Saturday, October 29, 2022

TN EB CUSTOMER CARE

உங்களது வீடுகளிலோ, கடைகளிலோ இருக்கும் மின் இணைப்பு சில சமயங்களில் கம்பத்தில் பீஸ் போய் விடும்...
அல்லது மின் இணைப்பு விட்டு விட்டு கிடைக்கும்....
அல்லது மழை மற்றும் காற்றினால் இணைப்பு துண்டிக்கப்படும்....
அல்லது உங்கள் ஏரியாவே இருண்டு விடும். இது போன்ற தருணங்களில் நீங்கள் என்ன செய்வீர்கள்....?

பெரும்பாலும் நமக்கு தெரிந்தது EB அலுவலகம் சென்று எழுதி வைத்து விட்டு வரவேண்டும். அவர்கள் சாவகாசமாக வந்து சரி செய்துவிட்டு செல்வார்கள்....
அல்லது லைன்மேன் தெரிந்தவராக இருந்தால் அவரிடம் அழைத்து சொல்லுவீர்கள். உடனே வேலையாகும்..... அதுவும் கிராமங்களில் உள்ள வீடுகள் எவ்வளவு அவசரம் என்றாலும், பொழுது இறங்கிய பிறகே வந்து வேலையை செய்து கொடுத்து விட்டு செல்வார்கள்...

இப்பொழுது மின்சார வாரிய ஊழியர்களிடம் இப்படி எல்லாம் அலைய வேண்டியதில்லை. வேலையும் உடனே ஆகணும். அதுக்கு ஒரு நல்ல ஐடியா இருக்கு தெரிந்து கொள்ளுங்கள்....
 
தமிழ்நாட்டில் எந்த மூலையில் இருந்தாலும் *9498794987* என்ற இந்த எண்ணுக்கு அழைத்து உங்கள் முழு மின் இணைப்பு எண்ணையும் தெரிவித்து உங்களுக்கு என்ன  புகாரோ அதை தெரிவித்தால் போதும்.....

தெரிவித்து ஐந்து நிமிடத்தில் மாவட்ட தலைநகரிலிருந்து அழைத்து உங்கள் தேவை என்னவென்று கேட்கிறார்கள். அவர்கள் அழைத்த பத்து நிமிடத்தில் உள்ளூரில் உள்ள மின்சார வாரிய தலைமை ஊழியர் நம்மிடம் அழைத்துப் பேசுகிறார். இவர் அழைத்துப் பேசிய ஐந்து நிமிடத்தில் லைன்மேன் உங்களிடம் அழைத்துப் பேசுகிறார்.....

அரை மணி நேரத்தில் அனைத்து வேலையும் முடிந்து விடும்.. அனைத்து வேலையும் முடிந்த பிறகு மீண்டும் மாநிலத் தலைநகர் சென்னையிலிருந்து சேவை மைய ஊழியர் அழைத்து மின்சார வாரிய ஊழியர் நம்மிடம் செய்த வேலைகள் குறித்து தகவல் கேட்ட பிறகே புகாரை முடித்து வைக்கிறார்கள்..... 

இந்த மின்சார வாரிய சேவை மைய தொடர்பு எண், மின் இணைப்பை சரி செய்வதற்கு மட்டுமல்ல, வீடுகளின் மேல் செல்லும் லைனை மாற்றி போடுதல் மற்றும் கம்பத்தை மாற்றி போடுதல், பழுதடைந்த கம்பம், புதிய இணைப்பு, தற்காலிக இணைப்பு உட்பட அனைத்து மின்சார வாரிய சேவைகளை பெறலாம்.... இந்த சேவை மையத்தின் மூலமாக சேவைகளை பெற்றாலே யாரும் பணம் கேட்பதும் இல்லை....

இது போன்று எளிதாக காரியத்தை சாதிக்க உங்கள் நெருங்கிய வட்டத்தில் உள்ள அரசு ஊழியர்கள் கூட இது போன்ற தகவலை உங்களுக்கு தெரிவிப்பதில்லை....

