Showing posts with label கடவுள்_நம்_வாழ்க்கையில். Show all posts
Showing posts with label கடவுள்_நம்_வாழ்க்கையில். Show all posts

Wednesday, August 30, 2023

கடவுள்_நம்_வாழ்க்கையில்

 கடவுள்_நம்_வாழ்க்கையில்

ஆழமான சிந்தனையுடன் படித்து உணர்ந்து மகிழ்வோம்
மலை உச்சியில் அமர்ந்திருந்தார் கடவுள்
வெறுங்கையோடு பார்க்கப் போகாதே
ஏதாவது கொண்டு போ என்றார்கள்
குசேலனின் அவல் போல் இருந்ததை முடிந்து கொண்டு கிளம்பினேன்
மலைத்து நின்றேன் மலையடிவாரத்தில்
ரொம்ப உயரம் போலவே
ஏற முடியுமா என்னால்
மலையைச் சுற்றிலும் பல வழிகள்
மேலே போவதற்கு
அமைதியான வழி
ஆழ்ந்த தியானத்தி்ன் வழி
சாஸ்திர வழி
சம்பிரதாய வழி
மந்திர வழி
தந்திர வழி
கட்டண வழி
கடின வழி
சுலப வழி
குறுக்கு வழி
துரித வழி
சிபாரிசு வழி
பொது வழி
பழைய வழி
புதிய வழி
இன்னும்...இன்னும்
கணக்கிலடங்கா
அடேயப்பா
எத்தனை வழிகள்
ஒவ்வொன்றிலும் ஒரு வழிகாட்டி
கண்டுகொள்ளவில்லை
சில வழிகாட்டிகள்
என் வழியில் ஏற உனக்குத் தகுதியில்லை
ஒதுக்கினர் சிலர்
'நான் கூட்டிப் போகிறேன் வா
கட்டணம் தேவையில்லை
என் வழியி்ல் ஏறினால் போதும்
எத்தனை பேர் என் வழியில் ஏறினர் என கணக்குக் காட்ட வேண்டும் எனக்கு
என கை பிடித்து இழுத்தனர் சிலர்
மேலே ஏறும் சிரமம் உனக்கு வேண்டாம்
உனக்குப்பதில் நான் போகிறேன்
கட்டணம் மட்டும் செலுத்து
என சிலர்
பார்க்கணும் அவ்ளோதானே
இங்கேயிருந்து காட்டுகிறேன் பார்
அது போதும்
அதெல்லாம் நாங்க மட்டும்தான் ஏறமுடியும்
ஆணவ அதிகாரத்துடன் சிலர்
அங்கேயெல்லாம் உன்னால் போகமுடியாது
உன்னால் ஏறமுடியாது
தூரம் அதிகம் திரும்பிப்போ
அவரை என்னத்துக்குப் பார்க்கணும்
பார்த்து ஆகப்போறது என்ன
அதைரியப்படுத்தினர் சிலர்
உண்மையில் நீ பார்க்கும் தூரம் இல்லை
ஏறினால் ஏறிக்கொண்டே இருக்கவேண்டும்
அது ஒரு வழிப்பாதை
ஒரு முறை ஏற ஆரம்பித்தால் திரும்ப முடியாது
அப்படியே போக வேண்டியதுதான்
பயமுறுத்தினர் சிலர்
சாமியாவது பூதமாவது
அது வெறும் கல்
அங்கே ஒன்றும் இல்லை
வெட்டி வேலை
போய் பிழைப்பைப் பார்
பாதையை அடைத்து வைத்துப்
பகுத்தறிவு பேசினர் சிலர்
என்ன செய்வது
ஏறுவதா
திருப்பிப் போவதா
குழம்பி நின்ற என்னிடம்
கை நீட்டியது
ஒரு பசித்த வயிறு
கடவுளுக்கென்று கொணர்ந்ததை
அந்தக் கையில் வைத்தேன்.
மவராசனா இரு
வாழ்த்திய முகத்தினைப் பார்த்தேன்
நன்றியுடன் எனை நோக்கிய
அந்தப் பூஞ்சடைந்த கண்களிலிருந்து
புன்னகைத்தார் கடவுள்.
இங்கென்ன செய்கிறீர்
நான் இங்கேதானே இருக்கிறேன்
அப்போ அங்கிருப்பது யார்
மலை உச்சியை நோக்கிக் கை நீட்டினேன்
ம்ம்ம் அங்கேயும் இருக்கிறேன்
எங்கேயும் இருப்பவனல்லவா நான்
இங்கே எனைக் காண முடியாதவர்
அங்கே வருகிறார்
சிரமப்பட்டு
ஆனால் திணறினேன்
இது உமது உருவமல்லவே
அதுவும் எனது உருவமல்லவே
எனக்கென்று தனி உருவமில்லை
நீ என்னை எதில் காண்கிறாயோ
அது நானாவேன்
அப்படியென்றால்
வாழ்த்திய கண்களில் உனக்குத் தெரிபவனும் நானே
பசித்த வயிற்றோடு கைநீட்டியவன்
உணவளித்த உன் கண்களில்
காண்பதும் எனையே
தருபவனும் நானே
பெறுபவனும் நானே
நான் எங்கும் எதிலும் இருக்கிறேன்
என் தரிசனம் பெறக் கண் தேவையில்லை..
மனதுதான் வேண்டும்.
அப்போ உனைப் பார்க்க
மலை ஏற வேண்டாம் என்கிறாயா?
குழப்பத்துடன் கேட்டேன்.
தாராளமாக ஏறி வா
அது உன் விருப்பம்
அங்கும் நான் இருக்கிறேன் என்றேனே
அங்கு வந்தாலும் எனைப் பார்க்கலாம்.
கடவுளே'...விழித்தேன்...
எனக்குப் புரியவில்லை...
புரிந்து கொள்வது அவ்வளவு கடினமல்ல...
உனக்காக மட்டுமே நீ வாழ்ந்தால்...
என்னைக் காண
நீ சிரமப்பட்டு
மலையேறி உச்சிக்கு வரவேண்டும்...
பிற உயிர்களுக்காகவும் வாழ்ந்தாய் என்றால்...
நீ இருக்குமிடத்திலேயே என்னை காண்பாய்
#புன்னகைத்தார்_கடவுள்
திருச்சிற்றம்பலம்
சிவ ஓம் நமசிவாய

