Thursday, September 22, 2022

தாத்தாவும் பாட்டியும் சிரிக்கிறார்கள்

தாத்தாவும் பாட்டியும் சிரிக்கிறார்கள்......*
😁😁😁😁😁😁😁😁

*கரியையும் சாம்பல்தூளையும் கொடுத்து*
_பல் விளக்கச்சொன்னபோது_ ,

*பட்டிக்காடு* என *இளித்த பற்கள்*
*இன்று வேரற்று போனபோது*...

*ஓடி நின்றேன்* *சர்வோதயா காதிகிராப்ட்*.. *பல்பொடி வாங்க*...

தாத்தாவும் பாட்டியும்
சிரிக்கிறார்கள்...

*வெந்தயமும் சிகைக்காயும்*
*வடிதண்ணீரில் அரைத்து*
*தேய்த்துக்குளி என்றபோது* ,

*பித்துக்குளிகள்* என *எள்ளி நகையாடி*... *சிக் ஷாம்புவை* *சிக்கென பிடித்தும்*

*இன்று வெண் கேசம்* *வந்தபின்பு* *ஓடுகின்றேன்*
_சீகைக்காய் வாங்க_......

தாத்தாவும் பாட்டியும்
சிரிக்கிறார்கள்...

*பாசிப்பயறோ*
*கடலை மாவோ*
*அரைத்துக்குளி* என்ற போது ,

*லிரில்* ,
*லக்ஸ் சினிமா* *நட்சத்திரங்களின்*
*அழகு சோப்*
என *கைகாட்டிய* *கட்டிகளை*
*எல்லாம் போட்டு*,,
*தோள் சுருங்கி* *வயோதிகம் தெரிந்த பின்பு*..

*ஓடுகின்றேன் பயத்த மாவு அரைக்க*....

தாத்தாவும் பாட்டியும்
சிரிக்கிறார்கள்.....

*இருமலோ தும்மலோ*
*வந்தபோது*...
*துளசி, தூதுவளை, சுக்கு, மிளகு போட்டு* *கசாயம் தந்தபோது* ,

*முகத்தைச் சுளித்து* *காஃப் சிரப் குடித்து* *தைராய்டு வரை சென்ற பின்பு* ,

*ஓடுகின்றேன் துளசி , தூதுவளைச்செடி வளர்க்க*.....

தாத்தாவும் பாட்டியும்
சிரிக்கிறார்கள்.....

*வயிற்று வலி என்றபோது*
*வெறும் வயிற்றில்* *வெந்தயக்களியோ*,, *கற்றாழைச்சாறோ* *கொண்டு வந்து தந்தபோது*..

*சீறித் தூக்கி எறிந்து* ,
*ப்ருஃபென்னும்* *பெயின்கில்லரும்* *போட்டு*
*கருப்பை பழுதடைந்த பின்பு* ,
_ஓடுகின்றேன் கற்றாழை வளர்க்க_ ......

தாத்தாவும் பாட்டியும்
சிரிக்கிறார்கள்.....

*நல்லெண்ணெய் செக்கில் ஆட்டி*
*மணமாய் தந்தபோது* ,

*சன்ஃபிளவர் ஆயில்* *பார்*
*முகம் காட்டும் தூய்மை* எனக்கூறி *முகத்தில் அறைய,*
*பதிலுரைத்துவிட்டு*,

*இன்று உடல் நோய்க்கு* *ஓடுகின்றேன் செக்கு நோக்கி* .....

தாத்தாவும் பாட்டியும்
சிரிக்கிறார்கள்....

*மண்பானை சமையல்*
*மண்பானை குளிர் நீரை*
எல்லாம் மாற்றி விட்டு ,

*ஆர்வோ வாட்டர் என* *புழு பூச்சி கூட வாழத்தகுதியற்ற* *நீரைக்குடித்து குடித்து*
*சவமான பின்பு ஓடுகின்றேன்*

*மண்பானை வாங்க*.....

தாத்தாவும் பாட்டியும்
சிரிக்கிறார்கள்......

*படித்த தலைமுறை எனும் நாகரீகத்தில் திளைத்து*..

*குருகுலக்கல்வியை*
*கோடிக்கணக்கான ரூபாய்*
*கல்வியாக்கி* ,

*கொல்லைப்புற துளசியின்*
*வைத்தியம் மறந்து* ,
*மாடிகளில் குளீருட்டப்பட்ட அறைக்கு*
*இலட்ச இலட்சமாய்க்கொட்டி* 
*நடைப்பிணமாக வாழும்*
*வாழ்வில் எங்கே சுதந்திரம்*
*ஏது சுகாதாரம்* என்று அலைகிறேன்.....

தாத்தாவும் பாட்டியும்
சிரிக்கிறார்கள் .......

*மூத்தோர் சொல்லும்*
*முது நெல்லிக்காயும்*
*முன்னே கசக்கும்* ,
*பின்னே இனிக்கும்*

வாழ்வு சிறப்பாக அமைய தெய்வீக ரகசியங்கள்!

வாழ்வு சிறப்பாக அமைய தெய்வீக ரகசியங்கள்!

சிவன் கோவில் வன்னி மரம், வில்வ மரத்தை 21 முறை வலம் வந்து நமது குறைகளைக் கூற, நல்ல பலன் கிடைக்கும்.

தீர்ப்புகள் சாதகம் ஆகும். இம்மரங்களுக்கு நாம் கூறுவதை கேட்கும் சக்தி உள்ளதாக ஒரு ஐதீகம் உண்டு.

இரண்டு சர்ப்பங்கள் இணைந்தது போல் இருக்கும் நாகராஜா சிலைக்கு, வெள்ளிக்கிழமை காலை [10.30 - 12.00 ] ராகு காலத்தில், மஞ்சள் குங்குமம் வைத்து, செவ்வரளிப் பூ சாற்றி, அபிசேகம் செய்து நெய்தீபம் ஏற்றி, தம்பதிகள் பெயருக்கு அர்ச்சனை செய்தால் தம்பதிகள்

ஒற்றுமையாக, அன்னியோன்யமாக வாழ்வார்கள்:

குடும்பத்தில் தாங்க முடியாத கஷ்டங்கள் வந்தால், மன அமைதி குறைந்தால் , அருகில்உள்ளஆலயங்களில் தீபம் ஏற்றி வழிபடுவது ரிஷிகள் சொல்லிய பரிகாரம்.

