Thursday, August 31, 2023

ஸ்ரீ நரசிம்ம ப்ரபத்தி


 நரசிம்மர் அருளாமல் வேறு யார் திருவடி கதி அடியேனுக்கு !அதனால், நரசிம்மரே! உம்மைச் சரணடை கிறேன்.

ஸ்ரீ நரசிம்ம ப்ரபத்தி இன்று 31/8/23 வியாழக்கிழமை பதிவு செய்துள்ளோம்.
நரசிம்ம பிரபத்தி
நரசிம்மரே தாய், நரசிம்மரே தந்தை.
சகோதரனும் நரசிம்மரே தோழனும் நரசிம்மரே!
அறிவும் நரசிம்மரே செல்வமும் நரசிம்மரே!
எஜமானனும் நரசிம்மரே எல்லாமும் நரசிம்மரே!
இவ்வுலகத்திலும் நரசிம்மரே! அவ்வுலகத்திலும் நரசிம்மரே!
எங்கெங்கு செல்கிறாயோ அங்கெல்லாம் நரசிம்மரே!
நரசிம்மரைக் காட்டிலும் உயர்ந்தவர் எவரும் இல்லை.
அதனால், நரசிம்மரே! உம்மைச் சரணடை கிறேன்.
அஹோபில மடத்தின் 44வது பட்டமாக வீற்றிருந்த அழகிய சிங்கர் முக்கூர் சுவாமிகளால் அருளப்பட்ட மந்திரம் இது. இந்த ஸ்லோகத்தைச் சொல்லும்போது, லட்சுமி நரசிம்மரின் முன் விளக்கேற்றி, காய்ச்சி ஆற வைத்த பசும்பால் அல்லது பானகம் நைவேத்யம் செய்ய வேண்டும்.
இப்பிரசாதத்தை குடும்பத்தினர் அனைவரும் சாப்பிட்டு வரவேண்டும். கைமேல் பலன் தரும் சக்தி வாய்ந்த ஸ்லோகம் இது. 48 நாட்களுக்குள் எண்ணிய செயல் கைகூடி விடும். அதன் பிறகு நரசிம்மர் கோயிலில் சுவாமிக்கு நெய்தீபம் ஏற்றி துளசிமாலை சாத்தி வழிபட வேண்டும்.
கடன், நோய், திருமணத்தடை, குழந்தை பாக்கியம், வேலை வாய்ப்பு, வேலையில் இடைஞ்சல் இன்னும் எந்த வித கோரிக்கைக்காகவும் இந்த பிரபத்தியைச் சொல்லலாம். பால், பானகம் வைக்க வசதிப்படாதவர்கள் தண்ணீரை வைத்தாலே போதும். நரசிம்மர் மனம் உவந்து ஏற்பார்.
மாதா ந்ருஸிம்ஹ: பிதா ந்ருஸிம்ஹ:
ப்ராதா ந்ருஸிம்ஹ: ஸகா ந்ருஸிம்ஹ:
வித்யா ந்ருஸிம்ஹ: த்ரவிணம் ந்ருஸிம்ஹ:
ஸ்வாமி ந்ருஸிம்ஹ: ஸகலம் ந்ருஸிம்ஹ :
இதோ ந்ருஸிம்ஹ: பரதோ ந்ருஸிம்ஹ:
யதோ யதோ யாஹி: ததோ ந்ருஸிம்ஹ:
ந்ருஸிம்ஹ தேவாத் பரோ நகஸ்சித்:
தஸ்மான் ந்ருஸிம்ஹ சரணம் ப்ரபத்யே.
இதே அந்த நரசிம்ம பிரபத்தி
( நரசிம்மரே தாய், நரசிம்மரே தந்தை.
சகோதரனும் நரசிம்மரே தோழனும் நரசிம்மரே!
அறிவும் நரசிம்மரே செல்வமும் நரசிம்மரே!
எஜமானனும் நரசிம்மரே எல்லாமும் நரசிம்மரே!
இவ்வுலகத்திலும் நரசிம்மரே! அவ்வுலகத்திலும் நரசிம்மரே!
எங்கெங்கு செல்கிறாயோ அங்கெல்லாம் நரசிம்மரே!
நரசிம்மரைக் காட்டிலும் உயர்ந்தவர் எவரும் இல்லை.
அதனால், நரசிம்மரே! உம்மைச் சரணடை கிறேன். )


