Monday, July 25, 2022

தமிழர்களின் சிறப்பு மிக்க மாதம் ஆடி மாதம்.

தமிழர்களின் சிறப்பு மிக்க மாதம் ஆடி மாதம்.

சூரியன் கடக ராசியில் உட்புகுந்து அதிலிருந்து வெளியேறும் வரையிலான 31 நாள், 28 நாடி, 12 விநாடி கொண்ட கால அளவே ஆடி மாத மாகும்.

முன்முற்காலத்தில் நம் தமிழர் ஆடிப்பிறப்பைச் மிகச்சிறப்பாகக் கொண்டாடுவர்.

ஆடி மாதத்தில் வரும் புதுநிலவு மறைந்த குடும்ப முன்னோர்களுக்கு ஆற்றங்கரை அல்லது கடற்கரையில் திதி கொடுக்கும் ஆடி அமாவாசை மற்றும் ஆறுகளில் புனல் பொங்கிவந்து ஆடிப்பட்டம் தேடி விதை விதைக்கும் திருநாளாக ஆடி மாத பதினெட்டாம் நாள் ஆடிப்பெருக்கு என இம்மாதம் முழுதும் கொண்டாடப்படுகின்றது.

மேலும் ஆடி மாதம் தட்சிணாயனம் அதாவது தென்திசையேகல் ஆரம்பமாகிறது.

தமிழ் ஆண்டினை இரண்டு அயனங்களாக (கதிர் நகர்வு) பிரித்து ஆடி முதல் மார்கழி வரையிலான காலம் தட்சிணாயனமும், தை முதல் ஆனி வரை உள்ள காலம் உத்திராயனமும் (வடதிசை நகர்தல்) என்பதாகும்.

அதிகாலை வேளையில் கதிரவன் வடகிழக்கு நோக்கி நகர்தலை விட்டு விட்டு தென்கிழக்கு திசை நோக்கி நகரும்.

நமது இந்து தொன்மயான இயலில் இது சூரியனின் தேர் திசை திரும்புவதாக அறிப்பிடப்படுகிறது.

ஒன்று மழைக் காலத்தின் துவக்கத்தையும், மற்றொன்று கோடைக் காலத்தின் துவக்கத்தையும் குறிக்கிறது.

கோடி நன்மை தரும் ‘ஆடி வெள்ளி’ ஆன்மிக ரீதியாக வெள்ளிக்கிழமை சிறப்பு மிகுந்த தினமாக கருதப்படுகிறது.

கிழமைகளில் ‘சுக்ர வாரம்’ என்றழைக்கப்படுவது வெள்ளிக்கிழமை தான் இதன் சிறப்பு.

அள்ளிக் கொடுக்கும் சுக்ரனுக்குரிய வெள்ளிக்கிழமை அன்று, துள்ளித் திரியும் சிங்கத்தின் மேல் ஏறி பவனி வரும் தூயவளாம் அம்பிகையை வழிபட்டால், நல்ல காரியங்கள் இல்லத்தில் நடைபெறும்.

சூரியன் கடகத்தில் சஞ்சரிக்கும் மாதமான ஆடி மாதம், இறைவியை நாடிச் சென்றவர்களுக்கு எல்லாம் கோடி கோடியாய் நற்பலன்கள் பெருகும் மாதமாகும்.

இந்த மாதத்தில் தான் ஈஸ்வரனின் சக்தி அன்னை லோக நாயகியின் சக்திக்குள் ஐக்கியமாகி விடுகிறது. இம்மாதத்தில் அம்மானை வழிபடுதல் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. ஆடி மாதத்தில் எல்லா ஊர்களிலும் கூழ் ஊற்றுதல், தீ மிதித்தல், அம்மனுக்கு திருவிழா என பல வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.
பொதுவாகவே சித்திரை வருடப் பிறப்பு முடிந்ததும் எந்தப் பண்டிகையும் வராது. ஆவணியில்தான் கிருஷ்ண ஜெயந்தி, விநாயக சதுர்த்தி என்று வரிசையாக பண்டிகைகளின் அணிவகுப்புத் துவங்கும். அதனால் ஆடி மாதத்தை பண்டிகைகளை அழைக்கும் மாதம் என்பர். இந்த மாதம் முழுவதும் இறை வழிபாட்டில் மனதைச் செலுத்த வேண்டும் என்பதாலேயே பிற விசேஷங்களை செய்யக்கூடாது என்றார்கள். உதாரணமாக கல்யாணம், காது குத்து, புதுமனை புகுதல் போன்றவை இம்மாதத்தில் செய்ய மாட்டார்கள்.

மஞ்சள் பூசினால் மங்களம்!
அம்மனுக்கு உகந்த நாட்கள் செவ்வாயும், வெள்ளியும். அதோடு ஆடி மாதமும் சேர்ந்து விட்டால் இவ்விரண்டு நாட்களுக்கும் சிறப்புத் தன்மை அதிகமாகிவிடுகிறது. சாதாரண நாட்களில் இருக்கும் விரதத்தைப் போல பல மடங்கு பலன் தருகிறது, ஆடி மாத செவ்வாய்கிழமை விரதம், ஆடிச் செவ்வாய் தேடி குளி, அரைத்த மஞ்சளை பூசிக் குளி என்பது பழமொழி. அதாவது ஆடி செவ்வாய்க் கிழமைகளில் எண்ணெய் தேய்த்து, மஞ்சள் பூசிக் குளித்து விரதமிருந்தால் அன்னை உமையவள் கேட்ட வரம் தருவாள் என்பது ஐதிகம். இந்த விரதம் இருந்தால் வீட்டில் அமைதி என்றும் நிலவும்.
ஆடி வெள்ளியும் விசேஷமானதுதான். அன்றும் எண்ணெய் தேய்த்துக் குளித்து அம்மனை நினைத்து கூழ் ஊற்றி, தானும் அந்தக் கூழையே குடித்தால் அம்மன், செல்வம், ஆரோக்கியம் நல்ல குழந்தைகள் என வரம் அருளுவாள்.

ஆடி மழைக்காலத்தின் துவக்கமாகும். பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் நோய்க் கிருமிகளைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் வேப்பி லைக்கும் எலுமிச்சைக்கும் உண்டு. எனவே, ஆடி வழிபாடுகளில் இவை இரண்டும் முக்கியத்துவம் பெறும்.

திருமணமாகாத பெண்கள் ஆடி வெள்ளியில் குத்துவிளக்கினை அலங்கரித்து தீபம் ஏற்றி, மானசீகமாக அதில் அம்மனை எழுந்தருளச் செய்து, லலிதா சஹஸ்ரநாமம் பாராயணம் செய்து வழிபட நல்ல கணவன் அமைவார்கள். மேலும், ஆடி வெள்ளிக்கிழமைகளில் கன்யா பூஜை, ராகு கால பூஜை, நாக தோஷ பூஜை செய்வதால், குடும்பத்தில் சந்தோஷம் பெருகும்.

கருடன் பிறந்த ஆடிச் சுவாதி!

பெரிய திருவடியான கருடாழ்வார் பிறந்தது ஆடி மாதம் சுவாதி நட்சத்திரத்தன்றுதான். இந்தத் திருநாளில் கருட தரிசனம் செய்வ தாலும், கருடனை வழிபடுவதாலும் சகல தோஷங்களும் நீங்கும்; மாங்கல்யம் பலம் பெறும். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆடி முளைகொட்டு விழா பத்து நாட்களுக்கு நடைபெறும். நான்கு ஆடி வீதிகளிலும் அம்பாள் வீதியுலா வருவாள். அதேபோல், ஆடி சுவாதி தினத்தில் சுந்தர மூர்த்தி சுவாமிகளுக்கு ஆராதனையும், புறப்பாடும் நடைபெறும்.

ஆடிக்குருவி

காவிரி தீரத்தில் வாழும் ஒருவகை பறவைகளை அக்கோ குருவிகள் என்று அழைப்பார்கள். இந்தப் பெயருக்குப் பின்னணியாக சுவாரஸ்ய கதையொன்று உண்டு!

காவிரிக்கரையோரம் சகோதரிகளான இரண்டு குருவிகள் வசித்தன. காவிரி வறண்டு காணப்பட்ட ஒருநாள், மணற்பரப்பில் உலர்த்தி இருந்த பொருட்களை தின்றுகொண்டு இருந்தபோது, காவிரியில் வெள்ளம் திடீரென வந்தது. தங்கைக்குருவி உடனடியாக பறந்து மரத்தில் அமர்ந்துவிட்டது. அக்காள் குருவி கவனிக்காததால், வெள்ளத்தோடு அடித்து சென்று விட்டது. அதைக் கண்ட தங்கைக்குருவி, ‘அக்கோ, அக்கோ’ என கதறி அழுதது. அதன் பிறகு ஒவ்வொரு வருடமும் காவிரியில் வெள்ளம் பெருக்கெடுக்கும்போதெல்லாம் அக்காள் குருவி திரும்ப வந்து விடும் என்ற நம்பிக்கையில் காவிரி கரை ஓரத்தில் மறத்தில் அமர்ந்து கொண்டு, அக்கோ.... அக்கோ.... என்று குரல் எழுப்பி, அக்காள் குருவியை தேடுமாம். இப்போதும் காவிரியில் நீர் பெருக்கெடுத்து ஓடும் தருணங்களில் அந்தக் குருவியின் குரலைக் கேட்கலாம் என்கிறார்கள் அந்தப் பகுதியில் வாழும் பெரியவர்கள்!

’ஆடி வேல்' வைபவம்!

இலங்கையில் மிகவும் கோலாகலமாக கொண் டாடப்படும் விழா ஆடிவேல் வைபவம். ஆடி மாதத்தில் வேல் எடுத்து கொண்டாடப்படுவதால் ஆடிவேல் என அழைக்கிறார்கள்.

கதிர்காமத்தில் இவ்விழாவை கண்டுகளிக்க பக்த பெருமக்கள் பெருந்திரளாக வருவார்கள். இந்த ஆடிவேல் திருவிழா நான்கு தினங்கள் நடைபெறும்.

அழகன் முருகனுக்கு உகந்த ஆடிக்கிருத்திகை!

வருடத்தில் மூன்று கார்த்திகை தினங்கள் அதீத முக்கியத்துவம் பெறும். அவை: உத்தராயன துவக்கமான தை மாதம் வரும் தை கிருத்திகை, கார்த்திகை மாதம் வரும் பெரிய கிருத்திகை மற்றும் தட்சிணாயன துவக்கமான ஆடி மாதத்தில் வரும் ஆடிக் கிருத்திகை. இந்த மூன்றும் கார்த்திகேயக் கடவுளுக்கு உகந்த நாட்கள். ஆடிக்கிருத்திகையில் விரதம் இருந்து முருகனை வழிபடுவதால் வேண்டிய வரங்கள் கிடைக்கும். ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு விரதம் இருக்கும் முருக பக்தர்கள், அன்று புண்ணிய தீர்த்தங்களில் நீராடி, முருகனை வழிபடுவார்கள். குறிப்பாக பழநியில், பக்தர்கள் சண்முகா நதியில் நீராடி முருகனை வணங்கி, தங்களின் விரதத்தை பூர்த்தி செய்வார்கள்.

தீமித்துக்கும் வழக்கும் வந்தது எப்படி?
ஆடியில் தேய்பிறையின் போது வரும் ஏகாதசி யோகினி ஏகாதசி என்றும், வளர்பிறையில் வரும் ஏகாதசி சயனி ஏகாதசி என்றும் சொல்லப்படுகிறது. ஒரு சமயம் குபேரனிடம் ஹேம மாலி என்பவன் வேலை பார்த்து வந்தான். அவன் தனது மனைவியின் அழகில் மயங்கி அவளையே பார்த்துக் கொண்டிருந்ததால் அவனால் வேலையைச் சரியாக செய்ய முடியவில்லை. கோபம் கொண்ட குபேரன் அவனை பெரு நோயாளி ஆகும்படி சபித்தான்.
வேதனைப்பட்ட அவனுக்கு சாப விமோசனத்துக்கு வழி சொன்னார் ரோமச முனிவர். ஆடி மாதம் தேய்பிறை ஏகாதசியின் போது விரதமிருந்து தீமிதித்து அம்மனை வழிபட்டால் நோய் நீங்கி எழில் உருவம் கிடைக்கும் என்றார். அவனும் அதுபோல செய்து சாபம் நீங்கி நல்ல உருவம் பெற்றான். அதனால் ஆடி மாத தேய்பிறை ஏகாதசி யோகினி ஏகாதசி என்று அழைக்கப்பட்டது. அப்போது முதலே ஆடி மாதம் தீமிதி விழாவும் ஆரம்பமானது.
திருவிக்ரமனாக விஸ்வரூபம் எடுத்து மகாபலியை பாதாள உலகத்துக்கு அனுப்பிய மகாவிஷ்ணு மீண்டும் பாம்பணையில் சயனித்தது ஆடி மாத வளர்பிறை ஏகாதசி நாளில்தான். அவருக்கு களைப்பு நீங்கும்படி சேவை புரிந்தவள் ஏகாதசி தேவதையே. அதனால் அதற்கு சயனி ஏகாதசி என்று பெயர் வந்தது. இவ்விரு நாட்களிலும் விரதமிருந்து அம்மனை பூஜித்து வழிபட்டால் எல்லா நோய்களும் நீங்கும்; அம்மனருள் வாழ்வில் நிறைந்திருக்கும்.

