Thursday, March 31, 2022

நம் வம்சம் வாழையடி வாழையாய் வளர அமாவாசையில் குலதெய்வ வழிபாடு !

 நம் வம்சம் வாழையடி வாழையாய் வளர அமாவாசையில் குலதெய்வ வழிபாடு !

இன்று பங்குனி 17, மார்ச் 31/3/2022
சிறப்பு: அமாவாசை விரதம்
வம்சத்தை வாழையடி வாழையாய் வளர செய்யும் குல தெய்வத்தையும் அமாவாசை நாளில் வழிபடுவது சிறப்பு.ஒவ்வொரு அமாவாசைக்கும் இந்த பிரபஞ்சம் முழுவதும் விசேஷமான சக்திகள் நிறைந்து காணப்படும் என்பது நியதி.அமாவாசையில் வழிபடும் வழிபாட்டு முறைகள் விசேஷமான பலன்களைத் கொடுக்கின்றன.
பங்குனி அமாவாசையில் குலதெய்வ கோவிலுக்கு சென்று வழிபடுவதும் அல்லது அவருடைய படத்தை வீட்டில் வைத்து தூப, தீப, ஆரத்தி காண்பித்து வழிபடுவதும் குலதெய்வ சாபத்தையும், தோஷத்தையும் போக்கும்.
அமாவாசையில் உணவேதும் உண்ணாமல் தினமும் மந்திரங்களை உச்சரித்து விரதமிருந்து வழிபட்டு வந்தால் சகல சௌபாக்கியங்களும் உண்டாகும் என்கிறது சாஸ்திரம். அமாவாசை விரதம் இருக்க சிறந்த நாளாக கருதப்படுகிறது. அன்றைய நாளில் பிரம்ம முகூர்த்தத்தில் எழுவது என்பது விசேஷ சக்திகளை கொடுக்கும். இது உங்களிடம் இருக்கும் கெட்ட சக்திகளை விலகி ஓட செய்யும்.
வீட்டை சுத்தம் செய்ய அன்றைய நாளில் தண்ணீருடன் சிறிது அளவு கல் உப்பு சேர்த்து துடைத்து எடுக்கலாம். காலை, மாலை இருவேளையும் பூஜை அறையில் விளக்கேற்றி வைக்க வேண்டும்.
அமாவாசை நாளில் விரதம் இருப்பவர்கள், விரதம் இல்லாதவர்கள் என்று யாராக இருந்தாலும் புலால் உணவைத் தவிர்ப்பது நல்லது. பூண்டு, வெங்காயம் போன்ற பொருட்களை சேர்த்த சைவ உணவை சேர்த்து தவிர்க்க வேண்டும். அமாவாசை தினத்தில் சாப்பிட கூடாத பொருட்கள் இது ஆகும்.
குலதெய்வ அருள் பெறவும் அமாவாசை நாளில் குலதெய்வ வழிபாடு செய்வது நல்லது.வீட்டில் நேர்மறை ஆற்றல்கள் அதிகரிக்க அமாவாசை நாளில் மந்திர ஸ்லோகங்களை உச்சரிப்பதும் அல்லது ஒலிக்க விடுவதும் செய்ய வேண்டும்.
உங்களுக்கு தெரிந்த சிறு சிறு மந்திரங்களை கூட அமாவாசை நாளில் உச்சரித்து பாருங்கள். நல்ல பலன்கள் எல்லாம் கிடைக்கும். பொன், பொருள் சேரவும், சகல சம்பத்தும் கிடைக்கும்.
அமாவாசை நாளில் முன்னோர்களின் ஆசி பெறுவது, குல தெய்வத்தை வணங்குதல், தினமும் வீட்டில் விளக்கேற்றி வழிபடுவதால், வீட்டில் இருக்கும் தரித்திர நிலை நீங்கும். திருமண தாமதம், ஏழ்மை விலகி உங்கள் அனைத்து முயற்சிக்கும் நல்ல வெற்றி ஏற்படும்.
No photo description available.



No comments:

Featured Post

உணவு முறைல முடிஞ்ச அளவு மாற்றம் பண்ணுங்க.

  நாம ஏன் சோணகிரியா இருக்கோம்? தொத்த பாடியா இருக்கோம்? பழங்கால மக்களுக்கு மட்டும் எப்படி திமில் கொண்ட தோளும், மதர்த்த நெஞ்சும் வந்தது? உணவு ...