Thursday, March 31, 2022

மடிச்சங்கு

 மடிச்சங்கு

சங்குகள் பலவகைப்படும்; அவற்றுள் வலம்புரிச்சங்கு உயர்ந்ததாகும்; அதனை விட ஆயிரம் மடங்கு உயர்ந்தது '' மடிச்சங்கு ''. இச் சங்கின் மேற்புறம் விரல் போன்ற நீண்ட நாளம் என்ற அமைப்புகள் இருக்கும்.
இவற்றில் நீண்ட குழல் போன்ற துவாரங்களும் இருக்கும். இச்சங்கில் பாலை ஊற்றினால், அது மழை போன்று மெல்லிய தாரையாக நாளத்தின் வழியே வெளிப்படும். அப்போது அந்தச் சங்கு, பார்ப்பதற்கு பசுவின் மடி தோன்றும், அதன் மேலுள்ள நாளங்கள் பசுவின் மடிக்காம்புகள் போன்றும் காட்சியளிக்கும்.
இச்சங்கை சிவலிங்கத்தின் திருமுடி மேல் பிடித்துக் கொண்டு அதில் பாலை வார்த்து அபிஷேகம் செய்வார்கள். இப்படி அபிஷேகம் செய்யும் காட்சி, பசு தானே இறைவன் மீது பாலைப் பொழிவது போல இருக்கும் ! அப்போது அமிர்தவர்ஷிணி ராகம் இசைப்பர் ; பசுபதி திருவிருத்தம் ஓதுவர்; இச்சங்கை '' கோமடிச்சங்கு '' என்றும் கூறுவர் ; இதைக் கொண்டு இறைவனை முழுக்காட்டுவது, கோடி மடங்கு நன்மை தரும் என்பர் ;
வலம்புரிச் சங்கினை திருமகளாக போற்றுவதைப் போல , மடிச்சங்கினை பார்வதி தேவியாக போற்றுகின்றனர் !
No photo description available.


No comments:

Featured Post

உணவு முறைல முடிஞ்ச அளவு மாற்றம் பண்ணுங்க.

  நாம ஏன் சோணகிரியா இருக்கோம்? தொத்த பாடியா இருக்கோம்? பழங்கால மக்களுக்கு மட்டும் எப்படி திமில் கொண்ட தோளும், மதர்த்த நெஞ்சும் வந்தது? உணவு ...