பூர்வ புண்ணியம்!
ஆடி மாதம் என்பது தேவர்களுடைய மாலை நேரம் ஆகும். அதுவே நாம் நமது முன்னோருக்கு பித்ருக் காரியங்கள் அதாவது திதி முதலியவை கொடுத்து அவர்களை சந்தோஷப்படுத்த ஏற்ற தருணம். ஆடி மாதம் எந்த நாளில் வேண்டுமானாலும் திதி கொடுக்கலாம். அதிலும் ஆடி அமாவாசை அன்று கொடுக்கப்படும் திதிக்கும் பலன் மிக அதிகம்.
சிலருக்கு ஜாதகத்தில் பூர்வ புண்ணிய ஸ்தானம் மிகவும் பலவீனமாக இருக்கும். அப்படி இருந்தால் செய்யும் செயல்களுக்குரிய முழுமையான பலன்கள் கிடைக்காது. எந்தச் சிறு செயலையும் மிகவும் போராடித்தான் செய்ய வேண்டி இருக்கும். அப்படியும் அது வெற்றிகரமாக முடியும் என்று சொல்ல முடியாது. அதை சரி செய்ய முன்னோரின் ஆசியும், சந்தோஷமும் முக்கியம். அதனால்தான் சிரார்த்தம், திதி முதலியவற்றைக் கொடுக்கிறோம். அதனை ஆடி அமாவாசை அன்று செய்தல் கூடுதல் நன்மை பயக்கும்.
அன்று திதி கொடுத்தால் நூறு வருடங்கள் திதி கொடுத்து முன்னோரை திருபதிப்படுத்திய சந்தோஷம் அவர்களுக்குக் கிடைக்கும்.

கர்ப்பிணி அம்மன்
ஆடி மாதத்தின் போது அம்மன் கர்ப்பமாக இருப்பதாக ஐதிகம். அப்போது முளைப்பயிறை வயிற்றில் கட்டிக் கொண்டு அம்மனை வழிபட்டால் குழந்தைப்பேறு கிட்டும். அம்மனுக்குச் செய்ய வேண்டிய சடங்குகளான வளைகாப்பு, பூச்சூட்டல் போன்றவை ஆடிப்பூரத்தில் செய்யப்படுகின்றன. அப்போது வேண்டுதல் செய்து கொண்டு வளையல்களை வாங்கி கொடுக்க வேண்டும். பின்னர் கோயிலில் பிரசாதமாகத் தரும் வளையல்களை அணிந்து கொண்டால் மாங்கல்யம் நிலைத்து நிற்கும்; நன்மக்கட்பேறு வாய்க்கும்.
பூமாதேவி பெரியாழ்வார் திருமகளாக கோதை நாச்சியாராக துளசிச் செடியின் கீழ் அவதரித்தது ஆடிப்பூர நாளில் தான். அன்றைய தினம் கன்னிப் பெண்கள் ஆண்டாளை வழிபட்டு அவளது பூ பிரசாதத்தை சூடிக் கொண்டால் மனதுக்கினிய கணவர் வருவார் என்பது ஐதிகம்.

அம்பிகை தவம்!
நெல்லை மாவட்டம் சங்கரன் கோயிலில் ஆடித்தபசு மிகப்பெரிய அளவில் கொண்டாடப்படுகிறது. ஒரு முறை தேவி ஈசனிடம் நீங்கள் சங்கர நாராயணராகக் காட்சி கொடுக்க வேண்டும். அப்போதுதான் சிவ்ன பெரியவரா? விஷ்ணு பெரியவரா? என்ற சண்டை இருக்காது. எல்லாமே தாங்கள்தான் என்ற உண்மையை மக்களுக்குத் தெரிய வரும் என்று வேண்டினாள். அவளது கோரிக்கைக்கு மனம் இரங்கிய சிவபெருமான், "தென் தமிழகத்தில் புன்னை வனத்திற்குச் சென்று தவமியற்று. நான் சங்கர நாராயணனாகக் காட்சி கொடுத்து உன்னையும் ஆட்கொள்ளுவேன்' என்று கூறினார்.
பெம்மானின் வார்த்தையை கேட்ட அன்னை அவ்வாறே புன்னை வனம் வந்தாள். சுற்றிலும் அக்கினி சூழ ஊசி முனையில் நின்று தவமியற்றினாள். அவளது தவத்தின் உக்கிரம் அனைவரையும் வாட்டியது. உடனே சங்கரன் பாதி, நாராயணன் பாதி என சங்கர நாராயணனாகக் காட்சி கொடுத்தார் சிவபெருமான். நிலவு போல முகம் படைத்தவள் என்ற பொருளில் அம்மனுக்கு கோமதி என்ற பெயரையும் அளித்தார். இன்றும் கூட இந்த விழா கோமதியம்மன் அருளும் சங்கரன் கோயிலில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்த தபசுக் காட்சியைக் கண்டால் எல்லா துன்பங்களும் நீங்கிவிடும் என்பது நம்பிக்கை.

காவிரிக்கரையில் கலந்த சாதம்!
எண்களில் 18 என்ற எண் மிகவும் சிறப்பு வாய்ந்தது. மகாபாரத யுத்தம் நடந்த நாட்கள் 18, பதினெட்டுப் புராணங்கள், ஐயப்பன் கோயிலின் படிகள் 18, இப்படி நிறைய உண்டு. அதனாலேயே ஆடி 18 சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. ஆடி மாதம் நதிகளில் பூரணப் பிரவாகம் பொங்கியிருக்கும். புது வெள்ளம் வந்து பழைய அழுக்குகளை நீக்கிவிடும். வேளாண் பெருமக்கள் ஆடி பட்டம் தேடி விதை என்ற பழமொழிக்கேற்ப விதை தெளிக்கும் பணிகளில் ஈடுபடுவர்.
பூமித்தாய் கண் திறந்து நிறைய மகசூலை அள்ளித்தர வேண்டும் அதற்கு ஆறுகள் துணை புரிய வேண்டும் என்று வேண்டிக் கொண்டு கொண்டாடப்படுவதே ஆடிப் பெருக்கு பண்டிகையாகும். காவிரி பாயும் இடங்களில் இது சிறப்பாக கொண்டாடப்படுகிறது. காவிரியை அம்மனாக பாவிக்கிறார்கள். ஆடி மாதம் அன்னையின் கர்ப்பகாலம். ஆதலால் காவிரிக்கு, மசக்கையில் இருக்கும் பெண்கள் மிகவும் விரும்பும் உணவு வகைகளான புளி சாதம், எலுமிச்சை சாதம், தேங்காய் சாதம், சர்க்கரை பொங்கல் என்று படைத்து வழிபடுகிறார்கள்.
அதோடு வருடம் முழுவதும் மங்களம் தங்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டு பூ, காதோலை, கருகமணி, மஞ்சள் கயிறு முதலியவற்றை ஆற்றில் சமர்ப்பிக்கிறார்கள். பல குடும்பங்கள் தாலி மாற்றும் சடங்கும் நடைபெறுகிறது. அவ்வாறு செய்தால் கணவன் நீண்ட ஆயுளும், மனைவியின் மேல் மாறாத அன்பும் கொண்டிருப்பான் என்பது மக்களின் நம்பிக்கை.
ஆடி மாதம் முழுவதுமே அன்னை உமையவளின் வழிபாட்டுக்குரிய மாதமாக இருந்து வருகிறது. நாமும் ஆடி மாத பூஜைகள், ஆராதனைகளில் கலந்து கொண்டு கூழ் வார்த்து, பாவம் நீங்கி நீண்ட ஆயுளும், பெருமைக்குரிய குழந்தைகளும் பெற்று நிறைவுடன் வாழ்வோம்.

நம்முடைய கடன்களை தீர்க்கும்

வாசுதேவநல்லூர்..!!
ஸ்ரீ அக்னி பைரவர்..!!

விண்ணப்ப மனு மூலமாக நம்முடைய கடன்களை தீர்க்கும் தாருகாபுரம்  ஸ்ரீ அக்னி பைரவர்!!!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் இருந்து தென்காசி செல்லும் வழியில் வாசுதேவநல்லூர் என்ற ஊர் அமைந்திருக்கிறது. 

வாசுதேவ நல்லூருக்கும்,  புளியங்குடி க்கும் நடுவில்  பிரதான சாலையில் இருந்து (NEXT OF SUBRAMANIYA PURAM..LEFT SIDE CUTTING..NAME BOARD IS THERE..)  சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளடங்கிய பகுதியில் அமைந்திருப்பது தாருகாபுரம் ஆகும்.

 இங்கே இருக்கும் அருள்மிகு மத்தியஸ்த நாதர் திருக்கோயில் வளாகத்தில, ஸ்ரீஅக்னி பைரவர் அருளாட்சி புரிந்துகொண்டிருக்கிறார். இந்த ஆலயம் 
தட்சிண பஞ்சபூதத் தலங்களில் நீர் தலமாக போற்றப்படுகிறது.

ஒவ்வொரு 
தேய்பிறை அஷ்டமி திதி அன்றும் இங்கே நிறைய கடன் தொல்லையால் அவதிப்படுபவர்கள் மனு எழுதித் தருகிறார்கள்.

அனுப்புனர் முகவரியில் தன்னுடைய முகவரியையும்,

 பெறுநர் முகவரியில் அருள்மிகு அக்னி  பைரவர், அருள்மிகு மத்தியஸ்த நாதர் திருக்கோயில், தாருகாபுரம் என்று எழுதி

 பொருள் :-கடன் தீர்ப்பது தொடர்பாக என்று குறிப்பிட்டு...

ஐயா வணக்கம்..!!

 கடந்த 5 ஆண்டுகளாக எனக்கு படிப்படியாக கடன் உருவாகி இப்பொழுது ரூபாய் ஒரு கோடி கடன் வந்துவிட்டது. நானும் என் குடும்பத்தாரும் சம்பாதிக்கும் வருமானம் வட்டி கொடுப்பதற்கே போதவில்லை. அருள்மிகு ஸ்ரீ  அக்னி பைரவர் ஆகிய தாங்கள் அடுத்த ஒரு வருடத்திற்குள் என்னுடைய  கடன் அனைத்தும் முழுமையாக தீர அருள்புரியும் பாடி தாழ்மையுடன் வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்.

இப்படிக்கு எனது பெயர்
................

என கோயில் பூசாரியிடம் முறைப்படி இந்த மனுவை ஒப்படைக்க வேண்டும்.

 கண்டிப்பாக தேய்பிறை அஷ்டமி பைரவர் பூஜையில் கலந்து கொள்ள வேண்டும்.

ஒரு வருடத்திற்குள் கடன் தீர்ந்த பிறகு மறக்காமல் நேரில் வந்து ஸ்ரீ அக்னி பைரவர்  பெருமானுக்கும், அருள்மிகு மத்தியஸ்த நாதர் பெருமானுக்கும் அம்பாளுக்கும் அபிஷேகம் செய்து அன்னதானம் செய்ய வேண்டும்.

பல நூற்றாண்டுகளாக இந்த அருள்மிகு மத்தியஸ்த நாதர் ஆலயத்தில் கடன் தீர இவ்வாறு மனு எழுதித்தரும் பழக்கம் இருக்கிறது..!!..

மகாபலி மன்னன் புராணம்

சிவ சிவ

ஒவ்வொருத்தருக்கும் ஒரு கதை உண்டு

இந்த கதையும் படியுங்கள் சிவமே
***********************************

#மகாபலி மன்னன் புராணம் தெரிந்த அனைவருக்கும் அறிமுகமானவன். 

#பெருமாள் வாமன அவதாரம் எடுத்து அவனை ஆட்கொண்டார். முற்பிறவியில் இவன் மிகவும் கெட்டவனாக இருந்தான். 

எந்த நேரமும் விலைமாதரின் வீட்டிலேயே வீழ்ந்து கிடந்தான். அவர்களுக்கு பொருளை அள்ளிக் கொடுப்பதற்காக சூதாடச் செல்வான். சூதாட்டத்தில் வல்லவனான இவனை வெல்வார் யாருமில்லை.

 எனவே, பெரும் பொருளுக்கு அதிபதியானான். ஒருமுறை பேரழகி ஒருத்தியை அடைய விரும்பினான். 

அவளோ அவனிடமுள்ள பணம் முழுவதையும் தனக்கு கூலியாகக் கேட்டாள். 

அவனும் அவளை அடையும் ஆசையில், பணத்துடன் சென்றான். வழியில் ஓரிடத்தில் மயக்கமாக வந்தது. 

அப்படியே விழுந்து விட்டான். அவ்விடத்தில் ஒரு #சிவலிங்கம் இருந்தது. சற்றுநேரம் கழித்து கண்விழித்த அவன் சிவலிங்கத்தைப் பார்த்தான். 

மனதில் ஏதோ ஒரு மாற்றம் ஏற்பட்டது. பணம் முழுவதையும் #சிவலிங்கத்தின் முன் கொட்டிவிட்டு சென்றான். சிறிதுகாலம் பட்டினியாய் கிடந்த அவன் இறந்து போனான்.

 எமதூதர்கள் அவனை இழுத்துச் சென்றனர். சித்திரகுப்தன் அவன் பாவ புண்ணிய கணக்கை வாசித்தார். 

#எமதர்மராஜா அதைக் கேட்டு விட்டு, அடேய் கொடுமைக்காரா, சூதாடியும், பரத்தையர் வீட்டுக்கு சென்று இன்பமாகவும் இருந்த நீ, நரகத்திற்கு செல், என ஆணையிட்டார். 

நடுங்கிப் போன அவன், தர்மராஜா, நன்றாகப் பாருங்கள். நான் ஒரு நன்மை கூட செய்யவில்லையா?

 என்றான். கணக்கில் ஒரு இடத்தில் மட்டும், அவன் #சிவலிங்கத்தின் முன்பு பணத்தைக் கொட்டியதையும், அதைக் கண்டெடுத்த அர்ச்சகர் ஒருவர், லிங்கத்துக்கு கோயில் கட்டியதும் தெரிந்தது.

அநியாய வழியில் வந்த பணமாயினும், பொதுக்காரியத்துக்கு பயன்படுத்திய காரணத்துக்காக, அவனுக்கு மூன்று நாழிகை (72 நிமிடம்) மட்டும் இந்திரலோகத்தின் அரசு தலைமைப் பதவியை அனுபவிக்க எமதர்மன் அனுமதித்தார். 

சூதாடியும் இந்திரலோக பதவியை சுகமாக வகித்தான். இந்திரன் ஒன்றரை மணிநேரம் தானே என ஒதுங்கிக் கொண்டான். 

இந்நேரத்தில் அகத்தியரை அழைத்த சூதாடி, அவருக்கு இந்திரனின் #ஐராவதம் யானையை பரிசாகக் கொடுத்தான். 

