Wednesday, August 30, 2023

தருவைக்குளம் - வெள்ளபட்டி சாலையில் ரூ.7¾ கோடி மதிப்பில் பாலம்

தூத்துக்குடி அருகே தருவைக்குளம் - வெள்ளபட்டி சாலையில் ரூ.7¾ கோடி மதிப்பில் பாலம் அமைக்கும் பணிகள் பூமி பூஜையுடன் தொடங்கியது.  

தமிழகத்தின் சுங்க கட்டணம் உயர்வு 30.08.2023

 தமிழகத்தின் 20 சுங்கச்சாவடிகளில் நாளை நள்ளிரவு முதல் சுங்க கட்டணம் உயர்வு 


திண்டுக்கல், திருச்சி, சேலம் , மேட்டுப்பட்டி, உளுந்தூர்பேட்டை, மதுரை, தூத்துக்குடி உட்பட 20 சுங்கச்சாவடிகளில் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது 


தமிழகம் முழுவதும் மொத்தமுள்ள 54 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு இரண்டு பிரிவாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. ஏப்ரல் மாதம் குறிப்பிட்ட சுங்கச்சாவடிகளுக்கும், செப்டம்பர் மாதம் மீதமுள்ள சுங்கச்சாவடிகளுக்கும் ஆண்டுதோறும் கட்டணம் உயர்த்திக்கொள்ள தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அனுமதித்துள்ளது. 


இதன் அடிப்படையில் 2023 ஆம் ஆண்டுக்கான கட்டண உயர்வு தமிழகம் முழுவதும் உள்ள 20 சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1ஆம் தேதி நள்ளிரவு முதல் அமல்படுத்தப்படுகிறது. திண்டுக்கல், திருச்சி, சேலம் ,மேட்டுப்பட்டி, உளுந்தூர்பேட்டை, மதுரை, தூத்துக்குடி உட்பட 20 சுங்கச்சாவடிகளில் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது. 


மதுரை எலியார்பத்தி சுங்கச்சாவடி 


இதன் ஒரு பகுதியாக மதுரை - அருப்புக்கோட்டை சாலையில் உள்ள எலியார்பத்தி சுங்கச்சாவடியில் சுங்க கட்டண உயர்வு 1ம் தேதி நள்ளிரவு முதல் அமலுக்கு வருவதாக சுங்கச்சாவடி நிர்வாகம் தெரிவித்துள்ளது . அதனடிப்படையில் கார், வேன்,ஜீப் உள்ளிட்ட வாகனங்கள் ஒருமுறை சென்று வர பழைய கட்டணம் 85 ரூபாயிலிருந்து 90 ரூபாயாகவும் இரு முறை சென்று வர 125 ரூபாயிலிருந்து 135 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. மாதாந்திர கட்டணம் ரூபாய் 2505 இல் இருந்து 2740 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 


இலகு ரக வாகனங்கள் ஒரு முறை சென்று வர 145 ரூபாயிலிருந்து 160 ரூபாயாகவும் இரு முறை சென்று வர 220 ரூபாயிலிருந்து 240 ஆகவும் மாதாந்திர கட்டணம் 4385 ரூபாயிலிருந்து 4,800 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல் லாரி, பஸ் உள்ளிட்ட கனரக வாகனங்கள் ஒருமுறை சென்று வர கட்டணம் ரூபாய் 290 லிருந்து 320 ரூபாயாகவும் இரு முறை சென்று வர 440 லிருந்து 480 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. மாதாந்திர கட்டணமாக ரூபாய் 8770 லிருந்து 9595 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. 


இதேபோல் இரண்டு அச்சு மிக கனரக வாகனங்கள் ஒரு முறை சென்று வர ரூபாய் 470 லிருந்து 515 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.இருமுறை சென்று வர கட்டணம் 705 ரூபாயிலிருந்து 770 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது மாதாந்திர கட்டணமாக 14095 ரூபாயிலிருந்து 15420 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

ருத்ர பாதம்

 அகிலம் காக்கும் அண்ணாமலை ஈசனே எனை ஆளும் நேசனே சிவமே என் வரமே. எங்கும் சிவ நாமம் ஒலிக்கட்டும்