Lord Shiva, Lord Shiva 🙏🌺🙏
#கடவுள்_நம்_வாழ்க்கையில்
Let us read and understand with deep thought and enjoy
God was sitting on the top of the mountain
Don't look empty handed
They said take something
Leaving after finishing up Kusselan's Aval
Standing on the hills in the hills
Just like so tall
Can I climb
So many ways around the mountain
To the top
The way to calm
The path of deep meditation
The Shastra way
The formal way
The magical way
The tricky way
Payment way
The hard way
The easy way out
Short way
The fastest way out
The recommendation way
The public way
The old way
A new way
And yet... Still more
It's countless
Oh my god!
How many ways
A guide in everything
Not noticed
Some of the guides
You don't deserve to climb my way
Some of the people who have reserved
'I will take you come on
No fees required
Just get in my way
I need to count how many people climbed my way
Some people pulled me by holding my hand
You don't want the difficulty of climbing up
I'm going in your instead
Just pay the fees
Some of my people
Have to see that's all
Showing it from here see
That's enough
Only we can climb all that
Some people with arrogant power
You can't go there all
You can't climb
Distance go back more
What to see him for
What is going to happen by seeing
Some people who did it amazing
Really not far you see
If you climb you must keep climbing
That is a way of way
Once you start climbing you can't return
It has to go as it is
Some of them are scared
Is it a god or a demon
It was just a stone
There is nothing in there
Useless work
Go and see survival
Keeping the path blocked
Some people spoke rationalism
What to do
To climb
Shall I go back
Confused with me
Stretched the hand
A hungry stomach
What was brought to God
I put it in that hand.
Be a king
I saw a greeted face
Thankfully towards me
From those fungled eyes
God smiled.
What are you doing here
I am right here
Then who is there
Stretched my hand towards the mountain top
Mmmm been there too
I am not the one who is everywhere
Who can't find me here
There he comes
With a lot of difficulties
But I struggled with it
This is not your image
That is also not my image
I don't have a separate image
What do you find me in
That would be me
That means
I'm the one you know in the eyes of greeted
The man who extended his hand with a hungry stomach
In your eyes that fed you
Seeing is also myself
I am also the giver
I am the one who gets it
I'm everywhere and in everything
I don't need eye to get my darshan..
The heart is what is needed.
To see you then
You mean no to climb a mountain?
Heard it with confusion.
Come on up freely
It's your choice
I said I am there too
You can see me there too.
Oh my God'... Woke up ...
I don't understand...
It's not that hard to understand...
If you live only for yourself...
To see me
When you go hard
Gotta climb the mountain to the top...
If you lived for other lives...
You will find me where you are
#புன்னகைத்தார்_கடவுள்

Featured Post

எண்ணம்_போல_வாழ்க்கை

#எண்ணம்_போல_வாழ்க்கை... ஒருமுறை, ஒரு பிச்சைக்காரன் ரயிலில் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் போது, ​​ சூட் மற்றும் பூட்ஸ் அணிந்த ஒரு தொழிலதிபர...