Tuesday, October 3, 2023

கண்ணனை குருவாயூரில் போய் கண் குளிர, மனதார ரசிக்க வேண்டும்,

குருவாயூரப்பனும் மஞ்சாட்டிகுருவும்
........................
அனைவருக்கும் எனது வினீதம்கூடிய அனேகநமஸ்காரங்கள்

குருவாயூர் கண்ணன் திருவடி காண போனால் ஒரு சடங்கு உண்டு.

"மஞ்சாடி குரு "

இது மலையாள பெயர்,

அதாவது விநாயகர் சதுர்த்தி அன்று களிமண் பிள்ளையார் செய்யும்போது, விநாயகர், கண்களாக பாவித்து சிவப்பும், கருப்பும், கலந்த சிறிய வகை கொட்டை அது,
தமிழில் குன்றிமணி என்றும் குண்டுமணி என்றும் சொல்வார்கள் 

கேரளாவில் இதற்கு மஞ்சாடி குரு " க்கள் என்று பெயர்,

குருவாயூரில், ஒரு பெரிய வட்டமான உருளியில் (பாயாசம் செய்யும் வாய் அகன்ற பித்தளை பாத்திரம் ")
இந்த மஞ்சாடி குரு "என்னும் கொட்டைகளை அந்த உருளியில் போட்டு வைத்திருப்பதை நீங்கள் குருவாயூர் செல்லும்போது காணலாம்!

எதற்காக?

பிறந்த குழந்தைக்கு அன்னமூட்டு, என்கின்ற சம்பவம் அங்கே செய்வார்கள்!

அதாவது மூன்று மாதம் அல்லது ஐந்து மாதம் கழிந்த சிசுவிற்கு முதல்முதலாக
" சோறூட்டு " சடங்கு நடத்தப்படும்,

அதன் பிறகு அந்த குழந்தையின் கைகள் கொண்டு மஞ்சாடி குருக்கள் இருக்கும், உருளியில் சிறிது பணத்தோடு சேர்த்து மூன்று முறை வாரி, அந்த பணத்தையும் சேர்த்து மஞ்சாடி குருக்கள், என்கின்ற கொட்டைகளுடன் போட்டு விடுவார்கள்,

இப்படி செய்யும் பிள்ளைகளுக்கு ஸ்ரீ கிருஷ்ணன் சுபாவங்கள் வரும் என கேரளாவில் ஐதீகம்.

இந்த மஞ்சாடி குருக்கள் " வாரும் ஐதீகத்திற்கு பின்ன்னால் ஒரு சிறுகதை போல் நடந்த சம்பவம் ஒன்று உண்டு,

ஒரு வடக்கன் கேரளாவில், ஒரு குக்கிராமத்தில், ஒரு ஏழை ஸ்த்ரீ ஒருத்தி இருந்தால்,

கண்ணனை  நினைத்து இருந்தாள்!

"கேரளத்து மீரா "

கண்ணனை நினைக்காத நாளில்லையே!!

உண்ணும்போதும்,
உறங்கும்போது,

கண்ணன் தானே,
மாய வண்ணன் தானே!!

விவாஹம் நடக்கவில்லை!
செய்ய வில்லை.!

கண்ணனை குருவாயூரில் போய் கண் குளிர, மனதார ரசிக்க வேண்டும்,

இதுதான்  அந்த ஏழைப்பெண்ணின் லக்ஷியம்,

அந்த காலகட்டத்தில் இன்று போல் வாகன வசதிகள் இல்லாத காலம்,!

நடைபயணம் தான்!!

வருஷங்கள் ஓடியது!

கிழடு தட்டி கிழவி ஆனாள்!

"வ்ருத்த கன்யகா "

ஒரு நாள் கனவில்,

கண்ணன் வந்தான்!!

தன்னை வந்து குருவாயூர்க்ஷேத்ரத்தில் தரிசிக்க சொன்னார்,

எழந்தாள்,

குளத்தில் சென்று குளித்தாள்,

கிழிந்து போயிருக்கும் முண்டையும், மேலாடையையும் அணிந்து,
தெக்கன் நாட்டில் இருக்கும் திருச்சூர், நாட்டிற்கு நடக்க தீர்மானித்தாள் அந்த வ்ருத்த ஸ்த்ரீ,

இப்போது தன் மனம் கவர்ந்த கண்ணனுக்கு காணிக்கையாக என்ன கொண்டு செல்வது?
குஸேலன் போல் யோசித்தாள்!