Other than the blessings of Narasimha, who else is the fate of my feet! So, Narasimha! I surrender to you.
We have registered Sri Narasimha Prabathi today 31/8/23 Thursday.
Lord Narasimha
Narasimha is mother, Narasimma is father.
Brother Narasimha and friend Narasimhha!
Knowledge and wealth is Narasimha!
Lord is Narasimha and everything is Narasima!
Narasimha in this world too! Narasimha in the whole world!
Wherever you go, there is Narasimha!
No one is greater than Narasimha.
So, Narasimha! I surrender to you.
This is the mantra given by the beautiful Singer Mukkoor Swamy who was reserved as 44th title of Ahobila Mutt. While reciting this slogan, light the lamp in front of Lakshmi Narasimha and offer cow milk or drink which healed the fever.
All the family members should eat this prasadam. This is a powerful slogan that gives benefits on hands. In 48 days counted action will come in handy. After that, we have to light Nideepam to Swami in Narasimha temple and worship Tulasimalai.
This Prabhathi can be called for debt, disease, marriage obstacle, child blessing, employment, interruption at work and any kind of request. Those who are not facilitated to keep milk and drinks, it is enough to keep water. Narasimha's heart will accept.
Mother Nrusimha: Father Nrusimh:
Prada Nrussimha : Saka Nrusimha :
Vidya Nrusimha: Trivinam Nrusimh:
Swami Nrusimha: All Nrussimha:
Here is Nruzimha: Barado Nrusimha:
யதோ யதோ யாஹி: ததோ ந்ருஸிம்ஹ:
Nrusimha Devad Baro Nakshit:
Dasman Nrusimha surrendered to you Prabatya.
This is the Narasimha Prabathi
(Narasimha is the mother, Narasimma is the father.
Brother Narasimha and friend Narasimhha!
Knowledge and wealth is Narasimha!
Lord is Narasimha and everything is Narasima!
Narasimha in this world too! Narasimha in the whole world!
Wherever you go, there is Narasimha!
No one is greater than Narasimha.
So, Narasimha! I surrender to you. )