விஸ்வாமித்திரருக்கு #உச்சைச்ரவா என்ற குதிரையையும், காமதேனு பசுவை வசிஷ்டருக்கும் கொடுத்தான். #கற்பகவிருட்ச மரத்தை கவுண்டின்ய முனிவருக்கும், #சிந்தாமணி என்ற ரத்தினத்தை காலவ முனிவருக்கும் தானமாக வழங்கினான். 

மூன்று நாழிகை கடந்ததும் அவனாகவே நரகத்தை நோக்கி நடந்தான். இதற்குள் தேவேந்திரன் எமனிடம், 

எமதார்மனே!!

என்ன காரியம் செய்தாய்? 

சூதாடியை அரசனாக்கினாய். அவன் எல்லாவற்றையும் தானம் கொடுத்து விட்டான். 

இனி நான் எப்படி அரசாள்வது? என்றான். 

எமன் அவனிடம், இந்திரரே! தாங்கள் சொல்வது சரியல்ல.
அரசாட்சியில் இருப்பவன் தன்னிடமுள்ள விலை உயர்ந்த பொருட்களையும் தகுந்தவர்களுக்கு கொடுப்பதே முறையானது. நீங்கள் அதனை இத்தனை நாளும் செய்யவில்லை. 

ஆனால், இவன் தனக்கு ஆட்சி கிடைத்த குறைந்த நேரத்தில் பலரது மனம் மகிழும்படி செய்தான். 

அந்த மகரிஷிகள் மக்களுக்கு அதன் மூலம் பலன் கொடுப்பார்கள். உங்களுக்கு இப்படி ஒரு மனம் என்றாவது வந்ததா? 

என்றான். இந்திரன் தலை குனிந்தான். இந்திரலோகத்தில் செய்த தானத்துக்காக சூதாடியின் நரக வாழ்க்கை ரத்து செய்யப்பட்டது.

 அவன் உடனடியாக மறுபிறப்பெடுத்தான். முற்பிறவியில் சூதாடியாக இருந்த குற்றத்துக்காக அசுரகுலத்திலும், தானம் செய்த காரணத்துக்காக மகாபலி என்ற பெயரில் கொடையாளியாகவும் பிறந்தான். 

முற்பிறப்பில் #சிவத்தொண்டு செய்த அவன் இப்பிறப்பில் திருமாலின் திருவடி தரிசனம் கண்டு வைகுண்டத்தை அடைந்தான்.

சிவ சிவ

கன்னியாகுமரி பகவதி அம்மன்

#ஆடி_மாதம்_ஸ்பெஷல்

கன்னியாகுமரி பகவதி அம்மன் மூக்குத்தி எல்லோருக்கும் நல்ல ஒளியையும் வழியையும் காட்டக்கூடிய வரலாறு.  

விளக்கொளியில் மூக்குத்தி ஜொலிக்க கன்னியாக, அன்னையாக எல்லோருக்கும் அருள் புரிந்து வருகிறாள் கன்னியாகுமரி பகவதி அம்மன். அன்னையின் அருள் எல்லோருக்கும் கிடைக்கட்டும். அம்மே சரணம் ! தேவி சரணம்.
   
திருவிதாங்கூர் மகாராஜாவின்           ஆட்சியில் கன்னியாகுமரி பகுதி இருந்த காலம். அந்த காலத்தில் பனையேறி ஒருவன் இருந்தான். அவனுக்கு தனக்கு ஒரு ஆண் குழந்தை வேண்டும் என்று நீண்ட நாட்களாக ஆசை. ஆனால் அவன் மனைவி ஒவ்வொரு முறை கருவுறும் போதும் அவனுக்கு பெண் குழந்தை மட்டுமே பிறந்து கொண்டு இருந்தது. ஒவ்வொரு முறையும் அவன் மனைவிக்கு பிரசவம் ஆனதும் அவன் முதல் மகள் தான் அவனிடம் வந்து குழந்தை பிறந்த செய்தியை சொல்லுவாள்.
                
இப்படியே அவனுக்கு 5 பெண் குழந்தைகள் பிறந்து விட்டன. இதனால் மனம் வருந்திய அவன் இனி நமக்கு பெண் குழந்தை பிறந்தது என்று நம் மகள் வந்து நம்மிடம் சொல்லும் போது நாம் பனையின் உச்சியில் இருந்தால் அப்படியே இரண்டு கைகளையும் மரத்தில் இருந்து விடுவித்து கீழே விழுந்து தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தான்.
                 
இந்நிலையில் அவன் மனைவி 6வது முறையாக கருவுற்றாள். அப்போது வழக்கம் போல் அவனது முதல் பெண் ஓடி வந்து அப்பா அம்மாக்கு பிரசவம் ஆயிடுச்சு தங்கை பிறந்துருக்கா என்று சொன்னாள். ஆனால் அந்த நேரம் இவன் பனையில் இருந்து கீழே இறங்கி இருந்தான். அதனால் அவனால் உடனே தற்கொலை செய்ய முடியவில்லை.
                 
7வது முறையும் இவன் பனையில் இருந்து இறங்கிய பிறகே முதல் மகள் வந்து பெண் குழந்தை பிறந்திருக்கும் செய்தியை சொன்னாள். இந்நிலையில் அவன் மனைவி 8வது முறை கருவுற்றாள். இம்முறையும் அவன் பனையை விட்டு இறங்கிய பிறகே அவன் மூத்த மகள் வந்து 8வதாக பெண் பிறந்த செய்தியை சொல்ல, மனம் வெறுத்து போன அவன் இனி நாம் உயிர் வாழவே கூடாது என முடிவு செய்து அருகில் இருந்த பாம்பு புற்றில் தன் கையை விட்டான். பாம்பு கடித்து விடும் நாம்  உயிரை விட்டு விடலாம் என்பது அவன் எண்ணம்.
                   
ஆனால் அம்பாளின் விருப்பம் வேறாக இருந்தது. அவன் புற்றின் உள்ளே கையை விட்டதும் கையில் ஏதோ சூடு பட்டது போல உணர்ந்தான். சூடு தாங்க முடியாமல் கையை வேகமாக வெளியே இழுத்து பார்க்கும் போது அவன் கையில் ஏதோ ஒன்று தக தகவென மின்னியது. புற்றில் இருந்த முதிர்ந்த நாகம் அவன் கையில் நாகரத்தினத்தை உமிழ்ந்து இருந்தது.
               
அது என்னவென்று அறியாத அவன் அதனை உடனே கொட்டாரத்திற்கு  (அரண்மனைக்கு)  கொண்டு சென்றான். அதை மஹாராஜாவிடம் கொடுத்தான். உடனே அதை பெற்று கொண்ட மகாராஜா அவரது குதிரையை அவிழ்த்து விட்டு அது எவ்வளவு தூரம் ஓடுகிறதோ அவ்வளவு இடத்தையும் அவன் பெயரில் எழுதி வைக்க சொன்னார். அவனும் மகிழ்ச்சியோடு அதை பெற்று கொண்டு வீட்டுக்கு சென்றான்.
               
அன்றிரவு மன்னரின் கனவில் ஒரு சின்னஞ்சிறு பெண் சென்று மன்னா ! இன்று காலை அரண்மனை தர்பாரில் உன்னிடம் ஒருவன் நாகரத்தினம் கொண்டு வந்து தந்தானே அதை நீ வாங்கி வைத்து கொண்டாயே ! அந்த நாகரத்தினத்தில் எனக்கு ஒரு மூக்குத்தியும், பில்லாக்கும் செய்து தர கூடாதா? என்று கேட்டு விட்டு மறைந்து விட்டாள்.
                  
திருவிதாங்கூர் மன்னர் மறுநாள் காலையில் நம்பூதிரிகளை வரவழைத்து தான் இரவு கண்ட கனவை கூறி அந்த சிறு பெண் யார் என பிரசன்னம் வைத்து கண்டு பிடிக்கும் படி கூறினார். நம்பூதிரிகள் பிரசன்னம் வைத்து பார்க்கும் போது அது வேறு யாரும் அல்ல கன்னியாகுமரி பகவதி அம்மன் தான் என்பது தெரிய வந்தது.
           
நம்பூதிரிகள் கூறியதை கேட்ட மன்னர் உடனடியாக தேவி கன்னியாகுமரி பகவதிக்கு நாகரத்தினத்தில் மூக்குத்தியும், பில்லாக்கும் செய்து கொடுத்தார். அது தான் இன்றும் அன்னை அணிந்து கொண்டு இருக்கிறாள். நாகரத்தினம் என்பதால் அது தக தகவென ஜொலிக்கும். கப்பலோட்டிகள் அம்பாளின் மூக்குத்தி வெளிச்சத்தை கலங்கரை விளக்க ஒளி என்று எண்ணியதால் கப்பல் திசை மாறி வந்த காரணத்தால் கோவிலின் கிழக்கு வாசல் அடைக்கப்பட்டு தெற்கு வாசல் வழியாக சென்று தான் தேவியை தரிசனம் செய்ய முடியும். அம்பாளின் கருணை முகத்தை கண்டால் நம்மால் அவள் சந்நிதியில் இருந்து திரும்பி வர மனம் வராது.
            
விளக்கொளியில் மூக்குத்தி ஜொலிக்க கன்னியாக, அன்னையாக எல்லோருக்கும் அருள் புரிந்து வருகிறாள் எனது இஷ்ட தெய்வம் கன்னியாகுமரி பகவதி அம்மன். அன்னையின் அருள் எல்லோருக்கும் கிடைக்கட்டும். அவள் கருணையினால் உலகம் இந்த கொடிய நோயில் இருந்து மீண்டு வரட்டும்.  
      
அம்மே சரணம் ! தேவி சரணம் !

இடி விழுந்த சிவலிங்கம்

இடி விழுந்த சிவலிங்கம்

ஒரு ஏழைப்பெண் பூ வியாபாரம் செய்து வந்தாள். பூ கட்டாத தினங்களில் கோயிலுக்கு சந்தனம் அரைத்துக் கொடுப்பது, கோயிலைப் பெருக்கிக் கோலமிடுவது. நந்தவனத்துக்கு நீர் பாய்ச்சுவது போன்ற வேலைகளை அவள் செய்து வந்தாள். 

(அது, பொன்மனை மகாதேவர் கோயிலுக்கும் நந்தீஸ்வரத்துக்கும் இடைப்பட்ட கோயில், கன்யாகுமரி மாவட்டம்.) 

அப்பெண்ணுக்கு, கோயிலுக்கு தினமும் வரும் பணக்காரப் பெண் ஒருத்தியோடு தோழமை ஏற்பட்டது. அது கைமாற்றாய் பணம் கேட்குமளவு வளர்ந்தது. 

ஒரு முறை அந்தப் பணக்கார நங்கையிடம் கொஞ்சம் பெரிய தொகையை வாங்கினாள் அவள். ஒரு மாதம் சென்றபின் பணத்தைத் திருப்பிக் கேட்டாள் செல்வவதி. 

இதோ, அதோ என்று சாக்குச் சொல்லி வந்தாள் ஏழைப் பெண். கடன் கொடுத்தவளோ, என் வீட்டாருக்குத் தெரியாமல் நகையை அடகு வைத்து இப்பணத்தைக் கொடுத்தேன். அடுத்த மாதம் என் மைத்துனர் திருமணம். 
அதற்குள் திருப்பாவிட்டால் என் கணவர் திட்டுவார். 

கடன் வாங்கும்போதே நம்மால் திரும்பக் கொடுக்க முடியுமா என்று யோசிக்க மாட்டாயா? என்று ஏசினாள்.
ஏழைப் பெண் கலங்கினாள்.

எல்லோரும் போனபிறகு அச்சாளீஸ்வரர் சன்னிதியில், ஈஸ்வரா! பணம் வைத்துக் கொண்டா கொடுக்காமல் இருக்கிறேன்! உன்னை நம்பித்தான் பொய் சொல்லப்போகிறேன், தண்டனையாக என்னைப் பழி வாங்கி விடாதே! என்று பிரார்த்தித்தாள். 
அடுத்த நாள் பணக்காரி கடனைக் கேட்டபோது, வீட்டுக்குப் போய் கணக்கு நோட்டைப் பார். உன் கடனை எப்பவோ கொடுத்து விட்டேன் என்று ஒரே போடாகப் போட்டாள் ஏழை. 
தனவந்தி வாயடைத்துப் போனாள்.

பிறகு சமாளித்துக்கொண்டு 
அடிப்பாவி! 
இப்படியா பொய் சொல்லுவே! 
ஊர் முக்கியஸ்தர்களைக் கூட்டி வருகிறேன். அச்சாளீஸ்வரர் சன்னிதியில் சத்தியம் செய்யவேண்டும் என்றாள். 
ஊர் கூடியது. 

ஏழைப்பெண் கோயிலை வலம் வந்து, அச்சாளீஸ்வரா! கடனைத் தந்து விட்டேன். இது சத்தியம் என்று கற்பூரத்தை அடித்தாள். 
பலரும் பணக்காரியை இகழ்வாகப் பார்த்தனர். 
செல்வவதி ஆவேசத்தோடு, 
அச்சாளீஸ்வரா! ஊரார் முன்பு என்னைப் பொய்யானவளாக்கி விட்டாயே! 
அசத்தியத்தை ஏற்று மவுனமாயிருக்கும் உன் தலையில் இடி விழட்டும் என சபித்தாள். 

அப்போது கார் மேகங்கள் கூடின. 
மழையும், இடியும், மின்னலுமாய் வெளுத்து வாங்கியது. அதில் ஒரு இடி ஸ்வாமி சன்னிதி விமானத்தில் விழுந்தது. லிங்கத் திருமேனியில் பிளவு ஏற்பட்டது.
உண்மையை இறைவன் நிரூபித்தான் என்று ஊரார் அதிசயித்தனர். 