ஒரு பிடி அவள் வாங்க கூட நம்மிடம் பணம் இல்லையே!

என்ன நினைத்தாளோ! தெரியவில்லை.!

"அந்த மஞ்சாடி மரத்திலிருந்து மஞ்சாடி கொட்டைகளை பறித்து தனது கிழிந்த முட்டில் முறுக்கி கட்டி கொண்டாள்.

கண்ணனை காண!

நடந்தாள்!

நடந்தாள்!

நாற்பது நாட்கள் பசி, பட்டினி யோடு நடந்தாள்,

கடைசியாக  குருவாயூர் போய் சேர்ந்தாள்!
 மகரம் மாஸம் ஒன்றாம் தேதி!

உத்ராயண கால தொடக்கம்!!

சங்கராந்த்ரி.!

இராஜபரணம் காலம் அது!

தை முதல் தேதி!!

அன்று பொதுமக்கள் குருவாயூரானை தரிசிக்க அனுவாதம் இல்லை!

இராஜக்கன்மார்களும் நம்பூதிரிக்கள் மட்டும் அனுவாதம்!

கண்ணனை தரிசிக்க வந்த அந்த பக்தைக்கு எப்படி யாவது இன்றே கண்ணனை காணவேண்டும், என்கின்ற ஆசை!!

யாருடைய அனுவாதமும் கேட்காமல் நேராக க்ஷேத்திரம் நோக்கி, நடந்தாள்,

அந்த நேரம் பார்த்து இராஜக்கன்மார்களும், க்ஷேக்த்ர தந்திரி 'நம்பூதிரிமார்களும் வந்து கொண்டிருந்தார்கள்

அதுவும் யானையின் மேல்!

அந்த பெண் நேராக ஸ்ரீ கோவிலின் அருகே சென்று கொண்டிருந்தாள்!!

" க்ஷேக்த்ராதிபர்கள் "பார்த்து விட்டனர்,

இராஜக்கன்மார்கள் வரும் நேரத்தில் இவள் யாருக்கும் தெரியாமல் எப்படி வந்தாள்!?

கோபம் கொண்ட க்ஷேக்த்ர நிர்வாகிகள் அவளை பலவந்தமாக, கையை பிடித்து இழுத்து நடைக்கு வெளியே கழுத்தை பிடித்து கோபம் கொண்டு, விருத்தஸ்த்ரீ என்றும் பாராமல், தள்ளினர்.

அவள் கையில் துணியில் பொதிந்து வைத்திருந்த,
"மஞ்சாடி கொட்டைகள் " 
தரையில் கொட்டி சிதறியது!

கண்ணகி சிலம்பை உடைத்ததுபோல்!

" பரல்கள் சிதறியதுபோல் "

அதைகண்டு அங்கிருக்கும் க்ஷேக்த்ர நிர்வாகிகள், விழுந்து விழுந்து சிரித்தனர்!

"அவமானம், அழுகை, பசி வேதனை,
கண்ணீராக வந்தது அவளுக்கு!!

பட்டத்து யானைகளுடன் தரிசனத்திற்கு வந்த இராஜக்கன்மார்கள் வரும்போது,

அவர்களை தாங்கி வந்த யானைகள் மதம் பிடிக்க தொடங்கியது,

அத்தனை யானைகளுக்கும்,

அதிர்ச்சி அடைந்த மன்னர்களும், க்ஷேக்த்ர நிர்வாகிகளும், கண்ணனை தரிசிக்காமல் மன்னர்கள் புறப்பட்டனர்,

ஒட்டு மொத்த யானைகள்கும் ஒரே நேரத்தில் மதம் பிடித்ததில் ஏதோ,

"தேவகோபம் " உண்டு "

தேவப்ரஸன்னம் " வைக்கப்பட்டது,

ப்ரஸ்னத்தில் ஸ்ரீ கிருஷ்ணன் உக்ர கோபத்தில் உள்ளார், என்றும்,

தான் கனவில் சென்று அழைத்த ஸ்த்ரீயை அவமானப்படுத்தியது,

அவள் எனக்காக ஆசையுடன் கொண்டு வந்த அந்த "மஞ்சாடி கொட்டைகளை "சிதற விட்டதாலும்,

அவள் என்னை காண அனுவாதம் கொடுக்கவில்லை என்பதாலும்
க்ஷேக்த்ர மூர்த்தி ஸ்ரீ கிருஷ்ணன் கடுங்கோபம் அடைந்துள்ளார் "
என்பதும் "தேவப்ரஸன்னதௌதில் காண பட்டது,