கண்களில் கண்ணீர் வந்தால் நான் பொருப்பல்ல நேரில்_வந்த_கடவுள்

 கண்களில் கண்ணீர் வந்தால் நான் பொருப்பல்ல

😢😢
#படித்ததை_பகிர்ந்துள்ளேன்
#நேரில்_வந்த_கடவுள்…. (சிறு கதை )
இப்படிப்பட்ட இக்கட்டில் மாட்டிக்கொண்டு விட்ட டென்ஷன்.. சுகுமாருக்கு யாரை திட்டுவது என்று தெரியாமல் பொத்தம் பொதுவாக கத்திக்கொண்டிருந்தான்…
அவர்கள் இருபது பேர்… 5 குடும்பங்கள்.. விடுமுறை நாட்கள் தொடர்ச்சியாக வந்ததால், கூடிப்பேசி, கோடைக்கானல் பயணம்..
நல்ல வேளை பயணத்தில் பெருசுகள் இல்லை.. அதிக வயதானவன் சுகுமார் தான்.. குழந்தைகள் கூட சற்று வளர்ந்தவர்கள் தான்.. ப்ரஸ்னை இல்லை..
ஆனால் அவர்கள் வந்து சிக்கிக்கொண்ட இடம் தான் சிக்கல்..
கோடைக்கானலில் இருந்து பழனி போகும் வழியில் கிட்டத்தட்ட யாருமே இல்லாத ஒரு பாதையில் 30 கிலோமீட்டர் வந்து விட்டார்கள்..
எங்கும் யாருமே இல்லை.. யாரோ பழனிக்கு இது தான் சுருக்கு வழி என்று சொல்ல, ஒரு தைரியத்தில் வர, கரடும் முரடுமான ரோட்டில் வண்டி தள்ளாடியபடி வர,
ஒரு கட்டத்தில் ..என்னால் தாங்க முடியல என்று தன் காற்றை காதலித்த ஒரு ஆணிக்கு கொடுத்து விட்டு, ஒருவரின் காரின் டயர் பஞ்சர்…
மொத்தம் மூன்று கார்… வண்டி மெதுவாக ஒட்டியதால் பலருக்கும் பசி வேறு.. ஜன நடமாட்டமே இல்லாத சாலை..ஆனால் கண்ணுக்கெட்டிய தூரம் ஒரு கடை போல தெரிந்தது..
சுகுமாரின் மனைவியின் தம்பி, டயரை மாற்ற முயற்சிக்க, அந்த ஜாக்கி சரியாக செட் ஆகாததால் இன்னும் நேர விரயமாக, பசி எல்லார்க்கும் வயிற்றை கிள்ள,
சரி அந்த கடையில் ஏதாவது இருக்கா என்று பார்த்து விட்டு வருகிறேன் என்று சொல்லி சுகுமாரும் அவன் தம்பியும் நடந்தார்கள்..
மற்ற எல்லாரும் மதியம் 2 மணீக்கே இருட்டாக தெரிந்த அந்த இடத்தில் அரட்டை கச்சேரி…
ஒரு நூறு மீட்டர் நடந்த இருவரும் அந்த கடையை பார்த்தார்கள்.. அது ஒரு சின்ன ஒட்டல்… மிகச்சின்ன ஒட்டல்.. ஆனால் மூடியிருந்தது..
மூடியிருந்தது என்றால், ஒரு பெரிய கதவோ அல்லது பூட்டோ இல்லை.. மரத்தடுப்புகளால் சும்மா சாத்தி வைக்கப்பட்டிருந்தது.. யாரையும் காணவில்லை..
ஆனால் டிபன் ரெடி என்று எழுதி இருந்தது..
சுகுமாருக்கு கொஞ்சம் துணிச்சல் எப்பவும் அதிகம்.. அவன் தான் இந்த வழியில் செல்லலாம் என்று முடிவெடுத்தும் வந்தவன்..
மெதுவாக ஒரு ப்ளைவுட் நகர்த்த சுலபமாக அது வழி கொடுத்தது.. உள்ளே இருப்பது தெளிவாக தெரிந்தது.. 2 டேபிள் 10 சேர்… ஒரு சமையல் மேடை.. இரண்டு அடுப்பு… கரி அடுப்பும் மண்ணெண்ணெய் அடுப்பும்…
இவன் மீதி இருந்த இரு ப்ளைவுட் நகர்த்த இப்பொழுது உள்ளே சென்றான்.. தோசை மாவு ஒரு அடுக்கில் இருந்தது.. கொஞ்சம் சாம்பாரும் இருந்தது…
ஆக இந்த ரோட்டில் வியாபாரம் இருக்கிறது.. இந்த கடைக்காரர் எங்கேயோ அருகில் தான் இருக்க வேண்டும்.. ஏதாவது ஒரு கிராமமாவது அருகில் இருக்கிறது.. அவன் மனம் கணக்கிட்டது…
அடுப்பின் தணல் அது இன்று கொளுத்தப்பட்டிருக்கிறது என்பதை உறுதிபடுத்த, அவன் மனம் கணக்கிட்டது…
அதற்குள் ஜாக்கி சுழல், டயர் மாட்டல் முடியும் நேரம்.. எல்லா வண்டிகளும் கடை முன் வந்து நின்றது…
எல்லார்க்குமே செம்ம பசி..
அவன் கண்களால் தன் மனைவியை பார்த்தான்.. அவள் புரிந்து கொண்டு தன் தங்கை , நாத்தனாரை பார்க்க, சில மணித்துளிகளில் சூடாக தோசையும் சாம்பாருமாக எல்லாருக்கும் உணவு….
