Showing posts with label Tamil God Thirumurugan. Show all posts
Showing posts with label Tamil God Thirumurugan. Show all posts

Friday, August 6, 2021

Tamil God Thirumurugan,Subramaniya Swamy Temple, Tiruchendur-tamilnadu

 

Subramaniya Swamy Temple, Tiruchendur    







Arulmigu Subramaniya Swamy Temple, Tiruchendur is an ancient Hindu temple dedicated to Lord Murugan. This temple is the fourth Hindu temple in Tamil Nadu to get ISO certification. The puranic name or historical name for this temple is Jayanthipuram.








Tiruchendur is a Hindu temple complex in the eastern end of the town Tirunelveli in Tamil Nadu, India. The temple complex is on the shores of the Bay of Bengal. It is located 40 km from Thoothukudi, 60 km south-east of Tirunilveli and 75 km north-west of Kanniyakumari.






Arulmigu Subramaniya Swamy Temple, Tiruchendur is one of the six major abodes, or sacred temples, of the Kaumaram religion. Soorasamharam, a reenactment of the victory over Soorapadman, and Kanda Shasti, a devotional song in praise of Lord Murugan are performed at the temple.





The Vaippu Sthalam is one of the shrines sung by Tamil Saivite Nayanar Appar. It is located in the southern Indian state of Tamil Nadu near the town of Kollimalayai.



The Murugan temple is one of India's most famous temples. The main deity, or moolavar, is portrayed in a granite carving as a saintly child. Devotees undergo a ritual cleansing by bathing in water from the well after bathing in the ocean.




Tamil God Thirumurugan articales

* திருச்செந்தூரில் பாலசுப்பிரமணிய சுவாமி, சண்முகர் என்று 2 மூலவர்கள் உள்ளனர். பாலசுப்பிரமணிய சுவாமி கிழக்கு பார்த்தும், சண்முகர் தெற்கு பார்த்தும் அருள்பாலிக் கிறார்கள்.

* திருச்செந்தூர் முருகன் ஆலயத்தில் வீரவாகுதேவர் காவல் தெய்வமாக உள்ளார். இதனால் இத்தலத்துக்கு வீரவாகு பட்டினம்என்றும் ஒரு பெயர் உண்டு.
* திருச்செந்தூர் தலத்தில் தினமும் வீரவாகு தேவருக்கு பூஜை நடத்தப்பட்ட பிறகே, மூலவரான முருகப்பெருமானுக்கு பூஜை நடத்தப்படுகிறது.
* மூலவர் பாலசுப்பிரமணியருக்கு தினமும் தூய வெள்ளை நிற ஆடை அணிவிக்கப்படுகிறது. சண்முகருக்கு சிறப்பு பச்சை நிற ஆடைகள் அணிவிக்கப்படும்.
* மூலவருக்கு பின்புறம் சுரங்க அறை ஒன்று உள்ளது. ரூ.5 கட்டணம் செலுத்தி உள்ளே சென்றால், முருகப்பெருமான் பூஜித்த பஞ்சலிங்கங்களை தரிசனம் செய்யலாம். இந்த அறைக்கு பாம்பறைஎன்றும் ஒரு பெயர் உண்டு. * திருச்செந்தூர் கோவில் இடது பக்கத்தில் வள்ளிக்குகை உள்ளது. இந்த குகைக்கு முன்புள்ள சந்தன மலையில் தொட்டில் கட்டினால், குழந்தை பாக்கியம் விரைவில் கிடைக்கும்.
* திருச்செந்தூர் தலத்தில் சண்முகர், ஜெயந்தி நாதர், குமரவிடங்கர், அலைவாய் பெருமான் என நான்கு உற்சவர்கள் உள்ளனர். இவர்களில் குமரவிடங்கரை மாப்பிள்ளை சுவாமிஎன்று அழைக்கிறார்கள்.
* திருச்செந்தூர் கோவில் கோபுரம் 17-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. 9 அடுக்குகளை கொண்ட இந்த கோபுரம் 157 அடி உயரம் கொண்டது.
* 'திருச்செந்தூர் முருகனே போற்றி' என்ற தலைப்பில் அருணகிரி நாதர் திருப்புகழ் பாடி உள்ளார். இந்த பாடல்களை பக்தி சிரத்தையுடன் பாடினால் பாவங்கள் நீங்கும் என்பது ஐதீகம். * திருச்செந்தூர் கோவில் வடிவம், பிரணவ மந்திரமான ஓம் எனும் வடிவில் அமைந்துள்ளது.
* மூலவருக்கு, பக்தர்கள் கட்டணம் செலுத்தி தங்க அங்கி அணிவித்து வழிபடலாம். இந்த வழிபாட்டின் போது முருகருக்கும், பரிகார தெய்வங்களுக்கும் தங்க அங்கி, வைர வேல் அணிவிக்கப்படும்.
* திருச்செந்தூர் கோவிலில் உள்ள சண்முக விலாசம் எனும் மண்டபம் 120 அடி உயரமும், 60 அடி அகலமும் கொண்டது. 124 தூண்கள் இதை தாங்கி நிற்கின்றன.
* திருச்செந்தூர் கோவில் மூலவர் முன் உள்ள இடம் மணியடிஎனப்படுகிறது. இங்கு நின்று பாலசுப்பிரமணியரை தரிசிப்பது சிறப்பானதாகக் கருதப்படுகிறது.
* நாழிக்கிணறு 24 அடி ஆழத்தில் இருக்கும் வற்றாத நீரூற்றாகும். இங்கு நீராடிய பிறகே கடலில் நீராட வேண்டும் என்பது ஐதீகம்.
* திருச்செந்தூர் கோவில் திருப்பணிக்காக மவுனசாமி, காசிநாத சுவாமி, ஆறுமுகசாமி மூவரும் தங்கள் வாழ்நாளை அர்ப்பணித்தனர். அவர்களது சமாதி நாழிக்கிணறு அருகே உள்ளது.

* தமிழகத்தில் முதன் முதலில் நாகரிகம் தோன்றிய நகரங்களுள், திருச்செந்தூரும் ஒன்று.
* முருகப்பெருமானோடு போரிட்ட படை வீரர்கள் அய்யனார்கள்என்று அழைக்கப்பட்டார்கள்.
* திருச்செந்தூர் கோவில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நிலைபெற்று இருப்பதாக வரலாற்று ஏடுகள் கூறுகின்றன.
* இத்திருத்தலம் மன்னார் வளைகுடாக் கடலின் கரையோரத்தில், அலைகள் தழுவ அமைந்திருப்பதால், ‘அலைவாய்என்று அழைக்கப்பட்டது. பின்னர், திரு என்னும் அடைமொழி சேர்க்கப்பட்டு, ‘திருச்சீரலைவாய்என்று அழைக்கப்படுகின்றது.
* இந்த ஆலயத்துக்குச் செல்லும் வழியில், தூண்டுகை விநாயகர் கோவில் உள்ளது. இந்த விநாயகரை வணங்கிய பின்னர்தான் முருகப்பெருமானை வணங்கிச் செல்ல வேண்டும்.


Featured Post

எண்ணம்_போல_வாழ்க்கை

#எண்ணம்_போல_வாழ்க்கை... ஒருமுறை, ஒரு பிச்சைக்காரன் ரயிலில் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் போது, ​​ சூட் மற்றும் பூட்ஸ் அணிந்த ஒரு தொழிலதிபர...