்கவிட்டு அரை லிட்டர் ஆகும்வரை குறுக்கிக் காய்ச்சி குளிர்ந்தபிறகு வடிகட்டி அந்த தண்ணீரை ஒரு நாளில் பலதடவை சிறிது சிறிதாகப் பருகிவர மேற்குறிப்பிட்ட உபாதைகள் நீங்கிவிடும். சிலருக்கு தர்ப்பை நீரைக் காய்ச்சுவதற்கான நேரம் இல்லாமல் இருப்பதால் தர்ப்பைப் புல்லை நன்றாக இடித்து இரவு முழுவதும் பானைத் தண்ணீரில் ஊறவைத்து மறுநாள் காலையில் அதைப் பருகுவதன் மூலம் அந்த நீருக்கான மருத்துவகுணங்களை நம்மால் பெற இயலும். இதற்கு “ஹிமகஷாயம்” என்று ஆயுர்வேதம் பெயரிட்டுள்ளது.

சர்க்கரை உபாதையின் தாக்கத்தையும் நாம் குறைத்துக்கொள்ள முடியும். தர்ப்பைப்புல்லுக்கு மேலும் சில நல்ல மருத்துவகுணங்கள் இருக்கின்றன.

தர்ப்பைப்புல் உடலுக்குக் குளுமையை ஏற்படுத்துவதால் தர்ப்பைப்புல் குடிநீர் வெயில் காலத்தில் அருந்தவேண்டிய ஒரு அற்புதமான பானமாகும்.

தர்ப்பையிலுள்ள நெய்ப்பு, இனிப்பு மற்றும் குளிர்ச்சியின் காரணமாக தாய்ப்பாலையும், சிறுநீரையும் அதிகளவில் சுரக்கச் செய்கிறது.
சிறுநீரகத்தில் ஏற்படும் இரத்த அழுத்தத்தை சீராக்கக் கூடிய தர்ப்பைக் குடிநீரின் உபயோகத்தின் மூலம் இரத்தத்தில் தேங்கும் யூரியா, க்ரியாட்டினின் கழிவுப் பொருட்களை அகற்றகிறது.

சிறுநீரகக் கற்களை உடைத்து வெளியேற்றும் தன்மை தர்ப்பைப்புல்லுக்கு இருக்கிறது.
தண்ணீர் தாகத்தைப் போக்கும். சிறுநீரகப்பையில் ஏற்படும் வலி மற்றும் அதிகமான மாதவிடாய் இரத்தப்போக்குள்ள பெண்களுக்கும் தர்ப்பைக் குடிநீர் மிகவும் நல்லது என்று பாவப்ரகாசர் எனும் ஆயுர்வேதமுனிவர் குறிப்பிடுகிறார்.
மஞ்சள் காமாலை உபாதையில் கல்லீரலில் உள்ள கிருமித்தொற்று மற்றும் அதிகமான பித்தஊறல் ஆகியவற்றைக் குறைக்கக் கூடியது. இரத்தத்தில் ஏற்படும் காந்தல் மற்றும் அதன்மூலமாக ஏற்படும் இரத்தமூலம், இரத்தக்கசிவு, வாய்ப்புண் சிறுநீரக எரிச்சல் போன்றவற்றை குணப்படுத்தும்.
நாவிற்கு நல்ல ருசியை ஏற்படுத்தித் தரும். Herpes zoster எனப்படும் நரம்பு தொடர்தோல் எழுச்சியில் தர்ப்பைப் புல் தண்ணீரை வெளிப்புறம் மற்றும் உட்புற உபயோகத்தால் அதில் ஏற்படும் எரிச்சல் மற்றும் குத்தல் வலியை நம்மால் போக்கிக் கொள்ள முடியும் என்று நிகண்டுரத்னாகரம் மற்றும் ராஜநிகண்டு எனும் ஆயுர்வேத புத்தகங்களில் குறிப்புகளாகக் காணப்படுகின்றன.
காஞ்சி மஹாஸ்வாமிகள் தர்ப்பையின் பெருமைகளைப் பற்றி, “தர்ப்பை, துளஸி, வில்வம் என்றிப்படி நம் சாஸ்திர காரியம், பூஜை இவற்றில் பிரயோஜனமாகின்றவற்றுக்கெல்லாம் வைத்ய ரீதியிலோ, மற்ற ஸயன்ஸ்களின் ரீதியிலோ sound basis (அழுத்தமான அடிப்படை) இருக்கிறது எனகிறார்கள். க்ரஹண காலத்தில் எல்லாவற்றிலும் தர்ப்பையைப் போட்டு வைக்க வேண்டுமென்றால் முன்னே பரிஹாஸம் செய்தார்கள். “சூரியனைப் பாம்பு தின்கிறதாம். அதன் நாக்கை அறுப்பதற்கு தர்ப்பை போட்டிருக்கிறார்களாம்!” என்று கேலி பண்ணினார்கள். ஆனால் இப்போதோ க்ரஹண காலத்தில் அட்மாஸ்ஃபியரிலும், அதற்கும் மேலே இருக்கிற ஸ்ஃபியர்களிலும் அநேக contamination (அசுத்தம்) , radiation ஆகியன உண்டாவதாகவும், கர்ப்பத்திலிருக்கிற சிசுவைக் கூட அது பாதிப்பதாகவும், அதனால் “க்ரஹணத் தீட்டு” என்று அந்தக் காலத்தில் சாப்பிடாமல் இருக்கணும் என்று வைத்ததில் ரொம்ப அர்த்தமிருப்பதாகவும், இந்த பாதிப்பை counteract பண்ணும் (எதிர்த்துப் போக்கும்) சக்தி தர்ப்பைக்கு இருக்கிறதென்றும் கூறுகிறார்கள்.

