Wednesday, April 20, 2022

உள்ளங்கையில் வைகுண்டம்

உள்ளங்கையில் வைகுண்டம்
 
ஒருநாள் அதிகாலை 

கிருஷ்ணரின்  தந்தை நந்தகோபர் யமுனை நதியில் நீராட புறப்பட்டார். 

அப்போது இருள் விலகவில்லை. தண்ணீ ருக்குரிய தேவதையான வருணனின் தூதன், காலமற்ற நேரத்தில் நீராட வந்த நந்த கோபரை வருணனிடம் இழுத்துச் சென்றான்.

நீராடச் சென்ற தங்கள் தலைவரான நந்த கோபரைக் காணாததால், ஆயர்பாடியே கவலையில் ஆழ்ந்தது. யசோதை உள்பட எல்லாரும் செய்வதறியாமல் அழுதனர். 

கிருஷ்ணர் தன் யோகசக்தியால், நந்த கோபரைத் தேடினார். இது வருணனின் வேலை தான் என்பதை அறிந்தார். தந்தை யை அழைத்து வர புறப்பட்டார். 

தன் மாளிகை நோக்கி வந்த கிருஷ்ணரை கண்ட வருணன், இருகைகளையும் கூப்பி வரவேற்றான். பகவானே! இன்று உங்க ளை தரிசிக்க என்ன புண்ணியம் செய்தே ன்! தங்களின் திருவடியை வணங்கினால் பிறவிக் கடலையே கடந்து விடலாமே! 

யார்என அறியாமல் தங்கள் தந்தையை சிறை பிடித்த என் தூதனை மன்னியுங் கள். எங்களுக்கு ஆசி கொடுங்கள் என்று வேண்டினான். வருணனின் வணக்கத் தை ஏற்றதோடு, துதுவனின்செயலையும் மன்னித்தார் கிருஷ்ணர். 

நந்தகோபரோடு திரும்பிய கிருஷ்ணரைக் கண்ட ஆயர்பாடி மக்கள், கடவுளே தங்க ளோடு வாசம் செய்வதை அறிந்தனர். கிருஷ்ணா! நாங்கள் செய்த புண்ணியத் தால் உன்னோடு உறவாடும் பாக்கியம் பெற்றோம். 

நீ நிரந்தரமாக வாசம் புரியும் வைகுண்ட த்தை இப்போது தரிசிக்க விரும்புகிறோம், என்றும் கேட்டனர். 

வைகுந்த வாசனாக தான் பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் கோலத்தைக் கிருஷ்ணர்அவர்களுக்கு அப்போது காட்டி யருளினார். உள்ளங்கையில் வைகுண்டம் என்பது போல, கிருஷ்ணரின் வரவால் ஆயர்பாடியே வைகுண்டமாக மாறியது. 

சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பனம்...

சிவபெருமான் பற்றிய

சிவபெருமான் பற்றிய அரிய தகவல்கள்!

சிவசின்னங்களாக போற்றப்படுபவை... திருநீறு, ருத்ராட்சம், நமசிவாய மந்திரம்

சிவனுக்கு அன்னாபிஷேகம் நடக்கும் காலம்... ஐப்பசி பவுர்ணமி

சிவன் யோகியாக இருந்து ஞானத்தை அருளும் கோலம்... தட்சிணாமூர்த்தி

5ஆன்மாவைக் குறிக்கும் சிவன் எங்கிருக்கிறார்? திருப்பெருந்துறை(ஆவுடையார்கோயில்)

காலனை உதைத்த காலசம்ஹார மூர்த்தியாக ஈசன் அருளும் தலம்... திருக்கடையூர்

ஞானசம்பந்தரைக் காண சிவன் நந்தியை விலகச் சொன்ன தலம்... பட்டீஸ்வரம்

ஆண்டுக்கு ஒரு பாடல் வீதம் சிவன் மீது பாடியவர்... திருமூலர்

முக்திவாசல் என்று போற்றப்படும் திருத்தலம்... திருவெண்காடு (நவக்கிரக புதன் ஸ்தலம்,நாகப்பட்டினம் மாவட்டம்)

ஐப்பசியில் காவிரியில் சிவபார்வதி நீராடுவது... துலாஸ்நானம்

ஐப்பசி கடைசியன்று மயிலாடுதுறையில் நீராடுவது... கடைமுகஸ்நானம்

சிவனுக்கு மாடக்கோயில் கட்டிய மன்னன்... கோச்செங்கட்சோழன்.

கூத்தப்பன் என்று போற்றப்படும் இறைவன்... நடராஜர்(கூத்து என்றால் நடனம்)

தரிசிக்க முக்தி என்ற சிறப்பைப் பெற்ற தலம்... சிதம்பரம்

வாழ்வில் ஒருமுறையேனும் செல்ல வேண்டிய தலம்... காசி

சிவன் நெருப்பாக வளர்ந்து நின்ற தலம்... திருவண்ணாமலை

அம்பிகை மயில் வடிவில் சிவனை பூஜித்த தலம்... மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில்

மாதம் தோறும் வரும் விழாக்களைப் பட்டியலிடும் தேவாரம்... மயிலாப்பூர் தேவாரம் (சம்பந்தர் பாடியது)

தட்சிணாமூர்த்தி கைவிரல்களை மடக்கிக் காட்டும் முத்திரையின் பெயர்... சின்முத்திரை

கயிலாயத்தில் தேவலோகப்பெண்களுடன் காதல் கொண்டதால், பூலோகத்தில் பிறவி எடுத்தவர்... சுந்தரர்

வேடுவச்சியாக இருந்த பார்வதியை வேடனாய் வந்து ஈசன் மணந்த தலம்... ஸ்ரீசைலம்(ஆந்திரா)..

சக்தி பீடங்களில் பைரவி பீடமாகத் திகழும் தலம்... ஒரிசாமாநிலம் பூரி ஜெகந்தாதர் கோயில்

இறைவன் இறைவிக்கு இடபாகம் அளித்த தலம்... திருவண்ணாமலை

கார்த்திகை தீபத்திருளில் அவதரித்த ஆழ்வார்... திருமங்கையாழ்வார்

திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருநாளன்று காலையில் ஏற்றும் தீபம்... பரணிதீபம் (அணையா தீபம்)

அருணாசலம் என்பதன் பொருள்... அருணம் + அசலம்- சிவந்த மலை

ஆறாதாரங்களில் திருவண்ணாமலை... ஆதாரமாகத் திகழ்கிறது மணிபூரகத் தலம்

திருவண்ணாமலையில் பவனிவரும் சோமஸ்கந்தரின் பெயர்... பக்தானுக்ரக சோமாஸ்கந்தர்

“கார்த்திகை அகல்தீபம்” என்னும் அஞ்சல் முத்திரை வெளியான ஆண்டு... 1997, டிசம்பர் 12

அருணகிரிநாதர் கிளிவடிவில் முக்தி பெற்ற இடம்... திருவண்ணாமலை (கிளி கோபுரம்)

கார்த்திகை நட்சத்திரம் ...தெய்வங்களுக்கு உரியது சிவபெருமான், முருகப்பெருமான், சூரியன்

குறைந்தபட்சம் விளக்கு ஏற்ற வேண்டிய காலம்... 24 நிமிடங்கள் (ஒரு நாழிகை)

சிவாம்சமாகப் போற்றப்படும் ராமபக்தர்... அனுமன்

நமசிவாய’ என்று தொடங்கும் சிவபுராணம் எதில் இடம்பெற்றுள்ளது? திருவாசகம்

தர்மதேவதை நந்தி என்னும் பெயர் தாங்கி ஈசனைத் தாங்கி வருவதை எப்படி குறிப்பிடுவர்?
அறவிடை(அறம்-தர்மம், விடை-காளை வாகனம்)

கள்ளம் கபடமில்லாத

கள்ளம் கபடமில்லாத உன்னதமான பக்தி ...!

குருவாயூரில் குரூரம்மா தினம் அநுஷ்டிக்கப்படுகிறது

கௌரி என்ற நம்பூதிரிப் பெண் கண்ணனின் பக்தை. அவள் சிறு குழந்தையாக இருந்தபோது அவளது மாமா அவளுக்கு ஒரு கண்ணன் விக்ரகத்தைக் கொடுத்தார். அவள் எப்போதும் அந்தக் கண்ணனுடனே விளையாடுவாள்.