நிர்வாகிகள் அந்த ஸ்த்ரீயை வலை போட்டு தேடி கண்டுபிடித்தனர்

அவளுக்கு அன்றே இராஜக்கன்மார்கள் கூடே தர்ஸனம் செய்ய அனுமதிக்கப்பட்டது,

கண்குளிர கண்டாள்.
குருவாயூரோனை ,
கண்ணீர் பெருகியது அவள் கண்களில்,

அப்போது ஒரு அஸரீரீ!!!!

என் பக்தை அவள் கொண்டு வந்த மஞ்சாடி கொட்டைகள் இங்கு வைக்க வேண்டும்,

குழந்தைகள் என்னை ப்ரார்த்தித்து அதை வாரும்போது,

ஸ்ரீ கிருஷ்ணன் ஆகிய நான் அவர்கள் உள்ளில் செல்கிறேன்,

அவர்கள் குழந்தைகளாக இருக்கும் வரை அவர்கள் ஆண், பெண் யாராக இருந்தாலும் "நான்தான் "அவர்களில் இருப்பேன்,

தேவப்ரஸன்னத்தில் காணப்பட்டது போல் க்ஷேக்த்ர நிர்வாகிகள் "மஞ்சாடி கொட்டைகளை ஒரு பெரிய உருளியில் போட்டு வைத்திருப்பதை இன்றும் காணலாம்,

அந்த மஞ்சாடி கொட்டைகள் கொண்டு வந்த ஸ்த்ரீக்கு அவருடைய ஜீவித நாள் முழுவதும் காலையில் கண்ணனை தரிசிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

(இதை பதிவிடும் நேரத்தில் குருவாயூர்,
"தேவப்ரஸன்னம் " வைத்து கொண்டிருக்கிறார்கள்)

மூதாட்டியின் ஆன்மாவைத் தேடிக் கண்ணனே வந்தான்.