ஊரார் நிதி திரட்டி பணக்கார பக்தையிடம் கொடுக்க, அவள் வீட்டார் அதைக் கோயில் திருப்பணிக்கே தந்து விட்டனர்.
பிளவு பட்ட லிங்கம் அருகிலுள்ள தடாகத்தில் வைக்கப்பட்டது. கருவறையில் புதிய லிங்கம் ஸ்தாபித்தனர். 

மறுநாள் கருவறையை திறந்தபோது, அங்கே பிளவுபட்ட லிங்கமே இருந்தது. 
அபிஷேகம் செய்ய வசதியாக பிளவை மூடிக்கொள் என்று பக்தர்கள் தினமும் பிரார்த்திக்க பிளவு சிறிது சிறிதாகக் குறுகி, தற்போது வடு மட்டுமே தெரிகிறது. 

புதிதாகச் செய்த லிங்கம் புஷ்கரணியில் உள்ளது.
ஆலகாலம் உண்டனை அன்று உலகைக் காத்திட
நீல வானிடி தாங்கினை அபலை துயர் ஓட்டிட,
பால னிவனைத் துரத்திடும் பாப வினைகள் அழிந்திட,
கால காலனே அருள்வாய் அச்சாளீஸ்வர நாதனே
என்ற பாடலே இருக்கிறது.

திருச்சிற்றம்பலம்

ஸ்ரீ காலபைரவர்

ஸ்ரீ காலபைரவர் 

 அசுவினி, மகம்,மூலம் நட்சத்திரம் ஒன்றில் பிறந்தவர் தினமும் 108 முறை ஜெபிக்க அல்லது எழுத வேண்டிய மந்திரம்

" ஓம் ஹ்ரீம் பீஷன பைரவாய நமக"

பரணி,பூரம், பூரா டம் நட்சததிரம் ஒன்றில் பிறந்தவர் தினமும். 108 முறை ஜெபிக்க அல்லது எழுத வேண்டிய மந்திரம்
 
"ஓம் ஹ்ரீம் ருரு பைரவாய நமக"

கார்த்திகை,உத்திரம்,உத்திராடம் நட்சத்திரம் ஒன்றில் பிறந்தவர் தினமும். 108 முறை ஜெபிக்க அல்லது எழுத வேண்டிய மந்திரம்
 
"ஓம் ஹ்ரீம் ஶ்ரீ் ஶ்ரீ ஶ்ரீ சொர்ண பைரவாய நமக"

ரோகிணி,அஸ்தம், ஓணம் நட்சத்திரம் ஒன்றில் பிறந்தவர் தினமும் 108 முறை ஜெபிக்க அல்லது எழுத வேண்டிய மந்திரம் 

"ஓம் ஹ்ரீம் கபால பைரவாய நமக"

மிருகசீரிடம், சித்திரை,அவிட்டம் நட்சத்திரம் ஒன்றில் பிறந்தவர் தினமும் 108 முறை ஜெபிக்க அல்லது எழுத வேண்டிய மந்திரம் 
"ஓம் ஹ்ரீம் சண்ட பைரவாய நமக"

திருவாதிரை, சுவாதி, சதயம் நட்சத்திரம் ஒன்றில் பிறந்தவர் தினமும். 108 முறை ஜெபிக்க. அல்லது எழுத வேண்டிய மந்திரம்
 
"ஓம் ஹ்ரீம் சம்ஹார பைரவாய நமக"

புனர்பூசம், விசா கம்,பூரட்டாதி நட்சத்திரம் ஒன்றில் பிறந்தவர் தினமும் 108 முறை ஜெபிக்க அல்லது எழுத வேண்டிய மந்திரம்

" ஓம் ஹ்ரீம் அசிதாங்க பைரவாய நமக"

பூசம், அனுஷம், உத்திரட்டாதி நட்சத்திரம் ஒன்றில் பிறந்தவர் தினமும் 108 முறை வீதம் ஜெபிக்க. அல்லது எழுத வேண்டிய மந்திரம் 

"ஓம் ஹ்ரீம் குரோதன பைரவாய நமக"
ஆயில்யம், கேட்டை,ரேவதி நட்சத்திரம் ஒன்றில் பிறந்தவர் தினமும் 108 முறை ஜெபிக்க அல்லது எழுத வேண்டிய மந்திரம்
 
"ஓம் ஹ்ரீம் உன்மத்த பைரவாய நமக"

நம்முடைய கர்மவினைகளை வெகு விரைவாக மற்றும் முழுமையாக நீக்கக்கூடிய தெய்வங்கள் 
சிவபெருமான் மற்றும் 
அவருடைய அவதாரமான மகா கால பைரவ பெருமான்
 மற்றும் 
மகா கால பைரவர் பெருமானின் துணைவியான வராகி
 மற்றும் 
ஈசனின் இன்னொரு அவதாரமான சரபேஸ்வரர் பெருமான் ஆவார்.
 ஒரே ஒரு நாள் ஒரே ஒரு மணி நேரம் மட்டும் பைரவ மந்திரஜபம் அல்லது வராகி மந்திரம் ஜெபம் அல்லது சரபேஸ்வரர் மந்திரம் ஜெபம் செய்தால் போதாது .
ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் வீதம் குறைந்தது மூன்று ஆண்டுகள் ஜெபித்தால் மட்டுமே நம்முடைய கர்ம வினைகள் பெருமளவு குறையும் என்பதை இங்கே தெரிவித்துக் கொள்கின்றோம்.
 பிறந்த ராசி நட்சத்திரம் தெரியாதவர்கள் "ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ" என்ற மந்திரம் ஜெபித்தால் போதுமானது.
மகா கால பைரவ பெருமானின் அருளைப் பெறுவதற்கு வேறு பல வழிமுறைகளை நம்முடைய முன்னோர்களாகிய சித்தர்கள் தெரிவித்துள்ளார்கள் .

காளி மந்திரம் இது...

72 தலைமுறை புண்ணியம் செய்தவர்கள் மட்டுமே ஜபிக்க கூடிய காளி மந்திரம் இது...

சக்தியின் அம்சமாக போற்றப்படும் காளி காலங்களை கட்டுப்படுத்தும் சக்தி கொண்டவள். அவளை முழு மனதோடு வழிபடுவதன் மூலம் நம் இலட்சியத்தை நிச்சயம் அடையலாம் என்று கூறியுள்ளனர் சித்த பெருமக்கள். கிடைப்பதற்கரிய செல்வங்களையும் புகழையும் தரவல்ல ஒரு சிறப்பான காளி மந்திரம் இது....

மந்திரம்:
----------------

ஓம் க்ரீம் க்ரீம் க்ரீம் ஹ்ரீம் ஹ்ரீம்
ஹ்ரூம் ஹ்ரூம்
தக்ஷிணே காளிகே
க்ரீம் க்ரீம் க்ரீம் ஹ்ரீம் ஹ்ரீம்
ஹ்ரூம் ஹ்ரூம் ஸ்வாஹா||

மேலே உள்ள மந்திரமானது சாதாரண மந்திரம் அல்ல. 72 தலைமுறைகளாக தொடர்ந்து புண்ணியம் செய்த ஒருவராலேயே இந்த மந்திரத்தை தொடர்ந்து ஜபிக்க முடியும் என்று கூறுகிறது காளிகா புராணம்.

சிகப்பு நிற ஆடை அணிந்து, சிகப்பு நிற பூக்களை அர்ச்சனைக்கு வைத்து, காளிக்கு சிகப்பு நிற மாலை அணிவித்து, தினமும் 108 முறை சிகப்பு நிற மணி கொண்டு இந்த மந்திரத்தை ஜெபிப்பதன் பலனாக உலகத்தாரால் அரிது என்று சொல்லக்கூடிய பல செல்வங்கள் கிடைக்கும். அதோடு பேர் புகழ் என அனைத்தும் வந்து சேரும் என்று கூறுகிறது காளிகா புராணம்.

Saturday, July 16, 2022

ஆடி மாத சிறப்புகள்

ஆடி மாத சிறப்புகள் தொடர்பான 40 குறிப்புகள் வருமாறு:-

1. ஆடி மாதம் பிறந்ததும் தட்சணாயனம் ஆரம்பமாகிறது. ஆடி முதல் மார்கழி வரை தட்சணாயன காலமாகும்.

2. இந்த புண்ணிய கால கட்டங்களில் புனித நதிகளில் நீராடுவது மிகவும் விஷேம்.

3. ஆடி மாதத்தைக் கணக்கிட்டுத்தான் பண்டிகைகளின் தொடக்கம் ஏற்படுகிறது.

4. ஆடி மாதம் முழுவதும் கிராமப்புறத்தில் காவல் தெய்வமாக விளங்கும் மாரியம்மன், அய்யனாரப்பன், மதுரை வீரன், மாடசாமி, கருப்பண்ணசாமி போன்ற கிராம தேவதைகளுக்கு பூஜைகளும், விழாக்களும் நடைபெறும்.

5. ஆடி மாதத்தில் நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் பன்னிரண்டு நாட்கள் அம்மனின் ஆடி தபசு திருநாள் மிகக் கோலாகலமாக கொண்டாடப் படுகிறது. ஹரியும் சிவனும் ஒன்றே என்ற தத்துவத்தை உலகிற்கு உணர்த்த இந்த விழா நடத்தப்படுகிறது.

6. ஆறு, மக்களின் ஜீவ நாடியாதலால், அதில் ஆடி மாதம் புதுநீர் வருவதைக் கொண்டாடுவது பல நூற்றாண்டுகளாக தமிழர் மரபாக உள்ளது.

7. ஆடி மாதத்தில் சிவனின் சக்தியை விட பார்வதியின் சக்தி அதிகமாக இருக்கும் என்பது ஐதீகம்.

8. தமிழ் மாதங்களில் ஆடி மாதத்தில் தான் அதிகபட்ச அளவுக்கு அம்மன் கோவில்களில் திருவிழா நடக்கிறது. எனவே ஆடி மாதத்துக்கு அம்மன் பக்தர்களிடம் தனி மரியாதை உண்டு.

9. கேரளாவில் ஆடி மாதத்தை  இராமாயண மாத மாக அம்மாநில மக்கள் கருதுகிறார்கள்.

10. ஆடி அமாவாசை அன்று மறைந்த  
முன்னோர்களுக்கு பிதுர் கடமைகளை செய்தால், ஆண்டு முழுவதும் பித்ருக்களுக்கு கடன் கொடுத்த பலன் கிடைக்கும்.

11. ஆடி பவுர்ணமி தினத்தன்று தான் ஹயக்ரீவர் அவதாரம் நிகழ்ந்தது. எனவே ஆடி பவுர்ணமி தினத்தன்று வைணவ தலங்களில் சிறப்பு வழிபாட நடைபெறும்.

12. தமிழ்நாட்டின் பல பகுதிகளில் அம்மனுக்கு பல வித காய்கறிகளால் ஆன கதம்ப சாதத்தை படைப்பது ஐதீகமாக உள்ளது.

13. ஆடி மாதம் சுக்ல தசமியில் திக் தேவதா விரதம் இருக்க வேண்டும். அன்று திக்  தேவதைகளை அந்தந்த திக்குகளில் வணங்கி பூஜித்தால் நினைத்தது நடக்கும்.

14. ஆடி மாதம் சுக்லபட்ச ஏகாதசி முதல் கார்த்திகை மாத சுக்லபட்ச ஏகாதசி வரை மாச உப வாசம் இருப்பது குடும்பத்தில் அமைதி ஏற்படுத்தும்.

15. ஆடி மாதம் கிராம தேவைதை கோவில்கள் உள்பட திறக்காத எல்லா கோவில்களும் திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

16. ஆடி செவ்வாய்க்கிழமைகளில் கோவிலில் எலுமிச்சம் பழ விளக்கு ஏற்றினால் கூடுதல் பலன்கள் கிடைக்கும். ஆனால் எலுமிச்சம் பழ விளக்குகளை ஒரு போதும் வீட்டில் ஏற்றக் கூடாது.

17. ஆடி மாதம் வளர்பிறை துவாதசி நாளில் தொடங்கி கார்த்திகை மாதம் வளர்பிறை துவாதசி நாள் வரை பெண்கள் துளசி பூஜை செய்து வந்தால், நினைத்தது நடைபெறும். வீட்டில் சகல செல்வங்களும் குவியும்.

18. கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை என்ற ஊரில் முருகன் கோவில் உள்ளது. ஆடி மாதம் கடைசி வெள்ளிக்கிழமை அங்குள்ள முருகனுக்கு கூடை, கூடையாக மலர்களை கொட்டி மலர் அபிஷேகம் செய்வார்கள். இதை அந்த பகுதி மக்கள் ஆடியில் மலர் முழுக்கு, அழகு வேல்முருகனுக்கு என்று சொல்வார்கள்.

19. ஆடிப்பெருக்கு திருவிழா ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் விமரிசையாக நடைபெறும். அப்போது பெருமாள் மண்டபத்துக்கு எழுந்தருள்வார்.

20. ஆடி மாதம் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் காமாட்சியை வணங்கினால் திருமண தடைகள் விலகி சுபம் உண்டாகும்.

21. ஆடி மாதம் முழுவதும் மீனாட்சியை வழிபட்டால் குடும்பத்தில் அமைதி ஏற்படும்.

22. ஆடி மாதம் முத்து மாரியம்மனை மனம் உருக வழிபட்டால் திருஷ்டிகள் விலகி விடும்.

23. ஆடி மாதம் சுக்ல துவாதசியில் மகா விஷ்ணுவை நினைத்து விரதம் இருந்தால் செல்வம் பெருகும்.

24. ஆடி மாதம் சுக்ல பட்ச ஏகாதசி தினத்தன்று அன்னதானம் செய்தால் சகல பாக்கியங்களும் கிடைக்கும்.

25. ஆடி மாதம் சுக்லபட்ச திரயோதசியில் பார்வதி தேவியை நினைத்து விரதம் இருந்தால் நினைத்தது நடக்கும்.

26. கஜேந்திரன் என்ற யானையை முதலை கவ்வியபோது அந்த யானை ஆதிமூலமே என்ற கதற உடனே திருமால் சக்ராயுதத்தை ஏவி யானையை காப்பாற்றினார். இதனை நினைவுப்படுத்தும் வகையில் ஆடி மாதம் எல்லா திருமால் தலங்களிலும் கஜேந்திர மோட்ச வைபவம் நடத்தப்படுகிறது.