அவள் வளர்ந்ததும் குரூரில் உள்ள ஒரு பிராம்மணனுக்குத் திருமணம் செய்து கொடுத்தனர்.

காலம் கடந்தது. அவளது உறவினர்கள் ஒவ்வொருவராக இறந்தனர். அவள் தனித்து இருந்தாள். எப்போதும் கண்ணனின் நாம ஜபம் செய்து கொண்டிருப்பாள்.

ஒரு நாள் அவள், ” கண்ணா நீதான் எனக்குத் துணையாக எப்போதும் இருக்க வேண்டும், யசோதையை விட்டுச் சென்றதுபோல் என்னைக் கைவிட்டுவிடாதே” என்று மனமுருகப் பிரார்த்தித்தாள்

ஒரு நாள், 7,8 வயதுள்ள ஒரு பாலகன் அவள் வீட்டு வாசலில் வந்து, “பாட்டி, .நான் ஒரு அநாதை. எனக்கு ஏதாவது வேலை தாருங்கள்” என்றான்.

அவள், “நீ மிகவும் சிறியவனாக இருக்கிறாய், உன்னால் வேலை செய்ய முடியாதே?” என்றாள். அவனோ,”நான் எல்லா வேலையும் செய்வேன். தங்குவதற்கு இடமும், உணவும் அளித்தால் போதும்” என்று கூறினான்.

இயல்பாகவே கருணை உள்ளம் கொண்ட அவள், மிக மகிழ்ந்து அவனைத் தன் மகனாகவே நினைத்து ஏற்றுக் கொண்டாள். அவனை’ ” உன்னி” என்று அன்புடன் அழைத்தாள்.

வில்வமங்கலம் ஸ்வாமிகள் என்பவர் பூஜை செய்யும்போது கண்ணனை நேரிலேயே பார்ப்பார் என்று கேள்விப்பட்டாள். 

அவரைத் தன் வீட்டிற்கு வந்து பூஜைகள் செய்து உணவருந்திப் போகுமாறு அழைத்தாள். அவரும் சம்மதித்தார்.

குரூரம்மாவின் அடுத்த வீட்டில் ‘செம்மங்காட்டம்மா’ என்று ஒரு பணக்காரப் பெண்மணி இருந்தாள். 

குரூரம்மாவிடம் ஊரிலுள்ள அனைவரும் மிகுந்த மரியாதையுடன் இருப்பதால் அந்தப் பெண்மணிக்கு எப்போதும் பொறாமை.

குரூரம்மாவின் வீட்டிற்கு ஸ்வாமிகள் செல்லக் கூடாது என்று, அதே நாளில் தன் வீட்டிற்கு அவரை அழைத்தாள். குரூரம்மாவிற்கு இது பற்றித் தெரியாது.

பூஜையன்று காலை குரூரம்மா குளிக்க ஆற்றுக்குச் சென்றாள். குளித்துவிட்டு ஈரத் துணியைப் பிழியும்போது, அருகில் நீராடிக் கொண்டிருந்த

செம்மங்காட்டம்மாவின் மீது சில நீர்த் துளிகள் தெறித்தது. உடனே அவள் குரூரம்மாவை திட்டிவிட்டு, மீண்டும் நீரில் முங்கி எழுந்து ,”ஸ்வாமிகள் என் வீட்டிற்கு வருகிறார், இப்போது நான் செல்ல வேண்டும்” என்று கூறினாள்.

அதைக் கேட்ட குரூரம்மாவிற்கு அதிர்ச்சியாக இருந்தது. மனம் நொந்தபடியே வீடு திரும்பி, ‘உன்னி’ யிடம் நடந்ததைக் கூறினாள்.

அவனும்,”கவலைப்படாதே பாட்டி, ஸ்வாமிகள் நிச்சயம் நம் வீட்டிற்கு வருவார்” என்று அவளைத் தேற்றினான். அவனை நம்பிய அவள், “அப்படியெனில், அதற்கான ஏற்பாடுகள் ஒன்றையும் நான் செய்யவில்லையே” என்றாள்.

அவனும்,” நீ ஓய்வெடு பாட்டி, நான் எல்லாவற்றையும் கவனித்துக் கொள்கிறேன்” என்று கூறி பூஜைக்கு வேண்டியவற்றையும், மற்ற எல்லா வேலைகளையும் விரைவாகச் செய்து முடித்தான்.

செம்மங்காட்டம்மாவின் வீட்டில் ஸ்வாமிகள் வருவதற்கான எல்லா ஏற்பாடுகளும் நடந்தது. ஸ்வாமிகள் வந்துவிட்டதன் அறிகுறியாக அவருடைய சிஷ்யன் சங்கை முழங்கியபோது சங்கிலிருந்து நாதம் எழவில்லை.

அதை ஒரு துர்நிமித்தமாகக் கருதிய ஸ்வாமிகளுக்கு, உடனே குரூரம்மாவின் வீட்டிற்கு வருவதாக வாக்களித்தது நினைவிற்கு வந்தது.

அதனால் குரூரம்மாவின் வீட்டிற்கு சென்று. மீண்டும் சங்கை முழங்கியபோது அதிலிருந்து நாதம் எழுந்தது.

இறைவனுடைய ஆணையாக அதை ஏற்று அங்கே சென்றார். ‘உன்னி’ வரவேற்றான். கண்ணனை நேரிலே பார்த்திருந்தும்கூட, மாயையால் அவனை அவர் அறியவில்லை.

எப்போதும், ஸ்வாமிகளின் பூஜைக்கு வேண்டியவற்றை அவரது சிஷ்யர்கள்தான் செய்வது வழக்கம். வேறு எவருக்கும் எப்படி செய்ய வேண்டும் என்பது தெரியாது.

இங்கோ, பூஜைக்கு வேண்டிய அனைத்தும் முறையாக செய்யப்பட்டு, தயாராக இருந்தது. சிஷ்யர்களுக்கு ஒரே ஆச்சர்யம்!

பூஜை ஆரம்பித்தது. ஸ்வாமிகள் கண்ணை மூடிக் கண்ணனைத் தியானித்தார். கண்களை மூடியதும் ‘உன்னி’ அவர் முன்னே சென்று நின்றான். 

சிஷ்யர்கள் திகைத்தனர். ஒருவரும் பேசாமல் மௌனமாய் இருந்ததால், சிஷ்யர்களால் ‘உன்னி’யைக் கூப்பிட முடியவில்லை.

ஸ்வாமிகள், பூக்களால் அர்ச்சனை செய்ய ஆரம்பித்தார். கண்களைத் திறந்தபோது,. எல்லா பூக்களும் ‘உன்னி’யின் காலருகே இருந்ததைப் பார்த்தார்.

அவனை நகர்ந்து அறையின் மூலைக்குச் சென்று நிற்கச் சொல்லிவிட்டு மீண்டும் கண்களை மூடித் தியானித்து அர்ச்சனை செய்தார். இப்போதும் பூக்கள் ‘உன்னி’யின் பாதங்களில் விழுந்தன.

ஸ்வாமிகளுக்கு, குரூரம்மாவிற்காக பகவானே ‘உன்னியாக’ வந்திருப்பது புரிந்தது. இப்போது அவர் கண் முன் மாயக் கண்ணன் நின்றான்.

அவர் மெய்சிலிர்த்து நமஸ்கரிக்க எழுந்தார். கண்ணன் தடுத்து நிறுத்தினான். “நமக்குள் இது ரகசியமாக இருக்கட்டும், நான் குரூரம்மாவுடன் அவளது ‘உன்னியாகவே’ இருக்க விரும்புகிறேன்” என்று கண்ணன் அவர் காதருகில் கூறுவது கேட்டது.

பூஜையும் நல்லவிதமாக நடந்து முடிந்தது. ஸ்வாமிகளும் சிஷ்யர்களும் குரூரம்மாவிடம் விடைபெற்றுச் சென்றனர். குரூரம்மாவும் மிகுந்த மகிழ்ச்சியடைந்.தாள்.

ஸ்ரீ க்ருஷ்ணா உன் திருவடிகளே சரணம் !