*கர்மவினை பாதிப்பில் இருந்து விடுபடுவதற்கு வழிபடவேண்டிய திருவெண்காடு தலத்தில் வடவால் ஆல விருட்சத்தின் அடியில் உள்ள ருத்ர பாதம்*
திருவெண்காடு தலத்தில் உள்ள வடவால் ஆல விருட்சத்தின் அடியில் ருத்ர பாதம் உள்ளது.
இத்தலத்தில் வழிபடுவோர்களுக்கு துயரம் நீங்கி 21 தலைமுறையில் வருகின்ற பிதுர் சாபங்கள் நீங்கும்.
இதன் பெயர் ருத்ர கயா.
காசியில் இருப்பது விஷ்ணு கயா.
இங்கு வந்து வழிபட பூர்வ ஜென்ம பாவங்கள் நீங்கும்.
குழந்தைப் பேறு , திருமண வரம் ஆகியவை இத்தலத்தில் கைகூடுகிறது.
இங்கு கல்வி, தொழிலுக்கு அதிபதியான புதனுக்கு தனி ஆலயம் உள்ளது. கல்வி மேன்மையடைய, தொழில் சிறக்க, பிணி நீங்க, பிள்ளைப்பேறு பெற புதனை வழிபட்டால் மேன்மையடைவது உறுதி.
மேலும் நரம்பு சம்பந்தமான வியாதிகள் குணமாகும்,கல்வி மேன்மை, நா வன்மை ஆகியவை கிடைக்கும்.பேய் ,பிசாசு தொல்லைகள் நீங்கும்.
மேலும் வேலை வாய்ப்பு , தொழில் விருத்தி ,உத்தியோக உயர்வு ஆகியவற்றுக்காகவும் இங்கு பிரார்த்தனை செய்தால் சுவாமி பக்தர்களது வேண்டுதல்களை நிச்சயம் நிறைவேற்றி கொடுப்பார்.
காசிக்கு சமமான தலங்கள் ஆறு.
அதில் ஒன்று திருவெண்காடு.
இத்தலத்தில் மூர்த்தி, தீர்த்தம், தலவிருட்சம் எல்லாமே மூன்று.
நவக்கிரகங்களில் இது புதனுக்குரிய ஸ்தலமாகும்.
51 சக்தி பீடங்களில் இதுவும் ஒன்று.
சிவனின் 64 மூர்த்தங்களுள் ஒன்றான அகோர மூர்த்தியை இத்தலத்தில் மட்டுமே காணலாம்.
இவர் நவதாண்டவம் புரிந்தார்.
எனவே, இதை ஆதி சிதம்பரம் என்பார்கள்.
இங்கு நடராஜ சபையும் ரகசியமும் உண்டு.
சிதம்பரத்தை போல நடராஜருக்கு அருகில் பெருமாளுக்கு தனி சன்னதி உண்டு.
இந்திரன், ஐராவதம், விஷ்ணு, சூரியன், சந்திரன், அக்னி ஆகியோர் வழிபட்டுள்ளார்கள்.
பட்டினத்தார் சிவதீட்சை பெற்றதும், மெய்கண்டார் அவதரித்ததும் இங்குதான்.
சுவேதாரண்யர் (திருவெண்காடர்) :
திருவெண்காடர், திருவெண்காட்டு தேவர், திருவெண்காடையார், திருவெண்காடுடைய நாயனார், திருவெண்காட்டு பெருமான் ஆகிய பெயர்களும் இவருக்கு உண்டு. இவரே இத்தலத்தின் நாயகர். லிங்க வடிவில் சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளியுள்ளார்.
நடராஜர் :
இங்குள்ள நடராஜரை ஆடவல்லான் என்று கல்வெட்டு கூறுகிறது. இத்தலம் ஆதிசிதம்பரம் என்றே அழைக்கப்படுகிறது. இங்கும் தில்லை சிதம்பரம் போன்றே நடராஜர் சபை அமைந்து உள்ளது.ஸ்படிக லிங்கமும், ரகசியமும் இங்கும் உள்ளது. தினந்தோறும் ஸ்படிக லிங்கத்துக்கு நான்கு அபிசேகங்களும் நடராஜ பெருமானுக்கு ஆண்டுக்கு ஆறு அபிசேகங்களும் நடைபெறுகிறது.
அகோர மூர்த்தி :
ஆலயத்தின் தனிச்சிறப்புக்கு உரியவர் அகோர மூர்த்தி. இவர் மருத்துவாசுரனை அடக்குவதற்காக சிவனின் ஈசான்ய முகத்திலிருந்து தோன்றியவர். இவரது வீரக் கோலம் இங்கு சிறப்பாக இருக்கிறது.
சிவபெருமான் தன் பக்தர்கள் பொருட்டு 64 வித உருவங்களில் காட்சியளித்து வருகிறார்.இது 43 வது உருவம் ஆகும்.
இறைவனின் வீரச் செறிவை காட்டும் கோலம்.
பெயரில் சற்று கடுமை இருந்தாலும் அருள் நிலையில் இந்த மூர்த்தி உள்ளார்.