கொடிய கடன் தொல்லைகளுக்கு ஸ்ரீ யோக நரசிம்மரையும் , மற்ற கடன் தொல்லைகளுக்கு ஸ்ரீ லட்சுமி நரசிம்மரையும் வழிபடுவது நல்ல பரிகாரம் ஆகும். ஸ்ரீநரசிம்மரின் எந்த திருக்கோலத்தை தரிசித்தாலும் கடன் தொல்லைகள், பில்லி, சூனியம், ஏவல், திருஷ்டி, திருமண தடை விலகி நன்மை பெறலாம்.

ஆலய திரி சூலத்தில் குங்குமம் இட்டு, எலுமிச்சை பழம் குத்தி வழிபட, திருஷ்டி, செய்வினை தோஷம் நீங்கும்.

வெள்ளெருக்கு விநாயகரை வீட்டு அறைகளில் கைக்கு எட்டாத உயரத்தில் வைத்து இருந்தால், ஏதும் பூதகண சேஷ்டைகள் இருந்தால் நின்று விடும்.

சக்கரத்தாழ்வார் சந்நிதியில் நெய்தீபம் ஏற்றி 12 முறை, 48 நாட்கள் சுற்றி வழிபட தொழில், வழக்கு சாதகமாதல், பில்லி, சூனியம், ஏவல் நீங்கும். 21 செவ்வாய்க்கிழமைகளில் நெய்தீபம் ஏற்றி வழிபட கொடுத்த கடன் வசூல் ஆகும்.

கொடுத்த கடன் வசூல் ஆக பைரவர் சந்நிதியில் தொடர்ந்து 8 செவ்வாய் கிழமைகளில் நெய்தீபம் ஏற்றி சகஸ்ர நாம அர்ச்சனை செய்ய வேண்டும்.

ஜாதகப்படி சனிபகவானின் பாதிப்பு குறைய, திங்கட்கிழமைகளில் சிவபெருமானுக்கு, பால் அபிசேகம் செய்து, அர்ச்சனை செய்ய வேண்டும். சனிக் கிழமைகளில் சனி பகவான் சந்நிதியில் தேங்காய் உடைத்து, இரண்டு மூடிகளிலும் நல்லெண்ணெய் ஊற்றி, எள்ளு முடிச்சு தீபம் ஏற்றவும். சிவன் கோயிலில் கால பைரவரையும், விஷ்ணு கோயிலில் சக்கரத்தாழ்வாரையும் வழிபட செய்வினை தோஷம் நெருங்காது.

வெள்ளி கிழமைகளில் நவகிரக சுக்கிரனுக்கு அகல் விளக்கில் கற்கண்டு போட்டு, அதில் நெய் தீபம் ஏற்றி வழிபட, கணவன் - மனைவி கருத்து வேறுபாடுகள் நீங்கும்.

பிரதோஷ காலத்தில், ரிஷபா ரூட மூர்த்தியாய், மகேசனை தேவியுடன் வழிபடுவோர் 1000 அஸ்வமேத யாகங்களை செய்த பலனை பெறுவார்கள். அதிலும் ஈசானிய மூலையில் ஈஸ்வரனுக்கு காட்டப் படும் தீபாரதனையை பார்த்தால் எல்லா நோய்களும், வறுமையும் நீங்கும்

மாதாமாதம் உத்திர நட்சத்திரத்தன்று சிவனுக்கு தொடர்ந்து 11 மாதங்கள் பால் அபிஷேகம் செய்தால், விரைவில் திருமணம் நடை பெறும்.

கலியுகத்தில் காரிய சித்திக்கு துர்க்கை வழிபாடு அதுவும் இராகு காலத்தில், செய்வது சிறந்தது. இராகு காலத்தில் கடைசி 1/2 மணி நேரமான அமிர்தகடிகை நேரமே சிறப்பான பரிகார நேரம். நெய்விளக்கு ஏற்றவும் உகந்த நேரம். ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30-6.00 மணிக்குள் துர்க்கை க்கு விளக்கு ஏற்றி வழிபட நாம் வேண்டிய பிராத்தனை கள் நிறைவேறும்.

வெள்ளிக்கிழமை காலை 10.30 -12.00 ராகு காலத்தில் துர்க்கைக்கு தாமரை தண்டு திரி போட்டு நெய்விளக்கு ஏற்றி வழிபட, தெய்வ குற்றம், குடும்ப சாபம் நீங்கும். ஹஸ்த நட்சத்திரத்தன்று துர்க்கைக்கு சிகப்பு பட்டு துணி சாற்றி, சிகப்பு தாமரையை பாதத்தில் வைத்து 27 எண்ணிக்கை கொண்ட எலுமிச்சை பழ மாலை சாற்றி, குங்கும அர்ச்சனை செய்து, அந்த குங்குமத்தை நெற்றியில் வைத்து வர உடனே திருமணம் நடை பெறும்.

சங்கடஹர சதுர்த்தியில் விநாயகருக்கு அருகம் புல் மாலைசாற்றி, அர்ச்சனை செய்து வழிபட, சங்கடங்கள் தீரும்.

சங்கடஹர சதுர்த்தியில் விநாயகருக்கு எருக்கம் திரி போட்டு விளக்கு ஏற்றி வழிபடபிள்ளைகள் கல்வியில் முன்னேறுவார்கள்.

செவ்வாய்க்கு அதிபதியான முருகப் பெருமானுக்கு செவ்வாய் தோறும் நெய்விளக்கு ஏற்றி வழிபடமூன்று மாதத்தில் வேலை கிடைக்கும்.

ருத்ராட்சம், சாளக்கிராமம், துளசி,வில்வம் உள்ள இடத்தில் இருந்து சுமார் 10 கி.மீ தூரத்திற்கு செய்வினை அணுகாது.

புத்திர பாக்கியம் இல்லாதோர் 6 தேய்பிறை அஷ்டமிகளி ல் காலபைரவருக்கு சகஸ்ர நாம அர்ச்சனை செய்தால் விரைவில் புத்திர பாக்கியம் கிட்டும்.

