Wednesday, June 28, 2023

விண்வெளி துறையில் அமெரிக்காவுடன் கை கோர்க்கும் இந்தியா

 விண்வெளி துறையில் அமெரிக்காவுடன் கை கோர்க்கும் இந்தியா

வாஷிங்டன்:

 பிரதமர் மோடி அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள நிலையில், இந்தியா அமெரிக்கா இணைந்து 2024ஆம் ஆண்டில் ஒரு கூட்டு விண்வெளி பயணத்தை மேற்கொள்ள உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கடந்த செவ்வாய்க்கிழமை அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அவர் இதற்கு முன்பு பல முறை அமெரிக்கா சென்றிருந்தாலும், அரசு முறை பயணமாக அமெரிக்கா

பிரதமரின் இந்த பயணத்தில் பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் எனத் தெரிகிறது. இதற்கிடையே யாரும் எதிர்பார்க்காத வகையில் இரு நாடுகளும் விண்வெளி துறையில் இணைந்து செயல்பட உள்ளதாக இப்போது தகவல் வெளியாகியுள்ளது.

விண்வெளி துறை: பிரதமர் நரேந்திர மோடி அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள நிலையில், இதில் பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஜெட் இன்ஜின், டிரோன்கள் குறித்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என முன்கூட்டியே தகவல் வெளியானது. இதற்கிடையே யாரும் எதிர்பார்க்காத வகையில் இரு நாடுகளும் விண்வெளி துறையில் மிக முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே இந்தியா ஆர்ட்டெமிஸ் உடன்படிக்கையில் இணைய முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இது விண்வெளி துறையில் முக்கிய உடன்பாடாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. மேலும், அமெரிக்காவின் நாசா மற்றும் இந்தியாவின் இஸ்ரோ ஆகியவை இணைந்து 2024ஆம் ஆண்டில் ஒரு கூட்டு விண்வெளி பயணத்திற்கு ஒப்புக் கொண்டதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

இந்தியப் பிரதமர் மோடி இன்னும் சில மணி வெள்ளை மாளிகையில் அதிபர் பைடனை சந்திக்கவுள்ள நிலையில், இந்தத் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் கூறுகையில், "மனிதக்குல நலனுக்காக விண்வெளி ஆய்வுக்கான பொதுவான திட்டத்தை முன்வைக்கும் ஆர்ட்டெமிஸ் உடன்படிக்கையில் இந்தியா கையெழுத்திடுகிறது" என்று அவர் தெரிவித்தார்.

அதென்ன ஆர்ட்டெமிஸ் உடன்படிக்கை: 1967ஆம் ஆண்டின் அவுடர் ஸ்பேஸ் ஒப்பந்தத்தை (OST) அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டதுதான் இந்த ஆர்ட்டெமிஸ் உடன்படிக்கை. விண்வெளியின் ஆய்வு மற்றும் பயன்பாட்டை நிர்வாகம் குறித்து விரிவான வழிகாட்டுதல்களை இது கொண்டிருக்கிறது. பொதுவாக சர்வதேச விண்வெளி ஆய்வுகளில் இதுதான் ரோட் மேப்பாக இருக்கும். ஆர்ட்டெமிஸ் உடன்படிக்கை படி 2025ஆம் ஆண்டுக்குள் சந்திரனுக்கு எளிதாக மனிதர்களை அனுப்பும் முயற்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இது எதிர்காலத்தில் செவ்வாய் உள்ளிட்ட மற்ற கிரகங்களுக்கு மனிதர்களை அனுப்புவதில் முக்கிய பங்கு வகிக்கும். இந்த ஆர்டெமிஸ் உடன்படிக்கையில் தான் இந்தியா கையெழுத்திட உள்ளதாக முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. இது இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் முக்கியமானதாக இருக்கும்.

No comments:

Featured Post

உணவு முறைல முடிஞ்ச அளவு மாற்றம் பண்ணுங்க.

  நாம ஏன் சோணகிரியா இருக்கோம்? தொத்த பாடியா இருக்கோம்? பழங்கால மக்களுக்கு மட்டும் எப்படி திமில் கொண்ட தோளும், மதர்த்த நெஞ்சும் வந்தது? உணவு ...