மின்சார வாரியம் தொடர்பான அனைத்து சேவைகளுக்கான தொலைபேசி எண் : *TN EB CUSTOMER CARE : 9498794987*
( படித்தால் மட்டும் போதாது உங்கள் நண்பர்களுக்கும், உறவினருக்கும்
பகிரவும், உபயோகமாக இருக்கும் )
நன்றி !
நன்றி

திருச்செந்தூர் கோயில் ராஜகோபுர வாசல்.

திருச்செந்தூர் கோயில் ராஜகோபுர வாசல்.

கருவறையைவிட இந்த வாசல் அதிகமான உயரத்தில் இருப்பதால், கந்தசஷ்டி விழாவில் முருகன் திருக்கல்யாணத்தின் போது நள்ளிரவில் ஒரே ஒரு நாளைத் தவிர மற்ற நாட்களில் இந்த வாசல் மூடப்பட்டுதான் இருக்கும்.

ராஜ கோபுரத்தின் வாசல் மட்டுமல்ல, கோயிலின் மிக அருகே ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கும் கடலின் மட்டமும் கருவறையைவிட அதிகமான உயரத்தில்தான் இருக்கிறது. இருந்தாலும் கோயிலினுள் ஒரு துளி கடல்நீர் கசிவை பார்க்க முடியாது.
அந்த அளவுக்கு மேலுள்ள மிருதுவான மணல் பாறைகள் அனைத்தையும் முழுமையாக தோண்டி எடுத்து அதனுள் கடினப்பாறைகளை பதித்து கோயிலை கட்டியுள்ளார்கள்.

1649ல் திருசெந்தூர் கோயிலை சிலகாலம் ஆக்கிரமிப்பு செய்து கொண்டிருந்த டச்சு வீரர்கள், கோயிலைவிட்டு வெளியேற வேண்டிய நிர்பந்தம் வந்தபோது, கோயிலுக்கு தீ வைத்ததோடு மட்டுமல்லாமல் கோயிலை முற்றிலும் தகர்பதர்க்காக பீரங்கிகள் கொண்டு தொடர்ந்து தாக்கினார்கள்.
இருப்பினும் சிறிதளவுகூட சேதம் கோயிலுக்கு ஏற்படவில்லை. அந்த அளவுக்கு கோயிலின் கட்டுமானம் உறுதியாக இருந்திருக்கிறது.
அதிர்ந்துபோன டச்சுகாரர்கள் கோயிலிலுள்ள இரண்டு சிலைகளை மட்டும் எடுத்துகொண்டு ஓடிவிட்டார்கள்.

இந்த நிகழ்வு நடந்தபோது அங்கு இருந்த டச்சு வீரர் ஒருவர் தன்னிடம் இதை கூறியதாக 
"A Description Historical and Geographical of India (1785)" என்ற புத்தகத்தில் அதன் ஆசிரியர் ரெனில் (M Rennel) குறிப்பிட்டுள்ளார்.

டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனி குடியேறிய இடங்களில் அவர்களால் அழிக்கமுடியாமல் விட்டுப்போன ஒரே கோயில் திருச்செந்தூர் முருகன் கோயில் மட்டும்தான் என்பது மற்றுமொரு கூடுதல் தகவல்..

ஓம் முருகாசரணம்

நன்றி; திருவாசகம்

கேரளாவில் உள்ள முக்கிய ஆலயங்கள் திறக்கும் மற்றும் அடைக்கும் நேரம்.

சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள்  கவனத்திற்கு....

கேரளாவில் உள்ள முக்கிய ஆலயங்கள் திறக்கும் மற்றும் அடைக்கும் நேரம்..!!