பெருமாள் கோயிலில் உள்ள கருடாழ்வார் சந்நிதியை சுற்றி வந்து நெய்விளக்கு ஏற்றி வழிபடசர்ப்ப தோஷம், கால சர்ப்ப தோஷம் நீங்கும்.

Monday, September 19, 2022

எந்த நிலையிலும் இறைவனை நம்பு!இறைவன் சிலவற்றை தாமதமாக கொடுப்பான்

எந்த நிலையிலும் இறைவனை நம்பு!இறைவன் சிலவற்றை தாமதமாக கொடுப்பான்.ஆனால் சிறந்ததையே கொடுப்பான்!

படித்ததில் பிடித்தது!

மும்பையில், இந்து ஒருவர் மிகப் பெரும் செல்வந்தர்.. அவருக்கு மனைவி குழந்தைகள் என்று யாரும் இல்லை. பரோபகாரி.

ஒரு தீபாவளி பண்டிகையையொட்டி , தன்னிடம் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு மிக சிறந்த விருந்து ஏற்பாடு செய்து அவரே முன்னின்று அனைவரையும் உபசரிக்கிறார்..

விருந்து முடிந்தவுடன், ஒவ்வொருவருடைய இருக்கைக்கு முன் இரண்டு பெரிய வண்ண கவர்கள் வைக்கப் பட்டுள்ளன. ஒன்றில் பணம் என்றும் மற்றொன்றில் புனித ராமாயணம் புத்தகம் என்றும் எழுதி வைக்கபட்டுள்ளது..

நண்பர்களே, நீங்கள் எனக்காக உண்மையாக உழைக்கின்றீர்கள். உங்கள் வேலைக்கேற்ற அல்லது அதற்கும் அதிகமாகவே உங்களுக்கு சம்பளமும் கொடுத்து வந்துள்ளேன்.. என்னுடைய இந்த செல்வம் இறைவனால் அருளப்பட்டது.. என்னுடைய செல்வத்தை எவ்வாறு செலவழித்தேன் என்று இறைவனுக்கு பதில் சொல்ல கடமைபட்டுள்ளேன்...

உங்கள் முன் இரண்டு கவர்கள் உள்ளன. ஒன்றில் பணம், மற்றொன்றில் ராமாயணம் புத்தகம் இதில் ஏதாவது ஒன்றை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்...

முதலாமவர் தயங்கியவாறே சொன்னார்... முதலாளி, நான் ராமாயணத்தை மதிக்கிறேன். ஆனால் இப்போதைக்கு, நோய்வாய்பட்டிருக்கும் என் தாய்க்கு நல்ல சிகிட்சை அளிக்க வேண்டும். அதற்கு பணம் வேண்டும்.. பணம் என்று எழுதப்பட்ட கவரை எடுத்து கொண்டார்...

அடுத்தவர், என் ஓலை குடிசைக்கு பதில், சின்னதாக ஒரு கல் வீடு கட்ட வேண்டும்.. இந்த பணம் இருந்தால் என் கனவு வீடு கட்ட முடியும்... பணத்தை எடுத்து கொண்டு முதலாளிக்கு நன்றி சொல்லி நகன்றார்...

இப்படியே அடுத்தடுத்து ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணங்களோடு பணத்தை எடுத்து கொண்டனர்...

கடைசியாக, முதலாளியின் தோட்டத்தில் உள்ள கால்நடைகளை பராமரிக்கும் வாலிபனுடைய முறை...

அவன் பரம ஏழை. வயதான தாய். மனைவி மற்றும் பிள்ளைகள்...

அவன் பணத்தின் தேவை அறிந்தவன்.. அவனும் பணம் உள்ள கவர் அருகில் சென்று, அதை எடுத்து கையில் வைத்து கொண்டு முதலாளியிடம்...... 

என்னுடைய தேவைக்கு நான் எப்போது கேட்டாலும் நீங்கள் தரத்தான் போகிறீர்கள்.. மேலும் என் அம்மா அடிக்கடி சொல்வார்கள், ...... ஏழ்மை என்பதும் இறைவனால் அருளப்பட்டதே... நம் தேவைகளை நிறைவேற்றுபவனாக எல்லாம் வல்ல இறைவன் இருக்கின்றான்... மேலும், எங்கள் வீட்டில் ஒரு பழக்கம்...

தினசரி, அதிகாலை ராமாயணம் படித்தும் மாலையில் அந்தி சாயும் நேரத்தில் மகாபாரதம் படித்தும் என் அம்மா அதன் அர்த்தம் சொல்லுவார்கள். நாங்கள் சுற்றி அமர்ந்து அதை செவிமடுப்போம்...

....... என்று சொன்ன அந்த வாலிபன், எடுத்த பண கவரை எடுத்த இடத்திலேயே வைத்து விட்டு..... நான் இந்த புனிதமான ராமாயணம் புத்தகம் தேர்ந்தெடுக்கிறேன் என்று அதை எடுத்தான்....

சம்பவம் இதோடு முடியவில்லை நண்பர்களே,

புனித ராமாயணம் இருந்த பெரும் கவரை எடுத்தவன், முதலாளியிடம் நன்றி சொன்னவன்.. அதை திறந்து பார்க்கிறான்......ஆச்சர்யம்

ராமாயணம் இருந்த கவருக்குள் மேலும் இரண்டு கவர்கள்.... ஒன்றில், பணமும் மற்றொன்றில் செல்வந்தரின் சொத்துக்களின் ஒரு பகுதியை தானமாக எழுதி கையெழுத்திட்ட பத்திரம்...

யாருக்கு என்ற பெயர் மட்டும் எழுதப்படாமல் இருந்தது....

அந்த வாலிபன் மட்டும் இல்லை,, ஏனைய தொழிலாளர்களும் அதிர்ந்து போயினர்...

செல்வம் நிலையானது அல்ல... இன்றைய நிலை அப்படியே தலைகீழாக மாறும், இறைவன் நினைத்தால்...

மனிதர்களை செல்வத்தை கொண்டும் சோதிப்போம் என்ற இறைவனின் கூற்று எப்படி பொய்யாக முடியும்...

வாலிபன் தாய் சொன்னதை நம்பினான்... ஆம், அவள் சொல்லி கொடுத்தார்.....