மொத்தமாக எல்லா மாவும் தீர்ந்து போனது.. இருந்த தேங்காயை முடிந்த வரை அந்த ஒட்டை கிரைண்டரில் அரைத்து சட்னியும் தர, ஆளுக்கு முன்று தோசை என்று அனைவரும் வயிறார உண்டு முடித்தார்கள்..
சற்றே புளித்த மாவு ஒரு அற்புதமான சுவையுடன் தோசை தர, வீட்டு மணத்துடன் சாம்பாரும் சுவைத்திட, “திருப்தி” என்பது எல்லார்க்கும்…
ஒரு மனிதனுக்கு வாழ்வில் போதும் திருப்தி என்று சொல்லும் ஒரே விஷயம் உணவு மட்டுமே..
ஒருவனை கூப்பிட்டு 100 கோடி கொடுத்து, அவன் திரும்பிச்செல்லும் பொழுது அவனை கூப்பிட்டு ஒரு 50 ரூ கொடுங்கள்.. அதே மலர்ச்சியுடன் வாங்கிக்கொள்வான்..
ஒருவனை கூப்பிட்டு நூறு புதுக்கார்கள் கொடுத்து அவன் திரும்பிச்செல்லும் நேரம் அவனை கூப்பிட்டு ஒரு பழைய ஸ்கூட்டி கொடுங்கள்..ஒட்டிச்செல்வான்..
ஆனால் இலையில் ஒரு 4 இட்லிக்கு மேல் போட வந்தால், போதும் வேண்டாம் என்று சொல்லுவான்..
உணவை தவிர மீதி எதுவுமே அதீதம் வந்தால் வேண்டாம் என்று சொல்லாது மானிட இனம்..
இதில் “திருப்தியாக உண்டேன்” என்றால் அது பெரும் சுகம்..
ஒரு பெரும் மலர்ச்சியுடன் அவர்கள் குடும்பம் கிளம்பியது….
#பொன்னானுக்கு (அந்த சிறிய ஓட்டலின் முதலாளி )என்ன செய்வது என்று தெரியவில்லை..
திடீரென்று பக்கத்து வீட்டுக்காரர் வந்து உன் மகளுக்கு மாடு குத்தி வயிற்றில் காயம்.. மயங்கி விட்டாள் ..உடனே வா..என்றவுடன் கடையை மூடி விட்டு .. அப்படியே போட்டது போட்டபடி … போய்விட்டான்…
மனைவி இறந்த பிறகு அவனுக்கு தன் ஒரே மகள் தான் எல்லாம்.. பதறியபடி கிராமத்திற்கு சென்று.. அங்கு இருந்த சுகாதார மையம் போய் பிறகு மகளை பழனிக்கு மருத்துவம் செய்ய கொண்டு போகனும் என்றார்கள்..
ஒரு வண்டியை ஏற்பாடு செய்து.. …காசுக்கு என்ன செய்வது..?
பெருமாளே என்னிடம் அவ்வளவு பணம் இல்லையே.. வண்டிக்கு கூட சற்று தாமதமாக தரலாம்..ஊர்க்காரர் தான்..ஆனால் மருத்துவமனைக்கு….
எப்படியும் குறைந்தது இரண்டாயிரமாவது வேண்டும்…
கடையில் எவ்வளவு இருக்கும்.. ஒரு நானூறு ரூபாய் என்று ஞாபகம்…
மகளை மடியில் கிடத்தி அந்த சின்ன வண்டியில் கடையை அடைந்தான்..
வழி நெடுக வேங்கட மலையானை திட்டிக்கொண்டே.. தினம் தினம் உன்னேயே நினைத்து உனக்கு உணவு படைத்து விட்டே எல்லாம் செய்யும் எனக்கு எதுக்கு இவ்வளவு சோதனை?
அவன் மனம் கதற, கடைக்கு முன் வந்து நின்றான்..
கடை நாம் செல்லும் பொழுது சாத்திய மாதிரி இல்லை.. என்ன இது சோதனை மேல் சோதனை?
யார் வந்தார்கள்.. அந்த நானூறும் அம்பேலா.. வெங்கடாஜலபதி உன்னை சும்மா விட மாட்டேன் காசும் போயிருந்தால் என்று அவரை திட்டிக்கொண்டே திறந்தான்..
வெங்கடாஜலபதி தன் கிழே இருக்கும் நிலையில்லா பணத்தினால் சரியாக நிற்காமல் டேபிள் மேல் ஆடிக்கொண்டிருந்தார்..
அந்த டேபிளில் மேலே இருக்கும் வெங்கடாஜலபதி படத்தின் கிழே. பாதி நிலையில் பல நூறு ரூபாய் நோட்டுக்கள்.. .நோட்டு பறக்காத வண்ணம், அதன்
அருகே ஒரு பேப்பரில் ..
ஐயா,எங்கள் குடும்பத்தோடு இந்த வழி சென்றோம். வழியில் வண்டி சிக்கலாலும் சாலை சரியில்லாததாலும் மிகவும் தாமதமாக, எல்லார்க்கும் செம்ம பசி!!!
நாங்கள் கதவை திறந்து , சொல்லாமல் வந்து உணவை உண்டது தவறு தான்..
பசி எங்களை இந்த தவறை செய்ய வைத்தது.. தோசையும் சாம்பாரும் மிக அருமை.. இத்துடன் ரூ 3000 வைத்திருக்கிறேன்..
எங்களை மன்னியுங்கள்.. நன்றி என்று எழுதப்பட்டு இருந்தது..
அந்த நோட்டு தாள்களை பொன்னன் எடுத்தான்..
வெங்கடாஜலபதி நேராய் நின்றார்…
இவன் அவரின் கருணையை கண்டு தள்ளாடினான்…
#ஸ்ரீராமஜயம்

