Showing posts with label உக்ரைனின் கூட்டுப் படைகளின் கமாண்டர் நீக்கம்: ஜெலன்ஸ்கி அதிரடி உத்தரவு. Show all posts
Showing posts with label உக்ரைனின் கூட்டுப் படைகளின் கமாண்டர் நீக்கம்: ஜெலன்ஸ்கி அதிரடி உத்தரவு. Show all posts

Friday, March 3, 2023

உக்ரைனின் கூட்டுப் படைகளின் கமாண்டர் நீக்கம்: ஜெலன்ஸ்கி அதிரடி உத்தரவு

 உக்ரைன் கூட்டுப் படைகளின் கமாண்டரை அதிரடியாக நீக்கி, அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி உத்தரவிட்டுள்ளார். 


ரஷ்யா - உக்ரைன் போர் தொடக்கியபோது கடந்த ஆண்டு மார்ச் மாதம் உக்ரைன் ராணுவ கூட்டுப் படையின் கமாண்டராக எட்வர்ட் மைக்கைலோவிச் மொஸ்கலோவ் நியமிக்கப்பட்டார். இந்த நிலையில், ஊழலுக்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரில் கடந்த சில மாதங்களாகவே உயரதிகாரிகளை தொடர்ந்து பணி நீக்கம் செய்து வந்தார் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி. அந்த வகையில் மொஸ்கலோவ்வும் பணி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார் என்று கூறப்படுகிறது.

இந்தச் சூழலில் உக்ரைனுக்கு பயணம் செய்த சவுதி வெளியுறவுத் துறை ஃபர்கான் அல் சவுத் சுமார் 400 மில்லியன் டாலர் உக்ரைனுக்கு நிவாரண உதவியாக வழங்கினார். சவுதி - உக்ரைன் இடையேயான உறவில் இது மிக முக்கிய நகர்வு என்றும், உண்மையான உதவியை சவுதி செய்துள்ளது என்றும் உக்ரைன் தெரிவித்துள்ளது.

முன்னதாக, தங்களுக்கு மேற்கத்திய நாடுகள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றினால் உக்ரைனின் வெற்றி தவிர்க்க முடியாதது என்று அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Featured Post

பொய்யூர் கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்

அற்புதமான பொய்கைநல்லூர் (பொய்யூர்) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்  வடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர். நாகை...