ஆறுபடை வீடு ரகசியம்

 ஆறுபடை வீடு ரகசியம் !

சித்தர்கள் ஞானிகளின் குருவான முருகனுக்கு ஆறுபடை வீடு நம் முன்னோர்கள் அமைத்ததன் ரகசியம் என்ன தெரியுமா?
மனிதன் இந்த பூமியில் நிறைவான வாழ்க்கை வாழ ஆரோக்கியம், உறவுகள், பொருளாதாரம், அபயம் (பாதுகாப்பு) ஆளுமை, ஞானம் ஆகியவை நிறைவாக இருக்க வேண்டும் என சித்தர்கள் சொல்கின்றனர். அதை பூர்த்தி செய்யும் சக்தியுள்ள இடங்களில் ஆறுமுகன் ஆலயங்கள் அறுபடை வீடாக எழுப்பப்பட்டன. ஆரோக்கியத்திற்கு சுவாமிமலை, உறவுக்கு திருப்பரங்குன்றம், பொருளாதார வசதிக்கு சோலைமலை, பாதுகாப்புக்கு திருச்செந்தூர், ஆளுமை திறனுக்கு திருத்தணி, ஞானம் பெற பழநி ஆகிய தலங்களை தரிசிக்கலாம்.

அறுபடை வீடு என்றால் என்ன? வெறுமனே ஆறுவீடுகள் என்று சொல்லாமல் இடையில் ஏன் படை என்ற சொல் வந்தது? இதைப் புரிந்து கொள்ள நாம் நக்கீரரைத்தான் துணைக்கு அழைக்க வேண்டும். அவர்தானே தமிழில் முதன்முதலாக கடவுளைப் போற்றி நூல் எழுதியவர்.

புலவர்கள் பொதுவாக அரசர்களிடம் சென்று பாடிப் பரிசு பெறுவார்கள். அப்படி நல்லபடி பரிசளித்த மன்னர்களைப் பற்றி தம்மைப் போன்ற புலவர்களிடம் சொல்லி அவர்களையும் அங்கு அனுப்புவார்கள். இப்படிச் செய்வதற்கு ஆற்றுப்படுத்துதல் என்று தமிழில் பெயர்.

ஒவ்வொரு புலவரிடமாகச் சென்று விவரத்தைச் சொல்ல முடியாது என்று பொருள் தந்து வாழ்வித்த மன்னரைப் பற்றி நூலாகவே எழுதிவிடுவார்கள். அப்படி எழுதப்பட்ட நூல்களுக்கு ஆற்றுப்படை நூல்கள் என்று பெயர்.

பொருள் கொடுத்த மன்னனைப் பற்றி ஆற்றுப்படுத்திக் கொண்டிருந்த காலகட்டத்தில் அருளைக் கொடுத்த கடவுளை நோக்கி மக்களை ஆற்றுப்படுத்துவதற்காக நக்கீரர் எழுதியதுதான் திருமுருகாற்றுப்படை.

செந்தமிழ்க் கடவுளாம் செந்திலங்கடவுளின் செம்மையான பண்புகளைப் பாராட்டி அவனிடம் அருள் பெறலாம் என்று எழுதிய நூல்தான் திருமுருகாற்றுப்படை. தமிழில் எழுந்த முதல் பக்தி நூல் என்ற பெருமையும் இந்த நூலுக்கே உண்டு. சங்கநூல்களில் தொகுக்கப்பட்டு பின்னாளில் சைவத் திருமுறைகளிலும் தொகுக்கப்பட்ட ஒரே நூலும் திருமுருகாற்றுப்படைதான்.

ஆற்றுப் படுத்தும் போது அந்த மன்னன் வாழும் ஊரைச் சொல்லி அங்கு செல்க என்று சொல்வார்கள். ஆனால் இவரோ முருகனை நோக்கி ஆற்றுப்படுத்துகிறார். அப்படி ஆற்றுப்படுத்தும் போது முருகப் பெருமான் குடிகொண்ட ஆறு ஊர்களுக்குச் செல்லுமாறு ஆற்றுப்படுத்துகிறார்.

அப்படி நக்கீரர் குறிப்பிட்ட படைவீடுகள்தான் ஆற்றுப்படை வீடுகள். அப்படி ஆற்றுப்படுத்தப்பட்ட வீடுகள் எண்ணிக்கையில் ஆறாக இருந்ததால் ஆற்றுப்படை என்பது நாளாவட்டத்தில் மறுவி ஆறுபடை வீடுகளாகி விட்டன.

சரி. நக்கீரர் எந்த வரிசையில் ஆற்றுப்படை வீடுகளை பட்டியல் இடுகிறார்?

முதற் படைவீடு – *திருப்பரங்குன்றம்*

இரண்டாம் படைவீடு – *திருச்சீரலைவாய்* (திருச்செந்தூர்)

மூன்றாம் படைவீடு – *திருவாவினன்குடி* (பழனி)

நான்காம் படைவீடு – *திருவேரகம்* (சுவாமிமலை)

ஐந்தாம் படைவீடு – *குன்றுதோறாடல்* ( திருத்தணி )

ஆறாம் படைவீடு – *பழமுதிர்ச்சோலை*

மேலே குறிப்பிட்டிருப்பதுதான் நக்கீரர் பாடிய ஆற்றுப்படை வீடுகளின் வரிசை. கந்தன்கருணை பாடலில் ஒவ்வொரு படைவீட்டுக்கும் சொல்லப்பட்ட முருகன் வாழ்க்கை நிகழ்வுகளை நக்கீரர் ஆற்றுப்படை வீடுகளோடு தொடர்பு படுத்தவில்லை. பின்னாளில் ஆறுபடை வீடுகளோடு முருகனின் வாழ்க்கை நிகழ்வுகளும் தொடர்புபடுத்தப்பட்டன.

காலங்கள் மாறினாலும் கருத்துகள் மாறினாலும் கந்தப் பெருமான் தமிழர்களுக்குச் சொந்தப் பெருமானாய் ஆறுபடைவீடுகளிலும் வீற்றிருந்து அன்பு மாறாமல் அருள் புரிந்து கொண்டிருக்கிறான். கால மாற்றத்தில் தமிழ்நாடு என்று மாநிலம் உருவான போதும் ஆறுபடை வீடுகளும் தமிழ்நாட்டுக்குள்ளேயே அமைந்ததும் தற்செயல் அல்ல முருகனின் தமிழ்த் தொடர்பே என்பதும் கருதத்தக்கது.

குன்றிருக்கும் இடமெல்லாம் குடியிருக்கும் குமரனின் ஆற்றுப்படை வீடுகளுக்கு நாமும் செல்வோம். நல்லருள் பெறுவோம்.

*திருப்பரங்குன்றம்* தெய்வானையை முருகப்பெருமான் திருமணம் செய்து கொண்ட இந்த தலத்தில் வந்து இறைவனை வணங்கி வழிபட்டு சென்றால் திருமணத் தடை நீங்கி, விரைவில் திருமணம் நடைபெறும் வாய்ப்பு கிட்டும்.

*திருச்செந்தூர்* அலை ஆடும் கடலோரம் அமைந்துள்ள இந்த திருத்தலத்திற்கு வரும் பக்தர்கள், முதலில் கடலில் புனித நீராடி பின்னர் முருகப்பெருமானை தரிசனம் செய்தால், மனிதர்கள் மனதில் உள்ள ரோகம், ரணம், கோபம், பகை போன்றவை நீங்கி, மனம் தெளிவு பெறும்.

*பழனி* ஞானப்பழம் கிடைக்காததால் ஆண்டிக் கோலத்தில் இங்கு வந்து அமர்ந்துள்ள பழனியாண்டவரை தரிசனம் செய்தால், தெளிந்த ஞானம் கைகூடும்.

*சுவாமிமலை* தந்தைக்கு உபதேசம் செய்து தகப்பன்சாமி என்று முருகப்பெருமான் பெயர் பெற்ற இந்த சிறப்பு மிக்க தலத்திற்கு வந்து ஆறுமுகனை தரிசனம் செய்தால், ஞானம், ராகம், உபதேசம் ஆகியவை கைகூடும்.