😢😢😢 I don't care if tears come in my eyes😢😢
#படித்ததை_பகிர்ந்துள்ளேன்
#God_who_came_in_person.... (Short Story )
The tension that got stuck in this kind of trouble.. Sukumar was shouting generally without knowing whom to scold...
Twenty of them were... 5 families .. As the holidays are continuous, mobile phone, summer trip..
Thank God there are no big ones in the trip.. Sukumar is the older one.. Even kids are little grown up.. Not a problem..
But the problem is where they come and stuck..
On the way from Summer to Palani, they have reached 30 kilometers in a route with almost no one..
There is no one anywhere.. Someone come with a courage to say that this is the narrow way to Palani, to come with a courageous and rough road,
At one point .. Someone's car's tire puncture after giving it to a nail who loved his air as I couldn't bear it...
Three cars in total... Many people are hungry because of slow driving.. A road without public movement.. But the distance in sight seemed like a shop..
Sugumar's wife's younger brother, trying to change the tire, the jackie doesn't set well, still wasting time, hungry and pinch everyone's stomach,
Well Sugumar and his younger brother walked in saying that they are leaving after checking if there is anything in the shop..
Chat concert at the place where everyone else looks dark at 2 pm...
One hundred meters walked both saw the shop.. That was a little patch... Just a small patch.. But it was closed..
No big door or lock if closed.. Was just covered by wooden blocks.. No one is missing..
But it was written tiffin ready..
Sukumar has a little courage always more.. He is the one who decides to go this way..
It gave way to slow move a plywood easily.. The inside was clear.. 2 tables 10 chairs... A cooking platform.. Two ovens... Charcoal stove and kerosene stove...
He just went in to move the remaining two plywoods.. Dosa flour was in a layer.. There was a little sambar too...
So there is business on this road.. This shopkeeper must be somewhere near.. Atleast some village is nearby.. His mind has calculated...
His mind calculated the oven to confirm it was burnt today...
Already time to get Jackie spinning and tire stuck.. All vehicles parked in front of the shop...
Everybody is so hungry..
He saw his wife with his eyes.. She understands to see her sister, Nathanar, in few hours hot dosa and sambaram food for everyone....
Totally ran out of all flour.. As long as the coconut was finished, to grind the shell in the grinder and chutney, everyone ate three dosa..
To give dosa with a little sour dough with a wonderful taste, to taste Sambar with home smell, "Satisfaction" is for everyone...
Food is the only thing that says that a man is satisfied in his life..
Call a man and give him 100 crores and when he goes back call him and give him 50 rupees.. Will buy with the same blossom..
Call a guy and give him a hundred newbies while he goes back call him an old scooty.. He will stick it away..
But if you come to put more than 4 idlis in the leaf, he will say no to it..
The human race will not say no to anything except food if it comes too much..
It is a great pleasure if I am "satisfied" with this..
Their family left with a big blossom....
#Ponnan (owner of the small hotel) doesn't know what to do..
Suddenly a neighbor came and stabbed your daughter with a cow and injured her stomach.. She fainted .. Come on right away.. After closing the shop as soon as possible .. Just as posted ... He is gone...
After his wife's death, his only daughter is everything for him.. Went to the village in tension.. They asked to go to the health center there and then take my daughter to Palani for treatment..
Arranging a vehicle.. ... What to do for money..?
Lord I don't have that much money.. You can even give a little late for the vehicle.. He is from the town.. But to the hospital....
Need at least two thousand anyway...
How much will be in the shop.. I remember that one hundred rupees...
He reached the shop in that small vehicle by putting his daughter on his lap..
Scolding Venkata Malayan along the way.. Why do I have so much test for you everyday thinking of myself and making food for you?
He stood in front of the shop screaming his heart..
Not like possible when we go to the shop.. What is this test after test?
Who came up .. That four hundred is Ambela.. Venkatajalapathi, I will not leave you alone. He opened scolding him if he had lost his money..
Venkatajalapathi was dancing on the table with the unstable money beneath him..
Venkatajalapathi on top of that table is under the film. Many hundred rupees notes in half stage.. . The color that the note doesn't fly, its
In a paper nearby ..
Sir, we went this way with our family. Too late, everyone hungry because of vehicle complicated on the way and road not good!!!
It is wrong that we opened the door and came without telling us to eat food..
Hunger made us make this mistake.. Dosa and sambar are very nice.. I have Rs 3000 with this..
Forgive us.. It was written as thank you..
Ponnan took those note sheets..
Venkatajalapathi stands straight...
He was shocked by seeing his mercy...
#ஸ்ரீராமஜயம்

