Showing posts with label கட்டிடங்கள் குளிர்ச்சியாக. Show all posts
Showing posts with label கட்டிடங்கள் குளிர்ச்சியாக. Show all posts

Friday, August 18, 2023

கட்டிடங்கள் குளிர்ச்சியாக

குளிர்ந்த காற்று அடர்த்தி அதிகமானது; சூடான காற்று இலகுவானது ஆகவே இயல்பாகவே குளிர்ந்த காற்று அறையில் அடிப்பகுதியிலும் சூடான காற்று அதிலிருந்து மேலெழுந்து அறையின் கூரைப்பகுதியை ஆக்கிரமித்தவாறும் இருக்கும்.
பழைய ஓடு அல்லது ஓலை வேய்ந்த கட்டிடங்களில் அறையின் கீழ்பாதியிலுள்ள திறப்புகள் வழியே உள்வரும் (பொதுவாகக் குளிர்ந்த) காற்று உள்ளிருக்கும் காற்றை இடப்பெயர்ச்சி செய்து உள் நிரம்பும். அதே நேரத்தில் அறையிலிருக்கும் சூடான காற்று கூரையின் துளைகள் வழியே தொடர்ந்து வெளியேறிக்கொண்டே இருக்கும். ஜன்னல்கள் சிறியதாக இருந்தாலும்கூட கூரைவேய்ந்த கட்டிடங்கள் குளிர்ச்சியாக இருப்பதற்கு இந்த காற்றோட்டம் ஒரு முக்கியக் காரணம்.
ஆனால், நவீன காங்கிரீட் கட்டுமானங்களில் சூடான காற்று வெளியேற துளைகள் ஏதும் இல்லாததோடு மின்விசிறிகள் மேலிருக்கும் சூடான காற்றையே கீழே திசைதிருப்புமாறு சுழல்வதால் வெப்பம் அதிகரிக்கிறது. வெளியே நல்ல காற்றோட்டம் இருந்தால்கூட நாம் அதை உணர முடிவதில்லை.
நவீன கட்டுமானங்களில் சரியான அளவுகள் திசைகளில் ஜன்னல்கள் அமைப்பது மற்றும் காற்றுத் தடுப்பான்கள் போன்றவற்றை அமைப்பதன்மூலம் இந்த பிரச்சினையை ஓரளவுக்கு சரி செய்ய முடியும்.
பல்வேறு விதமான ஜன்னல் திறப்புகளில் காற்றோட்டத்தை விளக்குகிறது கீழ்கண்ட படம். சிவப்பு நிறம் சூடான காற்றையும் நீல நிறம் குளிர்ச்சியான காற்றையும் குறிக்கிறது. வெளிக்காற்று அதன் உயரத்தைப் பொறுத்து சூடாகவோ அல்லது குளிராகவோ இருக்கலாம் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
Cold air is density; hot air is lighter so naturally cold air will rise above the room and occupy the roof.
Old tile or leafy buildings will relocate and fill the inside (generally cold) air through the openings of the room. Meanwhile, the hot air in the room continues to flow through the holes of the roof. The wind is one of the main reasons why roofed buildings are cool even when the windows are small.
But modern concrete structures have no holes for hot air exit and electric fans are rotating to distract the hot air above. Even if it's good wind outside we don't feel it.
Modern structures can somewhat solve the problem by setting up windows in directions and airproofers.

The following picture describes the air flow in the various window openings. Red means hot air and blue indicates cool air. It is notable here that the air may be hot or cold depending on its height. 

Featured Post

எண்ணம்_போல_வாழ்க்கை

#எண்ணம்_போல_வாழ்க்கை... ஒருமுறை, ஒரு பிச்சைக்காரன் ரயிலில் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் போது, ​​ சூட் மற்றும் பூட்ஸ் அணிந்த ஒரு தொழிலதிபர...