இறைவனையே நம்பு.. அவனிடமே உன் தேவைகளை கேள்.. அள்ள அள்ள குறையாத செல்வத்தை அவன் வழங்குவான்..... அசைக்க முடியாத இறை நம்பிக்கை என்ற செல்வம் மற்ற செல்வங்களிலெல்லாம் சிறந்த செல்வம் அல்லவா.
 

Saturday, September 10, 2022

கொலஸ்ட்ரால் காரணமாக

இந்தியாவில் பெரும்பாலான இறப்புகள் அதிக கொலஸ்ட்ரால் காரணமாக மாரடைப்பால் ஏற்படுகின்றன என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
   உங்கள் சொந்த வீட்டில் எடை மற்றும் கொலஸ்ட்ரால் உள்ள பலரை நீங்கள் அறிந்திருக்க வேண்டும்.
   பல அமெரிக்க பெரிய நிறுவனங்கள் இந்தியாவில் இதய நோயாளிகளுக்கு கோடிக்கணக்கில் மருந்துகளை விற்கின்றன.
   ஆனால் உங்களுக்கு ஏதேனும் பிரச்சனை இருந்தால் ஆஞ்சியோபிளாஸ்டி செய்யுமாறு மருத்துவர் கூறுவார்.
   இந்த அறுவை சிகிச்சையில், மருத்துவர் இதயக் குழாயில் ஸ்டென்ட் எனப்படும் ஸ்பிரிங் ஒன்றைச் செருகுகிறார்.
   இந்த ஸ்டென்ட் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டது மற்றும் தயாரிப்பதற்கு வெறும் $3 (ரூ. 150-180) ஆகும்.
   இந்த ஸ்டென்ட் இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டு 3-5 லட்சத்திற்கு விற்று கொள்ளையடிக்கப்பட்டது.
   டாக்டர்கள் லட்சக்கணக்கில் கமிஷன் பெறுகிறார்கள் அதனால்தான் ஆஞ்சியோபிளாஸ்டி செய்ய திரும்பத் திரும்ப கேட்கிறார்கள்.
   கொலஸ்ட்ரால், பிபி அல்லது மாரடைப்புக்கு ஆஞ்சியோபிளாஸ்டி ஆபரேஷன் ஒரு முக்கிய காரணம்.
   யாரும் வெற்றி பெறுவதில்லை.
   ஏனென்றால் வசந்தம் என்பது மருத்துவர் இதயக் குழாயில் வைக்கும் பேனா போன்றது.
   சில மாதங்களுக்குள், அந்த கிணற்றின் இருபுறமும் அடைப்புகள் (கொலஸ்ட்ரால் மற்றும் கொழுப்பு) சேர ஆரம்பிக்கின்றன.
   இதைத் தொடர்ந்து இரண்டாவது மாரடைப்பு ஏற்படுகிறது.
   மீண்டும் ஆஞ்சியோபிளாஸ்டி செய்ய வேண்டும் என்கிறார் டாக்டர்.
   உங்கள் லட்சக்கணக்கான பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது, உங்கள் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
 
                  இப்போது படியுங்கள்
          அதன் ஆயுர்வேத சிகிச்சை
 
   இஞ்சி சாறு -
 
   இது இரத்தத்தை மெல்லியதாக்குகிறது.
   இது இயற்கையாகவே வலியை 90% குறைக்கிறது.
 
   பூண்டு சாறு
 
   இதில் உள்ள அல்லிசின் கொலஸ்ட்ரால் மற்றும் பிபியை குறைக்கிறது.
   இது இதயத்தின் தடையை நீக்குகிறது.
 
   எலுமிச்சை சாறு
 
   இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட், வைட்டமின் சி மற்றும் பொட்டாசியம் ஆகியவை ரத்தத்தை சுத்திகரிக்கும்.
   இவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
 
   ஆப்பிள் சாறு வினிகர்
 
   உடலில் உள்ள அனைத்து நரம்புகளையும் திறந்து, வயிற்றை சுத்தப்படுத்தி, சோர்வை நீக்கும் 90 வகையான பொருட்கள் இதில் உள்ளன.
 
            இந்த நாட்டுப்புற வைத்தியம்
          இதை இப்படி பயன்படுத்துங்கள்
 
   1- ஒரு கப் எலுமிச்சை சாறு எடுத்துக் கொள்ளுங்கள்;
   2- ஒரு கப் இஞ்சி சாறு எடுத்துக் கொள்ளுங்கள்;
   3- ஒரு கப் பூண்டு சாறு எடுத்துக் கொள்ளுங்கள்;
   4-ஒரு கப் ஆப்பிள் சைடர் வினிகரை எடுத்துக் கொள்ளுங்கள்;
 
   நான்கையும் கலந்து குறைந்த தீயில் சூடாக்கி, 3 கப் இருக்கும் போது, ​​ஆறவிடவும்;
   இப்போது நீங்கள்
   அதனுடன் 3 கப் தேன் சேர்க்கவும்
 
   இந்த மருந்தை தினமும் காலையில் வெறும் வயிற்றில் 3 தேக்கரண்டி எடுத்துக் கொள்ளுங்கள்.
   அனைத்து தொகுதிகளும் செல்கின்றன.
 
   இச்செய்தியை இயன்றவரை பரப்புமாறு கூப்பிய கரங்களுடன் கேட்டுக்கொள்கிறேன், இதன் மூலம் அனைவரும் இம்மருந்து மூலம் குணமடையலாம்;  நன்றி!
 
   மாலை பற்றி யோசி
   இரவு 7:25 ஆகிறது, அவர் தனியாக வீட்டிற்கு செல்கிறார்.
   அத்தகைய சூழ்நிலையில், திடீரென்று உங்கள் மார்பில் ஒரு கூர்மையான வலியை உணர்கிறீர்கள், அது உங்கள் கைகளை கடந்து செல்கிறது.
   தாடைகளை அடைகிறது.
   நீங்கள் அருகிலுள்ள மருத்துவமனையிலிருந்து உங்கள் வீட்டிற்கு 5 மைல் தொலைவில் உள்ளீர்கள், துரதிர்ஷ்டவசமாக நீங்கள் அங்கு செல்ல முடியுமா இல்லையா என்பது உங்களுக்குத் தெரியாது.
   நீங்கள் CPR இல் பயிற்சி பெற்றுள்ளீர்கள், ஆனால் அதை நீங்களே எவ்வாறு பயன்படுத்துவது என்று உங்களுக்குக் கற்பிக்கப்படவில்லை.
 