 காடாம்புழா  பகவதி கோயில்
 காலை : 5am ➖ 11am
 மாலை : 3:30Pm ➖ 7pm

 குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணகோயில்
 காலை : 3 மணி ➖ 1 மணி
 மாலை 1 மணி ➖ இரவு 9 மணி

 திருப்ராயர் ஸ்ரீராமசுவாமிகோயில்

 காலை : 4.30AM ➖ 12pm
 மாலை : 4.30Pm ➖ 8:30pm

 கொடுங்களூர் பகவதி கோயில்
 காலை : 4 மணி ➖ 12 மணி
 மாலை : 4.30Pm ➖ 8pm

 சோட்டானிக்கரை பகவதி கோயில்
 காலை : 3:30AM ➖ 12pm
 மாலை 4 மணி ➖ இரவு 8 மணி

 கீழ்க்காவு குருதி
 இரவு: 8.30 மணி

 வைக்கம் மகாதேவர் கோயில்
 காலை : 4 மணி ➖ 12 மணி
 மாலை 5 மணி ➖ இரவு 8 மணி

 கட்டுருத்தி மகாதேவர் கோயில்
 காலை : 4 மணி ➖ 12 மணி
 மாலை 5 மணி ➖ இரவு 8 மணி

 மல்லியூர் கணபதிகோயில்
 காலை : 4.30AM ➖ 12:30pm
 மாலை : 4.30Pm ➖ 8pm

 ஏட்டுமானூர் மகாதேவர்கோயில்
 காலை : 4 மணி ➖ 12 மணி
 மாலை 5 மணி ➖ இரவு 8 மணி

 கிடங்கூர் சுப்ரமணியகோயில்
 காலை : 5AM ➖ 11:30am
 மாலை 5 மணி ➖ இரவு 8 மணி

 கடப்பட்டூர் மகாதேவகோயில்
 காலை : 4 மணி ➖ 12 மணி
 மாலை 4 மணி ➖ இரவு 8 மணி

 எருமேலி வாவர்பள்ளி சாஸ்தாகோயில்
 காலை : 4 மணி ➖ 12 மணி
 மாலை 4 மணி ➖ இரவு 8 மணி

 நிலக்கல் மகாதேவர் கோயில்
 காலை : 4 மணி ➖ 12 மணி
 மாலை 4 மணி ➖ இரவு 8 மணி

 பம்பா கணபதிகோயில்
 காலை : 3 மணி ➖ 1 மணி
 மாலை 4 மணி ➖ 11 மணி

 சபரிமலை சன்னிதானம்
 நெய்யபிஷேகம் : 3.20Am ➖ 11.30am
 ஹரிவராசனம் : இரவு 10.50

 நிலக்கல் பம்பை KSRTC கட்டணம்
 ஆர்டினரி - ரூ40
 ஏசி லோஃப்ளோர் - ரூ90
 பேட்டரி - ரூ100

 வெர்ச்சுவல் க்யு வெரிஃபிகேஷன் பம்பை  ஹனுமான் கோயிலுக்கு முன்னால் செயல்படுகிறது.

ப்ளாஸ்டிக் பாட்டில்கள் அனுமதி இல்லை..  

 பிளாஸ்டிக் அதிகபட்சம் தவிர்த்து
 புண்ணியம் பூங்காவனம் தூய்மையை காக்கவும்

 மருத்துவ மையங்கள் 24 மணி நேரமும் செயல்படும்..

 உரக்குழி தீர்த்தத்திற்கு மாலை 4 மணி
 வரை மட்டும் அனுமதிக்ககப்படும்

 எல்லாக் கோயில்களிலும்
 பம்பையிலும் இலவச அன்னதானங்கள் நடைபெறும் சந்நிதானத்தில் மாளிகப்புரம்கோயில்க்குப் பின்னால் பெரிய (TDB)அன்னதானமண்டபம் உள்ளது.  

 நல்ல தீர்த்தாடன கால வாழ்த்துக்கள்...

