Showing posts with label 90 காலகட்டத்தில் சிறுவர். Show all posts
Showing posts with label 90 காலகட்டத்தில் சிறுவர். Show all posts

Monday, March 17, 2025

90 காலகட்டத்தில் சிறுவர், சிறுமிகளுக்கு இது தான் அன்றைக்கு பேவரிட்

 

*நாங்க இதை பொடி பிஸ்கட்னு சொல்லுவோம்... அஞ்சி காசுக்கு மூனு....*

90 காலகட்டத்தில் சிறுவர், சிறுமிகளுக்கு இது தான் அன்றைக்கு பேவரிட் ஸ்நேக்ஸ்...
செட்டியாரின் பலசரக்கு கடையில் தகர டப்பாவில் இந்த பிஸ்கட் மூடி வைத்திருப்பார்.
ஒத்த பைசா பிஸ்கட், 5 பைசாக்கு 5 பிஸ்கட், பத்து பைசாக்கோ, இருபது பைசாக்கோ பிஸ்கட் வாங்கி யூனிபார்ம் பாக்கெட்டில் போட்டு பள்ளிக்கூடத்திற்கு போகும் வழியில் ஒவ்வொரு பிஸ்கட்டாக வாயில் போடுவோம்,
வாயில் போட்ட ஒத்த பிஸ்கட்டை தின்னுவது இல்லை. உமிழ்நீரில் அந்த பிஸ்கட் கொவுந்து போகும் பிறகு அப்படியே நுனைத்தபடி சுவையுடன் ருசித்து விழுங்குவது தான் இந்த பிஸ்கட் தின்னும் முறை, என எழுதபடாத சட்டம் உண்டு..
சில நேரங்களில் பள்ளிக்கு வந்த பிறகு மீதம் பிஸ்கட் டவுசர் பாக்கெட்டில் இருந்தால், அதை சக பள்ளி தோழனுக்கு கொடுப்போம்.. சும்மா இல்லை.? பண்ட மாற்று முறையில்...
நான் பிஸ்கட் தந்தால் நீ, சிலேட் குச்சி, சிலேட் அழிக்கும் பச்சிலை, அல்லது சின்ன கச்சி (சின்ன கோலி) இதில் ஏதாவது ஒன்று தரவேண்டும்...
பர்கர், ஷவர்மா, சிக்கன் ரோல் , லேஸ் ஆகியவை இன்றைக்கு பேவரிட் ஸ்நேக்ஸின் ஆளுமை, ஒத்த பைசா பிஸ்கட் மறக்கபட்டும், மறைக்கபட்டும் உள்ளது. ( இந்த பிஸ்கட் ஒரு சில இடங்களில் இப்போதும் உள்ளது)
ஒத்த பைச பிஸ்கட்டை ருசித்து தின்ற கடைசி தலைமுறையும் நாம் தான்..

Featured Post

பொய்யூர் கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்

அற்புதமான பொய்கைநல்லூர் (பொய்யூர்) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்  வடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர். நாகை...