*திருத்தணி* சூரனை சம்ஹாரம் செய்து விட்டு, மனம் சாந்தியடைய வேண்டி முருகன் தனித்து அமர்ந்த தலம் இந்த திருத்தணிகை. இந்த குன்றில் அமர்ந்த குமரனை திருத்தணிகை வந்து தரிசனம் செய்து சென்றால், எப்போதும் உடன்பிறந்தது போல் மனிதனின் மனதை விட்டு நீங்காமல் இருக்கும் கோபமானது மறையும்.

*பழமுதிர்ச் சோலை* தமிழுக்கு தொண்டாற்றிய அவ்வையாருக்கு, சுட்டபழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா? என்று கேட்டு, அவரையே திகைக்கச் செய்த முருகப்பெருமான் திருவிளையாடல் நடந்த தலம் இதுவாகும். இங்கு வந்து அழகன் முருகனை வழிபட்டால், பக்தர்களுக்கு பொருள் வருவாய் பெருகும்.

Tuesday, April 19, 2022

இறை நம்பிக்கை உள்ளவன்

*இறை நம்பிக்கை உள்ளவன் தற்சமயம் அநேக தீய குணங்களை உடையவனாக இருந்தாலும்  காலப்போக்கில் திருந்தி நல்லவனாகி கடவுளை அடைந்து விடுகிறான்.*

*கடவுள் நம்பிக்கை இல்லாதவன் மேலான அறிவு,புத்திக் கூர்மை, திறமைகளைப் பெற்றிருந்தாலும் அவற்றை  தன்னுடைய கௌரவம், அந்தஸ்து,செல்வம் ஆகியவற்றை வளர்த்துக் கொள்வதற்கே பயன்படுத்துகிறான்.*
*அதுமட்டும் அன்றி எந்த நேரத்திலும் சபலபுத்தி ஏற்பட்டு தவறான வழியில் சென்றுவிடுகிறான்.அவனுடைய வாழ்க்கை பயனின்றி வீணாகிவிடுகிறது.*
-சுவாமி விவேகானந்தர்-

Sunday, April 17, 2022

இறைவனுக்கு**நன்றி*

*இறைவனுக்கு*
*நன்றி*
 
*பசிக்கு உணவை குப்பைத்தொட்டியில் தேடுபவனை கண்டால்.. நமக்கு உணவளித்த இறைவனுக்கு நன்றி கூறுவோம்.*

*ஆடையின்றி நிர்வாணமாக தெருவில் திரியும் மனநலம் பாதித்தவர்களை கண்டால்,*

*நம்மை அறிவோடு வைத்திருக்கும் இறைவனுக்கு நன்றி கூறுவோம்.*

*யாரேனும் நோயுற்றிருக்க கண்டால், நம்மை ஆரோக்கியமாக வைத்திருக்கும் இறைவனுக்கு நன்றி கூறுவோம்.*

*மரணமடைந்தவரின் இறுதி ஊர்வலத்தை கண்டால்,நம்மை உயிரோடு வைத்திருக்கும் இறைவனுக்கு நன்றி கூறுவோம்.*

*மரணமடைந்தவரால் மட்டும்தான் இறைவனுக்கு நன்றி செலுத்த முடியாது.*

*உயிரோடிருக்கும் ஒவ்வொரு நொடியும் இறைவனை நினைத்து அவனுடைய அருட்கொடைகளுக்கு நன்றி கூறுவோம்.*

*நன்றி மறவா மனிதாக வாழ்ந்து மறைவோம்..*

*சர்வம் சிவமயம்

🌹 விசேஷ தர்மம்

🌹 விசேஷ தர்மம்! 

தன்னை கிருஷ்ண பகவான் வஞ்சித்து கொன்று விட்டான் என்று கர்ணன் தனது தந்தை ஸுரிய பகவானிடம் கூற, அவர் அதை மறுத்து கர்ணனுக்கு கூறிய பதிலை படியுங்கள்.

மரணத்துக்குப் பின் தன் தந்தையான சூரியனின் இருப்பிடத்தை அடைந்த கர்ணன் சூரியனிடம்,

“தந்தையே! நான் என் நண்பன் துரியோதனனுக்குச் செஞ்சோற்றுக் கடன் தீர்க்க வேண்டுமென்ற நல்லெண்ணத்தில் போர் புரிந்தேன்.

ஆனால் வஞ்சகன் கண்ணன் என்னை வஞ்சித்து வீழ்த்தி விட்டானே!” என்று புலம்பினான்.
அப்போது சூரிய பகவான்,

“இல்லை கர்ணா! கண்ணனை வஞ்சகன் என்று சொல்லாதே. நீ ஒரு தவறு செய்து விட்டாய்.
செஞ்சோற்றுக் கடன் தீர்ப்பது சிறந்த தர்மம் என்பதில் சந்தேகமே இல்லை.

ஆனால் கண்ணனோ சாமானிய தர்மங்களை விட உயர்ந்த விசேஷ தர்மமாக விளங்குபவன்.
“க்ருஷ்ணம் தர்மம் ஸனாதனம்” என்று அதனால் தான் சொல்கிறோம்.

அந்தக் கண்ணன் என்ற விசேஷ தர்மத்துக்கும், செஞ்சோற்றுக் கடன் தீர்த்தல் என்ற சாமானிய தர்மத்துக்கும்
முரண்பாடு வருகையில் விசேஷ தர்மத்தைக் கைக்கொள்ள வேண்டும்.

நீ அதை விட்டுவிட்டுச் சாமானிய தர்மத்தைக் கைக்கொண்டு விசேஷ தர்மத்தைக் கைவிட்டாய். அதனால் தான் அழிந்தாய்.

தந்தைசொல் மிக்க மந்திரம் இல்லை என்பது உயர்ந்த தர்மம் தான்.

அதற்காக இரணியனின் பேச்சைக் கேட்டுப் பிரகலாதன் நடந்தானா? நரசிம்மர் என்ற விசேஷ தர்மத்தை அல்லவோ கைக்கொண்டான்!

விபீஷணனும் தன் அண்ணன் ராவணனுக்கு நன்றி பாராட்டுதலாகிய சாமானிய தர்மத்தை விட்டு,
விசேஷ தர்மமான ராமனை வந்து பற்றவில்லையா? தாயிற் சிறந்த கோவிலுமில்லை என்பதற்காகக் கைகேயியின்
ஆசைக்குப் பரதன் உடன்பட்டானா? 

மகனே! சாமானிய தர்மங்களை நிச்சயம் பின்பற்ற வேண்டும் என்பதில் ஐயமில்லை.

ஆனால் விசேஷ தர்மத்தோடு அதற்கு முரண்பாடு ஏற்படும் சூழ்நிலையில் விசேஷ தர்மத்தையே முக்கியமாகக் கைக்கொள்ள வேண்டும்.

அவ்வகையில் கண்ணனே அனைத்து தர்மங்களுக்கு சாரமான விசேஷ தர்மம் என உணர்வாயாக!” என்றார்.

வடமொழியில் ‘வ்ருஷம்’ என்றால் தர்மம் என்று பொருள். ‘வ்ருஷாகபி:’ என்றால் தர்மமே வடிவானவர் என்று பொருள்.

கர்ணனுக்கு சூரியன் உபதேசித்தபடி தர்மமே வடிவானவராகத் திருமால் விளங்குவதால் ‘வ்ருஷாகபி:’ என்றழைக்கப்படுகிறார்.

அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 102-வது திருநாமம்.
“வ்ருஷாகபயே நமஹ” என்ற திருநாமத்தைத் தினமும் சொல்லி வந்தால், 

முரண்பாடான சூழ்நிலைகளில் நாம் சிக்கிக் கொள்ளும் போது சரியான முடிவெடுக்கும் ஆற்றலை அந்தக் கண்ணபிரான், நமக்குத் தந்தருள்வார்!!!