மூலவரைப் போலவே உற்சவரும், நடப்பவர் ஒருவர் இடது காலை முன்வைத்து எப்படி வலது காலைப் பெயர்த்து அடியெடுத்து வைக்க முனைவாரோ அதே போல் பெருமான் தன் நடையழகைக் காட்டும் விதமாக உள்ளார் என்பது சிறப்பு.
அட்ட வீரட்டதலங்களில் இத்தலம் சேராவிட்டாலும் சிவபெருமானின் வீரச்செயல் நிகழ்ந்த தலம் இது.
இந்த அகோர மூர்த்தியை திருவெண்காடு தலத்தை தவிர்த்து வேறு எங்கும் காண முடியாது.
பிரம்ம வித்யாம்பாள் :
இத்தலத்தின் தன்னிகரில்லா தலைவி இவள்.திருவெண்காடரின் சக்தி வடிவம் இவள். மாதங்க முனிவருக்கு மகளாகத் தோன்றி மாதங்கி என்ற பெயருடன் சுவேதாரண்யரை நோக்கி தவம் இருந்து தன் கணவனாக பெற்றார். பிரம்மனுக்கு வித்தை கற்பித்ததால் பிரம்ம வித்தயாம்பிகை யானாள். கல்வியில் சிறந்து விளங்க இவளை வழிபாடு செய்வது சிறப்பு.
நான்கு திருக்கரங்களில் இடது மேற்கரத்தில் தாமரைப்பூ(செல்வச் செழிப்பு) வலது மேற்கரத்தில் அக்கமாலை(யோகம்) அணி செய்வதைக் காணலாம்.கீழ்க்கரம் அபய கரம்.இடது கீழ்கரம் திருவடிகளின் பெருமையை பேசுவதாகும்.பணிந்தார் எவரும் தெய்வம் போல உயரலாம் என்பதாகும்.பெருமை வாய்ந்த சக்தி பீடங்களுள் இதுவும் ஒன்று.
காளிதேவி :
சுவேத வனத்தில் எழுந்தருளிய மாசக்தியாதலால் சுவேதன காளி என்று அழைக்கப்படுகிறாள். எட்டு கரங்கள், பாசம், சக்கரம், வாள், உடுக்கை, கேடயம், கபாலம் ஆகிய படைக் கலன்களை தாங்கியுள்ளார். பாவத்தில் எடுப்பும் மிடுக்கும் கொப்பளிக்கிறது. உடலின் சாய்வுக்கு ஏற்ப வலக்காலைப் பீடத்தின் மீது உயர்த்தி வைத்துக் கொண்டு இடக்காலைத் தொங்க விட்டிருக்கிறார். பக்தியோடு கலையை ஆராதிப்பவர்களுக்கு இவள் அருள் புரிகிறாள்.
துர்க்கை தேவி :
துர்க்கையின் உருவைக் கண்ட மாத்திரத்தில் மேற்கண்டு அடிவைக்க மனம் வராது. மகிஷனை அழித்த இந்த மாதேவி இப்படியும் கூட அழகினளாக இருப்பாளா என்ற ஆச்சர்யம் வரும். இவள் தன் எட்டு கரங்களில் சங்கு, சக்கரம், வில், அம்பு உடையவளாக காட்சி தருகிறாள்.
புதன் பகவான் :
வித்தயாகரகன் எனப்படும் புதன் பகவான் அன்னை வித்யாம்பிகையின் அரசாட்சிக்குட்பட்டவர் போன்றும் தாயின் அரவணைப்போடும் கூடி வீற்றிருக்கும் சேய் போன்றும் அனையர் கோயிலுக்கு இடது பாகத்தில் தன் கோயிலை அமைத்துக் கொண்டு அருள் பாலிக்கிறார்.
இத்தலத்தில் திருவெண்காடரை புதன் தன் அலி தோசம் நீங்கி நவகோள்களில் ஒருவரானார் என்பது புராண வரலாறு.
இவர் செய்த மாதவத்தின் பயனாகவே ரிக் வேதத்தின் ஐந்தாவது காண்டத்துக்கு அதிபதி ஆனார்.திருவெண்காடு நவகிரக தலங்களில் மிகவும் புகழும் சிறப்பும் பெறக் காரணமாக அமைந்தவர்.
பிள்ளையிடுக்கி அம்மன்:
திருஞான சம்பந்தர் இத்தலத்தின் வட எல்லைக்கு வந்த போது அவருக்கு ஊரெல்லாம் சிவலோகமாகவும், மணலெல்லாம் சிவலிங்கமாகவும் தோன்றின. எனவே இத்தலத்தில் காலை வைக்க பயந்து "அம்மா' என்றழைத்தார்.
இவரது குரலைக்கேட்ட பெரியநாயகி இவரை தன் இடுப்பில் தூக்கி கொண்டு கோயிலுக்குள் வந்தார். சம்பந்தரை இடுப்பில் தாங்கிய வடிவில் பெரியநாயகியின் சிலை அம்மன் கோயிலின் பிரகாரத்தில் உள்ளது.
புதனுக்கு தனி சன்னதி:
நவக்கிரகங்களில் புதன் பகவான், கல்வி, அறிவு, பேச்சுத்திறமை, இசை, ஜோதிடம், கணிதம், சிற்பம், மருத்துவம், மொழிகளில் புலமை ஆகியவற்றை தர வல்லவர். இவருக்கு இத்தலத்தில் தனி சன்னதி உள்ளது. புதனின் தந்தையான சந்திரனின் சன்னதியும், சந்திர புஷ்கரணி தீர்த்தமும், புதன் சன்னதிக்கு எதிரில் அமைந்துள்ளது.
ஜாதகத்தில் புதன் சரியாக அமையாவிட்டால் புத்திரபாக்கியம் கிடைக்காது. அத்துடன் அறிவுக்குறைபாடும், நரம்புத்தளர்ச்சியும் ஏற்படும். இப்படி குறைபாடுகள் உள்ளவர்கள் இங்கு வந்து சந்திர புஷ்கரணி தீர்த்தத்தில் நீராடி புதன் பகவானை வழிபட்டால் தோஷ நிவர்த்தி பெறலாம்.
இசைக்கு அதிபதியான புதனை இசைக்கலைஞர்களும், திரைப்படக்கலைஞர்களும் வழிபட்டு பயன் பெறுகின்றனர்.
நவகிரகங்களில் இது புதன் சிவபெருமானை பூஜித்து பேறு பெற்ற தலம். மிகப்புகழ்பெற்ற பிரார்த்தனை தலம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இத்தலம் காசிக்கு இணையான ஆறு தலங்களில் முதன்மையானது.
காசியில் உள்ள 64 ஸ்நான கட்டடங்களுக்கு இணையான மணிகர்ணிகை ஆறு இங்குள்ளது.
இத்தலத்தில் மூர்த்திகள்(திருவெண்காடர், அகோரமூர்த்தி, நடராஜர்), சக்தி(துர்க்கை, காளி, பிரம்மவித்யாம்பாள்),தீர்த்தம் (அக்னி தீர்த்தம்,சூர்ய தீர்த்தம்,சந்திர தீர்த்தம்) தலவிருட்சம்(வடவால், வில்வம், கொன்றை ) என்று மும்மூன்றாக அமையப்பெற்ற சிறப்பு உள்ளது.
காசியில் விஷ்ணு பாதம் உள்ளது போல இங்கு ருத்ர பாதம் வடவால் விருட்சத்தின் கீழ் உள்ளது.
அட்டவீரட்டத்தலம் போன்றே இங்கும் சிவபெருமான் மருத்துவாசுரனை சம்காரம் செய்து வீரச்செயல் புரிந்துள்ளார்.
ஆதி சிதம்பரம் என்ற பெயரும் பெருமையும் பெற்ற தலம் இது.
சப்த விடத்தலங்களில் இத்தலமும் ஒன்று.
வால்மீகி ராமாயணத்தில் இத்தலம் பற்றி குறிப்பிடப் பட்டுள்ளது.எனவே யுகம் பல கண்ட கோயில் இது.
சிலப்பதிகாரத்திலும் இத்தலம் பற்றி கூறப்பட்டுள்ளது. எனவே சமண வைணவ காவியங்களில் கூறப்பட்டுள்ள சைவ சமயக் கோயில் இது என்ற பெருமை பெற்றது.
பட்டினத்தார் இத்தலத்தில் வந்து திருவெண்காட்டு நாதரே அவருக்கு குருநாதராக இருந்து சிவதீட்சை தந்த தலம். இத்திருவிழா, இத்தலத்தில் இப்போதும் நடைபெறுகிறது. பட்டினத்தாருக்கு திருவெண்காடர் என்ற பெயர் பெற காரணமாக இருந்து கோயில் இது.
முக்குண நீராடல் :
இத்தலத்தில் உள்ள அக்கினி, சூரிய, சந்திர தீர்த்தங்களில் வளர்பிறை புதன் கிழமைகளில், புதன் ஹோரையில் தலைக்கு, பச்சை பயிறு வைத்து முழுகி, புதனை தரிசனம் செய்வோருக்கு ஏழு ஜென்ம கர்ம வினை பாதிப்பிலிருந்து விடுபட்டு சகல செல்வங்களையும் பெறுவார்கள்.
இனிய ஈசன் அருளுடன்பதிவை நேரம் ஒதுக்கி படித்தமைக்கு சிவ வாழ்த்துக்களைக் கூறி 🙇
🌷சிவாய நம🙏🙏 சிவமே ஜெயம் சிவமே தவம். சிவனே சரணாகதி
🌺அகிலம் காக்கும் அண்ணாமலையார் மலர் பாதம் பணிந்து இன்றைய விடியலை மனமுவந்து நமக்கு அளித்த இனிய ஈசனுக்கு நன்றியுடன் கோடானு கோடி ஆத்ம நமஸ்காரங்கள் 🙏🙏🙏🌺
🌺உலகின் முதல்வன் எம் பெருமான் நம் தந்தை சிவனாரின் இனிய ஆசியுடன் அன்பான சிவ காலை வணக்கங்கள் 🌺
🙇அப்பனே அருணாச்சலா உன்பொற் கழல் பின்பற்றி ஷிவானி கௌரி🦜