#ஓம்_சுவாமியே… #சரணம்_ஐயப்பா 🙏🙏

Friday, October 21, 2022

குலதெய்வத்தை நினைத்து

குலதெய்வத்தை நினைத்து நம் வீட்டில் ஒரு இலுப்ப எண்ணெயில் தீபம் ஏற்றினால் நிச்சயம் உங்கள் குலதெய்வத்தின் ஆசீர்வாதத்தை நீங்கள் பெற முடியும்.

குலதெய்வத்தை ஆசீர்வாதம் கிடைக்க உதவும் இலுப்ப எண்ணெய் தீபம்

நம் வீட்டில் ஏற்படும் அனைத்து விதமான பிரச்சினைக்கும் மூல காரணமாக இருக்கும் ஒரு விஷயம் என்றால் அது பெரும்பாலானோருக்கு பணமாகத்தான் இருக்கும். அந்தப் பணம் நம் வீட்டில் நிரந்தரமாக தங்க வேண்டும் என்றால் அதற்கு முதலில் நம் குல தெய்வத்தின் ஆசீர்வாதம் நமக்கு முழுமையாக கிடைத்திருக்க வேண்டும். அனேகமானவர்களின் வீட்டில் குலதெய்வ வழிபாட்டை மறந்துவிடுகிறார்கள்.

அதாவது வருடத்திற்கு ஒரு முறையோ அல்லது இரு முறையோ குலதெய்வ கோவிலுக்கு சென்று வழிபடுவது என்பது வேறு. தினம்தோறும் நம் வீட்டில் அந்த குலதெய்வத்தை நினைத்து வழிபடுகின்றோமா, என்றால் பலரின் பதில் இல்லை என்றுதான் வரும். குலதெய்வத்தை நினைத்து நம் வீட்டில் ஒரு தீபம் ஏற்றினால் நிச்சயம் உங்கள் குலதெய்வத்தின் ஆசீர்வாதத்தை நீங்கள் பெற முடியும். அது என்ன தீபம் என்பதை தெரிந்து கொள்வோம்.

 

மண்ணால் செய்யப்பட்ட ஒரு அகல் விளக்கில், ஒரு ரூபாய் நாணயத்தை போட்டு, இலுப்பை எண்ணெய் ஊற்றி, இரண்டு திரிகளை ஒன்றாக சேர்த்து திரித்து, கிழக்கு பக்கம் நோக்கி உங்கள் வீட்டு பூஜை அறையில் வைத்து தீபம் ஏற்ற வேண்டும். அந்த தீபத்தை ஏற்றும்போது உங்கள் குலதெய்வத்தின் பெயரை உங்கள் மனதிற்குள் உச்சரித்துக்கொண்டே ஏற்றுவது அவசியமாகும். இந்த தீபமானது உங்கள் குலதெய்வத்திற்க்கு மட்டும் என்ற எண்ணத்தோடு ஏற்றவேண்டும். இந்த தீபத்தை உங்களால் முடிந்தால் பிரம்ம முகூர்த்த நேரமான காலை 4.00 மணியிலிருந்து 5.30 மணிக்குள் ஏற்றுவது இன்னும் சிறந்தது. முடியாதபட்சத்தில் காலை ஏழு மணிக்குள்ளாவது இந்த தீபத்தை ஏற்றி விடுங்கள்.

இலுப்பை எண்ணெய்க்கு அனைத்து தெய்வங்களின் சக்தியையும் ஈர்க்கும் தன்மை உடையது. சிவன் கோவில்களில் பெரும்பாலும் இலுப்பை எண்ணெயின் மூலம் தான் விளக்கினை ஏற்றி வந்தார்கள். குத்து விளக்கில் இலுப்பை எண்ணெய் ஊற்றி வெள்ளைதிரி போட்டு வெள்ளிக்கிழமையன்று பிரம்ம முகூர்த்தத்தில் விளக்கு ஏற்றினால் அஷ்டலட்சுமி அருள் கிடைக்கும். இதே போல் மஞ்சள் திரையிட்டால் குபேரன் அருள் கிடைக்கும். சிகப்பு திரையிட்டால் நம் கடன் தொல்லை தீரும். இப்படியாக இலுப்ப எண்ணெயில் முறையாக தீபத்தை ஏற்றும்போது நம்மால் நல்ல பலனை அடைய முடியும்.