27. ஆடி மாதம் ஏகாதசி, துவாதசி நாட்களில் அரச மரத்தை சுற்றி வந்து வழிப்டால் வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும்.

28. தஞ்சாவூரில் நிசும் சூதனி உக்கிர காளியம்மன் கோவில் உள்ளது. ஆடி பதினெட்டாம் பெருக்கு தினத்தன்று தஞ்சை மாவட்ட கிறிஸ்தவர்கள் அங்கு ரொட்டி, ஆட்டுக்கறி படையலிட்டு வழிபடுவதை வழக்கத்தில் வைத்துள்ளனர்.

29. ஆடி மாத வெள்ளிக் கிழமைகளில் மகாலட்சுமியை வழிபட்டால் வீட்டில் செல்வம் சேரும்.

30. ஆடி மாதம் ஏதாவது ஒரு வெள்ளிக்கிழமை அம்மனை ஆவாகனம் செய்து வீட்டுக்கு வரவழைத்து வழிபடுவது சிறப்பை தரும்.

31. ஆடி மாதம் குத்துவிளக்கை லட்சுமியாக பாவித்து அலங்கரித்து வழிபடுதல் வேண்டும்.

32. ஆடி மாதம் அம்மனுக்கு பால் பாயாசம், சர்க்கரைப் பொங்கல் வைத்து வணங்குதல் வேண்டும்.

33. அம்மனை வழிபடும் போது மறக்காமல் லலிதாசகஸ்ர நாமம் சொல்ல வேண்டும்.

34. ஆடி மாதம் வீட்டில் சிறப்பு பூஜைகள் செய்யும் போது சிறு பெண் குழந்தைகளை அம்மனாக பாவித்து, உணவு கொடுத்து, ரவிக்கை, சீப்பு, குங்குமச்சிமிழ், கண்ணாடி, வளையல், தாம்பூலம் கொடுக்க வேண்டும்.

35. ஆடிப்பூரத்தன்று ஆண்டாள் பிறந்தாள் என்பது உங்களுக்குத் தெரிந்து இருக்கும். ஸ்ரீவில்லிப்புத்தூர் கோவிலில் ஆடிப்பூரத்தன்று ஆண்டாளை நந்தவனத்துக்கு எழுந்தருள செய்வார்கள். அப்போது திருப்பாவை, நாச்சியார் திருமொழி, திருப்பல்லாண்டு பாசுரங்கள் பாடப்படும். இதனால் ஆண்டாள் மனம் குளிர்ந்து இருப்பாள். அந்த சமயத்தில் ஆண்டாளை வழிபட்டால், உங்களது எல்லா பிரார்த்தனைகளும் நிறைவேறும்.

36. ஆடி மாதம் அம்மனுக்கு சாற்றப்படும் வளையல் களைப் பெண்கள் அணிந்து கொண்டால் திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம், சகல நலன்களையும், நீங்காத செல்வத்தை பெறலாம் என்பது ஐதீகம்.

37. ஆடி மாத வெள்ளிக் கிழமைகளில் அதிகாலையில் எழுந்து குளித்து, தூய ஆடை அணிந்து, சாணத்தைப் பிள்ளையாராகப் பிடித்து, செவ்வரளி, செம்பருத்தி, அறுகு கொண்டு சூர்யோதயத்திற்கு முன்னர் விநாயகரை பூஜிக்க வேண்டும். வாழையிலை மீது நெல்லைப்பரப்பி அதன் மீது கொழுக்கட்டை வைத்து விநாயகரை வழிபட செல்வம் கொழிக்கும்.

38. ஆடி மாதத்தை “பீடை மாதம்” என்று ஒதுக்குவது, அறியாமையால் வந்த பழக்கம். உண்மையில், “பீட மாதம்” என்றுதான் பெயர். அதாவது மனமாகிய பீடத்தில் இறைவனை வைத்து வழிபடவேண்டிய மாதம் என்பதே சரியானது.

39. ஆடி பவுர்ணமியன்று சிவபெருமானுக்கு திரட்டுப்பால் அபிஷேகம் செய்து, கருப்புப் பட்டாடை, நூறு முத்துக்கள் கோர்த்த மணிமாலை, கருஊமத்தம் பூமாலை அணிவித்து, மூங்கில் அரிசிப் பாயாசம் படைத்து வழிபட்டால் எப்பேர்ப்பட்ட பகையும் விலகும்.

40. பொதுவாகவே வெள்ளிக் கிழமைகள் அம்பாளுக்குரிய சிறந்த நாட்களாகும். இதனோடு அயனத்துக்குரிய சிறப்பும் சேருவதால் ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக் கிழமைகள் அம்பாளுக்குத் தனிச்சிறப்பு கொண்டவையாகக் கருதப்படுகின்றன.

பசுக்களின் மூச்சு காற்று

🐂🙏🐂
பசுக்களின் மூச்சு காற்று நம் மீது படுவது சௌபாக்கியங்களில் ஒன்று என்பது தெரியுமா?

ரமண மகரிஷியை தேடி ஒரு முறை ஒரு செல்வந்தர் வந்தார்.
வட்டிக்கு விட்டு பணம் சம்பாதிப்பவர் அவர். சரியான கருமி.
அவருக்கு உடலெங்கும் வெள்ளை வெள்ளையாய் படை போன்று வந்திருந்தது.

எத்தனை எத்தனை பெரிய வைத்தியர்களிடம்,
ஸ்கின் ஸ்பெஷலிஸ்ட்டுகளிடம் காட்டியும் நோய் தீரவில்லை.
ஒரு கட்டத்தில் ஆடையே உடுத்த முடியாத அளவு நோயின் தீவிரம் அதிகமானது.
எரிச்சலிலும் வலியிலும் துடித்தார்.

ரமணரை போய் பார்த்தால் ஏதாவது தீர்வு சொல்வார் என்று யாரோ சொல்ல ரமணரை நாடி திருவண்ணாமலை வந்தார்.

பகவான் ரமணர் அவரை பார்த்து,
“நீ வட்டிக்கு விடுவதை முதலில் நிறுத்து.
உன்னிடம் உள்ள செல்வத்தை கொண்டு ஏழை எளியோருக்கு தான தர்மங்கள் செய்.

ஆஸ்ரமத்தில் உள்ள கோ-சாலையில் ஒரு மண்டலம் வேலை செய்.
பசுக்களை குளிப்பாட்டு,
சாணத்தை அள்ளிப்போடு,
கோ-சாலையை சுத்தம் செய்!”என்றார்.

செல்வந்தரும் சந்தோஷமாக ஒப்புக்கொண்டு,
ஆஸ்ரமத்தின், . . .
கோ-சாலையில் வேலை செய்ய ஆரம்பித்தார்.
சரியாக, 48 நாள் கழித்து பார்த்தபோது ,

அவரது உடலில் தோல் நோய் இருந்த தடயமே மறைந்து போய் அவருக்கு பரிபூரணமாக குணமாகியிருந்தது.

பசுவின் சாணம்,
கோமியம்,
ஆகியவை நம் மேல்படுவது,
பசுக்களின் மூச்சுக் காற்றை நாம் சுவாசிப்பதும்,
சஞ்சீவனியை விட சிறந்த மருந்து என்பது ரமணருக்கு தெரியாதா என்ன?

தீராத தோல் நோய் உள்ளவர்கள்,

உங்கள் அந்தஸ்தை தூக்கி தூர போட்டுவிட்டு,
ஏதேனும் கோ-சாலையில் தினசரி இரண்டு மணிநேரம் துப்புரவு பணியை செய்து பாருங்கள்.
“”கோ-சேவையின் மகத்துவம் புரியும்.””

அனைத்து உயிரனங்களுக்கும் தோஷம் உண்டு.

**ஆனால் தோஷமே இல்லாத ஒரே உயிரினம் பசு மட்டுமே.

ஒரு பசுவை ஒருநாள் பார்த்துக்கொண்டிருந்தாலும் தொழுவத்தில் இருந்தாலும்,

பார்ப்பவருக்கு பிரம்ம ஹத்தி முதலிய தோஷங்கள் விலகிவிடும் என்பது ஐதீகம்.

பிரம்மஹத்தி தோஷமே விலகும்போது சாதாரண தோல் நோய் குணமாகாதா?

* காலையில் எழுந்தவுடன் யாருடனும் பேசாமல்,

கீழ்கண்ட மந்திரத்தை கூறி பசுவுக்கு ஒரு பிடி புல் கொடுத்தால் ,

புத்திரப் பேறு கிடைக்காத பெண்ணுக்கு சந்தான பாக்கியம் கிடைக்கும்.

 “சர்வ காமதுகே தேவி சர்வ தீர்த்தாபிஷேசினி
பாவனே சுரபி சிரேஷ்டே தேவி துப்யம் நமோஸ்துதே”

* பகவான் கோப்ராம்மணாசுதர் எனப்படுகிறார்.

கோவின் பாதத்துளி நம் உடலில் பட்டால் வாநவியஸ்நானம் செய்த பலன் கிட்டும்.

கோதுளிபட்ட அன்னத்தைச் சாப்பிடாது தூக்கி எறிந்ததால்,

சிறந்த சன்னியாசியாகிய வைசிகன் சண்டாளனாகப் பிறந்தான்.

கோவுக்குப் பணிவிடை செய்து திலீப மகாராஜன் ரகுவைப் பெற்றான்.

