Showing posts with label துளசி_மாடம். Show all posts
Showing posts with label துளசி_மாடம். Show all posts

Sunday, March 27, 2022

துளசி_மாடம்

துளசி_மாடம் விஷ்ணுவுக்கு உகந்தது #துளசி. துளசிக்கு பிருந்தை என்ற பெயரும் உண்டு. அதோடு விஷ்ணுபிரியா, ரிப்ரியா என்ற பெயர்களும் துளசிக்கு உரியவை. பழங்காலத்திலிருந்தே துளசி மாடம் அமைத்து வழிபடும் வழக்கம் நம்மிடையே இருந்து வருகிறது. துளசியின் மகிமை அதிகாலை மூன்று மணிமுதல் ஐந்து மணிவரை பிரம்மமுர்த்தம். அந்த அதிகாலையில் குளித்து முடித்து துளசி மாடத்தைச் சுற்றி வந்தால் அநேக நன்மைகள் உண்டாகும். துளசி சிறந்த மூலிகைச் செடியாகும். துளசி என்பதற்கு ஒப்பில்லாதது என்று பொருள். துளசியின் நுனியில் பிரம்மதேவரும், அடியில் சிவபெருமானும், மத்தியில் திருமாலும் வாசம் செய்வதாக நம்பப்படுகிறது. துளசி பெருமாளுக்கு மிகவும் பிரியமானதாக சொல்லப்படுவதால் எல்லா வைணவ தலங்களிலும் துளசிக்கு மிக முக்கிய இடம் உண்டு. துளசி இலை பட்ட நீரானது, கங்கை நீருக்கு சமமாக கருதப்படும். எனவே தான் துளசி நீரால் இறைவனுக்கு அபிஷேகம் செய்வது சிறப்பாக சொல்லப்படுகிறது. எந்த ஒரு பொருளை தானம் செய்யும் போதும் அந்தப் பொருளுடன், ஒன்றிரண்டு துளசி இலைகளையும் சேர்த்து தரும் போது தான் அந்த தானமானது முறையானதாகிறது என்று நம் தர்ம சாஸ்திரங்கள் கூறுகின்றன. துளசியின் மகத்துவத்தைச் சொல்லும் ஒரு கிளைக்கதை கிருஷ்ணாவதாரத்தில் உண்டு. துளசியை பூஜை செய்வதால் கங்கா ஸ்நானத்திற்கு சமமான பலனை கொடுக்கும். மூதாதையர்களுக்கு திதி காரியங்களில் துளசி பயன்படுத்துவதாலும், துளசிச்செடியின் நிழல் படும் இடங்களில் செய்தாலும் பரிபூரணப் பலன் கிடைகிறது. எந்த இல்லத்தில் அதிக துளசி செடிகள் உள்ளதோ அங்கு துர்மரணம், துர்சம்பவங்கள் நிகழாது. துர்சக்திகள் நுழையாது. வீட்டில் பூசிக்கப்படும் துளசியை பறிக்கக் கூடாது. இதற்காக தனியே துளசியை வளர்த்து பயன்படுத்தவேண்டும். துளசி செடி காற்றை சுத்தபடுத்தி காற்றில் பரவக்கூடிய கிருமிகளை கட்டுபடுத்துகிறது. வீடு என்றால் துளசி மாடமும், விளக்கு மாடமும் கண்டிப்பாக இருக்கவேண்டும் அப்போதுதான் அந்த இல்லம் முழுமை பெரும். மாலையில் துளசிமாடத்தில் தீபம் ஏற்றி வைப்பது லட்சுமி கடாட்சத்தை இல்லத்தில் உண்டாக்கும். மகாவிஷ்ணு, மகாலட்சுமி, துளசி ஸ்தோத்திரங்களைப் பாராயணம் செய்வது நல்லது. சனிக்கிழமை, அமாவாசை, ஏகாதசி நாட்களில் துளசி இலையைப் பறிக்கக்கூடாது.

Featured Post

சிறந்த கேட்கும் திறன் கொண்ட மரம்

"சிறந்த கேட்கும் திறன் கொண்ட மரம்" இந்த உயிரினம் எதற்காக இறைவன் படைத்திருப்பான் இதனால் என்ன பயன் என்று சில உயிரினங்களை...