எந்த தெய்வத்தை எப்படி வழிபட்டாலும் சரி, வழிபடவில்லை என்றாலும் சரி உங்கள் வீட்டு குலதெய்வத்தை மறந்தும்கூட தயவுசெய்து மறந்து விடாதீர்கள். ஏனென்றால் நம் குலத்திற்கு எந்த விதமான கஷ்டங்களும் ஏற்படாமல் பாதுகாத்து வர வேண்டும் என்று, நம் முன்னோர்கள் காலம் காலமாக வழிபட்டு வரும் தெய்வம் தான் குலதெய்வம். இப்படிப்பட்ட குல தெய்வத்தை மறப்பது என்பது நம் குடும்பத்திற்கு நல்லது அல்ல.

ஆஞ்சநேயர் பற்றிய பதிவுகள்

ஆஞ்சநேயர் பற்றிய பதிவுகள் :*

ஆஞ்சநேயர் எட்டு விதமான சிறப்புகளை கொண்டவர் என்பதால் அஷ்டாம்ச ஆஞ்சநேயர் எனப்படுகிறார்.

1. அனுமனது வலது கை, தன்னை நாடி வரும் பக்தர்களின் பயத்தை போக்கி "அஞ்சேல்' என்று அபயஹஸ்தத்துடன் வரங்களை வாரிக் கொடுப்பது முத்திரை பதிக்கும் முதல் சிறப்பு.

2. மனிதனின் உள் எதிரியான காமம், கோபம், பேராசை, பற்று, அகங்காரம் இவைகளையும், வெளி எதிரிகளையும் அழிக்கக் கூடியது. இந்த ஐந்து வகை ஆயுதங்களில் கதாயுதம் மிகவும் சிறந்தது. வெற்றியை மட்டுமே தரக்கூடிய இடது கையில் அனுமன் தாங்கும் கதாயுதம் இரண்டாவது சிறப்பு.

3. மனிதன் நோய் நொடி இல்லாமல் வாழ்வது தான் வாழ்க்கை. ராமாயணத்தில் லட்சுமணன் மயங்கிக் கிடந்த நிலையில் அவரைக் காக்க ஆஞ்சநேயர் சஞ்சீவி மலையைப் பெயர்த்து வந்தததில் ஒரு பகுதி தான் மேற்கு தொடர்ச்சி மலையில் சகல வியாதிகளையும் தீர்க்கக் கூடிய மூலிகைச் செடிகள் உள்ளன.

ஆஞ்சநேயர் இந்த மலையை பார்த்தபடி அருள்பாலிக்கிறார். இவரை தரிசிப்பதன் மூலம் நோய் நொடியற்ற வாழ்க்கை அமையும் என்ற நம்பிக்கை. - மேற்கு நோக்கிய முகம் மூன்றாவது சிறப்பு.

4. எமதர்மராஜனின் திசை தெற்கு. ஆஞ்சநேயரின் தெற்கு நோக்கிய கால்களை வணங்குவதால் மரணபயம் நீங்கி ஆயுள் பெருகுகிறது. நல்வாழ்வு தரும் நான்காவது சிறப்பு.

5. ஆஞ்சநேயரது மிகவும் சிறப்பு பெற்ற வாலில் நவக்கிரகங்களும் அடங்கியுள்ளன. அதிலும் குபேர திசையான வடக்கு நோக்கி வால் அமைந்திருப்பது இன்னும் சிறப்பு. இதனால் குபேரனின் அருள் முழுமையாக கிடைக்கும். இங்கு வடக்கு நோக்கிய வாலை முழுமையாக தரிசிக்கலாம்.

