நாமக்கலில் இருந்து நாளை(வியாழன்) முதல் வரும் திங்கள் வரையிலான நாட்களில் காலை 8:30 மணிக்கு கிருஷ்ணராஜபுரம், பெங்களூரூ செல்ல 20671 மதுரை - பெங்களூரூ வந்தே பாரத் ரயிலிலும், மாலை 5:25 மணிக்கு நாமக்கலில் இருந்து திருச்சி, திண்டுக்கல், மதுரை செல்ல 20672 பெங்களூரூ - மதுரை வந்தேபாரத் ரயிலிலும் டிக்கெட் இருப்பு விவரம் கொடுக்கப்பட்டுள்ளது. தேவைப்படுவோர் முன்கூட்டியே திட்டமிட்டு விரைவாக முன்பதிவு செய்து பயன்படுத்திக்கொள்ளலாம். (குறிப்பு : சனி, ஞாயிறு, திங்கள் ஆகிய நாட்களுக்கு டிக்கெட்டுகள் விரைவாக முடிந்துவிடும் என்பதால் நாமக்கல் மக்கள் முன்னதாகவே திட்டமிட்டு பயன்படுத்திக்கொள்ளுங்கள்).

இந்த ரயில்கள் நாமக்கலில் புறப்படும் நேரம்:- (செவ்வாய் தவிர மற்ற நாட்கள்)

காலை 8:30 மணிக்கு 20671 பெங்களூரூ வந்தேபாரத் ரயில்

மாலை 5:25 மணிக்கு 20672 மதுரை வந்தேபாரத் ரயில்

இந்த ரயிலில் நாமக்கலில் இருந்து பெங்களூரூ செல்ல கட்டண விவரம்:-

CC வகுப்பு (உணவு தவிர்த்து) - ரூ.800/-

EC வகுப்பு (உணவு தவிர்த்து) - ரூ.1575/-

CC வகுப்பு (உணவு சேர்த்து) - ரூ.1145/-

EC வகுப்பு (உணவு சேர்த்து) - ரூ.1975/-

இந்த ரயிலில் நாமக்கலில் இருந்து மதுரை செல்ல கட்டண விவரம்:-

CC வகுப்பு (உணவு தவிர்த்து) - ரூ.720/-

EC வகுப்பு (உணவு தவிர்த்து) - ரூ.1420/-

CC வகுப்பு (உணவு சேர்த்து) - ரூ.1010/-

EC வகுப்பு (உணவு சேர்த்து) - ரூ.1770/-