பசு காயத்ரீ மந்திரம்:-
~~~
ஓம் பசுபதயேச வித்மஹே
மகா தேவாய தீ மஹி
தந்தோ பசுதேவி: ப்ரசோதயாத்.

* 1 பசுவுக்கு ஒரு நாள் தண்ணீர் தந்தவன் ,
அவன் நம் முன்னோர்கள் 7 தலை முறையைக் கரை ஏற்றி விடுவான்.
🐂🐂🙏🐂🐂

Saturday, July 9, 2022

பனை

பனை மரத்தில் மொத்தம் 34 வகை இருக்கின்றன. அவை,
1. 🌴ஆண் பனை
2. 🌴பெண் பனை
3. 🌴கூந்தப்பனை
4. 🌴தாளிப்பனை
5. 🌴குமுதிப்பனை
6.🌴சாற்றுப்பனை
7. 🌴ஈச்சம்பனை
8. 🌴ஈழப்பனை
9. 🌴சீமைப்பனை
10. 🌴ஆதம்பனை
11. 🌴திப்பிலிப்பனை
12. 🌴உடலற்பனை
13. 🌴கிச்சிலிப்பனை
14. 🌴குடைப்பனை
15. 🌴இளம்பனை
16. 🌴கூறைப்பனை
17. 🌴இடுக்குப்பனை
18. 🌴தாதம்பனை
19. 🌴காந்தம்பனை
20. 🌴பாக்குப்பனை
21. 🌴ஈரம்பனை
22. 🌴சீனப்பனை
23. 🌴குண்டுப்பனை
24. 🌴அலாம்பனை
25. 🌴கொண்டைப்பனை
26. 🌴ஏரிலைப்பனை
27. 🌴ஏசறுப்பனை
28. 🌴காட்டுப்பனை
29. 🌴கதலிப்பனை
30. 🌴வலியப்பனை
31. 🌴வாதப்பனை
32. 🌴அலகுப்பனை
33. 🌴நிலப்பனை
34. 🌴சனம்பனை

பனையிலிருந்து பெறப்படும் பயன்கள் :
பனை உணவு பொருட்கள் :
🌴நுங்கு
🌴பனம் பழம்
🌴பூரான்
🌴பனாட்டு
🌴பாணிப்பனாட்டு
🌴பனங்காய்
🌴பனங்கள்ளு
🌴பனஞ்சாராயம்
🌴வினாகிரி
🌴பதநீர்
🌴பனங்கருப்பட்டி
🌴பனைவெல்லம்
🌴சில்லுக் கருப்பட்டி
🌴பனங்கற்கண்டு
🌴பனஞ்சீனி
🌴பனங்கிழங்கு
🌴ஒடியல்
🌴ஒடியல் புட்டு
🌴ஒடியல் கூழ்
🌴 புழுக்கொடியல்
🌴முதிர்ந்த ஓலை
🌴 பனை குருத்து
உணவுப்பொருள் அல்லாதவை :
🌴பனை ஓலைச் சுவடிகள்
🌴பனை ஓலைத் தொப்பி
🌴குருத்தோலை
வீட்டுப்பயன்பாட்டுப் பொருட்கள் :
🌴பனையோலை
🌴நீற்றுப் பெட்டி
🌴கடகம்
🌴பனைப்பாய்
🌴கூரை வேய்தல்
🌴வேலியடைத்தல்
🌴பனைப்பாய்
🌴பாயின் பின்னல்
🌴பனையோலைப் பெட்டி
விவசாயப் பயன்பாட்டுப் பொருட்கள் :
🌴கிணற்றுப் பட்டை
🌴எரு
🌴துலா
அலங்காரப் பொருட்கள் :
🌴பனம் மட்டை
🌴வேலியடைத்தல்
🌴நார்ப் பொருட்கள்
🌴தட்டிகள் பின்னல்
வேறு பயன்பாடுகள் :
🌴கங்குமட்டை
🌴தும்புப் பொருட்கள்
🌴விறகு
🌴மரம்
கட்டிடப்பொருட்கள் :
🌴தளபாடங்கள்
🌴பனம் விதை
🌴எரிபொருள்
கிடைக்கும் பனை உணவுப் பொருட்கள் :
🌴 பனங்கருப்பட்டி
🌴பனைவெல்லம்
🌴சில்லுகருப்பட்டி
🌴சுக்கு கருப்பட்டி
🌴பனங்கற்கண்டு
🌴பனஞ்சக்கரை
🌴 பனங்கிழங்கு மாவு
🌴 பனங்கிழங்கு சத்துமாவு
🌴பதநீர்
🌴பனம்பழம் ஜுஸ்
🌴பனை விதை
🌴பனங்கன்று
🌴பனங்கிழங்கு
🌴பனைப்பாய்
🌴புழுக்கொடியல்
🌴ஓடியல்
🌴நாம் ஒவ்வொருவரும் இரு பனை விதைகளை நடவு செய்தால் வரும் காலம் எப்படி இருக்கும் என்று யூகித்து பாருங்கள்🌴


Friday, July 8, 2022

சங்கரநயினார் கோவில்

🌹 வாழ்வில் ஒருமுறையாவது சென்று தரிசிக்கவேண்டிய #சிவஸ்தலம்..!

ஒரு வருடம் பழமும்,
ஒரு வருடம் சருகும்,
ஒரு வருடம் தண்ணீரும்,
ஒரு வருடம் அதுவும் கூட இல்லாமல் விரதமிருந்தார்கள் அந்தக் கால ரிஷிகள்.
ஆனால் தமிழ்நாட்டில் ஒரு சிவஸ்தலம் இருக்கிறது.

எதுவுமே இங்கு தேவையில்லை.
ஒரே ஒரு வேளை பட்டினி இருந்து இத்தலத்து இறைவனை வணங்கினாலே போதும்.
பல நூறு யாகங்கள் செய்த பலன் கிடைத்து விடும்.
இங்கு ஒரு நாள் தங்கினால்
முற்பிறவியில் செய்த பாவமும்,

இரண்டு நாள் தங்கினால்
இப்பிறப்பில் செய்த பாவமும்,

மூன்று நாள் தங்கினால் 
மறுபிறவியில் பாவமே செய்ய இயலாத மன நிலையும் ஏற்படும்.

ஞாயிறன்று இங்கு சூரியனை மனதில் நினைத்து விரதமிருப்பவர் கண் வியாதியின்றி இருப்பர்.
திங்களன்று சந்திரனை நினைத்து விரதமிருப்பவர் வாழ்வுக்குப் பின் சிவலோகம் அடைவர்.
செவ்வாயன்று விரதமிருப்பவர் நோய் மற்றும் சனிதோஷத்தில் இருந்து நிவர்த்தி பெறுவர்.
புதனன்று விரதமிருப்பவர் கல்வியில் சிறப்பாகத் திகழ்வர்.
வியாழனன்று விரதமிருந்தால் ஆசிரியர் பதவி பெறலாம்.
வெள்ளியன்று விரதமிருப்போர் இந்திரனைப்போல் செல்வவளத்துடன் வாழ்வர்.
சனிக்கிழமை விரதமிருப்பவர் பொறாமை முதலிய துர்குணங்கள் நீங்கப்பெறுவர்.

அப்பாவை கோபத்தில் அடித்திருந்தால், 
ஆசிரியரை நிந்தனை செய்திருந்தால், 
நம்மை நம்பி பிறர் கொடுத்த பொருளை திருப்பிக்கொடுக்காமல் ஏமாற்றியிருந்தால், 
பிறரை ஏமாற்றியிருந்தால், ஏழைகளுக்கு தானம் செய்யாமல் பாவம் செய்திருந்தால்,
இந்த ஸ்தலலத்திற்கு வந்தால் போதும் கொடிய பாவங்கள் நீங்கிவிடும்.

இக்கோயிலில் புற்றுமண்ணே பிரசாதம். இதை அத்தலத்து இறைவனே தருகிறார் என்ற பெருமைக்குரிது இத்தலம்.

சிவகணங்களில் நந்ததீஸ்வரர், நவரத்தினங்களில் வைரமும், ராசிகளில் சிம்மமும், தேவர்களில் இந்திரனும், மிருகங்களில் கஸ்தூரி பூனையும், இலைகளில் வில்வமும், பாணங்களில் பாசுபதாஸ்திரமும், சக்திகளில் உமாதேவியும், பூக்களில் தாமரையும், குருக்களில் வியாழ பகவானும், முனிவர்களில் அகத்தியரும், பிள்ளைகளில் பகீரதனும் எப்படி உயர்ந்ததோ அதுபோல் தலங்களைலேயே வரராசை தான் உயர்ந்தது.
இதற்கு புன்னைவனம் சீரரசை என்றும் பெயருண்டு.

இங்கே ஒரு சிவனடியாருக்கு தானம் செய்தால் மற்ற தலங்களில் லட்சம் சிவனடியார்களுக்கு சேவை செய்த பலன் கிடைக்கும்.
ஒரு பசுவை பிராமணருக்கு தானம் செய்தால் தேவலோகத்து காமதேனுவே அவர்களுக்கு பணிவிடை செய்ய வரும்
இங்குள்ள குளத்தில் நீராடினால் குழந்தை பாக்கியம் உண்டு.
இங்கே தன் மகளுக்கு திருமணம் முடித்தால் கூட ஆயிரம் கன்னிகா தான்ம் செய்த பாக்கியம் கிடைக்கும்.
இவற்றை வேதவாக்கியமென நம்புவோர் மோட்சம் அடைவர் என்கிறார் புராணக்கதைகளை உலகுக்கு அளித்த சூதமுனிவர்.

இத்தலம் எதுவென
இன்னும் புரியவில்லையா?
சங்கரனாகிய சிவனும்,
நாராயணனாகிய திருமாலும் இணைந்திருக்கும் #சங்கர_நாராயணர் கோயில்தான் அது.
உக்கிரப் பாண்டியன் என்னும் மன்னனால் கட்டப்பட்ட இக்கோயிலின் தொன்மை கி.பி.1022 ( கோவிலமைப்பு ).

இக்கோவிலில் ஆடித் தவசு விழா ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது
கோமதி அம்பாள் சமேத சங்கரலிங்க சுவாமி கோயில்…
இக்கோயிலின் இறைவன் சங்கரலிங்கசுவாமி; இறைவி கோமதி அம்மன் என்ற ஆவுடையம்மன்
வாழ்வில் ஒரு முறையாவது இங்கே சென்று இறைவனின் பேரருளை பெற்று வந்து விடுங்கள்.

திருநெல்வேலி மாவட்டம் சங்கரன் கோவிலில் அமைந்துள்ளது சங்கரநயினார் கோவில்.

இத்தலத்திற்கு
எப்படி செல்வது?
சங்கரன்கோவில், திருநெல்வேலியில் இருந்து சுமார் 58 கி.மீ தொலைவில் உள்ளது.
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

தன்னம்பிக்கையுடன் இறை நம்பிக்கையூட்டும் அற்புதமான கதை!

இந்த கதையை படியுங்கள்.... எல்லா துக்கங்களும் முடிவுக்கு வரும் .
சிறுவனை அழைத்துக்கொண்டு அவனது தந்தை ஒரு காட்டிற்குச் சென்றார். அப்போது மகனுக்கு ஒரு சவாலை முன்வைத்தார். ''மகனே, இப்போது உனக்கு முன் ஒரு பெரிய சவால் உள்ளது. அதில் வெற்றி பெற்றால், நீ பெரிய வீரனாகி விடுவாய். இன்று இரவு முழுவதும் நீ தனியாக இந்தக் காட்டிலேயே இருக்க வேண்டும். உன் கண்கள் கட்டப்படும். ஆனாலும் நீ பயப்படக்கூடாது; வீட்டிற்கு ஓடிவந்துவிடவும் கூடாது'' என்றார். சிறுவன் ஆர்வத்துடன் சவாலை சந்திக்கத் தயாரானான்.
அவனது கண்களைத் தந்தை துணியால் இறுகக் கட்டினார். பிறகு, தந்தை திரும்பிச் செல்லும் காலடி ஓசை, மெல்ல மெல்ல மறைந்தது. அதுவரை தந்தை அருகில் இருக்கிறார் என்ற தைரியத்தில் இருந்த அவனுக்கு, தூரத்தில் ஆந்தை கத்துவதும் நரி ஊளையிடுவதும் நடுக்கத்தைக் கொடுத்தது.
காட்டு விலங்குகள் வந்து தாக்கிவிடுமோ என்ற அச்சத்தில் அவனது இதயத்துடிப்பு வழக்கத்தைத் தாண்டி எகிறியது.
மரங்கள் பேயாட்டம் ஆடின. மழைவேறு தூறத் தொடங்கியது. கடுங்குளிர் ஊசியாய் உடலைத் துளைத்தது. ‘’அய்யோ! இப்படி நிர்க்கதியாய்த் தவிக்க விட்டு தந்தை போய்விட்டாரே! யாராவது வந்து என்னைக் காப்பாற்றுங்களேன்’’ என்று பலமுறை கத்திப் பார்த்தான். பயனில்லை.
சிறிது நேரத்தில், இனி கத்திப் பயனில்லை என்பது அவனுக்குப் புரிந்தது. திடீரென்று அவனுக்குள் ஒரு துணிச்சல். என்னதான் நடக்கும், பார்ப்போமே என்று சுற்றுப்புறத்தில் கேட்கும் ஓசைகளை ஆர்வத்துடன் கவனிக்கத் தொடங்கினான். இப்படியே இரவு கழிந்தது. விடியற்காலையில் லேசாகக் கண்ணயர்ந்தான். சூரியன் உடம்பைச் சுட்டபோதுதான், கண்கட்டைத் திறந்துப் பார்த்தான். கண்ணைக் கசக்கிக்கொண்டு எதிரே பார்த்தபோது, அவனுக்கு ஆச்சரியம்! ஆனந்தம்! அழுகையே வந்துவிட்டது. ‘’அப்பா’’ என்று கூவி அருகில் அமர்ந்திருந்த தன் தந்தையைப் பாய்ந்து தழுவிக் கொண்டான்.
‘’அப்பா நீங்க எப்போ வந்தீங்க?’’ என்று ஆவலாகக் கேட்டான். சோர்வும் மகிழ்ச்சியும் கொண்டிருந்த அந்தத் தந்தை, ''நான் எப்போது மகனே உன்னை விட்டுப் போனேன்’’ என்றார். இரவு இங்குதான் இருந்தீங்களா? பிறகு ஏன் நான் பயந்து அலறியப் போதெல்லாம் என்னைக் காப்பாற்றவில்லை? ஏன் என்னிடம் எதுவும் பேசவில்லை?’’ என்று கேட்டான்.
‘’உன் மனோதிடம் வளர வேண்டும். நீ எதற்கும் அஞ்சாத வீரனாக வேண்டும் என்பதற்காக மெளனம் காத்தேன். ஏனென்றால் அச்சத்தின் உச்சத்தை எட்டும்போது, துணிச்சல் தானே வரும்’’ என்றார் தந்தை. மகனுக்கு தந்தையின் நோக்கம் புரிந்தது.
கடவுளும் அந்தத் தந்தையைப் போலத்தான், நம்மோடு இருக்கிறார். துன்பத்திலும் சோகத்திலும் தவிக்கும்போது துவண்டுவிடாமல், நாம் தீரர்களாக வேண்டும் என்பதற்காகவே பல நேரங்களில் மெளனம் காத்து வெறும் பார்வையாளரைப் போல் இருக்கிறார்.
நல்ல ஆன்மீக சிந்தனையை தூண்டும் தன்னம்பிக்கையுடன் இறை நம்பிக்கையூட்டும் அற்புதமான கதை!

Friday, June 17, 2022

சுவாமியின் பல்லக்குக்கு


ஸ்ரீரங்கம் போயிருந்தபொழுது அங்கு பெருமாள் புறப்பாடு நடப்பதைக் காண வாய்த்தது.

புறப்பாட்டில் பல்லக்கை தூக்கிவந்த இளைஞர்கள் வழியெங்கும் தங்கள் நடையை விசித்திரமான ஒரு நடனத்தைப்போல ஆடித் தூக்கி வந்தது, ஏதோ ஸ்ரீரங்கத்து பிராமண இளைஞர்களின் மனம்போன போக்கிலான ஒரு குதியாட்டம் என்று மட்டுமே அப்போது நான் எண்ணிக் கொண்டேன். 

வேளுக்குடி சொன்னபிறகுதான் அதற்கெல்லாம் சரியான சம்பிரதாயப் பெயர்களும் அதற்கான விதிமுறைகளும் இருக்கின்றன என்று அறிந்து ஆச்சரியப்பட்டேன். 