        மாரடைப்பை எவ்வாறு தவிர்ப்பது
               இந்த தீர்வுகள்
              
   பெரும்பாலான மக்கள் மாரடைப்பின் போது தனியாக இருப்பதால், உதவியின்றி சுவாசிப்பது கடினம்.
   அது அப்படியே நடக்கும்.  அவை சரிந்து 10 வினாடிகள் மட்டுமே நீடிக்கும்.
   அத்தகைய நிலையில், பாதிக்கப்பட்டவர் தீவிரமாக இருமல் மூலம் தன்னை இயல்பு நிலைக்கு கொண்டு வர முடியும்.  ஒரு பெருமூச்சு
   ஒவ்வொரு இருமலையும் முதலில் எடுக்க வேண்டும்
   மற்றும் இருமல் மிகவும் வலுவானது
   மார்பிலிருந்து துப்பியது.
   உதவி வரும் வரை
   இரண்டு விநாடிகளுக்கு செயல்முறையை மீண்டும் செய்யவும்
   அதனால் துடிப்பு சாதாரணமானது
   இதை செய்வோம்.
   நுரையீரலில் உரத்த சுவாசம்
   ஆக்ஸிஜனை உற்பத்தி செய்கிறது
   சத்தமாக இருமலும் ஒரு காரணம்
   அது இதயத்தை மூழ்கடிக்கச் செய்கிறது
   சீரான இரத்த ஓட்டம்
   ஓடு.
 

Friday, August 19, 2022

நீ எதையும் உன்னுடன் கொண்டு போக முடியாது...!

 ஒரு கிராமத்தில் வசித்து வந்த ஒரு மனிதன் திடீரென இறந்து போனான்...! 

அவன் அதை உணரும் போது கையில் ஒரு பெட்டியுடன் கடவுள் 

அவன் அருகில் வந்தார்...!

கடவுள் :

" வா மகனே...! 

நாம் கிளம்புவதற்கான 

நேரம் வந்து விட்டது...! " 

மனிதன் :

" இப்பவேவா ? 

இவ்வளவு சீக்கிரமாகவா ?

என்னுடைய திட்டங்கள்

என்ன ஆவது ? "  

கடவுள் :

" மன்னித்துவிடு மகனே...!

உன்னை கொண்டு 

செல்வதற்கான நேரம் இது...! "

மனிதன் :" அந்தப் பெட்டியில் என்ன உள்ளது ? "

கடவுள் :" உன்னுடைய உடைமைகள்...! "

மனிதன் :" என்னுடைய உடைமைகளா...!

என்னுடைய பொருட்கள், உடைகள், பணம் 

எல்லாமே இதில்தான்

இருக்கின்றனவா ? "

கடவுள் :" நீ கூறியவை அனைத்தும் 

உன்னுடையது அல்ல.. 

அவைகள் பூமியில் 

நீ வாழ்வதற்கு தேவையானது...! "

மனிதன் :" அப்படியானால் என்னுடைய நினைவுகளா ? "

கடவுள் :" அவை காலத்தின் கோலம்...! "

மனிதன் :" என்னுடைய திறமைகளா ? "

கடவுள் :" அவை உன் சூழ்நிலைகளுடன் சம்பந்தப்பட்டது...! "

மனிதன் :" அப்படியென்றால் என்னுடைய குடும்பமும் நண்பர்களுமா ? "

கடவுள் :" மன்னிக்கவும் !குடும்பமும் நண்பர்களும் நீ வாழ்வதற்கான வழிகள்...!"

மனிதன் :" அப்படி என்றால் என் மனைவி மற்றும் மக்களா ? "

கடவுள் :" உன் மனைவியும் மக்களும் உனக்கு சொந்தமானவர்கள் அல்ல...! அவர்கள் உன் இதயத்துடன் சம்பந்தப்பட்டவர்கள்.! "

மனிதன் :" என் உடலா ? "

கடவுள் :"அதுவும் உனக்கு சொந்தமானதல்ல...!உடலும் குப்பையும் ஒன்று...! "

மனிதன் :" என் ஆன்மா ? "

கடவுள் :"அதுவும் உன்னுடையது அல்ல...! அது என்னுடையது...! "

🍂 மிகுந்த பயத்துடன் கடவுளிடமிருந்து அந்தப் பெட்டியை வாங்கி திறந்தவன் 

காலி பெட்டியை கண்டுஅதிர்ச்சியடைகிறான்...!

🍂 கண்ணில் நீர் 

வழிய கடவுளிடம்" என்னுடையது என்று எதுவும் இல்லையா ? "என கேட்க...!

கடவுள் சொல்கிறார் :🍂 அதுதான் உண்மை !நீ வாழும் ஒவ்வொரு நொடி மட்டுமே உன்னுடையது...!வாழ்க்கை என்பது நீ கடக்கும் ஒரு நொடிதான்...!

🍂 ஒவ்வொரு நொடியையும் சந்தோஷமாக வாழ்...!

எல்லாமே உன்னுடையது என்று நினைக்காதே...!

🍂 ஒவ்வொரு நொடியும் வாழ்...! உன்னுடைய வாழ்க்கையை வாழ்...!

🍂 மகிழ்ச்சியாக வாழ்...! அது மட்டுமே நிரந்தரம்...!

🍂 உன் இறுதி காலத்தில் 

நீ எதையும் உன்னுடன் கொண்டு போக முடியாது...!

🍂 வாழுகின்ற ஒவ்வொரு நொடியையும் சந்தோஷமாக வாழ்வோம்..

இதை விட வேறு எவர் வாழ்க்கைப் பாடத்தை சொல்லித் தர முடியும்?

 சிவகங்கை மாவட்டம் நெற்குப்பை to மகிபாலன்பட்டி செல்லும் 

சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம் பூங்குன்றம். இங்கு பிறந்த கணியன் பூங்குன்றனார் எழுதிய  பழமையான பாடல் ஓன்று, இன்று 

உலகம் முழுவதும்

உச்சரிக்கப்படுகிறது.