World's tallest statue of Nataraja to be installed at the G-20 summit!

 ஜி-20 மாநாட்டில் நிறுவப்படும் உலகின் உயரமான நடராஜர் சிலை!

அடுத்த மாதம் 7-10 ம் தேதிகளில் டெல்லியில் நடைபெற உள்ள ஜி -20 மாநாட்டில் வரவேற்பு திடலில் வைக்க தயாரான நடராஜர் சிலை தமிழகத்தின் சுவாமி மலையில் இருந்து டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டு வருகிறது.
19 டன் எடை 28 அடி உயரம் என்று உலகிலேயே உயரமான இந்த நடராஜர் சிலை தங்கம், வெள்ளி, ஈயம், தாமிரம், தகரம், பாதரசம், இரும்பு மற்றும் துத்தநாகம் என்று எட்டு வகையான உலோகங்களால் உருவாக்கப்பட்ட வெண்கல சிலையாக இருக்கிறது.
சிவபெருமான் நடராஜராக நின்று நடனம் ஆடுவதைக் குறிக்கும் நிலை தமிழ் கலாச்சாரத்தின் அடையாளங்களில் ஒன்றாகவே இருந்து வருகிறது.
நடராஜர் திருநடனம் புரியும் சபைகள் என்று தமிழகத்தில் ஐந்து சபைகள் இருக்கின்றன. திருவாலங்காட்டில் ரத்தினசபை, சிதம்பரத்தில் கனகசபை அதாவது பொற்சபை மதுரையில் ரஜதசபை அதாவது வெள்ளிசபை, திருநெல்வேலியில் தாமிரசபை, திருக்குற்றாலத்தில் சித்திரசபை என்று சிவபெருமான் ஐந்து இடங்களில் நாட்டிய கோலத்தில் காட்சி தருகிறார்.
இந்த சபைகளில் மதுரையில் உள்ள வெள்ளி சபையில் மட்டுமே சிவபெருமான் வழக்கத்திற்கு மாறாக இடது காலை ஊன்றி வலது காலை தூக்கி நாட்டியம் ஆடும் கோலத்தில்
காட்சி அளிக்கிறார்.
இதனால் ஜி-20 மாநாட்டின் இடத்தில் நடராஜர் சிலையை வைத்து அலங்கரிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி ஆர்வமாக இருந்ததால், நடராஜர் சிலையை தமிழகத்தில் இருந்தே தமிழக ஸ்தபதிகளை வைத்து உருவாக்கும்படி கூறி இருந்தார்.
அதனால் தஞ்சாவூர் அருகே உள்ள சுவாமி மலையில் வைத்து, சோழர்கால கலை நயத்துடன், மறைந்த சிற்பி தேவசேனாதிபதி ஸ்தபதியின் மகன் ஸ்ரீகாந்த் ஸ்தபதி அவர்களின் தலைமையில் சுமார் 10கோடி
ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் தமிழர்களின் செங்கோல், இப்பொழுது உலக நாடுகளின் உயர்ந்த அமைப்பான ஜி-20 மாநாட்டிலும் தமிழர்களின்
அடையாளமான நடராஜர் சிலையை வைத்து உலகம் முழுவதும் தமிழர்களின் பெருமையை கொண்டு செல்லவிருக்கிறார் நமது நாட்டின் பிரதமர் மோடி

World's tallest statue of Nataraja to be installed at the G-20 summit!
The statue of Natarajar who is ready to be placed at the reception ground at the G-20 conference to be held in Delhi on 7-10th of next month is being taken from Swami Hills of Tamil Nadu to Delhi.
This world's tallest Nataraja statue weighing 19 tons 28 feet tall is a bronze statue made of eight types of metals called gold, silver, flame, copper, tin, mercury, iron and zinc.
One of the symbols of Tamil culture, where Lord Siva stands and dancing as Nataraja.
There are five councils in Tamil Nadu that understands Natarajar's great dance. Rathinasabai in Thiruvalangadu, Kanagasabai in Chidambaram i.e. Porsabai in Madurai i.e. Vellasabai, Thamirasabai in Tirunelveli, Chithra Sabai in Thirukutralam, Lord Shiva shows a scene in five places.
In these congregations only in the Silver Sabha in Madurai, Lord Shiva is dancing in the rangolam, instead of the usual, by lifting his left leg and lifting his right leg.
Showing up.
Since Prime Minister Narendra Modi was eager to decorate Nataraja's statue in place of G-20 summit, he had asked to create Nataraj's statue from Tamil Nadu itself.
So, at Swami hills near Thanjavur, with the art of Chola, under the leadership of Srikanth Sthapathi, son of late sculptor Devasenathipathi Stapathi, about 10 crores
Made at a cost of rupees.
Tamils brick in the new parliament building, now Tamils in the world's highest organization G-20 conference
Our country's Prime Minister Modi is going to carry the pride of Tamils around the world with his identity Natarajar statue.