அர்ச்சகருக்கு மூதாட்டியிடம் விசேஷப் பரிவு உண்டு.
பல்லாண்டுகளாக தினமும் ஆலயத்திற்கு வருபவள்.
அர்ச்சகர்பிரியத்தோடு கேட்டார்:
“”பாட்டி! இன்று என்ன வேண்டிக்கொண்டாய்?”
“”நேற்று என் கண்ணன் நிறைய வெண்ணெய் சாப்பிட்டுவிட்டான். கண்ணன் அருளால் அந்த வெண்ணெயெல்லாம் அவனுக்கு ஜீரணம் ஆகவேண்டும்,” என்று வேண்டிக் கொண்டேன்.
அர்ச்சகர் சிரித்தார். “”அதில்லை பாட்டி. உனக்காக ஏதாவது வேண்டிக் கொண்டாயா?”
“”எனக்கென்ன வேண்டிக் கிடக்கிறது இப்போது? போகப் போகிற கட்டை. என் பிள்ளைகண்ணன் சவுக்கியமாக இருந்தால் போதாதா! ஏராளமான பேர் அதுவேண்டும் இதுவேண்டும் என்று பிரார்த்திக்கிறார்கள்.
கண்ணன் வலக்கரம் உயர்த்தி ஆசீர்வதித்துக் கொண்டே இருக்கிறான். அவனது வலது கை வலிக்காதோ!
இவர்கள் தங்களுக்கான வேண்டுதலைக் கொஞ்சமாவது நிறுத்தினால் தானே அவன் தன் கைக்குச் சற்று ஓய்வு கொடுக்க முடியும்! ஏற்கனவே பாஞ்சாலிக்குப் புடவை வழங்கியும், அர்ஜுனனுக்குத் தேரோட்டியும்அவன் கை வலித்திருக்கும்.
புல்லாங்குழல் அதிக கனமில்லாததுதான்.
என்றாலும், ஓயாமல் அதைக் கையில் பிடித்து உதட்டருகே வைத்து ஊதிக்கொண்டிருந்தால் அந்தக் கரம் என்னாவது? இதையெல்லாம் யாராவது நினைத்துப் பார்க்கிறார்களா? இவற்றைக் கொஞ்சம் நிறுத்திவிட்டு ஓய்வெடு என்றால் அவன்கேட்பதில்லை.
நம் பேச்சை அவன் எங்கே கேட்கிறான்? அவன் பேச்சைத்தான் கீதை என்று உலகம்
கொண்டாடிக் கேட்கிறது. நான் அவனிடம் எனக்கென்று எதுவும் வேண்ட மாட்டேன். எனக்கு வலக்கரம்உயர்த்தி ஆசிகூறி, அதனால் அவன் கை வலி இன்னும் சற்றுக் கூட வேண்டாம்!”
அர்ச்சகர் பாட்டியின் பேச்சை ரசித்துக் கேட்டார்.
கண்ணனை எவ்வளவு உண்மையாக நம்புகிறாள்
இவள்.படிப்பறிவில்லாத ஏழைக் கிழவி. ஆனால் எத்தனை பக்தி!
நாள்தோறும் என் கண்ணன் காதில் சாணத்தை அப்புகிறவன், எப்படி
பக்தி செய்வது என்பதை இந்தப் பாட்டியிடம் கற்றுக் கொள்ளட்டும். அர்ச்சகர் ஆலயக் கதவைப் பூட்டினார்.
மூதாட்டி கண்ணனை நமஸ்கரித்துவிட்டு, தளர்ந்த நடையோடு வீடு நோக்கிச்சென்றாள்.
அன்றிரவு, அர்ச்சகர் கண்ணனது காதோரச் சாணத்தின் மர்மம் அறியாமல் புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்தார். பின் எப்போது தூங்கினார் என்ற தெரியவில்லை.
கலகலவென நகைத்துக் கொண்டு கண்ணன் அவரது சொப்பனத்தில் வந்தான்.
“”அர்ச்சகரே! உம் பக்தியில் எந்தக் கோளாறும் இல்லை. என் காதில் ஒட்டிக்கொள்ளும் சாணம் நீங்கள் எனக்குச் சாத்தும் சந்தனத்தை விடவும் புனிதமானது.
அதன்மகிமையை அறிய இப்போது உங்கள் உடலை விட்டு விலகி சூட்சும சரீரம் அடையுங்கள்.
மூதாட்டியின் இல்லத்திற்குச்சென்று நடப்பதைப் பாருங்கள். பிறகு மறுபடி உடலுக்கு நீங்கள் வந்துவிடலாம்!
மறுகணம் அர்ச்சகரின் உடல் கட்டையாய்க் கிடக்க, அவரது சூட்சும சரீரம் வெளியே சென்றது.
மூதாட்டி இல்லத்தில் திறந்திருந்த சாளரத்தின் வழியாக நுழைந்தது.
அர்ச்சகர் மூதாட்டியின் நடவடிக்கைகளைக் கவனித்தார்.
பாட்டி இரவு தாமதமாக உறங்கப் போனாள். அதற்குமுன் தோத்திரங்களைச் சொன்னபடி, அடுப்பைச் சாணத்தால் மெழுகினாள்.
மெழுகிய பின்னரும் கொஞ்சம் சாணம் அவள் கரத்தில் எஞ்சியிருந்தது.
“சர்வம் கிருஷ்ணார்ப்பணம்!’
என்று மனப்பூர்வமாக வாய்விட்டுச் சொன்ன அவள் சாணத் துணுக்கைச் சாளரத்தின் வழியே வீசினாள்.
என்ன ஆச்சரியம்! அர்ச்சகரின் சூட்சும சரீரம் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, சாணம்
பூட்டிய கோயிலின் உள்ளே புகுந்து கண்ணன் காதில் ஒட்டிக் கொண்டது.
நன்கு உறங்கிய அவள், அதிகாலையில் மெல்லக் கண்விழித்தாள்.