வடிவுடையம்மன் வள்ளலாருக்கு உணவு அளித்த நிகழ்ச்சி


🌺🌺 வடிவுடையம்மன் 108 போற்றி - 🌺🌺

🌺 வடிவுடையம்மன் வள்ளலாருக்கு உணவு அளித்த நிகழ்ச்சி:
வள்ளலார் ராமலிங்கரை உலகப் புகழ் பெறச் செய்தவள் வடிவுடையம்மன். ராமலிங்கர் தினமும் வடிவுடை அம்மன் கோயிலுக்குச் சென்று பல மணிநேரம் அன்னையை பார்த்துக் கொண்டே இருப்பார். அவருக்கு பக்தியில் இருந்த ஈடுபாடு படிப்பில் இல்லை.
ஒருநாள் இரவு கோயிலிலேயே அதிக நேரம் பொழுதைச் செலவிட்டார். நடு இரவில் வீடு வந்து சேர்ந்தார். கதவு சாத்தப்பட்டிருந்தது. ராமலிங்கத்திற்கு நல்ல பசி. இந்த இரவில் கதவை தட்டினால் அண்ணிக்கு தானே சிரமம் என்று கருதிய அவர், திண்ணையிலேயே பசியோடு படுத்தார்.
அப்போது “ராமலிங்கம் எழுந்திரு, சாப்பிடலாம்” என்று அண்ணி தட்டி எழுப்பி வாழை இலையில் பதினாறு வகை உணவு பரிமாறினாள்.
சாப்பிட்ட பிறகு அந்த திண்ணையிலேயே மீண்டும் தூங்கிவிட்டார் ராமலிங்கம். சில மணிநேரம் கழித்து யாரோ ராமலிங்கத்தை தட்டி எழுப்ப, விழித்தார்.
அண்ணிதான் நின்றிருந்தாள். “ராமலிங்கம் வெறும் வயிற்றோடு தூங்காதே; வந்து சாப்பிடு.” என்றாள்.
“இப்போது தானே அண்ணி சாப்பாடு போட்டீர்கள். அதோ பாருங்கள் நான் சாப்பிட்ட இலை” என்றார்.
“இல்லை நான் சாப்பாடு போடவில்லை. ஆச்சரியமாக இருக்கிறதே. யார் உனக்கு உணவு தந்தது” என்றாள் அண்ணி.
அப்போது தான் அண்ணியாக வந்தது திருவொற்றியூர் வடிவுடையம்மன் என்பதை உணர்ந்தார் ராமலிங்கம்.
அன்னை தந்த உணவு அவருக்கு பெரும் ஞானத்தையும் தமிழ்ப் புலமையையும் தந்தது. ராமலிங்க வள்ளலார் எனும் புகழை தந்தது. ஞானசக்தியான வடிவுடையம்மனை வணங்கினால் ஞானம் பெறுவர் என்பது நிசர்சனமான உண்மை.
வடிவுடையம்மன் 108 போற்றி:
🔥 ஓம் ஒற்றியூர் நாயகியே போற்றி
🔥 ஓம் ஒங்கு புகழே போற்றி
🔥 ஓம் உமையே அம்மையே போற்றி
🔥 ஓம் வடிவுடை மாணிக்கமே போற்றி
🔥 ஓம் வரம் தந்திடுபவளே போற்றி
🔥 ஓம் வாடா நாயகியே போற்றி
🔥 ஓம் வாய்மை தேவியே போற்றி
🔥 ஓம் வளம் தந்திடுபவளே போற்றி
🔥 ஓம் வசிஷ்டருக்கு அருளினாய் போற்றி
🔥 ஓம் லோக நாயகியே போற்றி
🌻 ஓம் ஞான வடிவே போற்றி
🌻 ஓம் ஞானாம்பிகையே போற்றி
🌻 ஓம் கலியனுக்கு அருளினாய் போற்றி
🌻 ஓம் அமுது படைத்தாய் போற்றி
🌻 ஓம் இன்பத்தைக் காப்பவளே போற்றி
🌻 ஓம் அறிவைத் தருபவளே போற்றி
🌻 ஓம் அறிவின் திருவே போற்றி
🌻 ஓம் வெற்றித் திருவே போற்றி
🌻 ஓம் ஆதி தேவியே போற்றி
🌻 ஓம் அகத்தியருக்கு அருளினாய் போற்றி
🌹 ஓம் மன்னர்களுக்கு அருள்வாய் போற்றி
🌹 ஓம் மகாதேவி போற்றி
🌹 ஓம் மேன்மை தேவியே போற்றி
🌹 ஓம் ஞாயிறு ஒளியே போற்றி
🌹 ஓம் மின்னல் நாயகியே போற்றி
🌹 ஓம் துர்கா தேவியே போற்றி
🌹 ஓம் வித்யா தேவியே போற்றி
🌹 ஓம் சக்கர நாயகியே போற்றி
🌹 ஓம் சங்கடம் தீர்ப்பவளே போற்றி
🌹 ஓம் சந்தோஷம் தருபவளே போற்றி
🍀 ஓம் ஆதிபுரி நாயகியே போற்றி
🍀 ஓம் தேவர்கள் தலைவியே போற்றி