Thursday, April 14, 2022

பறவைகளிடமிருந்து நாம் சில பாடங்களை படிப்போம்

🦚🦚🦜🦜🦢🦢🦉🦉

*பறவைகளிடமிருந்து நாம் சில பாடங்களை படிப்போம்...* 🦜🦚

1. இரவு நேரம் ஒன்றும் சாப்பிடுவதில்லை 🦜
2. இரவு நேரங்களில் ஊர் சுற்றுவதில்லை🦜
3. தன் பிள்ளைகளுக்கு தக்க சமயத்தில் வாழ்க்கைக்கான பயிற்சிகளை அளிக்கின்றன.🦜
4. மூக்குமுட்ட உண்ணுவதில்லை. எவ்வளவு தானியங்களை இட்டு கொடுத்தாலும் தேவையானவற்றை மட்டும் கொத்திவிட்டு பறந்து செல்கின்றன. போகும் போது எதையும் எடுத்து போவதில்லை.🦜
5. இருள் சூழும்போதே உறங்க துவங்குகின்றன. அதிகாலை ஆனந்தமாய் பாட்டு பாடி எழுகின்றன.🦜
6. தனது ஆகாரத்தை அவை மாற்றுவதில்லை 🦜
7. தனது உடலில் வலுவுள்ளவரை உழைக்கின்றன. இரவு அல்லாது மற்ற நேரங்களில் ஓய்வு எடுப்பதில்லை.🦜
8. நோய் வந்தால் உண்ணுவதில்லை. சுகமான பின் உணவு எடுத்துக்கொள்கிறது.🦜
9. தன் குழந்தைகளுக்கு பரிபூரணமான அன்பை கொடுத்து வளர்க்கின்றன.🦜
10. கடுமையான உழைப்பாளிகளாயிருப்பதால், இதயம், கல்லீரல், நுரையீரல் நோய்களால் பாதிக்கப்படுவதில்லை.🦜
11. இயற்கைக்கு எதிராக ஒருபோதும் செயலாற்றுவதில்லை. தனது அத்தியாவசிய தேவைக்கு மட்டும் இயற்க்கையிலிருந்து பெற்று கொள்கின்றன.🦜
12. தனது கூடு மற்றும் சுற்று சுற்று சூழல்களை அனுசரனையோடு பாதுகாக்கின்றன.🦜
13. ஒருபோதும் தனது மொழியினை மாற்றி வேற்று மொழி கலந்து பேசுவதில்லை.🦚

இதில் சில படிப்பினைகளையாவது நாம் பாடமாக எடுத்துக்கொண்டால் வாழ்வு சிறப்பது திண்ணம். 

Wednesday, April 13, 2022

பில்லி, சூன்யத் துன்பங்களை நீக்கும் கும்பகோணம் திருபுவனம் கம்பஹரேஸ்வரர் கோயில் ஸ்ரீ சரபேஸ்வரர்

பில்லி, சூன்யத் துன்பங்களை நீக்கும் கும்பகோணம் திருபுவனம் கம்பஹரேஸ்வரர் கோயில் ஸ்ரீ சரபேஸ்வரர் வீடியோ ஸ்ரீ சரபேஸ்வரர் துதி இன்று 10/4/2022 ஞாயிறு அன்று பதிவு செய்துள்ளோம். . பில்லி, சூன்யம், ஏவல் போன்றவை உண்மையா, பொய்யா? அவை எப்படிச் செயல்படுகின்றன?‘ என்று ஆராய்ச்சி செய்வதை விட அத்தகைய கொடுமையான விளைவுகளிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்வதே புத்திசாலித்தனம். சரபேஸ்வரர் வழிபாடு எல்லாவிதமான பில்லி, சூன்யத் துன்பங்களையும் தீர்க்கும்
.ஸ்ரீ சரபேஸ்வரர் திருவடிகள் துணை
.

ஸ்ரீ சரபேஸ்வரர் துதி

ஓம் ஸாலுவேசாய வித்மஹே
பட்ஷி ராஜாய தீமஹே
தந்நோ சரபேஸ்வர ப்ரசோதயாத்
அஸ்ட பாதாய வித்மஹே
பட்ஷி ராஜாய தீமஹே
தந்நோ சரபப் ப்ரசோதயாத்

ஸ்ரீ கவச ஜலூஷர் இயற்றிய பீஜாட்சரங்கள் நிறைந்த சக்திவாய்ந்த இந்த ஸ்ரீ சரபேஸ்வர கவசத்தை
தினமும் சொல்லி வரவும் ( தக்க நிவாரணம் கிடைக்கும் .
" நரசிம்ம உக்கிரம் உடைத்து வந்த
பரமசிவம் பறவையாய் எழுந்த என் கோவே!
ஹர ஹர எனச் சொல்லி ஆனந்தமாக்கி உன்னை
உரத்த குரலில் கூவி அழைப்பேன் சாலுவேசா என்றே
சிரம் இரண்டும் கண் மூன்றும் கூறிய மூக்குடனே
கரம் நான்காய் எனைக் காத்தருளும் கருணாகரனே!
பரம் பொருளே! சரபேசா!வாழி வாழியே! "
இந்த திவ்ய கவசத்தை இப்போது சொல்லிக்கொண்டு இருக்கும் போதே இதன் மகிமையை
நீங்கள் உணரலாம் .பலபேரை காப்பாற்றிய கண்கண்ட மந்திரம்.
அனைத்து நேரங்களிலும் உங்களின் கையில் இருக்கட்டும்.
பில்லி, சூன்யம், ஏவல் போன்றவை உண்மையா, பொய்யா? அவை எப்படிச் செயல்படுகின்றன?‘ என்று ஆராய்ச்சி செய்வதை விட அத்தகைய கொடுமையான விளைவுகளிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்வதே புத்திசாலித்தனம். சரபேஸ்வரர் வழிபாடு எல்லாவிதமான பில்லி, சூன்யத் துன்பங்களையும் தீர்க்கும்.

ஸ்ரீ சரபேஸ்வரர் திருவடிகள் துணை

வெற்றி தரும் ஸ்ரீ பைரவர்

வெற்றி தரும் ஸ்ரீ பைரவர் 108 போற்றி இன்று 11/4/2022 திங்கட்கிழமை அன்று பதிவு செய்துள்ளோம்.
 பைரவர் வழிபாடு செய்வது பயத்தைப் போக்கி, வாழ்வில் தன்னம்பிக்கையைத் தரும். அந்த 108 போற்றியை கீழே பார்க்கலாம்.

01. ஓம் பைரவனே போற்றி
02. ஓம் பயநாசகனே போற்றி
03. ஓம் அஷ்டரூபனே போற்றி
04. ஓம் அஷ்டமித் தோன்றலே போற்றி
05. ஓம் அயன்குருவே போற்றி

06. ஓம் அறக்காவலனே போற்றி
07. ஓம் அகந்தையழிப்பவனே போற்றி
08. ஓம் அடங்காரின் அழிவே போற்றி
09. ஓம் அற்புதனே போற்றி
10. ஓம் அசிதாங்க பைரவனே போற்றி

11. ஓம் ஆனந்த பைரவனே போற்றி
12. ஓம் ஆலயக்காவலனே போற்றி
13. ஓம் இன்னல் பொடிப்பவனே போற்றி
14. ஓம் இடுகாட்டில் இருப்பவனே போற்றி
15. ஓம் உக்ர பைரவனே போற்றி

16. ஓம் உடுக்கை ஏந்தியவனே போற்றி
17. ஓம் உதிரம் குடித்தவனே போற்றி
18. ஓம் உன்மத்த பைரவனே போற்றி
19. ஓம் உறங்கையில் காப்பவனே போற்றி
20. ஓம் ஊழ்வினை தீர்ப்பவனே போற்றி

21. ஓம் எல்லை தேவனே போற்றி
22. ஓம் எளிதில் இரங்குபவனே போற்றி
23. ஓம் கபாலதாரியே போற்றி
24. ஓம் கங்காளமூர்த்தியே போற்றி
25. ஓம் கர்வ பங்கனே போற்றி

26. ஓம் கல்பாந்த பைரவனே போற்றி
27. ஓம் கதாயுதனே போற்றி
28. ஓம் கனல்வீசும் கண்ணனே போற்றி
29. ஓம் கருமேக நிறனே போற்றி
30. ஓம் கட்வாங்க தாரியே போற்றி

31. ஓம் களவைக் குலைப்போனே போற்றி
32. ஓம் கருணாமூர்த்தியே போற்றி
33. ஓம் கால பைரவனே போற்றி
34. ஓம் காபாலிகர் தேவனே போற்றி
35. ஓம் கார்த்திகையில் பிறந்தவனே போற்றி