ஒரு விஷயத்தை அறிந்துகொண்டு பார்த்து அனுபவிக்கும்பொழுது அதிலுள்ள சுவாரஸ்யமே தனிதான்! 

உங்களில் பலர் அவற்றை ஏற்கனவே அறிந்திருக்கக்கூடும். 

இருந்தாலும் அதைப்பற்றி அதிகம் அறிந்திராத 
மற்றவர்களுக்காக ஓரிரு வார்த்தைகள்.

🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

சுவாமியின் பல்லக்குக்கு *'#தோளுக்கினியான்'* என்ற பெயர்  பல்லக்குத் தூக்கிகளுக்கு 
*'#ஸ்ரீபாதம் தாங்கிகள்'* என்று பெயர்

🦅🦅🦅🦅🦅🦅🦅🦅🦅🦅🦅🦅🦅🦅🦅
பெருமாள் புறப்பாட்டின் ஆரம்பம், ஒரு கருடன் எப்படி சட்டென தன் சிறகை விரித்துப் பறக்குமோ அப்படி புறப்படுமாம். 

அப்பாங்கை *கருடகதி* என அழைப்பார்களாம்!

🦅🦅🦅🦅🦅🦅🦅🦅🦅🦅🦅🦅🦅🦅🦅

🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁

அதையடுத்து குகையில் இருந்து வெளியே வரும் ஒரு சிங்கம் எப்படி தன் இடப்பக்கமும், வலப்பக்கமும் தலையை லேசாகத் திருப்பி, ஏதாவது அபாயம் உண்டா எனப்பார்த்துவிட்டுப் பின் சிங்கநடை போடுமோ அதுபோல ஸ்ரீபாதம் தாங்கிகள் நம்பெருமாளை கர்பக்கிரகத்திலிருந்து வெளியே தோளுக்கினியானில் தூக்கிப் புறப்படுவது *சிம்மகதியாம்!*

🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁

🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯

இதைத்தொடர்ந்து புலிபோல இரண்டுமூன்று அடிஎடுத்து வைப்பது, பின் நிறுத்துவது, மீண்டும் இரண்டு மூன்று அடியெடுத்து வைத்துப் போவதை *வியாக்ரகதி* என்கிறார்கள்.

🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯

🦬🦬🦬🦬🦬🦬🦬🦬🦬🦬🦬🦬🦬🦬🦬

அதையடுத்து  காளைமாடு போல மணியோசையுடன் நடப்பதை *ரிஷபகதி* என்றும்

🦬🦬🦬🦬🦬🦬🦬🦬🦬🦬🦬🦬🦬🦬🦬

🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘

ஆண்யானைபோல நடப்பதை *கஜகதி* என்றும் சொல்கிறார்கள்.

🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘

🪱🪱🪱🪱🪱🪱🪱🪱🪱🪱🪱🪱🪱🪱🪱

புறப்பாடு முடிந்து திரும்பி வந்து கர்ப்பகிரகத்தில் நுழையும்போது எப்படி ஒரு பாம்பு தன் புற்றுக்குள் நுழையும் முன்பு தன் தலையை சற்று தூக்கிப் பார்த்துவிட்டு பின் சட்டென கடிதில் உள்ளே நுழையுமோ அவ்விதம் நுழைவதை *சர்பகதி* என்கிறார்கள்.

🪱🪱🪱🪱🪱🪱🪱🪱🪱🪱🪱🪱🪱🪱🪱

🦢🦢🦢🦢🦢🦢🦢🦢🦢🦢🦢🦢🦢🦢🦢

கடைசியாக, எப்படி ஒரு அன்னப் பறவை தன் சிறகை சட்டென மடித்துக்கொண்டு உட்காருமோ அப்படி உள்ளே நுழைந்த பெருமாளை சட்டென அமர வைப்பதை *ஹம்சகதி* என்று பெயரிட்டு வைத்திருக்கிறார்கள் என்பதையெல்லாம் 
அறிந்து மகிழ்ந்தேன்

🦢🦢🦢🦢🦢🦢🦢🦢🦢🦢🦢🦢🦢🦢🦢

'ஏன் ஸ்ரீபாதம்தாங்கிகள் வழியில் வெறுமே நிற்கும்போதுகூட, 

சற்றே இடதுபுறமும் வலதுபுறமும் சாய்ந்து சாய்ந்து பெருமாளை தாலாட்டிக் கொண்டே இருக்கிறார்கள்!! 

ஆயக்கால் போட்டு நிறுத்திவிட வேண்டியதுதானே!!' 

என்று நான் பலநாள் நினைத்ததுண்டு. 

அப்படி ஆயக்கால் போட்டு நிறுத்துவது பெருமாள் கோயில்களில் வழக்கமில்லையாம்! 

*பெருமாள் பாரத்தை ஒரு  பாரமாக நினைப்பது தவறாம்.*

அடேங்கப்ப்ப்பா......!!!
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿

இதில் ஆச்சரியம் என்னவென்றால், முன்னே செல்லும் அறையர்சாமி ஸ்ரீபாதம் தாங்கிகளுடைய ஆட்டத்திற்கு ஏற்றதுபோல் இசைத்துக் கொண்டும் ,
பாடிக் கொண்டும் செல்ல, 

தீப்பந்தம் பிடிப்போர் குடைபிடிப்போர் வெள்ளித்தடி ஏந்துவோர் ஆளவட்டப் பரிகாரகர் போன்றோரும் 

அதேகதியில் ஆடிக்கொண்டு செல்லவேண்டுமாம்!
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

அது என்ன 
ஆளவட்டப் பரிகாரரர் என்கிறீர்களா? 

பெருமாளுக்கு விசிறி வீசுபவர்! 

தவிர, பெருமாள்

 #சேஷவாகனம்
 
#கற்பகவிருட்ச வாகனம்
 
#யானை பசுவையாளிவாகம் 

ஆகியவற்றில் பயணிக்கும்பொழுது அதற்கு ஏற்றதுபோல எல்லா கதிகளும்  மாற்றப்படுமாம்.

உதாரணமாக வையாளி வாகனத்தின் பொழுது 

அதாவது குதிரை வாகனத்தின்பொழுது இரண்டுநடை வேகமாகச் சென்றுவிட்டு, பின் ஒருமுறை இடப்புறமாக சுற்றிவிட்டு அடுத்து ஒருமுறை வலப்பக்கமாக சுற்றிவிட்டு 

மீண்டும் இரண்டுநடை தோளுக்கினியானைத் தூக்கி நடப்பார்களாம். 

சரி, எப்படி இந்த இளைஞர்களால் இப்படி தேர்ந்த நடனக் கலைஞர்களைப்போல இந்த அளவுக்கு அப்படி தாளம் தப்பாமல் ஆடிக்கொண்டே பல்லக்கைத் தூக்கிச் செல்ல முடிகிறது?

இந்தப் பணிக்கு அத்தனை எளிதில் ஆளை நியமித்து விடமாட்டார்களாம். 

முதலில் சில இளைஞர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு இடதுதோள் பழக்கமா வலதுதோள் பழக்கமா என்ன உயரம் என்பதையெல்லாம் கவனித்து, அதன்பிறகு அவர்களுக்கு வெறும் தோளுக்கினியானைத் தூக்கிக்கொண்டு காவிரி மணலில் பல மாதங்கள் பயிற்சி எடுக்கச் சொல்வார்களாம். 

அவர்கள் தேர்ந்த ஸ்ரீபாதம்தாங்கிகளாக ஆகிவிட்டார்கள் என்று நிர்வாகத்திற்கு சமாதானம் உண்டானால்தான் அவர்கள் அந்தப் பணிக்கு அமர்த்தப்படுவார்களாம். 

ஆச்சரியமாக இல்லை!!!

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

ஸ்ரீரங்கத்தைப் பற்றிய செய்திகள் எடுக்க எடுக்க வற்றாத அமுதசுரபியைப் போல வந்துகொண்டே இருக்கின்றன. 

கேட்பதற்கு சில இனிமையாகயும் 

பல ஆச்சர்யமாகவும் இருக்கிறது, 

நான் இத்தனைமுறை அங்கு சென்றிருந்தும் இதுவரை நான் பார்த்தும், பார்க்காத கேட்டும்  கேட்காத விஷயங்களை இன்னொருமுறை சரியாகப் பார்த்து, கேட்டு மகிழவேண்டும் என என் சிந்தை மிக விழைகிறது இப்போது.

தவிர நேற்று இரவு என் கனவில் திருமங்கையாழ்வார் வந்து என்னை திட்டிவிட்டுப் போனார். 

'சிறப்பாக வாழத்தகுந்த பெரியகோவில் எனப்படும் மதில்சூழ் திருவரங்கத்துக்கு போய்ச்சேராமல் ஏன் இப்படி காலத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறீர்?' என்று. 

'மருவிய பெரியகோயில் மதிள்திருவரங்கம் என்னா கருவிலே திருவிலாதீர் காலத்தைக் கழிக்கின்றீரே?'

புறப்பட்டு விடவேண்டியதுதான்

என் பெருமானை சேவிக்க 

இவ்வளவு விஷயம் இருக்கிறது

💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️

திருவண்ணாமலை கிரிவலம்

திருவண்ணாமலை கிரிவலம்.
************************************
பக்தர்களை பொறி வைத்து பிடித்து ஞான மும், முக்தியும், அருளும் திருவண்ணாம லை தலத்தில், கைமேல் பலன் தரும் வழிபாடாக கிரிவல வழிபாடு திகழ்கிறது. இந்த கிரிவலம் எப்போது தோன்றியது?

ஜோதியாக தோன்றி பின்மலையாக அமர் ந்த அண்ணாமலையாரே இங்கு கிரிவலத் தை தொடங்கி வைத்தார். அவர் நடத்திய ஒரு திருவிளையாடல்தான் கிரிவலம் தோ ன்ற காரணமாக அமைந்தது. அந்த திருவி ளையாட லால் திருவண்ணாமலையில் முதலில் கிரிவலம் சென்றது பார்வதி தேவி ஆவார்.

புராண வரலாறு வருமாறு:
*****************************
ஒரு தடவை கைலாயத்தில் சிவபெருமா னின் இரு கண்களையும் பார்வதி தேவி மூடியதால் உலகம் இருண்டு உயிரினங் கள் அனைத்தும் தவிக்க நேரிட்டது இதனா ல் பார்வதிதேவிக்கு தோஷம் ஏற்பட்டது. அந்த தோஷத்திற்கு பரிகாரம் தேட வேண் டிய நிலை ஏற்பட்டதால் பார்வதி தேவி திருவண்ணாமலைக்கு வந்து தவம் இருந்தார்.

அவர் தவத்தை கண்டு மனம் இறங்கிய சிவ பெருமான் அவருக்கு காட்சி கொடுத் தார். வே ண்டிய வரம் கேள் என்றார். அதற் கு பார்வதி தேவி உங்களை என்றென்றும் பிரியாது இருக்கும்படி உங்கள் உடலில் பாதியை தந்து அருள வேண்டும் என்றார்.

உடனே சிவபெருமான் அப்படியானால் நீ என்னை சுற்றி வர வேண்டும் என்று கூறி னார் அதை ஏற்றுக்கொண்ட பார்வதி தே வி திருவ ண்ணாமலையில் ஈசனே மலை யாக வீற்றிரு ப்பதால் அந்த மலையை சுற்ற தொடங்கினார். மலையை வலம் வருதல் என்பது சிவபெருமா னையே சுற்றி வருவதற்கு சமமாகும் என்பதை உணர்ந்ததால் தன் தலை மீது கை கூப்பியபடி வலம் வந்தார்.

அவருக்கு சிவபெருமான் கிரிவல பாதை யில் நேர் அண்ணாமலை அருகே ரிஷப வாகனத்தி லும், ஈசான்ய பகுதியில் ஒளி ரூபத்திலும் இரண்டு இடங்களில் காட்சி கொடுத்து ஆசீர் வதித்தார். பின்பு தனது உடலின் இடபாகத்தை வழங்கி தன்னோடு ஐக்கியமாக்கி கொண்டு அர்த்தநாரீஸ்வ ரராக காட்சி கொடுத்தார்.

அப்போது பார்வதிதேவி, “நான் தங்களை சுற்றி வந்ததால் என்னை ஆசீர்வதித்ததை போல திருவண்ணாமலை மலையை கிரிவல வரும் ஒவ்வொரு பக்தனுக்கும் அருள் வழங்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார். அதற்கு சிவபெருமான் சம்ம தித்தார். இந்த முறையில்தான் திருவண் ணாமலையில் கிரிவலம் நடைமுறை பழக்கத்துக்கு வந்தது.

பார்வதி தேவியை தொடர்ந்து இதர கடவுள் கள், தேவர்கள், ரிஷிகள், சித்தர்க ள், மகான்கள் என அனைத்து தரப்பினரும் திருவண்ணாம லையில் கிரிவலம் வந்து ஈசனாகிய அண்ணா மலையாரின் அருளை பெற்றனர்.

இதைத் தொடர்ந்து சித்தர்களின் வழிகாட் டுதலின் பேரில் சாதாரண மனிதர்களும் திருவண்ணா மலையில் கிரிவலம் செல் லும் நடைமுறை பழக்கத்துக்கு வந்தது.

ஆனால் கால ஓட்டத்தில் மனிதர்கள் கிரிவ லம் செல்வது கொஞ்சம் கொஞ்சமாக மறந்து மறைந்து போனது. சித்தர்கள், ரிஷிகள், மகா ன்கள் மட்டும் அங்கு அரூப வடிவில் கிரிவலம் மேற்கொண்டு ஈசனின் அருளை பெற்று வந்தனர்.

இந்த நிலையில் மூவேந்தர்கள் ஆட்சியின் போது கிரிவலத்தின் மகிமையை தெரிந் து கொள்ளும் வாய்ப்பு உருவானது. அந்த வாய்ப்பை இந்த உலகுக்கு பெற்று தந்த சிறப்பு பாண்டிய மன்னனுக்கு கிடைத்தது.

அந்த பாண்டிய மன்னனின் பெயர் வஜ்ரா ங்க தன். ஒரு தடவை அவன் வேட்டையாடு வதற்கா க காட்டுக்கு சென்றான். அப்போ து அழகான புனுகுப் பூனையை கண்டான். வாசனையோடு திகழ்ந்த அந்த பூனையை பிடிக்க முயற்சி செ ய்தான். ஆனால் அது அவனிடமிருந்து தப்பி ஓடியது. மன்னன் தனது குதிரையில் விடாமல் விரட்டினான். அந்த பூனையோ அருணாசலம் மலையை அடைந்தது.

என்றாலும் மன்னன் வஜ்ராங்கதன் தொட ர்ந்து பூனையைவிரட்டினான். அந்த பூனை திருவ ண்ணாமலை மலையை கிரிவலம் போல சுற்றி வந்தது. மலையை முழுமை யாக சுற்றி முடித்ததும் அந்த பூனை ஒரு இடத்தில் கீழே விழுந்து இறந்தது.