🍀 ஓம் படம்பக்க நாதர் தேவியே போற்றி
🍀 ஓம் வேதபுரீஸ்வரி தேவியே போற்றி
🍀 ஓம் வேதத்தின் தேவியே போற்றி
🍀 ஓம் நாகேஸ்வரி தேவியே போற்றி
🍀 ஓம் நிலவின் தலைவியே போற்றி
🍀 ஓம் பாட்டின் பொருளே போற்றி
🍀 ஓம் மும்மூர்த்திகள் தேவியே போற்றி
🍀 ஓம் முழுநிலவு நாயகியே போற்றி
🍁 ஓம் வெள்ளிக்கிழமை நாயகியே போற்றி
🍁 ஓம் வேதத்தின் வித்தே போற்றி
🍁 ஓம் கலைமகள் தேவியே போற்றி
🍁 ஓம் கலைக்கு அரசியே போற்றி
🍁 ஓம் வீணாதேவியே போற்றி
🍁 ஓம் பாசம் ஏந்திய தேவியே போற்றி
🍁 ஓம் பாசத்தை அறுப்பவளே போற்றி
🍁 ஓம் அங்குச நாயகியே போற்றி
🍁 ஓம் அரசனின் அரசியே போற்றி
🍁 ஓம் கடலரசன் தேவியே போற்றி
🌼 ஓம் மலைமகளே போற்றி
🌼 ஓம் மகேசன் மனைவியே போற்றி
🌼 ஓம் அருளே அரசியே போற்றி
🌼 ஓம் ஐயத்தை அருள்பவளே போற்றி
🌼 ஓம் விஐயத்தை அருள்பவளே போற்றி
🌼 ஓம் உமையே உட்பொருளே போற்றி
🌼 ஓம் நந்தா விளக்கே போற்றி
🌼 ஓம் நாதமே நாயகியே போற்றி
🌼 ஓம் கந்தனுக்கு வேல் தந்தாய் போற்றி
🌼 ஓம் கணபதிக்கு அங்குசம் தந்தவளே போற்றி
🌷 ஓம் சிவத்தின் சக்தியே போற்றி
🌷 ஓம் மஹா சக்தியே போற்றி
🌷 ஓம் நடராஜர் நாயகியே போற்றி
🌷 ஓம் திருவருள் தேவியே போற்றி
🌷 ஓம் தீர்த்த நாயகியே போற்றி
🌷 ஓம் மகிழமர நாயகியே போற்றி
🌷 ஓம் மந்திர சக்தியே போற்றி
🌷 ஓம் புராண நாயகியே போற்றி
🌷 ஓம் புண்ணியம் தருபவளே போற்றி
🌷 ஓம் பிரகாச நாயகியே போற்றி
🌸 ஓம் பிரம்மனுக்கு உபதேசித்தாய் போற்றி
🌸 ஓம் சித்திரை நாயகியே போற்றி
🌸 ஓம் பிரளயம் காத்ததேவி போற்றி
🌸 ஓம் எழுத்தின் நாயகியே போற்றி
🌸 ஓம் ஏழுலகம் காப்பவளே போற்றி
🌸 ஓம் குலம் காப்பவளே போற்றி
🌸 ஓம் குங்கும நாயகியே போற்றி
🌸 ஓம் கைலாச நாயகியே போற்றி
🌸 ஓம் வினை தீர்க்கும் நாயகியே போற்றி
🌸 ஓம் வினை அறுப்பவளே போற்றி
💧 ஓம் கொற்றவை தேவியே போற்றி
💧 ஓம் ஓங்கார காயிதே போற்றி
💧 ஓம் மெய் ஞான சக்தியே போற்றி
💧 ஓம் அனுகிரக நாயகியே போற்றி
💧 ஓம் மாணிக்கமே மரகதமே போற்றி
💧 ஓம் மாதவன் சகோதரியே போற்றி
💧 ஓம் பூவே பூங்கொடியே போற்றி
💧 ஓம் தேனே கரும்பே போற்றி
💧 ஓம் திருவே தேவியே போற்றி
💧 ஓம் தேவர்களுக்கு அரசியே போற்றி
🌿 ஓம் கருணை கடலே போற்றி
🌿 ஓம் கருணையின் வடிவே போற்றி
🌿 ஓம் குடும்பத்தை காப்பவளே போற்றி
🌿 ஓம் யோகத்தை தருபவளே போற்றி
🌿 ஓம் உலகத்தை காப்பவளே போற்றி
🌿 ஓம் காலத்தை மாற்றுபவளே போற்றி
🌿 ஓம் சதுர்த்தசி நாயகியே போற்றி
🌿 ஓம் சகலசக்தி நாயகியே போற்றி
🌿 ஓம் உலகின் உயிரே போற்றி
🌿 ஓம் ஆபத்தில் காப்பவளே போற்றி
🍭 ஓம் அனைத்தும் ஆனவளே போற்றி
🍭 ஓம் திரிபுர நாயகியே போற்றி
🍭 ஓம் உத்தம நாயகியே போற்றி
🍭 ஓம் பஞ்ச பூத நாயகியே போற்றி
🍭 ஓம் கோள்களின் தேவியே போற்றி
🍭 ஓம் ஞான சக்தி ஆனாய் போற்றி
🍭 ஓம் உயிர்களுக்கு ஞானம் தருவாய் போற்றி
🍭 ஓம் ஞான வடிவுடையே போற்றி ! போற்றி ! 🌺🌺🌺
🌺🌺🌺 🙏🙏 ஓம் சக்தி பராசக்தி🌺🌺🌺 🙏🙏சர்வமும் சக்தி மயம்