யாதும் ஊரே யாவரும் கேளிர்....


இதன் முதல் வரி மட்டுமே பிரபலமாகி வருகிறது.

பாடலின்

எல்லா வரிகளும் வாழ்வின்

முழு தத்துவத்தைச் 

சொல்கிறது.....


முழு பாடலும்... அதன் பொருளும்....


"யாதும் ஊரே; யாவரும் கேளிர்;

தீதும் நன்றும் பிறர்தர வாரா;

நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;.....

சாதலும் புதுவது அன்றே;...

வாழ்தல் இனிதுஎன மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின் இன்னாது என்றலும் இலமே; 

மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது

கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று

நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்

முறைவழிப் படூஉம் என்பது திறவோர்காட்சியின் தெளிந்தனம்...

ஆதலின் மாட்சியின்

பெயோரை வியத்தலும் இலமே;

சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.


– கணியன் பூங்குன்றனார்


"யாதும் ஊரே யாவரும் கேளிர்...."


எல்லா ஊரும்

எனது ஊர்....

எல்லா மக்களும் எனக்கு உறவினர் என்று நினைத்து,

அன்பே வாழ்வின் அடிப்படை,ஆதாரம் என்று

வாழ்ந்தால் , இந்த வாழ்வு நமக்கு எவ்வளவு இனிமையானது............. சுகமானது......


"தீதும் நன்றும் பிறர் தர வாரா...."


தீமையும்,நன்மையும் அடுத்தவரால் வருவதில்லை.......

எனும் உண்மையை,

உணர்ந்தால்,

சக மனிதர்களிடம்,

விருப்பு வெறுப்பு இல்லா ஒரு சம நிலை,சார்ந்த வாழ்வு கிட்டும்.....


"நோதலும் தணிதலும்

அவற்றோ ரன்ன...."


துன்பமும் ஆறுதலும்கூட

மற்றவர் தருவதில்லை....

மனம் பக்குவப்பட்டால்,

அமைதி அங்கேயே கிட்டும்...


"சாதல் புதுமை யில்லை.."


பிறந்த நாள் ஒன்று உண்டெனில் .....

இறக்கும் நாளும் ஒன்று உண்டு....*

இறப்பு புதியதல்ல....அது

இயற்கையானது....

எல்லோருக்கும்*

*பொதுவானது....

இந்த உண்மையை

உணர்ந்தும், உள் வாங்கியும் வாழ்ந்தால்....

எதற்கும் அஞ்சாமல்,

வாழ்க்கையை, வாழும் வரை ரசிக்கலாம்.......


"வாழ்தல்இனிது என மகிழ்ந்தன்றும் இலமே

முனிவின் இன்னாது என்றலும் இலமே....."


இந்த வாழ்க்கையில்

எது, எவர்க்கு, எப்போது,

என்னாகும் என்று

எவர்க்கும் தெரியாது.....

இந்த வாழ்க்கை மிகவும்

நிலை அற்றது.....

அதனால், இன்பம் வந்தால்

மிக்க மகிழ்வதும் வேண்டாம்...

துன்பம் வந்தால் வாழ்க்கையை வெறுக்கவும் வேண்டாம்......

வாழ்க்கையின் இயல்பை உணர்ந்து இயல்பாய் வாழ்வோம்......


"மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர் முறைவழிப் படூஉம் என்பது திறவோர் காட்சியின் தெளிந்தனம் ....."


இந்த வானம் நெருப்பாய்,

மின்னலையும் தருகிறது....

நாம் வாழ 

மழையையும்

தருகிறது.....இயற்கை வழியில் அது,அது

அதன் பணியைச் செய்கிறது....


ஆற்று வெள்ளத்தில்,

கற்களோடு, அடித்து முட்டிச் செல்லும் படகு போல,

வாழ்க்கையும்,

சங்கடங்களில் அவர்,அவர் ஊழ்படி அதன் வழியில்

அடிபட்டு போய்க்கொண்டு

இருக்கும்....

இது இயல்பு என மனத்தெளிவு கொள்ளல் வேண்டும்...


"ஆதலின் மாட்சியின்

பெரியோரை வியத்தலும் இலமே;

சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே...."


இந்தத் தெளிவு

பெற்றால்.....,

பெரிய நிலையில் உள்ள பெரியவர்களைப் பார்த்து

மிகவும் வியந்து பாராட்டவும் வேண்டாம்...

சிறிய நிலையில் உள்ள

சிறியவர்களைப் பார்த்து

ஏளனம் செய்து இகழ்வதும்

வேண்டாம்.....

அவரவர் வாழ்வு

அவரவர்க்கு.....

அவற்றில் அவர்,அவர்கள்

பெரியவர்கள்...


இதை விட வேறு எவர்

வாழ்க்கைப் பாடத்தை

சொல்லித் தர முடியும்?

Saturday, August 13, 2022

Website released by Government of Tamilnadu for 10th std Online Teaching

 web  name:----

https://diksha.gov.in/tn/

ஏழையின் நிம்மதிக்கு காரணம்

கிருஷ்ண பக்தி என்றால் என்ன?

பூலோகத்தில் ஒரே தெருவில் ஒரு செருப்பு விற்கும் தொழிலாளியும், ஒரு செல்வந்தரும் இருந்தனர். செருப்புத் தொழிலாளி தினமும் தான் செருப்புக் கடையின் ஓரத்தில் கிருஷ்ணரின் படம் ஒன்றை வைத்து அதை வணங்கி வந்தான். 
செல்வம் இல்லாவிட்டாலும் சந்தோசமும் மன அமைதியுடனும் இருந்தார். செல்வந்தரோ தினமும் காலையில் குளித்துவிட்டு, பல மணி நேரம் பூஜை புனஸ்காரம் எல்லாம் செய்வார். பல தலைமுறைக்கு காணும் செல்வம் இருந்தும் நிம்மதியின்றி வாழ்ந்து வந்தார்.

ஒரு நாள் நாரத முனிவர் விஷ்ணுவைப் பார்த்து ”அந்தச் செல்வந்தர் மிகுந்த பக்திமானாக இருக்கிறார்; தினமும் உங்களுக்குப் பல மணி நேரம் பூஜை எல்லாம் செய்கிறார். அவர் நிம்மதியாய் வாழ, ஏதாவது செய்யக்கூடாதா?” என்றார்.