இத்தனை சிறப்பு வாய்ந்த தர்ப்பை நீரை தமிழகத்தில் வரப்போகும் கோடைகாலத்தில் பயன்படுத்தி அதன் நிறைவான பலனை அனைவரும் பெற முயற்சிப்பது ஆரோக்கியத்திற்கான ஒரு திறவுகோலாக அமைத்துக் கொள்வோம்


மிதக்கும்_மாட்டு_வண்டியில் #முகமில்லா_மனிதர்

சிவமயம் சிவாய நம 

#மிதக்கும்_மாட்டு_வண்டியில் #முகமில்லா_மனிதர்!

  தென்னிந்திய பகுதியில், கர்நாடக மாநிலமாக தற்போது உள்ள இடத்தில், ஒரு பக்தரின் வாழ்க்கையில் நிகழ்ந்த ஒரு அழகான சம்பவம் அந்த பக்தருக்கு வயதுமுதிர்ந்த தாய் இருந்தார். அவரது தாய் தன் குழந்தைகளை வளர்த்து அவர்களை உயர்வடையச் செய்வதிலேயே தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்திருந்தார். 

  அவர் தனக்கென்று எதையும் கேட்டதில்லை முதல்முறையாக தன் ஒரே மகனிடம் காசிக்குச் சென்று தன் உடலைவிடும் ஆசையைத் தெரிவித்தார்.

 “இந்த ஒரு விஷயத்தை எனக்கு தயவுசெய்து நிறைவேற்றிக்கொடு!” என்று அவர் வேண்டினார் தனது தாய் மீது அளவில்லா அன்புகொண்ட அம்மகன் உடனடியாக பயணத்திற்கான ஏற்பாடுகளைச் செய்வதாகச் சொன்னார் தனது பொருள் வாழ்க்கை சார்ந்த செயல்பாடுகள் அனைத்தையும் கைவிட்டுவிட்ட அவர், மனைவி மற்றும் குழந்தைகளையும் விட்டுவிட்டு, அவர்களிடம் பிரியாவிடை பெற்று, தனது தாயைக் கூட்டிக்கொண்டு பயணத்தை துவக்கினார் இந்தியாவின் தென் பகுதியிலிருந்து காசிக்கு நடந்தே செல்ல இருவரும் முற்பட்டார்கள் அது ஒரு நீண்ட பயணம்.

  பல வாரங்கள் கடந்த நிலையில் பயணக் களைப்பில், வயதுமுதிர்ந்த தாய் பலகீனமடைந்தார் அவரால் தொடர்ந்து நடக்க முடியவில்லை ஆகவே, அந்த பக்தர் தனது தாயை தோளில் தூக்கிக்கொண்டு நடக்கத் துவங்கினார் தனது முழுபலமும் தீரும் நிலையிலும் கூட நடந்து கொண்டிருந்த அவரிடம், தனது தாயின் ஆசையை என்ன விலை கொடுத்தாவது பூர்த்திசெய்துவிட வேண்டுமென்ற முனைப்பு இருந்தது.