36. ஓம் காளாஷ்டமிநாதனே போற்றி
37. ஓம் காசிநாதனே போற்றி
38. ஓம் காவல்தெய்வமே போற்றி
39. ஓம் கிரோத பைரவனே போற்றி
40. ஓம் கொன்றைப்பிரியனே போற்றி

41. ஓம் சண்ட பைரவனே போற்றி
42. ஓம் சட்டை நாதனே போற்றி
43. ஓம் சம்ஹார பைரவனே போற்றி
44. ஓம் சங்கடம் தீர்ப்பவனே போற்றி
45. ஓம் சிவத்தோன்றலே போற்றி

46. ஓம் சிவாலயத்து இருப்போனே போற்றி
47. ஓம் சிக்ஷகனே போற்றி
48. ஓம் சீர்காழித்தேவனே போற்றி
49. ஓம் சுடர்ச்சடையனே போற்றி
50. ஓம் சுதந்திர பைரவனே போற்றி

51. ஓம் சிவ அம்சனே போற்றி
52. ஓம் சுவேச்சா பைரவனே போற்றி
53. ஓம் சூலதாரியே போற்றி
54. ஓம் சூழ்வினை அறுப்பவனே போற்றி
55. ஓம் செம்மேனியனே போற்றி

56. ஓம் க்ஷேத்ரபாலனே போற்றி
57. ஓம் தட்சனை அழித்தவனே போற்றி
58. ஓம் தலங்களின் காவலனே போற்றி
59. ஓம் தீது அழிப்பவனே போற்றி
60. ஓம் துர்சொப்பன நாசகனே போற்றி

61. ஓம் தெற்கு நோக்கனே போற்றி
62. ஓம் தைரியமளிப்பவனே போற்றி
63. ஓம் நவரச ரூபனே போற்றி
64. ஓம் நரசிம்ம சாந்தனே போற்றி
65. ஓம் நள்ளிரவு நாயகனே போற்றி

66. ஓம் நரகம் நீக்குபவனே போற்றி
67. ஓம் நாய் வாகனனே போற்றி
68. ஓம் நாடியருள்வோனே போற்றி
69. ஓம் நிமலனே போற்றி
70. ஓம் நிர்வாணனே போற்றி

71. ஓம் நிறைவளிப்பவனே போற்றி
72. ஓம் நின்றருள்வோனே போற்றி
73. ஓம் பயங்கர ஆயுதனே போற்றி
74. ஓம் பகையளிப்பவனே போற்றி
75. ஓம் பரசு ஏந்தியவனே போற்றி

76. ஓம் பலிபீடத்து உறைவோனே போற்றி
77. ஓம் பாபம் தீர்ப்பவனே போற்றி
78. ஓம் பால பைரவனே போற்றி
79. ஓம் பாம்பணிந்த தெய்வமே போற்றி
80. ஓம் பிரளயகாலனே போற்றி

81. ஓம் பிரம்ம சிரச்சேதனே போற்றி
82. ஓம் பூஷண பைரவனே போற்றி
83. ஓம் பூதங்களின் நாதனே போற்றி
84. ஓம் பெரியவனே போற்றி
85. ஓம் பைராகியர் நாதனே போற்றி

86. ஓம் மல நாசகனே போற்றி
87. ஓம் மகோதரனே போற்றி
88. ஓம் மகா பைரவனே போற்றி
89. ஓம் மலையாய் உயர்ந்தவனே போற்றி
90. ஓம் மகா குண்டலனே போற்றி

91. ஓம் மார்த்தாண்ட பைரவனே போற்றி
92. ஓம் முக்கண்ணனே போற்றி
93. ஓம் முக்தியருள்வோனே போற்றி
94. ஓம் முனீஸ்வரனே போற்றி
95. ஓம் மூலமூர்த்தியே போற்றி

96. ஓம் யமவாதனை நீக்குபவனே போற்றி
97. ஓம் யாவர்க்கும் எளியவனே போற்றி
98. ஓம் ருத்ரனே போற்றி
99. ஓம் ருத்ராட்சதாரியே போற்றி
100. ஓம் வடுக பைரவனே போற்றி

101. ஓம் வடுகூர் நாதனே போற்றி
102. ஓம் வடகிழக்கு அருள்வோனே போற்றி
103. ஓம் வடைமாலைப் பிரியனே போற்றி
104. ஓம் வாரணாசி வேந்தே போற்றி
105. ஓம் வாமனர்க்கு அருளியவனே போற்றி

106. ஓம் விரும்பியதை அருள்வோனே போற்றி
107. ஓம் விபீஷண பைரவனே போற்றி
108. ஓம் வீழாமல் காப்பவனே போற்றி போற்றி!

மரங்களை பற்றிய அறிய தகவல்

*🌳மரங்களை பற்றிய அறிய தகவல்🌳*

*🌳1.போதி மரம் என்பது அரச மரம்.*

*🌳2.அரச மரத்துக் காற்று வயிறு தொடா்பான நோய்களைப் போக்கும்.*

*🌳3.இந்தியாவின் தேசிய மரம் ஆலமரம்.*

*🌳4.அர்ச்சுன்னுக்கு கிருஷ்ணன் உபதேசம் செய்த இடம் ஒர் ஆலமரத்தடி.*

*🌳5.நிழல் தருவதற்கு அருமையான மரம் புங்கைமரம்.*

*🌳6.வேப்ப மரக் காற்று ஆரோகியம் தருவது.*

*🌳7.வாகை மரத் தழை வாயு போக்கும்.*

*🌳8.மரங்களில் வாசம் அதிகம் சந்தன மரம் களவு போவதும் அதிகம்.*

*🌳9.பல் குச்சிக்கு ஆலவிழுது சிறந்தது.*

*🌳10.மீன் அளவுள்ள ஆல விதையானது ஒரு சேனை தங்குவதற்கான நிழல் தரக் கூடியது.*

*மனிதன் ஒரு நாளைக்கு மூன்று சிலிண்டர்கள் அளவு ஆக்ஸிஜனை சுவாசிக்கிறான்.,*

*ஒரு ஆக்ஸிஜன் சிலிண்டரின் விலை 700 ரூபாய்., மூன்று சிலிண்டரின்விலை2100 ரூபாய்., ஒரு வருடத்திற்கு 7,66,000 ரூபாய்க்கு மேல் போகிறது.,*

*ஒரு மனிதனின் சராசரி ஆயுள் காலம் 65 வருடம் என்றால் 5 கோடி ரூபாய்க்கு மேல் எட்டுகிறது.,*

*இவ்வளவு விலையுயர்ந்த, மதிப்பு மிகுந்த சுவாசக்காற்றை நமக்காக இலவசமாக மரங்கள் தருகிறது........,* 🌳👌

*அப்படி என்றால் நாம் மரங்களுக்கு எந்த அளவிற்கு மரியாதை கொடுக்க வேண்டும்.,* 

*மரங்கள், இயற்கை மனிதனுக்கு தந்த பொக்கிஷம்...., இனியேனும் மரங்கள் என்னும் அட்சயபத்திரத்தை அழிக்கவிடாமல் தடுத்து காக்க உறுதி எடுப்போம்.*

🌲🌳🌲🌳🌲🌳🌲🌳🌲🌳🎄🎄🎄

*🌴மரம் நடுவோம் மழை பெறுவோம்🌴*

Sunday, April 10, 2022

பாதரச லிங்கத்தை பூஜிப்பதால் கிடைக்கும் பலன்கள்

பாதரச லிங்கத்தை பூஜிப்பதால்  கிடைக்கும் பலன்கள்.

கோடிக்கணக்கான சிவலிங்கங்களை பூஜிப்பதால் கிடைக்கும் பலன்களைவிட,

பாதரச லிங்கத்தை பூஜிப்பதன் மூலம் பல மடங்கு பலன்களை எளிதில் பெற முடியும் என்கின்றன சாஸ்திர புராணங்கள்.

பிரம்மபுராணத்தின் கருத்துப்படி, மனதிலுள்ள ஆசைகளையெல்லாம் பூர்த்தி செய்யும் பாதரச லிங்கத்தை பூஜிக்கும் மனிதன் தன்யனாகிறான்.