விஷ்ணுவும் அதற்குச் சம்மதித்துவிட்டு நாரதரை பூலோகத்துக்கு அனுப்பினார். போகும்போது நாரதரைப் பார்த்து, “நீங்கள் கீழே சென்று, ‘நான் நாரயணனிடமிருந்து வருகிறேன்,’ என்று செல்வந்தரரிடம் சொல்லுங்கள்.
அவர் ‘தற்பொழுது நாராயணன் என்ன செய்துகொண்டு இருக்கிறார்?’ என்று கேட்பார். அதற்கு நீங்கள் ‘நாராயணன் தற்போது ஓர் ஊசியின் காது வழியாக யானையை நுழைத்துக்கொண்டு இருக்கிறார்’ என்று பதில் சொல்லுங்கள்” என்று சொல்லி அனுப்பினார்.

”அப்படியே அந்தச் செருப்பு தைக்கும் தொழிலாளியையும் போய்ப் பார்த்துவிட்டு வந்துவிடுங்கள்” என்று சொல்லி அனுப்பினார் விஷ்ணு.

நாரதரும் முதலில் அந்தச் செல்வந்தரின் வீட்டுக்கு சென்றர். பூஜை எல்லாம் முடித்துவிட்டு வந்த செல்வந்தர், நாரதரிடம், “நீங்கள் யார்?” என்று கேட்க, நாரதர் தான் நாரயணரிடமிருந்து வருவதாகச் சொல்கிறார். 
அதற்கு அந்தச் செல்வந்தர் “தற்போது நாராயணன் என்ன செய்துகொண்டு இருக்கிறார்?” என்று கேட்க, நாரதரும், நாராயணன் ஒர் ஊசியின் காதுவழியாக யானையை நுழைத்துக்கொண்டு இருப்பதை பார்த்தாகச் சொல்கிறார். அதற்கு அந்த செல்வந்தர் “அது எப்படி முடியும்? இது என்ன நடக்கிற காரியமா?” என்று கேட்டார்.

நாரதர் அடுத்தது அந்தச் செருப்புத் தொழிலாளியைப் பார்க்கச் சென்றார்.
அவரிடமும் இதே சம்பாஷணை நடைபெற்றது. ஆனால் கடைசி பதிலுக்கு அந்தச் செருப்புத் தைக்கும் தொழிலாளி, கண்களில் தாரை தாரையாக கண்ணீர் பெருகியது இதை ஒரு சாதாரண மனிதன் செய்ய முடியுமா பகவானைத் தவிர யாராலும் செய்ய முடியாது என அவர் கூறினார்
“இதில் என்ன விந்தை? ஒரு பெரிய ஆலமரத்தை சின்ன விதையில் அடக்கியவர், பிரபஞ்சத்தை தன் வாயில் காண்பித்தவர், அவருக்கு யானையை ஊசியில் நுழைப்பது என்ன பெரிய விஷயமா?” என்று பதில் சொன்னார்.

அவர்கள் இருவரும் சொன்ன பதிலை நாராயணனிடம் வந்து சொன்னார் நாரதர். கிருஷ்ண பக்தி என்பது, பூஜை, புனஸ்காரங்கள் செய்வது மட்டுமில்லை. 
கிருஷ்ணர் ஆகிய எல்லா சூழ்நிலையிலும் நான் ஒருவனே காப்பாற்ற முடியும் என்று எனது பாதத்தை பூரண நம்பிக்கையுடன், நீயே சரணம் என்று பற்றுவதே ”உண்மையான கிருஷ்ணன் பக்தி” 

இப்பொழுது தெரிகிறதா? ஏழையின் நிம்மதிக்கு காரணம் என்று பதிலளித்தார் பகவான் கிருஷ்ணர்.

ஹரேகிருஷ்ண பிரபுபாத்கீ ஜெய்

வினை விதைத்தவன் வினை அறுப்பான் !

அடுத்தவர்களைப் போல் வசதியாக வாழ முடியவில்லை என்று நினைக்காதே... 

*பிறப்பிற்கும்*
      *இறப்பிற்கும் இடையில்,*
      *நீ செய்யும்* *பாவம்*
      *புண்ணியம்* *மட்டுமே*
      *உனக்கு மிஞ்சும்...*
      *உன்னுடன் கடைசி*
      *வரை வருவதும்*
      *இதுவே...!!*

01) பெற்றோர்களை 
     நோகடிக்காதே...
     நாளை உன் பிள்ளையும்
     உனக்கு அதை தான்
     செய்யும்...!!

02) பணம் பணம் என்று
     அதன் பின்னால்
     செல்லாதே...
     வாழ்க்கை போய் 
     விடும்...
     வாழ்க்கையையும்
     ரசித்துக் கொண்டே 
     போ...!!

03) நேர்மையாக இருந்து
     என்ன சாதித்தோம்
     என்று நினைக்காதே...
     நேர்மையாக இருப்பதே
     ஒரு சாதனை தான்...!!

04) நேர்மையாக
இருப்பவர்களுக்கு
     சோதனை வருவது
     தெரிந்ததே, அதற்காக
     நேர்மையை கை விட்டு
     விடாதே...
     அந்த நேர்மையே
     உன்னை
     காப்பாற்றும். ..!!

05) வாழ்வில் சின்ன சின்ன
     விஷயத்திற்கெல்லாம்
     கோபப்படாதே...
     சந்தோஷம்
     குறைவதற்கும்,
     பிரிவினைக்கும் இதுவே
     முதல் காரணம்...!!

06) உன் அம்மாவிற்காக
     ஒரு போதும்
     மனைவியை விட்டு
     கொடுக்காதே...
     அவள் உனக்காக
     அப்பா அம்மாவையே
     விட்டு வந்தவள்...!!

07) உனக்கு உண்மையாக
     இருப்பவர்களிடம்...
     நீயும் உண்மையாய்
     இரு...!!

08) அடுத்தவர்களுக்கு தீங்கு
     செய்யும் போது
     இனிமையாகத்தான்
     இருக்கும்...
     அதுவே உனக்கு வரும்
     போது தான், அதன்
     வலியும் வேதனையும்
     புரியும்...!!