  அந்த நீண்ட பயணத்தில் ஒரு காட்டு வழியில் பயணிக்க நேர்கையில், அங்கே ஒரு மணியோசையை கேட்டார் அந்தஅத்துவான காட்டிற்குள் அப்படியொரு மணியோசை கேட்பது ஒரு இசைவான விஷயம்தானே! யார் மாட்டுவண்டியில் வருவது என்று அவர் பார்த்தபோது, ஒற்றை மாடு பூட்டப்பட்ட மாட்டுவண்டி எனத் தெரிந்தது பொதுவாக ஒற்றை மாடு பூட்டப்படும் வண்டிகள் உள்ளூர் தேவைகளுக்காக பயன்படுத்தப்படக் கூடியவை தொலைதூரப் பயணத்திற்கு எப்போதும் இரட்டை மாடுகள் பூட்டப்படும் வண்டிகள்தான்!

  ஆனால், அந்த காட்டின் அடர்ந்த மையப் பகுதியில், ஒரு ஒற்றை மாடு பூட்டப்பட்ட வண்டி வந்து கொண்டிருந்தது. தனது தாயை தோளில் சுமந்து சென்று கொண்டிருந்த இந்த மனிதனின் அருகில் அந்த மாட்டுவண்டி நின்றது. “உள்ளே ஏறுங்கள்” என்றார் மாட்டுவண்டி ஓட்டுநர் ஏறிக் கொண்டனர் தனது தாயை வண்டியினுள்ளே பத்திரமாக அமரவைத்தார் மகன் வண்டி நகரத் துவங்கியது தனதுதாயை வண்டியில் கூட்டிச்செல்வது குறித்து மகிழ்ச்சியுற்ற மகன், சிறிது நேரத்திற்குப் பின் ஒரு விஷயத்தைக் கவனித்தார்.

  வழக்கமாக மாட்டு வண்டிகளில் செல்லும்போது பாதையில், மேடுபள்ளங்களில் ஏற்படும் அதிர்வுகள் ஏதும் உணரப்படவில்லை என்பதை உணர்ந்தார் பொதுவாக, மாட்டு வண்டிகளில் மேடு பள்ளங்களில் போகும்போது அதன் அதிர்வுகளை தாங்குவதற்கான ஏதும் இருக்காது ஆனால், இந்த வண்டியோ மிதப்பதுபோல இருந்தது வண்டியின் சக்கரத்தைக் கவனித்தபோது அவை சுழலவில்லை பின் அவர் காளையினைப் பார்த்தார் அது கால்மடக்கி அமர்ந்தவாறு இருந்தது, ஆனாலும் வண்டி சென்று கொண்டிருந்தது.

பின் அவர் ஓட்டுநரைப் பார்த்தார். அங்கு முகமில்லாத ஒரு மேலாடை மட்டுமே இருந்தது அது, “வெறுமையான முகம்.” அந்த ஆடைக்குள் ஒன்றும் இல்லை! அவர் தனது தாயைப் பார்த்தார் அவர் பிரகாசமாய் ஜொலித்துக் கொண்டிருந்தார்.

அவரது தாய் உடனே எழுந்து உட்கார்ந்து, “நாம் வந்து சேர்ந்துவிட்டோம்! அவர் இங்குதான் இருக்கிறார். நான் போகும் நேரம் வந்துவிட்டது” என்று சொல்லி, தனது உடலை அங்கேயே துறந்தார்.

  பொருள்நிலையுடன் யாரெல்லாம் ஆழமான அடையாளம் கொண்டு அதன் கட்டுப்பாட்டிற்குள் சிக்கியுள்ளார்களோ அவர்கள்தான் “காலம், இடம்” என்ற தன்மைகளில் சிக்கிக் கொள்கிறார்கள்.

  அனைத்தும் துறந்து இறைவனை நினைத்து செல்பவர்களை அவரே எதிர் கொண்டு அழைத்து செல்கிறார்.