“”கண்ணா! நீ நன்றாகத் தூங்கினாயா? நேற்று குளிர் அதிகம். போர்வை போர்த்திக் கொண்டு தானே தூங்கினாய்?” என்றவாறே தன் பாயையும் போர்வையையும் மடித்து வைத்தாள்.
வாய் கொப்பளித்து, முகத்தைத் தூய்மை செய்துகொண்டுவந்தாள்.
“”தண்ணீர் இன்று குளிர்ச்சியாக இருக்கிறது கண்ணா. உடம்புக்கு ஆகாது. நீவெதுவெதுப்பான நீரில் முகம்
கழுவிக்கொள். இன்று உனக்காகபுள்ளிவைத்துக் கோலம் போடப் போகிறேன்,” என்ற பாட்டி கோலமாவோடு வாயிலுக்கு வந்தாள்.
ஒவ்வொரு புள்ளிவைக்கும்போதும் “கிருஷ்ணா! முகுந்தா! முராரே!’ என்றுகண்ணன் திருநாமங்களைச் சொல்லிக்கொண்டே புள்ளிவைத்தாள்.
பின் கண்ணனைப் பற்றியதோத்திரங்களைச் சொல்லியவாறே இழையிழுத்துக்கோலம் போட்டாள். தொடர்ந்து தோத்திரங்களைச் சொன்னபடி,அடுப்பு மூட்டிச்
சமைக்கலானாள்.
உறக்கம் கலைந்து எழுந்தார் அர்ச்சகர்.நடந்ததெல்லாம் கனவா நனவா?
அன்றும் கோயிலுக்குப் போனார்.
கண்ணன் சிலையின் காதுகளில்
ஒட்டியிருந்த சாணத்தைப்பார்த்ததும் அவரது மனம் பக்தியில் தழதழத்தது.
அதை உன்னதமான பிரசாதம் என்று கருதி வாழையிலையில் மடித்து இடுப்பு வேட்டியில் செருகிக் கொண்டார். அன்று மாலை மூதாட்டிக்காகக் காத்திருந்தார்.
ஆனால் அவள் வரவில்லை. அன்றிரவும் அவர் சொப்பனத்தில் கண்ணன் வந்தான்:
“”அர்ச்சகரே! நீங்கள் எடுத்துவந்த சாணம் உன்னதமான பிரசாதம்.
ஜாக்கிரதையாக வைத்துக் கொள்ளுங்கள். இனி அது கிடைக்காது”.
ஏன்?- வியப்போடு கேட்டார் அர்ச்சகர்.
“”நாளை அவள் ஆன்மா என்னை வந்து சேர்கிறது. இன்று அவளுக்கு உடல் நலமில்லை. அதனால் தான் அவள் கோயிலுக்கு வரவில்லை.
நாளை அதிகாலையில் கோயிலுக்கு வருவதற்கும் முன்பாக நீங்கள் அவள்
இல்லம் செல்லுங்கள். அங்கே மக்கள் கூடியிருப்பார்கள்.
மற்றவர்களுக்குத் தெரியாத சில காட்சிகள் உங்களுக்கு மட்டும் தெரியும். சுயநலமின்றி,
தாய்ப்பாசத்தோடு என்னை நேசித்த அவள் பக்தியின் பெருமையை நாளை
முழுமையாகப் புரிந்துகொள்வீர்கள்!”
அர்ச்சகர் திடுக்கிட்டு எழுந்தார்.
அதன்பின் உறக்கம் பிடிக்கவில்லை. மறுநாள் காலை மூதாட்டியின்
இல்லத்திற்கு விரைந்தார். கூடியிருந்த மக்களை விலக்கியவாறு உள்ளே சென்றார்.
பாயில் அவள் உடல் கிடத்தப்பட்டிருந்தது.
அவள் ஆன்மா அப்போதுதான் உடலை விட்டுப் பிரிந்திருந்தது. அந்த ஆன்மாவை அழைத்துச் செல்ல விண்ணிலிருந்து புஷ்பக விமானம் வருவது அவர் கண்ணுக்கு மட்டும் தெரிந்தது.
கிழவியின் ஆன்மா பேசிய பேச்சை அவர் கேட்டார்.
“”இந்தப் புஷ்பக விமான அந்தஸ்தெல்லாம் ஏழைக் கிழவியான எனக்கெதற்கு?
என் பிள்ளை கண்ணனை எப்போதும் பார்த்துக் கொண்டிருந்தால் அதுபோதும் எனக்கு!”
மூதாட்டியின் சுயநலமற்ற பக்தியின் முன் நிற்க வெட்கப்பட்டதுபோல் புஷ்பக விமானம் கண்ணன் ஆலயச் சுவரில் மோதி தூள்தூளாகியது.
மூதாட்டியின் ஆன்மாவைத் தேடிக் கண்ணனே வந்தான்.
“”என் தாய் அல்லவா நீ! எப்போதும் நீ சொல்வதைக் கேட்டு அதன்படி நான் நடக்கவேண்டுமே?” என்ற கண்ணன் அந்த ஆன்மாவை இரு குண்டலங்களாக்கித் தன் செவிகளில் அணிந்துகொண்டான்.
குண்டலங்கள் தாய்ப்பாசத்தோடு அவன் செவிகளில் பேசத் தொடங்கின.
அர்ச்சகர் தம் இல்லத்திற்குச் சென்று குளித்துவிட்டு, அவசர அவசரமாகக் கோயிலுக்குச் சென்றார். கண்ணன் விக்ரகத்தை வியப்போடு பார்த்தார்.
எந்த இடத்தில் சாணித் துணுக்கு நாள்தோறும் இருக்குமோ அந்த இடத்தில் இப்போது இரு காதுகளிலும் இரு அழகிய குண்டலங்கள் தென்பட்டன.
சுயநலமற்ற ஏழைக்கிழவியின் பக்தியை அங்கீகரித்த கண்ணனை
வணங்கிய அவரது கண்களில் கண்ணீர் பெருகியது.
சர்வம் கிருஷ்ணார்ப்பணம்.