09) உன் மனைவி
    உண்மையாக இருக்க
    வேண்டும் என்று, நீ
    நினைப்பது போல்...
    நீயும் உண் மனைவிக்கு
    உண்மையாய் இரு,
    எந்த பெண்ணையும்
    ஏறெடுத்து பார்க்காதே,
    அதுவே உன்
    மனைவிக்கு கொடுக்கும்
    மிகப்பெரிய பரிசு...!!

10) ஒருவன் துரோகி
      என்று தெரிந்து
      விட்டால்...
      அவனை விட்டு
      விலகியே இரு...!!

11) எல்லோரிடமும்
      நட்பாய் இரு...
      நமக்கும் நாலு
      பேர் தேவை...!!

12) நீ கோவிலுக்கு
      சென்று தான்
       புண்ணியத்தை
      சேர்க்க வேண்டும்
      என்பதில்லை...
      யாருக்கும் தீங்கு
      செய்யாமல்
      இருந்தாலே...
      நீ கோவில்
      சென்றதற்கு சமம்...!!

13) நிறை குறை இரண்டும்
      கலந்தது தான்
      வாழ்க்கை...
      அதில் நிறையை மட்டும்
      நினை...
      நீ வாழ்க்கையை
      வென்று விடலாம்...!!

14) எவன் உனக்கு உதவி
      செய்கிறானோ,
      அவனுக்கு மட்டும்
      ஒரு நாளும் துரோகம்
      செய்யாதே...
      அந்த பாவத்தை நீ
      எங்கு போனாலும்
      கழுவ முடியாது...!!

15) அடுத்தவர்களைப்
      போல் வசதியாக
      வாழ முடியவில்லை
      என்று நினைக்காதே...
      நம்மை விட 
      வசதியற்றவர்கள்
      கோடி பேர்
      இருக்கிறார்கள்
      என்பதை மனதில்
      கொள்...!!

16) பிறப்பிற்கும்
      இறப்பிற்கும் இடையில்,
      நீ செய்யும் பாவம்
      புண்ணியம் மட்டுமே
      உனக்கு மிஞ்சும்...
      உன்னுடன் கடைசி
      வரை வருவதும்
      இதுவே...!!🌿🦜

*விதி*
👆
👇
*வி*னை விதைத்தவன் வினை அறுப்பான் !
*தி*னை விதைத்தவன் தினை அறுப்பான் !!
👍🙏🏻

Friday, August 12, 2022

ஒருவர் தினசரி செய்ய வேண்டிய பழக்கங்கள்.

ஒருவர் தினசரி செய்ய வேண்டிய பழக்கங்கள்.

1.அதி காலை சூரிய உதயத்திற்கு முன் கண் விழிப்பது.

2.காலையில் வெறும் வயிற்றில் இரண்டு அல்லது மூன்று டம்ளர் நீர் அருந்துதல்.

3.முப்பது நிமிடம் நடை பயிற்சி அல்லது உடற் பயிற்சி அல்லது யோகா செய்வது.

4. எந்த மதமாக இருப்பினும் காலையில் கடவுள் வழிபாடு.

5.பெற்றோரை வணங்குதல்.

6.கட்டாயம் காலை உணவு சாப்பிடுதல் அதற்கு நேரம் ஒதுக்குதல்.

7.அன்று செய்ய வேண்டிய வேலைகளை முறை படுத்துதல்.

8.படிக்கும் பருவமாக இருப்பின் முறையாக கல்வி பயிலுதல்.

9. வேலைக்கு செல்பவர் என்றால் முறையாக வேலைக்கு செல்லுதல்.

10. சக நண்பர்களிடம் நட்பு பாராட்டுதல்.

11.எப்பொழுதும் நல்ல சிந்தனை கொள்ளுதல்.

12. அடுத்தவர்களோடு அனுசரனையோடு இருத்தல்.

13.தினம் ஒரு நல்ல அல்லது ஒரு புதிய பாடம் கற்றல்.

14. நாட்டு நடப்புகளை தெரிந்து கொள்ளுதல்.

15.செய்தித்தாள் , தொலைகாட்சி செய்தி அல்லது வானொலி செய்தி ஆகியவற்றை அறிந்து கொள்ளுதல்.

16. அலை பேசி உபயோகத்தை முடிந்த அளவு குறைத்து கொள்ளுதல்.

17. ஃபேஸ் புக், வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம் போன்ற பயன் பாட்டுகளை குறைத்து கொள்ள்ளுதல்.

18.அலை பேசி விளையாட்டை குறைத்து கொண்டு நம் பாரம்பரியம் கொண்ட , உடல் வேர்வை மற்றும் மனம் குளிர விளையாட்டை விளையாடுதல்.

19.பெற்றோர் மற்றும் குடும்பத்தாரிடம் நேரம் செலவு செய்தல்.

20.தொலைகாட்சியில் ஒளி பரப்பும் குடும்ப தொடர்களை தவிர்த்து நல்ல இசை , மற்றும் குழந்தை, அறிவு நிகழ்ச்சிகளை பார்ப்பது.

21.அதிகம் தேனீர் காபி குடிப்பதை தவிர்க்கவும்.

22.புறம் பேசுதல் தவிர்க்கவும்.

23 அரசு விதிகளை முறையாக பின் பற்றவும்.

24.இயற்கை அழகு சிதைக்காமல் இயற்கையோடு வாழ கற்று கொள்ளுதல்.

25.மன அமைதிக்கு புறம்பான எந்த செயலையும் செய்யாது இருத்தல்.

எல்லாவற்றையும் கடைப்பிடிக்க முடியவில்லை என்றாலும்  குறைந்த பட்சம் ஒரு பத்து நல்ல பழக்கங்களை
கடைப்பிடிக்க வேண்டும்...
#வாழ்க_நலமுடன்_வளமுடன்

Featured Post

உணவு முறைல முடிஞ்ச அளவு மாற்றம் பண்ணுங்க.

  நாம ஏன் சோணகிரியா இருக்கோம்? தொத்த பாடியா இருக்கோம்? பழங்கால மக்களுக்கு மட்டும் எப்படி திமில் கொண்ட தோளும், மதர்த்த நெஞ்சும் வந்தது? உணவு ...