திருச்சிற்றம்பலம் 

சிவ ஓம் நமசிவாய

ஸ்ரீ சனீஸ்வர பகவானுக்கு வாக்கு கொடுத்த ஐயப்பன்..

ஸ்ரீ சனீஸ்வர பகவானுக்கு வாக்கு கொடுத்த ஐயப்பன்..

விரதத்தின் போது வண்ண உடை ஏன் உடுத்தக் கூடாது தெரியுமா. வாருங்கள் படித்து தெரிந்து கொள்வோம்.

மானிடர்களை சனி பகவானின் ஏழரை வருடம் தண்டிக்கிறீர்கள்.  அவர்களுக்கு நல்லருள் அருளக் கூடாதா என சனீஸ்வர ரிடம் ஐயப்பன் கேட்க, அதற்கு அது என் தர்மம்,  பிரம்மன் படைத்தலும், மகா விஷ்ணு காத்தல், ஈசன் அழித்தன் என வேலையை செய்கின்றனர்.

படைத்தல், காத்தல், அழித்தல் தர்மம் என் றால், அது தடைப்பட்டால் எப்படி சிருஷ்டி இயங்காதோ, அதே போல், நான் கர்ம வினைகளுக்கு ஏற்ப மானிடரைத் தண்டிக் காவிட்டால் என் தர்மம் என்ன ஆகும் என சனீஸ்வர் கேட்டார்.

அதோடு மானிடர்களை அவரவர் கர்ம வினைக்கேற்ப தண்டனை அழிக்காவிட் டால் எப்படி சிருஷ்டி இயங்கும் என சனீஸ்வரர் கேட்டார்.

எழரை சனி..
***************
சிருஷ்டி என்பது மனிதர்களின் சந்தோசத் திற்கும், ஆனந்த அமைதிக்கும் தான் சிருஷ்டி செயல்படுகிறது. மானிடர்களின் கர்ம வினை பலன்களை தரத்தானே நீ உள்ளாய். சரி என கூறி, ஐயப்பன் பல்வே று தண்டனைகள் அடங்கிய விதிகள் அதா வது விரதத்தை கடைப்பிடிப்பது குறித்து வாக்கு கொடுத்தார்.

சனீஸ்வரர் தன் ஏழரை ஆண்டுகால பிடியி ல் ஒருவனுக்கு எப்பேர்ப்பட்ட தண்டனை வழங்குகிறார் என்பதையும், அதற்கேற்றா ர் போல் விரதத்தை அமைத்து,  தீய பார்வையிலிருந்து தன் பக்தர்களை காக்க ஐயப்பன் விரத முறையை அமைத்தார். 

ஒரு மண்டல காலம் விரதம் இருக்கும் ஒரு வருக்கு சனீஸ்வரரின் கொடும் பார்வையி லிருந்து காத்தருள கேட்டுக் கொண்டார்.

​ஒரு மண்டலத்தில் ஏழரை ஆண்டு கால தண்டனை

ஒரு மண்டலம் விரதம் இருக்கும் ஒருவரு க்கு, ஏழரை ஆண்டு கால தண்டனையை எப்படி கொடுப்பது என சனி பகவான் கேட்டார்.

சனீஸ்வரரின் ஏழரை ஆண்டு தண்டனை எப்படி ஒரு மண்டலத்தில் பொருந்தும் என்பதை ஐயப்பன் விளக்கினார்.

சனீஸ்வரர்: விதவிதமான உணவு உண்டு, பழ ரசங்களை அருந்தி மகிழும் பலரை, சோற்றுக்கே வழியின்றி அலைய வைப் பேன். அதனால் அவர்கள் பட்டினியிலிரு mnந்து தப்பிக்கவே முடியாது என்றார்.

ஐயப்பன்: தன் பக்தர்கள் எளிமையான உணவை ஒரு பொழுது உண்பார்கள்.

சனீஸ்வரர்: மலர் தூவிய மஞ்சத்தில் உறங்கிய மன்னவனைக் கூட கல்லிலும், மண்ணிலும் உறங்க வைப்பேன் என்றார்.

ஐயப்பன்:  என் பக்தர்கள் கட்டிலில் உறங்காமல், வெறும் தரையில் படுத்து உறங்குவார்கள் என்றார்.

