Thursday, November 10, 2022

கடவுள், உயிர்கள், மற்றும் உலகம் பற்றி நம் தமிழகத்தில் தோன்றிய ஞானிகளின் கருத்து.

 கடவுள், உயிர்கள், மற்றும் உலகம் பற்றி நம் தமிழகத்தில் தோன்றிய ஞானிகளின் கருத்து.

 உலகில் மூன்று பொருட்கள் உள்ளன. 

1) இறைவன் 

2) உயிர்கள் 

3) மாயை 

பிரபஞ்சம் முழுவதற்கும் இருப்பது ஒரே இறைவன் தான்.

உயிர்களில் 84 லட்சம் வகைகள் இருக்கின்றன. ஒவ்வொரு வகையிலும் எண்ண முடியாத அளவு உயிர்களின் எண்ணிக்கைகள் இருக்கின்றன. இந்த 84 லட்சம் உயிர் வகைகளை ஏழு பெரும் பிரிவுகளாகவும்  பிரிக்கலாம்.

1 தேவர் 

2) மனிதர் 

3) மிருகங்கள்

4) பறவைகள்

5) ஊர்வன 

6) நீர் வாழ்வன

 7)தாவரங்கள் 

மாயை என்னும் பொருள் ஒன்றுதான்.

 அதை இறைவன், தான் விரும்பும் வண்ணம் ஆக்க முடியும்.  அண்ட சராசரங்களில் உள்ள உயிரற்ற பொருட்கள் அனைத்தும் ஒரே பொருளான மாயையில் இருந்து இறைவன் உருவாக்கியது தான். இறைவன், உயிர்களுக்கு அவரவர் அடைந்துள்ள பக்குவ நிலைக்கு ஏற்ப உடலைத் தருகிறான். அந்த உடலை வைத்து தன் ஆயுட்காலத்தில் அவை வினையாற்றுகின்றன. அதனால் அவை அனுபவம் பெற்று பக்குவம் அடைந்து முன்னேறுகின்றன. அவைகள் அடைந்துள்ள முன்னேற்றத்திற்கு ஏற்ப அடுத்த பிறவியில் அவற்றிற்கு உடலை இறைவன் வழங்குகிறான். ஒவ்வொரு பிறவியிலும் அனுபவம் பெற்று முன்னேறி இறுதியில்  இறைவனுடன் ஒன்றியிருக்கின்றன. இவ்வாறு உயிர்கள் முன்னேறி இறைவனுடன் ஒன்ற வேண்டும் என்பதுதான் இறைவனின் விருப்பம் ஆக இருக்கிறது.  ஆனால், உயிர்கள் தன் புலன் உணர்வால் கிடைக்கும் இன்பங்களில் மயங்கி அதிலேயே மூழ்கி முன்னேற்ற பாதையில் செல்லாமல் பின்தங்கி விடுகின்றன. அவைகள் இறைவடி சேரும்   வரை அவற்றிற்கு இறைவன் மீண்டும் பிறவிகளையும் அந்தந்தப் பிறவிக்கு ஏற்ப உடலையும் வழங்குகிறான். மனிதர்கள்  இந்தப் பிறவிச்சுழல் என்ற கடலில் இருந்து மீள முடியாமல் மூழ்கிக் கிடக்கிறார்கள்.அவர்கள் கடைத்தேறுவதற்கான  வழியைத்தான் திருவள்ளுவர் தம் கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் உள்ள பத்தாவது பாடலில் கூறுகிறார்.

 பிறவிப் பெருங்கடல் நீந்துவர்

 நீந்தார் இறைவன் அடிசேரா தார்.

இறைவனுடைய திருவடிகளை நினைந்து போற்றிக் கொண்டு இருப்பவர்கள் பிறவியாகிய பெருங்கடலைக் கடப்பார்கள்;

மற்றவர்கள் கடக்க முடியாது.


அன்புச் சொந்தங்களே,


இந்தக் கருத்துக்கள் சைவ சித்தாந்தக் கருத்துக்கள் ஆகும்.

உலகில் எந்த சமயத்திலும் சொல்லப்படாதது.

சென்னையில் திருவான்மியூரில் மருந்தீஸ்வரர் என்ற ஒரு பழமையான சிவாலயம் இருக்கிறது.அங்கே, வருடத்தில் 365 நாட்களும் சைவ அதாவது சிவ வழிபாடு பற்றிய சொற்பொழிவு நடைபெறுகிறது.நான் சென்னையில் இருக்கும் போது மன அமைதிக்காக அவ்வப்போது இந்த சொற்பொழிவுகளைக்  கேட்கப் போவது உண்டு.அவ்வாறு கேட்கும்போது கிடைத்த ஞானத்தை வைத்துத்தான் இந்த கருத்துக்களை பதிவு செய்திருக்கிறேன்.இது ஒரு ஜனரஞ்சகமான விஷயம் அல்ல.எல்லாராலும் பொறுமையாகப் படிக்க முடியாது.ஆனாலும் இதை நீக்காமல் வைத்திருந்து சிலநாட்கள் திரும்பத்திரும்பப் படியுங்கள்.


உயிர்களும் உலகமும் டார்வின் கூறியபடி தானாகப் பரிமாண

வளர்ச்சியால் தோன்றவில்லை.

No comments:

Featured Post

உணவு முறைல முடிஞ்ச அளவு மாற்றம் பண்ணுங்க.

  நாம ஏன் சோணகிரியா இருக்கோம்? தொத்த பாடியா இருக்கோம்? பழங்கால மக்களுக்கு மட்டும் எப்படி திமில் கொண்ட தோளும், மதர்த்த நெஞ்சும் வந்தது? உணவு ...