ஆஞ்சநேயரை வணங்கினால் நவக்கிரக தோஷங்கள் பிடிக்கும் என்ற பயமே தேவையில்லை.  "ஓ ராமா! உனது நாமாவையோ, இந்த அனுமனின் நாமாவையோ யார் கூறினாலும், அவர்களிடம் ஒரு நொடி கூட இருக்க மாட்டேன், '' என்று ராமரிடம் சத்தியம் செய்து விட்டு சனி பகவான் தன் இருப்பிடம் சென்றதாக கூறுவார்கள். ஐயம் போக்கும் ஐந்தாவது சிறப்பு.

6. ஆலவாயன் சிவனின் அம்சம் ஆறாவது சிறப்பு. ராமாயணத்தில் கடவுளர்கள், தேவர்கள் என ஒவ்வொருவரும் ஒரு பாத்திரம் ஏற்றார்கள். அதன்படி ஆலவாயனான சிவன் ராமாயணத்தில் ஏற்றுக்கொண்ட பாத்திரம் ஆஞ்சநேயர்.

எனவே தான் அனுமரை வணங்க சைவ, வைணவ பேதமெல்லாம் கிடையாது. ஆஞ்சநேயரின் தரிசனம் சிவ தரிசனத்திற்கு ஒப்பானது. ஆஞ்சநேயரும், சிவனும் ஒன்று என்பதற்கேற்ப சிவலிங்கத்திற்கு மத்தியில் ஆஞ்சநேயர் அருள்பாலிக்கிறார்.

7. ஏழுமலையானின் அனுக்கிரகம் ஏழாவது சிறப்பு.  
ஏழுமலையானின் இதயத்தில் மகாலட்சுமி இருந்து அருள் பாலிப்பது போல, இங்கு ஆஞ்சநேயரின் வலது உள்ளங்கை மத்தியில் மகாலட்சுமி அமர்ந்திருக்கிறாள். இதனால் அஷ்டலட்சுமிகளின் அனுக்கிரகம் கிடைக்கிறது.

8. எரிகின்ற சூரியன் எட்டாவது சிறப்பு. ஆஞ்சநேயரின் கண்கள் காலை நேரத்தில் எரிகின்ற சூரியனாகவும், மாலை நேரத்தில் குளுமை தரும் சந்திரனாகவும் காட்சி தருகிறது. ஜீவநேத்திரம் மிகவும் சிறப்பு பெற்றது. அனுமனின் பார்வையே தரிசிப்பவர்களைன் அனைத்து தோஷங்களையும் நீக்கி அருள் மழை பொழியவைக்கிறது என்பதை உணரலாம்.

Wednesday, October 5, 2022

Gravitational walls

 "Gravitational walls" (புவி ஈர்ப்பு விசைச் சுவர்) பற்றி பாடம் எடுக்கு இந்தியக் கோவில் சுவர்கள். கட்டடக் கலையில் பொறியியலுக்கு நிகரான மெய்யியல்.

-------------------------------------------------------------------

என்ன பூகம்பம் வந்தாலும், புயல் வந்தாலும், வெள்ளம் வந்தாலும் கால காலமாக ஒரு சிறு கீறல்கள் கூட விழாமல் பண்டையக் கோவில்கள் கம்பீரமாக நிற்பது எப்படி? எப்படி அவைகளால் இப்படி ஒருத் தாக்குதலைச் சமாளிக்க முடிந்தது.


உதாரணமாக திருவாஞ்சியம்:

-----------------------------------------------------

இங்கே அடியேன் திருவாரூரில் அமைந்துள்ள திருவாஞ்சியம் கோவிலை உதாரணமாக எடுத்துள்ளேன். இது எம தர்ம ராஜாவே சிவபெருமானுக்கு வாகனமாய் செயல்படுகிறார். 1050 ஆண்டுகள் பழைமை வாய்ந்தத் திருத்தலம் ஆகும்.