காசியில் ஏன் கருடனும் பல்லியும் இல்லை தெரியுமா?

காசியில் ஏன் கருடனும் பல்லியும் இல்லை தெரியுமா?

ஏழு ஜென்மத்துக்கும் செய்த பாவங்களைப் போக்குகின்ற புண்ணிய தலமாக காசி கருதப்படுகிறது. 

அதன் புனிதம் பற்றியும் கங்கையின் புனிதம் பற்றியும் நிறைய நிறைய கேட்டிருப்போம்.

வாராணசியைச் சுற்றிப் பார்த்தீர்கள் என்றால், எங்கும் கருடன் சுற்றுவதைப் பார்க்கவே முடியாது. 

அதேபோல் காசியில் எங்குமே பல்லியை உங்களால் பார்க்கவே முடியாது. ஏன் தெரியுமா?

நம்முடைய வீடுகளில் கூட சாதாரணமாக திரிகின்ற பல்லி மோட்ச ஸ்தலமான வாரணாசியில் மட்டும் ஏன் இல்லை என்று யோசிக்க வேண்டியது மிக அவசியம்.

ராவண வதம் நடந்தது பல யுகங்களுக்கு முன்பு ஸ்ரீராமர் ராவணனை வதம் செய்த பின், 

ஹனுமனிடம் ராமேஷ்வரத்தில் ஒரு சுயம்பு லிங்கத் நிறுவ வேண்டும். 

அதற்காக காசியில் இருந்து ஒரு சுயம்பு லிங்கத்தைக் கொண்டு வரும்படி கட்டளையிடுகிறார்.

 அப்படி அனுப்புகிற பொழுது, காசிய நோக்கி ஹனுமான் பயணம் செய்கிறார். 

அப்படி காசியை நோக்கி ஹனுமான் வரும்பொழுது, அவருடைய கண்களில் அங்கிருக்கும் பல ஆயிரக்கணக்கான லிங்கங்களும் அங்கு தென்படுகின்றன. 

அதைப் பார்த்ததும் ஹனுமான் குழம்பிப் போகிறார். 

அங்கிருக்கும் லிங்கங்களில் எது சுயம்பு லிங்கம் என்பது அவருக்குத் தெரியவில்லை. 

சுயம்பு லிங்கத்தைக் கொண்டு சென்றால் அதற்குரிய பலன் என்பது மிகமிக அதிகம். 

அதற்குரிய சக்தியும் அதிகம். அதனுடைய சக்திப் பிரவாகம் அதிகமாக இருக்கும் என்பதால் அந்த சுயம்பு லிங்கத்தை காசி முழுவதும் தேடி அலைந்து கொண்டிருக்கிறார் ஹனுமன். 

ஆனால் கிடைக்கவில்லை. 

அப்பொழுது கருடன் அவருக்கு உதவி செய்ய முன்வருகிறார். 

இதுதான் நீங்கள் தேடுகின்ற சுயம்பு லிங்கம் என்று ஹனுமனுக்குப் புரிய வைப்பதற்கான ஒரு சுயம்பு லிங்கத்துக்கும் மேலாக மேல்நோக்கி, வட்டமடித்து கத்திக் கொண்டே வலம் வந்து கொண்டிருந்தது கருடன். 