🌺🌺 Vadivudaiamman 108 Praise - 🌺🌺
Vadivudayamman🌺🌺🌺 🙏🙏The program of giving food to Vallalar🌺🌺🌺 🙏🙏
🌺 The program where Vadivudayamman fed Vallalar:
Vadivudayamman is the one who made Vallalar Ramalingar to get world famous. Ramalingar used to visit Vadivudai Amman Temple daily and look at Mother for several hours. His involvement in devotion was not in studies.
One night he spent a lot of time in the temple. Arrived home at midnight. The door was closed. Good appetite for Ramalinga. He thought it would be difficult for sister-in-law if knocking on the door this night, he slept hungry in the field.
At that time, sister-in-law woke up and served sixteen types of food in banana leaf by saying "Ramalingam get up, let's eat".
Ramalingam again slept in the field after eating. Some hours later, someone woke up to knock down Ramalinga.
The sister in law was standing. "Ramalingam don't sleep with empty stomach; come and eat. She said "
"Now only you fed sister-in-law. He said look, the leaf I ate".
“No I’m not feeding. Sounds like a surprise. Who fed you" said sister in law.
That's when Ramalingam realized that Thiruvotriyur Vadivudaiamman came as sister-in-law.
The food given by mother gave him great wisdom and Tamil scholarship. Ramalinga Vallalar gave the fame. It is true that if you worship the powerful Vadivududayamman, you will get enlightened.
Vadivudayamman 108 hail:
🔥 Hail the heroine of Otriyur
🔥 Hail to the glory of Om Ongu
🔥 Om Umaiye Ammaie, hail you
🔥 Hail the gem of Vadivudai
🔥 Hail the one who gives boon
🔥 Om come heroine hail
🔥 Hail the Goddess of Truth
🔥 Hail the one who gives wealth
🔥 Hail to Om Vasishtar
🔥 Hail the heroine of the world
🌻 Hail the form of wisdom
🌻 Hail to the Gnanambigai
🌻 You have blessed Om Kaliyan, praise him
🌻 Om Amudu, praise the creator
🌻 Om, hail the protector of happiness
🌻 Om hail the one who gives knowledge
🌻 Praise the Lord of knowledge
🌻 Hail to the Lord of Victory
🌻 Praise the Lord Adi
🌻 Hail to the Lord Agathiyar who has blessed us
🌹 Blessings to Om Kings
🌹 Hail Lord Mahadevi
🌹 Hail to the great Goddess
🌹 Hail the Sunday light
🌹 Hail the lightning heroine
🌹 Hail Lord Durga
🌹 Hail Lord Vidya Devi
🌹 Hail to the heroine of Chakra
🌹 Hail to the one who solves the embarrassment
🌹 Hail the one who gives happiness
🍀 Hail the heroine of Adipuri
🍀 Hail the leader of Om Devars
🍀 Hail Lord Padampakka Nathar Devi
🍀 Hail Lord Vedapuri Swari
🍀 Hail the goddess of Vedas
🍀 Hail Lord Nageshwari
🍀 Hail the leader of the moon
🍀 Praise the meaning of Om Pat