யார் வேண்டுமானாலும் பாதரச லிங்கத்தை பூஜித்து எல்லா பவுதிக சுகங்களையும் அனுபவித்து, பரமபதத்தை அடைய முடியும். பிரம்மவைவர்த்த புராணம் சொல்லுவது என்னவென்றால் பாதரலிங்கத்தை விதிப்படியும் முறைப்படியும் ஒரே ஒரு முறை பூஜிப்பவர்கள்கூட சூரிய சந்திரர்கள் இருக்கும் வரை அளவில்லா சுகத்தைப் பெற முடியும்!

சிவ நிர்ணய ரத்னாகரம் என்ற நூலின் கருத்துப்படி கல்லாலான சிவலிங்கத்தை பூஜிப்பதைவிட கோடி மடங்கு நற்பலன், தங்கம் வேயப்பட்ட சிவலிங்கத்தை பூஜிப்பதால் கிடைக்கும். 

அதைவிட பன்மடங்கு பலன் ரத்தினங்கள் பதித்த லிங்கத்தை பூஜிப்பதால் கிடைக்கும். 

ஆனால் அதைவிட பலப்பல மடங்கு பலன், பாதரச லிங்கத்தின் பூஜை அல்லது தரிசனத்தாலேயே கிடைக்கும். 

பாதரச லிங்கத்தைவிட உயர்வான சிவலிங்கம் உலகில் இருந்ததுமில்லை; இருக்கப்போவதுமில்லை!

சிவபுராணத்தின் கூற்றுப்படி, பசு வதை செய்த பாவியும், நன்றிகெட்ட மனிதனும், வீரனைக் கொலை செய்தவனும், கர்ப்பத்தலுள்ள சிசுவைக் கொன்றவனும், தாய் தந்தையரைக் கொன்றவனும்கூட, பாதரச லிங்கத்தை பூஜித்து வந்தால், எல்லாப் பாவங்களிலிருந்தும் விடுபட்டு, முக்தியை அடைய முடியும்! வாய்விய சம்ஹிதையின் கருத்துப்படி நீண்ட ஆயுள், ஆரோக்கியம், ஐஸ்வரியம் மற்றும் நம் வாழ்வில் வேண்டுவதையெல்லாம் பெறுவதற்கு ஒரே சிறந்த சுலபமான வழி பாதரச லிங்கத்தை பூஜித்து வழிபடுவதுதானாம்.

சர்வதரிசன சங்கிரகம் என்ற நூலில் பாதரசத்தை திடப்பொருளாக்கி, அதை லிங்கமாக்கி பூஜிப்பவர்களுக்கு, எப்போதுமே மரணபயம் இருப்பதில்லை. 

தவிர எந்த ஒரு காலத்திலும் அவர்கள் வீட்டில் வறுமை எட்டிப் பார்ப்பதில்லை என்று சிவபெருமான் பார்வதியிடம் கூறியிருப்பதாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

ரசார்ணவ தந்திரம் என்ற நூலின் கருத்துப்படி எந்த ஒரு மனிதனும் ஒரே ஒருமுறை பாதரசலிங்கத்தை பூஜித்து விட்டாலே போதும், அவனுக்கு வாழ்கையில் அறம், பொருள், இன்பம், வீடு என்ற சித்திகள் கிடைத்துவிடுகின்றன.

பிரசித்திபெற்ற ஆயிரம் லிங்கங்களை பூஜிப்பதால் கிடைக்கும் பலனைவிடக் கோடி மடங்கு நற்பலன், பாதரச லிங்கத்தை பூஜிப்பதால் கிடைக்கிறது. 

ரசமுச்சயம் என்ற நூலில், பாதரசலிங்கத்தைத் தொடர்ந்து ஆராதித்து வருவதால், எல்லாவித நோய்களிலிருந்தும் விடுதலை கிடைக்கிறது.

வயதான காலத்தில், மனிதனை நோயின்றி வைத்துக் கொள்வதற்கு வேறெந்தத் தரவரத்திற்கோ, உலோகத்திற்கோ சக்தியில்லை. 

ஏனெனில் அவை எல்லாமே தண்ணீரில் கரைந்து போகக்கூடியவை; வெப்பத்தால் காய்ந்து போகக்கூடியவை. ஆனால் பாதரசம் ஒன்றுதான் எதனாலும் பாதிக்கப்படுவதில்லை. 

பாதரசத்தை விசேஷச் செயல்பாடுகள் மூலம் திடபதார்த்த மாக்குவதால், அது அமிர்தமாகி விடுகிறது.

அப்படி திடப்படுத்தப்பட்ட பாதரசத்தில் சிவலிங்கத்தை உருவாக்கி, அந்த லிங்கத்தை வழிபடும் பக்தர்களுக்கு கல்வி, அறிவு, செல்வம், சொத்து, சுகம், அமைதி, செழிப்பு, ஐஸ்வர்யம், மக்களன்பு முதலிய எல்லாப் பலன்களும் தானாகவே வந்தடைகின்றன. 

பாதரசம் நோய்களை அகற்றி புத்துயிரும் புது இளமையையும் கொடுக்கிறது. 

அதோடு அஷ்டசித்திகளையும் நவநிதிகளையும் அளிக்கிறது.

சாதாரணமாக பாதரசத்தில் அழுத்தங்கள் நிறைய இருக்கும். அதை புடம் போட்டு அசுத்தங்களை அகற்றிய பிறகுதான் அது திடபதார்த்தமாக்கப்படுகிறது.

அதிலிருந்து வடிவமைக்கப்படும் சிவலிங்கம் முழுப் பலன்களையும் அளிக்கவல்லது.

விதிமுறைப்படி தினந்தோறும் அனுஷ்டானங்கள் செய்து பூஜை, அர்ச்சனை, ஆரத்தி முதலிய சேவைகள் செய்து ஆராதிக்கக்கூடியவர்கள் மட்டும் பாதரச லிங்கத்தை வீட்டில் ஸ்தாபிக்க வேண்டும். 

வெறும் லிங்கத்தைக் கொண்டு வந்து பூஜை அறையில் வைத்து விடுவதால் மட்டும் பலன் கிடைப்பதில்லை!

Friday, April 8, 2022

காஞ்சி மகா பெரியவருக்கு அருளிய அம்பிகை

*"காஞ்சி மகா பெரியவருக்கு அருளிய அம்பிகை"*

(குழந்தை உருவத்தில் ஒரு சிறுமி கையில் தண்ணீர் சொம்புடன் மகா பெரியவர் முன்பாக வந்து, "இந்தாருங்கள்.... தண்ணீர் கேட்டீர்களே" என்று கூறி கொடுத்தாள்- இது நங்கநல்லூர் அதிசயம்).

பல வருடங்களுக்கு முன்பு நடந்த அதிசயம் இது.

அப்போது ஒருநாள், காஞ்சி மகா பெரியவர் சென்னை பரங்கிமலையில் இருக்கும் ஸ்ரீ நந்தீஸ்வரரை தரிசிக்கும் பொருட்டு, தனது பக்தர்களுடன் பாத யாத்திரையாக வந்து கொண்டிருந்தார். வரும் வழியில், திரிசூலம் சென்று அங்கு திரிசூலநாதரையும் திரிபுரசுந்தரியையும் தரிசித்தார்.

வரும் வழியில், பழவந்தாங்கலில் ஓரிடத்தில் சற்று ஓய்வு கொள்ள எண்ணம் கொண்டவராக,அங்கிருந்த அரச மரத்தடியில் அமர்ந்தார்.

அப்போது அவருக்கு சற்றே நாவறட்சி ஏற்பட்டு, தண்ணீர் பருக வேண்டும் என்று தோன்ற தனது சிஷ்யர் ஒருவரை அழைத்தார். மகா பெரியவா கேட்டது சிஷ்யர் காதில் விழவில்லை.

சிறிது நேரத்தில் ஒரு சிறுமி கையில் தண்ணீர் சொம்புடன் மகா பெரியவர் முன்பாக வந்து, "இந்தாருங்கள்.... தண்ணீர் கேட்டீர்களே" என்று கூறி கொடுத்தாள். அதை வாங்கிப் பருகிவிட்டு சொம்பை திருப்பிக் கொடுக்க சிறுமியை அவர் தேடியபோது அங்கு அவளை காணவில்லை.

