Friday, April 22, 2022

சரணம் சண்முகா



சோம்பல் சொந்தம் கொண்டாட
சோகம் மனசுருக்கி சுவைக்க
வீம்பாம் விரக்தி விளையாட
வெற்றி வெகுதொலை வெகுண்டோட
தேம்பியே மனது தெளியாதிருக்க
தேகமும் மெலிந்து பின்வாட
சாம்பலாம் உம்நீறை சாற்றிநான்
"சரணம் சண்முகா" என்றேகூற
தீம்பட்ட தூசுபோல் தீமைகள்
தீய்ந்து கருகி மாய்ந்திட
மேம்பட வைப்பாய் எம்வாழ்வை
மேதினில் மேன்மை உறுதி!!
தாம்பத தருநிழல் எமக்கும்
தயவுடன் இருந்திட உண்டு!!= சிவ
காம்பே!! கந்தா!! கடைக்கண்
கருணைப் பார்வை எமைக்காணே!!!

No comments:

Featured Post

சிறந்த கேட்கும் திறன் கொண்ட மரம்

"சிறந்த கேட்கும் திறன் கொண்ட மரம்" இந்த உயிரினம் எதற்காக இறைவன் படைத்திருப்பான் இதனால் என்ன பயன் என்று சில உயிரினங்களை...