🍀 Hail the Goddess of three triplets
🍀 Hail to the full moon heroine
🍁 Hail the heroine of Friday
🍁 Hail the seed of Om Vedas
🍁 Hail Lord Kalaimagal Devi
🍁 Hail the queen of Om Arts
🍁 Hail Lord Veena
🍁 Hail the goddess who bears affection
🍁 Hail the one who cuts affection
🍁 Hail the heroine of Angusa
🍁 Praise the queen of Om King
🍁 Hail Lord Kadalarasan Devi
🌼 Hail to the hills
🌼 Praise the wife of Om Mahesan
🌼 Hail the queen of grace
🌼 Praise the one who blesses Om Ayam
🌼 Hail the one who blesses Om Vijayam
🌼 Praise the Lord, the substance of the Lord
🌼 Hail the light of Nanda
🌼 Om Natham, the heroine, hail you
🌼 You gave spear to Om Kandan, hail you
🌼 Hail the one who gave angusam to Om Ganapathi
🌷 Hail the power of Om Shiva
🌷 Hail to the great power
🌷 Hail the heroine of Om Natarajar
🌷 Hail Lord Thiruvarul Devi
🌷 Hail the heroine of Om Theertha
🌷 Hail the heroine of the happy tree
🌷 Hail the magic power of Om
🌷 Hail to the legendary heroine
🌷 Hail the one who gives good deeds
🌷 Hail Lord Prakasa Heroine
🌸 Hail mother Brahma, you have advised
🌸 Hail the heroine of Chithra
🌸 Om flood, hail the goddess Kathavi
🌸 Hail the heroine of the letter Om
🌸 Om, the savior of the seven worlds, hail you
🌸 Hail the protector of the community
🌸 Hail the heroine of Saffron
🌸 Hail the heroine of Kailasa
🌸 Hail the heroine who solves the bad deeds
🌸 Hail to the one who cuts bad deeds
💧 Hail the Goddess Kotravai
💧 Hail Lord Gayide
💧 Hail to the power of real knowledge
💧 Hail the heroine of Anugraha
💧 Hail to the gem of the emerald
💧 Hail the sister of Madhavan
💧 Hail the flower flag
💧 Hail honey sugarcane
💧 Hail Lord Thiruve Devi
💧 Hail the queen of Om Devaras
🌿 Hail the ocean of mercy
🌿 Hail the form of Om mercy
🌿 Hail the one who protects the family
🌿 Hail the one who gives Yoga
🌿 Om, the saviour of the world, hail you
🌿 Om, the one who changes the time, hail
🌿 Hail to the heroine of Chaturthasi
🌿 Hail the heroine of all power
🌿 Hail the soul of the world
🌿 Om, the saviour of danger, hail
🍭 Om hail the one who is all
🍭 Hail the heroine of Tripura
🍭 Hail the Utthama Heroine
🍭 Hail to the heroine of Pancha Bootha
🍭 Hail the goddess of the planets
🍭 Om, the power of wisdom, hail you
🍭 Om, you will enlighten the lives, hail
🍭 Praise the form of wisdom! Praise !
🌺Om Sakthi Parasakthi

Featured Post

எண்ணம்_போல_வாழ்க்கை

#எண்ணம்_போல_வாழ்க்கை... ஒருமுறை, ஒரு பிச்சைக்காரன் ரயிலில் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் போது, ​​ சூட் மற்றும் பூட்ஸ் அணிந்த ஒரு தொழிலதிபர...