உடனே தனது சிஷ்யரை அழைத்து விவரத்தைக் கூறி, "யார் அந்த சிறுமி, தண்ணீரை நீங்கள் தான் சிறுமியிடம் கொடுத்து அனுப்பினீர்களா?" என்று கேட்க, அவர்களோ, "இல்லையே... அந்த சிறுமி யாரென்றே தெரியாது" என்று வியப்புடன் கூறினார்களாம்.

தொடர்ந்து மகா பெரியவர் சற்றே கண்மூடி அமர்ந்திருந்தார். வந்தது சாட்சாத் அந்த அகிலமெல்லாம் காக்கும் அம்பிகையான ஸ்ரீ ராஜராஜேஸ்வரியே என்பதை உணர்ந்து, அன்றைய கிராமமான பழவந்தாங்கல் கிராம பெரியவர்களையும், ஊர் மக்களையும் அழைத்து, "இந்த இடத்தில் அம்பிகை எங்கோ புதைந்து கிடக்கிறாள். உடனே தோண்டி கண்டு பிடியுங்கள்" என்று சொல்லிவிட்டு ஸ்ரீ நந்தீஸ்வரரை தரிசிக்க சென்றுவிட்டார்.

மகா பெரியவர் கூறியபடி, கிராமப் பெரியவர்கள்
அந்த இடத்தைத் தோண்ட, முதலில் அம்பிகையின் குழந்தை வடிவிலான விக்ரகமும், தொடர்ந்து ஸ்ரீ சண்டிகேஸ்வரி விக்ரகமும் கிடைத்தது.

இந்தத் தகவல் மகா பெரியவருக்கு தெரிவிக்கப்பட்டது. அவரும் மகிழ்வுற்று, அந்த இடத்தில் திரும்பவும் விக்ரக பிரதிஷ்டை செய்து, அந்த அம்பிகைக்கு 'ஸ்ரீவித்யா ராஜராஜேஸ்வரி' என்ற திருநாமத்தை வைத்தார். இதுதான், நங்கநல்லூரில், பழவந்தாங்கல் நேரு காலனியில் அமைந்துள்ள ஸ்ரீவித்யா ராஜ ராஜேஸ்வரி அம்மன் கோவில்.

இங்கு ஸ்ரீ ராஜராஜேஸ்வரி, சிறுமி வடிவத்தில் அருள் பாலிப்பது சிறப்பு. இந்தக் காட்சியை வேறு எங்கும் காண்பது அரிது.

ஜய ஜய சங்கர ஹரஹர சங்கர 
காஞ்சி சங்கர காமகோடி சங்கர 
Vani Jayaraman 
01.04.2022

வாழ்வில் என்றும் சுபிட்சத்தை பெற உதவும் மீனாட்சி அம்மன் காயத்ரி மந்திரம்

#வாழ்வில் என்றும் சுபிட்சத்தை பெற உதவும் மீனாட்சி அம்மன் காயத்ரி மந்திரம் 🌺

 தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கோவில்கொண்டு இவ்வுலகையே காத்து ரட்சிக்கும் அன்னை மீனாட்சி அம்மனை வழிபடுவதன் பலனாக நாம் பல அற்புத நன்மைகளை பெற முடியும். தமிழகத்தில் உள்ள 366 மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்களின் மூலக் கோயிலாக உள்ளது மதுரை மீனாட்சி அம்மன் கோவில். அதோடு 248 சக்தி பீடங்களில் ஒன்றாக இந்த கோவில் உள்ளது. அகிலத்தை காக்கும் மீனாட்சி அம்மனை வழிபடுவோருக்கு வாழ்வில் என்றும் சுபிட்சம் நிலைக்கும் என்பது நம்பிக்கை. அந்த வகையில் மீனாட்சி அம்மனை வழிபடும் சமயத்தில் அவளுக்குரிய காயத்ரி மந்திரம் அதனை கூறுவது நமக்கு சிறப்பு சேர்க்கும்.

🌺 மீனாட்சி அம்மன் காயத்ரி மந்திரம் 🌺

ஓம் உந்நித்ரியை வித்மஹே ஸுந்தப ப்ரியாயை தீமஹி தந்நோ மீனாதேவீ ப்ரசோதயாத் 

 செவ்வாய் மற்றும்
வெள்ளிக்கிழமைகளில் இந்த மந்திரத்தை 108 முறை ஜெபிப்பதன் பலனாக பெண்களுக்கு அழகு கூடும், அற்புதமான கணவன் அமைவார், வீட்டில் சுபிட்சம் பெருகும், மன நிம்மதி அதிகரிக்கும். 

 மீனாட்சி அம்மன் வழிபாடு :

மதுரையை ஆண்ட மலையத்துவச பாண்டியன் மன்னனுக்கு சக்தியாகிய பார்வதி தேவி மகளாக பிறந்தார். அவருக்கு மீனாட்சி என்கிற பெயரை சூட்டி வளர்த்தார் மலையத்துவஜ பாண்டியன். திருமண வயதை அடைந்த மீனாட்சி வீரத்தில் சிறந்து விளங்கினார். அனைத்து நாட்டு மன்னர்களையும் போரில் வென்று இறுதியில் கைலையிலிருக்கும் சிவபெருமானிடம் போரிட்டபோது, அந்த சிவனே தனது வருங்கால மணாளன் என்பதை உணர்ந்தார். மீனாட்சியிடம் அந்த சிவபெருமானும் தோற்றார். இருவரும் மனமொத்து மதுரை மாநகரில் திருமணம் செய்த பிறகு, மீனாட்சி – சுந்தரேஸ்வரர் என்கிற பெயரில் மதுரை நகரிலேயே கோவில் கொண்டுள்ளனர். சக்தியின் வடிவமான மீனாட்சியை வழிபடுபவர்களுக்கு வாழ்வில் அனைத்து மங்களங்களும் உண்டாகிறது என்பது பக்தர்களின் அனுபவ பூர்வமான உண்மையாக இருக்கிறது. 

மீனாட்சி அம்மன் வழிபாட்டிற்குரிய தினங்கள் :

மங்களங்கள் வழங்கும் தேவியான மீனாட்சியை அனைத்து தினங்களிலும் வழிபடலாம் என்றாலும் வாரத்தில் வருகின்ற புதன் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் வழிபடுவது மிகவும் சிறப்பானதாகும். மேலும் சித்திரை மாதத்தில் வருகின்ற சித்ரா பௌர்ணமி தினத்தில் மீனாட்சி அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் அர்ச்சனை செய்து வழிபடுவது வாழ்வில் நன்மைகள் அதிகம் ஏற்பட செய்யும் ஒரு சிறந்த வழிபாடாக இருக்கிறது. 

மீனாட்சி அம்மன் வழிபாடு பலன்கள்:

 மீனாட்சி அம்மன் நவகிரகங்களில் புதன் கிரகத்தின் அம்சம் கொண்டவராக இருக்கிறார். எனவே ஜாதகத்தில் புதன் கிரக தோஷங்கள் இருப்பவர்கள் மீனாட்சி அம்மனுக்குரிய காயத்ரி மந்திரங்களை ஜெபித்து, வழிபாடு செய்வதால் தோஷங்கள் நீங்கி, நன்மைகள் உண்டாகும். வறுமை நிலை நீங்கி செல்வங்கள் பெருகும். தொழில், வியாபாரங்களில் நஷ்டங்கள் ஏற்படாமல் நல்ல வருமானமும் உண்டாகும். கல்வி, கலைகளில் சிறந்து விளங்க முடியும். திருமணமாகாத ஆண்கள் மற்றும் பெண்கள் சிறந்த வாழ்க்கைத்துணை அமையப் பெறுவார்கள். மன அமைதி கிடைக்கும்...🌺

Featured Post

உணவு முறைல முடிஞ்ச அளவு மாற்றம் பண்ணுங்க.

  நாம ஏன் சோணகிரியா இருக்கோம்? தொத்த பாடியா இருக்கோம்? பழங்கால மக்களுக்கு மட்டும் எப்படி திமில் கொண்ட தோளும், மதர்த்த நெஞ்சும் வந்தது? உணவு ...