சீ' என்றால் சிலந்தி. காளம் என்றால் பாம்பு. ஹஸ்தி (அத்தி) என்றால் யானை,"சீகாளத்தி'

காளஹஸ்தீஸ்வரரையும், அம்பாள் ஞானப் பூங்கோதையையும் வணங்குங்கள். பிறவா நிலை வேண்டுங்கள். காளஹஸ்தி தல வரலாறு சொல்வது அதுதான் !

====================
திருப்பதி அருகிலுள்ள காளஹஸ்தியில், காளத்திநாதர் கோவில் பிரபலமானது. பஞ்சபூத தலங்களில், வாயுவுக்குரிய தலம் இது. இங்கே, சிவராத்திரி உற்சவம் பிரமாண்டமாக நடக்கும். பூச்சிகளும், விலங்குகளும் கூட, இறைவன் மீது அன்பு வைத்து, அவரை அடைந்துள்ளபோது, ஆறறிவு படைத்த மனிதன், அவரைப் பற்றிச் சிந்திக்காமல் கூட இருக்கிறானே என்பதை, இத்தல வரலாறு எடுத்துச் சொல்கிறது. சிலந்தி ஒன்று, சிவனை வழிபட நினைத்தது. தன்னிடம் சுரக்கும் நூல் போன்ற திரவத்தால், மதில், கோபுரம், மண்டபம், மாளிகை, கருவறை, கலசம் என, கோவில் அமைத்தது. யாராவது அதை அறுத்து விட்டால், விடாமல் புதுப்பித்தது.
சிலந்தியின் அன்பை சோதிக்க விரும்பிய சிவன், தன் சன்னிதியில் இருந்த விளக்கை, சுடர்விட்டு எரியும்படி செய்தார். ஒரு நொடியில் சிலந்தி அமைத்த கோவில் எரிந்தது. மனம் வருந்திய சிலந்தி, உயிர்விடத் துணிந்து, விளக்கில் விழ முயன்ற போது, தடுத்தார் சிவன். சிலந்திக்கு காட்சி தந்து, "வேண்டும் வரம் கேள்!' என்றார்.
உலகப்பொருட்கள் மீது ஆசையில்லாத சிலந்தி, "பெருமானே... உன் திருவடியின் கீழ் அமரும் பாக்கியத்தை தர வேண்டும்...' என்றது. சிவனும் அவ்வாறே அருள்புரிந்தார். காளன் என்னும் பாம்பு, அரிய வகை ரத்தினக்கற்களை சிவனின் திருமுடியில் வைத்து பூஜித்து வந்தது. அத்தி எனும் யானை, அந்த ரத்தினங்களை தள்ளிவிட்டு, ஆற்றிலிருந்து நீர் எடுத்துவந்து, சிவனுக்கு அபிஷேகம் செய்து, வில்வ இலைகளை வைத்துச் சென்றது. மறுநாள் வந்த பாம்பு, "ரத்தினக் கற்களை சிதறடித்து, ஏதோ இலையை குப்பை போல் போட்டிருக்கின்றனரே...' என்று புலம்பியவாறே, அதைச் சுத்தப்படுத்தி, மீண்டும் ரத்தினக் கற்களை இறைவன் திருமுடியில் சூட்டி, பூஜித்து சென்றது.
யானை வழக்கம் போல் வந்து மணிகளைத் தட்டிவிட்டு, வில்வத்தைச் சூட்டிச் சென்றது. பல நாட்கள் இதே நிலை தொடர்ந்தது. ஒருநாள், யார் இப்படி செய்கின்றனர் என அறிய, சன்னிதிக்குள் மறைந்திருந்தது பாம்பு. அப்போது யானை, அங்கு வந்து மணிகளைத் தட்டி விடவே, ஒளிந்திருந்த பாம்பு சீறியெழுந்து, யானையின் துதிக்கையில் உள்ள துளைக்குள் புகுந்து, மத்தகத்தை அடைந்து குடையத் தொடங்கியது.
யானை அதைத் தாங்க முடியாமல், நிலத்தில் தும்பிக்கையை அடித்தும், ரத்தம் வரும் அளவு மத்தகத்தை தரையில் தேய்த்தும் பார்த்தது; குடைச்சல் தீரவில்லை. இதனால், "உடலில் புகுந்த பாம்பைக் கொன்று, நாமும் இறப்போம்...' என்று கருதி, கோபத்துடன் அங்குள்ள மலைமேல் மோதியது.
இந்த முழக்கத்தைக் கேட்ட தேவர்கள் நடுங்கினர். குகைகளில் தங்கியிருந்த முனிவர்கள் பயந்தனர். யானை தலை பிளந்து மயங்கி விழுந்தது. பாம்பு வெளியே வர முடியாமல் தவித்தது. அப்போது சிவபெருமான் உமையம்மையோடு காளை வாகனத்தில் தோன்றி, யானையை எழுப்பினார். உள்ளிருந்த பாம்பு வெளியே வந்தது. இரண்டிற்கும் தரிசனம் தந்த சிவன், அவற்றிற்கு முக்தியளித்தார்.
"சீ' என்றால் சிலந்தி. காளம் என்றால் பாம்பு. ஹஸ்தி (அத்தி) என்றால் யானை. சிலந்தி, பாம்பு, யானை ஆகியவை இத்தலத்து இறைவனை வழிபட்டு முக்தி அடைந்ததால் இத்தலத்தை, "சீகாளத்தி' என்றும், காளஹஸ்தி என்றும் அழைத்தனர். விலங்குகள் கூட கடவுளை அடைய, தங்கள் பக்தியை அதிதீவிரமாக செலுத்தின. ஆனால், ஆறறிவுள்ள மனிதன், கடவுளை வணங்குவதற்கே தயக்கம் காட்டுகிறான். மனிதப்பிறவி எடுத்ததன் பலனே, கடவுளை வணங்கி, பிறவித்தளையில் இருந்து விடுபடுவதற்கு தான் என்பதை காளஹஸ்தியின் வரலாறு நமக்கு உணர்த்துகிறது. இங்கு சென்று காளஹஸ்தீஸ்வரரையும், அம்பாள் ஞானப் பூங்கோதையையும் வணங்குங்கள். பிறவா நிலை வேண்டுங்கள்.