மதிமயக்கும் மதில் சுவர்:

---------------------------------------------

இக்கோவிலைச் சுற்றியுள்ள மதில் சுவரானது ராஜ கம்பீரமாகக் காட்சியளிக்கக் கூடியது. இக்கோவிலில் உள்ளக் கல்வெட்டில் "இக்கோவிலானது பிரளைய காலத்தாலும் அழியாத வகையில் கட்டப்பட்டது" என்னும் வாசகத்தைக் காணலாம். அப்போ இக்கட்டுமானம் காலம் கடந்து உழைக்கனும் என்றத் தீர்மானத்தோடு பொறியியல் திட்டத்தோடு வடிவமைத்திருக்கிறார்கள் என்பதுத் திண்ணம்!


ஈர்ப்பு விசைச் சுவர்கள்:

------------------------------------------

பூமியில் இருந்து வரும் அதிர்வுகளைத் தாங்கிக் கொள்ளும் வகையில் அடித்தளத்தை தடிமனாகவும் அதிக கனத்தோடும் அமைத்து பின் அடித்தளத்து மேலே உள்ளக் கட்டுமானத்தை அடித்தளத்தை விட கனம் குறைந்ததாகவும் தடிமன் குறைந்ததாகவும் அமைத்தனர். பின் மேல உள்ள தளத்தை அடித்தளத்தைப் போலவே தடிமன் அதிகமாகவும் கனம் அதிகமாகவும் உள்ளவாறு அமைத்தனர். அடித்தளத்தின் தடிமன் கனம் எந்த அளவு இருக்கிறதோ அதே அளவு மேல் தளத்தில் உள்ளவாறு பார்த்துக் கொண்டார்கள். இவ்வகையானக் கட்டுமானத்திற்கு ஆக்கிலத்தில் Gravitational wall என்றுப் பெயரிட்டனர்.


இக்கட்டுமானத்தின் சிறப்பு:

--------------------------------------------------

அடித்தளம் தடிமனாகவும் கனமாகவும் இருப்பதால் அதிர்வுகளை உள்வாங்கிக் கொள்ளும். மேல்தனத்தின் கனம் கட்டுமானத்தைச் சிதைத்துவிடக் கூடாது என்பதற்காக மேல் தளத்தில் கனத்துக்குக் கீழாக வெற்றிடத்தை உருவாக்கும் நோக்கத்தில் ஷாக் அப்சர்பர்களை (Shock Obserbers) வடிவமைத்துள்ளனர். இவ்வகையானக் கட்டுமானம் சுவர்ற்றை மேலும் கிழுமாக அழுத்தமாகப் பிடித்துக் கொள்கிறது. எப்பேர்பட்ட இயற்கை சீற்றம் வந்தாலும் கட்டுமானத்தின் திடத்தன்மையை பாதுகாத்துவிடுகிறது. புவி ஈர்ப்பு விசைக்குச் சவாலாக இக்கட்டுமானம் அமைக்கப்படுள்ளது விந்தையிலும் விந்தை!

-------------------------------------------------------------------

உலகமே ஒன்று சேர்ந்தாலும் எம் பாட்டன் கட்டியக் கட்டமானத்திடம் பிச்சை எடுக்க வேண்டும். 19ஆம் நூற்றாண்டுக் கட்டிடக் கலையை பல நூற்றாண்டுகளுக்கு முன்னறே நம் முன்னோர்கள் வடிவமைத்துவிட்டனர்.

Featured Post

எண்ணம்_போல_வாழ்க்கை

#எண்ணம்_போல_வாழ்க்கை... ஒருமுறை, ஒரு பிச்சைக்காரன் ரயிலில் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் போது, ​​ சூட் மற்றும் பூட்ஸ் அணிந்த ஒரு தொழிலதிபர...