Showing posts with label மூளை செல்களின் வளர்ச்சிக்கு உதவும் பீட்ரூட்!!. Show all posts
Showing posts with label மூளை செல்களின் வளர்ச்சிக்கு உதவும் பீட்ரூட்!!. Show all posts

Friday, March 3, 2023

மூளை செல்களின் வளர்ச்சிக்கு உதவும் பீட்ரூட்!!

 


பீட்ரூட்டில் மூளை செல்களின் வளர்ச்சியை தூண்டும் சத்துகள் அதிகமுண்டு.எனவே அடிக்கடி பீட்ரூட் ஜூசை பருகுவது ஞாபக மறதியை போக்கும். கல்லீரல்: உடலுக்கு ஒரு இன்றியமையாத உறுப்பு கல்லீரல் ஆகும்.


தினந்தோறும் அல்லது வாரத்திற்கு இருமுறையாவது பீட்ரூட் ஜூசை அருந்துபவர்களுக்கு கல்லீரல் சம்பந்தமான எந்த நோய்களும் வராமல் தடுக்கப்படும். பீட்ரூட்டின் மேல் காம்பைக் கொஞ்சமாக வெட்டி, நன்றாக கழுவி தோலை நறுக்காமல் சமைக்க வேண்டும். பெரிய துண்டுகளாக போட்டால் சத்து வீணாகாது. ஆவியில் வேக வைப்பதும் சிறந்தது. இதைப் பச்சையாகவோ, வேக வைத்தோ பயன்படுத்தும் போது வினிகர் அல்லது எலுமிச்சை ஜுஸ் தடவினால் நிறம் மாறாமல் அப்படியே இருக்கும்.

பீட்ரூட்டில் சிவப்பு வண்ணத்தில் (பீட்டா கரோட்டின்) புற்றுநோய் தடுப்புத் தன்மை சேர்ந்திருப்பதால் புற்றுநோயுடன் போராடும் சக்தி உள்ளது. மேலும் பீட்ரூட் நமது உடலின் ஆக்ஸிஜன் உறிஞ்சும் சக்தியை அதிகரிக்கிறது. இதே சிவப்பு நிறத்தில் ஃபோலாசின், பீட்டா கரோட்டின் இருப்பதால், பெண்களின் உடல்நலத்துக்கு மிகச் சிறந்தது. முக்கியமாக கருத்தரிக்கும் பெண்களுக்கு தேவையான சத்துகள் நிறைய இருக்கின்றன.

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சுலபத்தில் உடல் பலத்தையும், ரத்தத்தில் அவசியமான சத்துக்களையும் இழந்து விடுகின்றனர். இப்படிப்பட்டவர்களுக்கு பீட்ரூட் ஜூஸ் சிறந்த நிவாரணமாக இருக்கிறது. பீட்ரூட்டில் நிறைய உணவுச் சத்துகள் உண்டு. விட்டமின் சி, பொட்டாசியம், ஃபோலாசின், பீட்டா கரோட்டின், மாவுச்சத்து, இரும்புச் சத்து இதில் அதிகம் உள்ளன.

பீட்ரூட்டில் என்னென்ன சத்துக்கள் உண்டோ, அத்தனையும் அதன் இலைகளிலும் இருப்பதுதான் இதன் விசேஷம். இலைகளை பொடியாக நறுக்க வேண்டாம். அதிலிருக்கும் விட்டமின் சி அழிந்துவிடும். வேகும் போது மூடி போட்டு வேகவிட வேண்டாம். ஏனெனில், இதிலிருக்கும் ஆக்ஸாலிக் அமிலம் ஆவியாக வெளியேற வேண்டும். அப்போது இலைகளிலுள்ள அதிகமான சுண்ணாம்புச் சத்தை உடல் கிரகிப்பதைத் தடுக்க முடியும்.

Featured Post

எண்ணம்_போல_வாழ்க்கை

#எண்ணம்_போல_வாழ்க்கை... ஒருமுறை, ஒரு பிச்சைக்காரன் ரயிலில் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் போது, ​​ சூட் மற்றும் பூட்ஸ் அணிந்த ஒரு தொழிலதிபர...