சனீஸ்வரர்:   முக்கிய விஷயம் என்ன வென்றால், என் பார்வை பட்டால் இணைந்திருக்கும் தம்பதியர் கூட பிரிந்து விடுவார்கள்.

ஐயப்பன்: கடுமையான பிரம்மச்சரியத் தைக் கடைப்பிடித்து, சுவாமியே சரணம் ஐயப்பா என்ற சரண கோஷத்தை உச்சரி த்து, காடு, மேடுகளை கடந்து என் தரிசன த்திற்கு வருவார்கள்.  அப்படி வரும் பக்தர் களை நீ ஒரு கணம் கூட பிடிக்கக் கூடாது, அவர்களுக்கு சுக சௌக்கியங்களைத் தான் அளிக்க வேண்டும் இது என் அன்பு வேண்டுகோளும், கட்டளையும் ஆகும் என்றார்.

​கருப்பு உடை :
****************
சனீஸ்வரர்: கட்டிக் கொள்ள உடை இல்லா மல், தலைக்கு எண்ணெய் இல்லாமல், காலுக்கு காலணி இல்லாமல், தன்னை தானே கண்டுகொள்ள முடியாத படி உருவ ம் சிதைந்து, செயலிழந்து, சக்தியின்றி வாடிப் போக வைத்துவிடுவேன்.

ஐயப்பன்: உனக்கு பிடித்த வண்ணம் கருப்பு தானே. விரத காலத்தில் கருப்பு உடை அணிந்து, காலணி கூட அணியா மல், முடி கூட திருத்திக் கொள்ளாமல், மணி மாலை அணிந்து, சுக சௌக்கியங் களில் ஒதுங்கி நிற்பார்கள்.  அனைவரா லும் சுவாமி என அழைக்கப்படுவார்கள். நீங்கள் சொன்ன கஷ்டங்களை எல்லாம் பக்தி சிரத்தையோடு ஏற்று அதை விரத மாக கடைப்பிடிப்பார்கள்.

​விரதம் முக்கியம்:
*********************
சனீஸ்வரர்: மனம் மிகு பன்னீரில் குளித்த வர்களைக் கூட, நான் வெறும் தண்ணீரு க்கே அல்லாட வைப்பேன்.

ஐயப்பன்: உதயத்திலும், மாலையிலும் பச்சை தண்ணீரில் என் பக்தர்கள் குளிப்ப தை பக்தி சிரத்தையுடன் ஏற்பார்கள்.

தர்ம சாஸ்தாவின் இந்த கட்டளையை சிரமேற்கொண்டு சனிபகவான் இன்றும் ஐயப்ப பக்தர்கள் கொடும் பார்வை செலுத் தாமல் நன்மையை செய்து வருகின்றார்.

இப்படி சனிபகவானை ஐயப்பன் சம்மதிக் க வைத்து, தன் பக்தர்களுக்கு இத்தனை கட்டுப்பாடுகளை விரதமாக வைத்துள் ளார். இதன் காரணமாக தான் கருப்பு உடை உடுத்தி ஐயப்ப பக்தர்கள் கடும் விரதம் இருந்து மலைக்கு செல்கின்றனர்.

நாமும் இந்த சரியான காரணத்தை உணர் ந்து ஐயப்ப விரதத்தை சரியாக பின்பற்றி சனிப்பார்வையிலிருந்து தப்பித்து நன்மையை பெற்று மகிழுங்கள்...

அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகன் ஸ்ரீ ஹரிஹர சுதன் அய்யன் ஐயப்பன் மனமுருகி பிரார்த்தனை செய்யுங்கள், சகல சௌபாக்கியம் வாழ்வில் வளமும், நலமும் பெறுவோம்...

ஓம் ஹரிஹரசுதன் ஆனந்த சித்தன் ஐயன் ஐயப்ப சாமியே சரணம் ஐயப்பா.
.

Featured Post

எண்ணம்_போல_வாழ்க்கை

#எண்ணம்_போல_வாழ்க்கை... ஒருமுறை, ஒரு பிச்சைக்காரன் ரயிலில் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் போது, ​​ சூட் மற்றும் பூட்ஸ் அணிந்த ஒரு தொழிலதிபர...