Today 31/8/2023 Thursday, worship Kalahastheeswarar and Ambal Gnanap Parkodhai. Pray for another status. That is what the history of Kalahasthi Thala says!
====================
Kalathinathar Temple became famous in Kalahasti near Tirupathi. In Panchaputa places, this is the place for gas. Here, Shivaratri Utsav will be grand. History shows that a six-sense man does not even think about him, when even insects and animals love God and attain him. A spider thought to worship Shiva. With the liquid like thread that comprises to it, the temple was built by the wall, tower, hall, palace, womb, kalasam. Updated without fail if someone cuts it.
Sivan, who wanted to test the love of spider, made the lamp in his abode, burned. The temple built by a spider burned in a second. Sivan stopped the spider who dared to live and tried to fall into the light. Show up to the spider and ask "Boon! ' Said.
Spider without desire for worldly things, "Lord... I should give the privilege of sitting under your feet... ' said. Siva also blessed the same way. A snake called mushroom worshipped a rare type of gemstones on the feet of Lord Shiva. The elephant named figs pushed away those gems, brought water from the river, anointed Lord Shiva and left the bow leaves. The snake that came the next day, "Shattered the gemstones and put some leaf like garbage... As she cried, she cleansed it and put gemstones on the feet of the Lord and worshiped it.
The elephant came as usual, rang the bells and took the arrow. The same situation continued for many days. One day, to know who was doing this, a snake was hiding inside the abode. Then the elephant came there to knock the bells, the snake that was hiding got angry, entered into the hole of the elephant's praises, reaching the centre and started to umbrella.
The elephant was unable to bear it, hitting the trunk on the ground and rubbing the central central on the floor as much as blood came; The umbrella is not over. So, "Kill the snake that entered the body and we too die... Thinking that ', hit the mountain with anger.
Thevars were trembled when they heard this shout. The sages who stayed in the caves were scared. Elephant fainted with its head open. Snake was struggling to come out. At that time Lord Shiva appeared in the bull vehicle and woke up the elephant. The snake inside came out. Sivan who gave darshan to both, gave them address.
The "Zee" means a spider. A bull means a snake. Hasti (fig) means elephant. As spider, snake, elephant attained Mukti by worshiping the God of this world, they called it "Seekalati" and Kalahasti. Even animals gave their devotion to reach God. But, a six-wise man hesitates to worship God. The history of Kalahasti makes us realize that the result of human birth is to worship God and to get rid of the birthplace. Go here and worship Kalahastheeswarar and Ambal Gnana Pongodhai. Pray for another status.

Featured Post

உணவு முறைல முடிஞ்ச அளவு மாற்றம் பண்ணுங்க.

  நாம ஏன் சோணகிரியா இருக்கோம்? தொத்த பாடியா இருக்கோம்? பழங்கால மக்களுக்கு மட்டும் எப்படி திமில் கொண்ட தோளும், மதர்த்த நெஞ்சும் வந்தது? உணவு ...