அந்த சமயம் மன்னனை சுமந்து வந்த குதி ரையும் கீழே விழுந்து உயி ரை விட்டது. மன்னன் மட்டும் உயிர் தப்பினான் அப்போது ஒரு அதிசயம் நடந்தது.

குதிரையும், பூனையும் கந்தர்வர்களாக மாறி காட்சி அளித்தனர். அவர்கள் இருவ ரும் விண்ணுலகம் செல்ல தயார் ஆனார் கள். இதை கண்டு ஆச்சரியம் அடைந்த மன்னன் வஜ்ராங்கதன் அவர்கள் இருவ ரிடமும் “நீங்கள் யார்? எதற்காக இந்த திருவிளையாடல் நடக் கிறது” என்று கேட்டார்.

அப்போது அவர்கள் முன் ஜென்மத்தில் நடந்த ஒரு சம்பவத்தை தெரிவித்தனர்.

“நாங்கள் இருவரும் வித்யாதரர்கள். ஒரு தடவை துர்வாச முனிவர் இருந்த வனத்து க்கு ள் சென்று அங்கிருந்த செடி-கொடிக ளை நாங் கள் நாசமாக்கி விட்டோம். இத னால் ஆத்திரம் அடைந்த அவர் எங்கள் இருவரையும் பூனை யாகவும், குதிரையா கவும் மாறும்படி சாபம் கொடுத்து விட்டார். பிறகு அவரே சாப விமோ சனத்திற்கான வழியையும் தெரிவித்தார்.

திருவண்ணாமலைக்கு சென்று வசியுங் கள். ஒரு காலத்தில் வஜ்ராங்கதன் என்ற மன்னன் வருவான். அவன் மூலம் உங்க ளுக்கு சாப விமோசனம் கிடைக்கும் என்றார்.

அதன்படி நாங்கள் இருவரும் திருவண் ணாமலைக்கு வந்து வசித்து வந்தோம். நீங்கள் விரட்டியதால் நாங்கள் சிவபெரு மானே மலையாக இருக்கும் இந்த புண்ணிய மலையை கிரிவலமாக வரும் வாய்ப்பு கிடைத்தது. இதனால் நாங்கள் பாவங்களில் இருந்து விடுபட்டுள்ளோம்.

நீ இந்த மலையை நடந்து வராமல் குதிரை யில் வந்ததால் உனக்கு இந்த கிரிவலத்தி ற்கான பலன் கிடைக்கவில்லை. உனக்கு அனைத்து செல்வமும் முக்தியும் வேண்டு மானால் இந்த மலையை நடந்து கிரிவலம் செய்ய வேண்டும். எங்களுக்கு முக்தி கிடைத்ததால் விடைபெறு கிறோம்” என்று கூறியபடி விண்ணுலகம் சென்று விட்டனர்.

அதன் பிறகே வஜ்ராங்கதன் மன்னனுக்கு திருவண்ணாமலையில் கிரிவலம் வந்தா ல் ஈசனின் அருளைப் பெற்று அத்தனை சிறப்புக ளையும் பெற முடியும் என்ற உண்மை தெரிய வந்தது.

மிகவும் மகிழ்ச்சி அடைந்த அவன் உடனடி யாக மன்னர் பதவியில் இருந்து விலகி னான். ஆட்சி பொறுப்பை தனது மகன் ரத்னாங்கத பாண்டியனிடம் ஒப்படைத்து விட்டு திருவண்ணாமலைக்கு வந்து தினமும் கிரிவலம் செய்ய ஆரம்பித்தான். அதோடு மக்களையும் கிரிவலம் செல்ல வைத்தான்.

அதன் பிறகே திருவண்ணாமலை கிரிவ லம் பார் புகழும் வகையில் பரவியது.

இதற்கிடையே சித்தர் பெருமக்களும் கிரி வல த்தின் சிறப்பை மக்களுக்கு உணர்த் தினார்க ள் திருவண்ணாமலை மலை ஜோதி லிங்க வடிவமாகி பிறகு ஸ்ரீ சக்கர வடிவத்தில் அமைந்துள்ள உலகின் உன்ன தமான மலை என்ப தையும் அதை சுற்றி வந்தால் பிறவி பிணிகள் அனைத்தும் தீரும் என்பதையும் சாதாரண மனிதர்களி டம் சித்தர்கள் தெரிய வைத்தனர்.

இதனால் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்தது.

திருவண்ணாமலையில் கிரிவலம் வந்தா ல் என்னென்ன பலன்களைப் பெறலாம் என்று அருணாசல புராணம் உள்பட பல் வேறு புராண ங்களில் குறிப்பிடப்பட்டுள் ளது. மலையை சுற்றி நடந்து வந்த சிவந்த பாதங்களை கண்டாலே நாலாவித பாவங் களும் காணாமல் போய்விடும்.

கிரிவலம் வருபவர்களின் காலடி தூசு ஒரு வரது உடலில் பட்டாலே அவரை பிடித்த தோஷங்கள் அனைத்தும் நீங்கி விடும் என்று அருணாசல புராணத்தில் குறிப்பி டப் பட்டுள்ளது.

திருவண்ணாமலையில் கிரிவலம் வரவே ண் டும் என்று சொன்னாலே பிரம்மஹத் தி தோ ஷம் தீர்ந்து விடும்.

ஒரு அடி எடுத் து வைத்தால் யாகம் செய்த பலன்கள் கிடைக்கும். இரண்டடி எடுத்து வைத்தால் ராஜ பதவியை பெறக்கூடி ய யாகம் செய்த பலன் வரும். மூன்றடி எடுத்து வைத்தால் தானம் செய்த பலன் கிடைக்கும். நான்குஅடி எடுத்து வைத்தால் அஷ்டாங்க யோக பலன்கள் கிடைக்கும்.

கிரிவலம் வந்து சிவபெருமானிடம் பார்வ தி தேவி பலன் பெற்றது ஒரு பவுர்ணமி தினமா கும். எனவே பவுர்ணமியில் கிரிவ லம் செல்வ து கூடுதல் பலன்களை தருவ தாக கருதப்படு கிறது. பொதுவாக திருவ ண்ணாமலையில் எந்த தினத்திலும் எப்போது வேண்டுமானா லும் கிரிவலம் செல்லலாம்.

நேரம்-காலம் கிடையாது. நள்ளிரவில் கூட கிரிவலம் செல்பவர்கள் இருக்கிறார்கள். ஒவ்வொரு நாள் கிரிவலத்துக்கும் திருவ ண் ணாமலை மலையானது ஒவ்வொரு விதமாக காட்சி தரும். அதை கிரிவலம் செல்பவர்கள் உன்னிப்பாக பார்த்தால் தெரிந்து கொள்ளலாம்.

ஆதி காலத்தில் திருவண்ணாமலையில் வருட பிறப்பு, மாதபிறப்பு, பவுர்ணமி, அமா வாசை, கார்த்திகை நட்சத்திரம், சிவராத்திரி நாட்களி ல் கிரிவலம் செல்வ தை வழக்கத்தில் வைத்தி ருந்தனர். பின் னர் அமாவாசைக்கு கிரிவலம் செல்பவர்க ளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது.

ஆனால் சந்திரனின் முழு சக்தியும் பவுர் ணமி தினத்தன்றுதான் வெளிப்படுகிறது என்பதை மக்கள் தெரிந்து கொண்ட பிறகு பவுர்ணமியில் கிரிவலம் செல்வது அதிகரித்துள்ளது.

ஆனால் திருவண்ணாமலையை பொறுத் த வரை 24 மணி நேரமும் கிரிவலம் நடக்கி றது. மலையைச் சுற்றி, எப்போதும், யாரா வது ஒருவர் கிரிவலம் சென்று கொண்டு இருப்ப தை பார்க்கலாம்.

கிரிவல பாதை மொத்தம் 14 கிலோ மீட்டர் தூரம் கொண்டது. கிரிவல பாதையில் உள்ள அஷ்டலிங்கம் ஆலயங்கள் உள்பட அனைத்து ஆலயங்களையும் தரிசனம் செய்தபடி வந்தால் கிரிவலத்தை முடிப்பத ற்கு சுமார் 4 மணி நேரம் ஆகலாம்.

கிரிவலப் பாதையில் நூற்றுக்கும் மேற்பட் ட ஆலயங்கள் தவிர மடங்கள், ஆசிரமங்க ள், தரிசனப் பகுதிகள், சித்தர்களின் ஜீவ சமாதி கள் என பல்வேறு இடங்கள் உள்ளன.

அடி அண்ணாமலை, இடுக்குப் பிள்ளை யாரும் இருக்கிறார்கள். இப்படி கிரிவலப் பாதையில் உள்ள அனைத்து இடங்களுக் கும் சென்று வருவதாக இருந்தால் குறை ந்தது 5 மணி நேரமாகி விடும்.

அப்படி இல்லாமல் கிரிவலத்தை மட்டும் மேற் கொண்டால் 3 மணி நேரத்தில் கிரிவ லத்தை நிறைவு செய்து விடலாம். ஆனால் அதற்காக வேக வேகமாக கிரிவல பாதை யில் நடக்க கூடாது.

பஸ்சை பிடிக்க வேண்டும் என்ற எண்ணத் தில் அரக்க பரக்க கிரிவலம் செல்லக் கூடாது. டி.வி. சீரியல் பற்றி பேசிக்கொ ண்டோ அல்லது ஊரில் யார் குடியைக் கெடுக்கலாம் என்று பேசிக் கொண்டோ அல்லது யார் பற்றியாவது புறம் பேசிக் கொண்டோ கிரிவலம் செல்லக் கூடாது.

கிரிவலம் வருவது என்பது சூட்சுமமாக பல நன்மைகளை நமக்கு தரக்கூடியது என்ப தை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.

கிரிவல பாதையில் உள்ள நம் கண்களு க்கு தெரியாத சித்தர்கள் அனைவரும் நம் மை ஆசீர்வதிக்க தயாராக இருக்கிறார்க ள் என்பதை நம்ப வேண்டும். இந்த பலன் களை எல்லாம் பெற வேண்டுமானால் மனம் ஒரே சிந்தனையில் ஈசனை மட்டும் நினைத்தபடி நமசிவாய என்று உதடுகள் உச்சரித்தபடி வேறு எந்த செயல்களிலும் ஈடுபடாமல் கிரிவலம் மேற்கொள்ள வேண்டும்..

அது மட்டுமல்ல, எந்த தினத்தில் நாம் கிரிவல ம் செல்ல வேண்டும்? கிரிவலம் செல்லும் போது நாம் எப்படி நடந்து கொள் ள வேண்டும்? எந்தெந்த இடங்களில் வண ங்க வேண்டும்? எந்தெந்த இடங்களில் மலையை பார்த்து கும்பிட வேண்டும்?

என்றெல்லாம் வரைமுறை களும், ஐதீகங் களும் உள்ளன. இதை பற்றி முழுமையாக தெரிந்து கொண்டு கிரிவலம் சென்று வந் தால்தான் நீங்கள் கிரிவலம் மேற் கொள்வ தற்கான முழுபலன்களும் கிடைக்கும்.

Wednesday, June 15, 2022

பெண்களுக்கான ஆன்மீக குறிப்புகள் :

 பெண்களுக்கான ஆன்மீக குறிப்புகள் :


பெண்கள் பின்பற்ற வேண்டிய ஆன்மீக சாஸ்திர குறிப்புகள் சில உள்ளன. அவற்றை பின்பற்றி நடந்தால் சுபமங்களம் உண்டாகும்.


பெண்கள் எப்பொழுதும் மூன்று இடங்களில் குங்குமம் இட வேண்டும். மாங்கல்யம், நெற்றி, முன் வகிடு மத்தி. இது தெய்வீகப் பண்புகளைப் பெற்றுத் தரும்.


குங்குமப் பொட்டு வைத்தாலே உடலுக்கு நல்லது. தாலியை நூலாகிய சரடில் கோர்த்து அணிவது தான் சிறப்பு. அத்துடன் தேவையான சங்கிலி முதலியவற்றை அணியலாம். நூலாகிய தாலிச்சரட்டில் பஞ்ச பூத சக்திகள் அதிகம்.


தாலி என்பது ஒரு மங்கலப் பொருள். எனவே அணிகலன்களைப் போல் தினமும் அதைக்கழற்றி வைப்பதும் மறுநாள் எடுத்து அணிந்து கொள்வதும் தவறு. அது எப்பொழுதும் கழுத்திலேயே இருக்க வேண்டும்.


காலையில் அடுப்பு பற்ற வைக்கும்பொழுது அக்கினியை வணங்கி இன்று சமைக்கும் உணவினை அனைவரும் உண்டு ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் எனப் பிரார்த்தனை செய்து அடுப்பைப் பற்றவைக்க வேண்டும்.


மாலை வேளையில் அரசமரத்தை வலம் வரக்கூடாது. கோயிலுக்குக் கொண்டு செல்லும் எண்ணெயை கோயில் விளக்கிலே தான் ஊற்ற வேண்டுமே தவிர வேறு ஒருவர் ஏற்றி வைத்த விளக்கில் ஊற்றக்கூடாது.


முந்தானையைத் தொங்க விட்டு நடக்கக்கூடாது. இழுத்து சொருக வேண்டும். முந்தானை ஆடினால் குடும்பமும் ஆடிவிடும் என்பார்கள்.


குத்துவிளக்கு ஏற்றும்போது ஒரு திரி மட்டும் போடக்கூடாது. இரு திரி இட்டு ஒரு முகம் ஏற்ற வேண்டும்.


தெற்கே பார்த்து நின்று கொண்டு கோலம் போடக்கூடாது. போடுகின்ற கோடு தெற்கு பக்கமாய் முடியக்கூடாது.


ஆலயத்தில் சுவாமி கும்பிடும்போது பின்னங்கால்கள் இரண்டையும் சேர்த்துக் கொண்டு முன்நெற்றி தரையில் தொட உடல் முழுவதும் தரையில் படுமாறு விழுந்து வணங்க வேண்டும்.


பெருமாள் கோயிலில் தீர்த்தம் வாங்கும்போது இடது கைக்கும், வலது கைக்கும் நடுவில் முந்தானைத் துணியை வைத்து தீர்த்தம் வாங்க வேண்டும்.


சுமங்கலிப் பெண்கள் குளிக்கும்போது தெற்கு முகமாக உட்கார்ந்து சிறிது மஞ்சளைத் தேய்த்து முகத்தில் பூசிக் கொண்டு தான் குளிக்க வேண்டும்.


ஆடி மாத செவ்வாய்க்கிழமைகளில் பெண்கள் எண்ணெய் தேய்த்து, மஞ்சள் பூசி, குளித்து அம்மனை வழிபட்டால் மாங்கல்ய பலம் கூடும் என்பது ஐதீகம்.

Featured Post

உணவு முறைல முடிஞ்ச அளவு மாற்றம் பண்ணுங்க.

  நாம ஏன் சோணகிரியா இருக்கோம்? தொத்த பாடியா இருக்கோம்? பழங்கால மக்களுக்கு மட்டும் எப்படி திமில் கொண்ட தோளும், மதர்த்த நெஞ்சும் வந்தது? உணவு ...