அதை ஹனுமன் கண்டுபிடித்துவிட்டார்.

அதேபோல் பல்லியும் அந்த சுயம்பு லிங்கம் இருக்கின்ற திசையைப் பார்த்து, கத்தி காட்டிக் கொடுத்தது. 

இவ்வாறு கருடனும் பல்லியும் சுயம்பு லிங்கம் இருப்பதை ஹனுமன் கண்டுபிடிப்பதற்காக உதவி செய்தது. 

இதன்பின்பு, கருடன், பல்லி இருவருக்கும் நன்றி தெரிவித்துவிட்டு, அந்த சுயம்பு லிங்கத்தை எடுத்துக் கொண்டு புறப்பட ஆரம்பித்தார். 

அப்படி கிளம்புகிற பொழுதுதான் அங்கே ஒரு பெரிய பிரச்னை வெடித்தது. 

காசியில் காவல் தெய்வமாக இருப்பவர் யார் தெரியுமா? 

காசிக்கு காவல் தெய்வமாக இருப்பவர் கால பைரவர். 

அந்த கால பைரவரைத் தாண்டி, யாரும் காசியை விட்டு எதுவும் வெளியில் எடுத்துக் கொண்டு செல்ல முடியாது. 

ஆனால் ஹனுமனோ தன்னுடைய எஜமானர் ஸ்ரீ ராமருடைய கட்டளைப்படி சுயம்பு லிங்கத்தை எப்படியாவது கொண்டு சென்று விட வேண்டும் என்று எடுத்துச் செல்கிறார். 

அப்போது கால பைரவர் ஹனுமனை தடுத்து நிறுத்துகிறார். 

இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்ற ஆரம்பித்து, சண்டை வலுக்க ஆரம்பிக்கிறது. 

இருவருக்குமே கோபமும் ரௌத்திரமும் கட்டுக்கடங்காமல் போய்விட்டது. 

இதைப் பார்த்த தேவலோகத்தினர் இப்படியே தொடர்ந்தால், இந்த மண்ணுலகில் பிரளயமே வெடிக்குமே என்று பயந்து கொண்டிருக்கிறார்கள். 

இருவருமே அதிக பலசாலிகளாக இருப்பதால் இருவருக்கும் இடையே இருக்கின்ற சண்டையை எப்படியாவது பெரிதாகாமல் தடுத்து நிறுத்த வேண்டும் என்று யோசித்து கால பைரவரிடம் வேண்டிக் கேட்டுக் கொண்டனர். 

சுயம்பு லிங்கத்தை எடுத்துச் செல்லவும் வழிவகுக்க வேண்டும் என்று கூறினார். 

ஹனுமானின் விசுவாசத்தைப் புரிந்து கொண்ட அவர், 

லிங்கத்தை எடுத்துச் செல்வதற்கான அனுமதியைக் கொடுத்தார். 

தன்னுடைய அனுமதியின்றி எடுத்துச் சென்றதற்காக மட்டுமே தான் சண்டையிட்டதாகத் தெரிவித்தார். 

அதோடு சுயலிங்கத்தை ராமேஸ்வரத்தில் பிரதிஷ்டை செய்வதற்காகவும் ஹனுமனை அனுப்பி வைத்தார். 

ஆனால் அதேசமயம் ஹனுமனுக்கு தன்னுடைய அனுமதியின்றி லிங்கத்தைக் காட்டிக் கொடுத்ததற்காக கருடனுக்கும் பல்லிக்கும் சாபத்தை வழங்கினார் கால பைரவர். 

இந்த வாராணசியில் (காசியில்) எங்கும் நீங்கள் இருவரும் இருக்கக்கூடாது என்று சாபம் கொடுத்தார். 

எப்போதும் காசிக்கு வரக்கூடாது என்றும் சொல்லியிருக்கிறார்.

அதனால் தான் வாரணாசியில் எப்போதும் கருடனும் பல்லியும் இருப்பதில்லை.
🙏🙏🙏 ஓம் சிவாய நமஹ 🙏


Featured Post

எண்ணம்_போல_வாழ்க்கை

#எண்ணம்_போல_வாழ்க்கை... ஒருமுறை, ஒரு பிச்சைக்காரன் ரயிலில் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் போது, ​​ சூட் மற்றும் பூட்ஸ் அணிந்த ஒரு தொழிலதிபர...