Friday, April 22, 2022

வாழ்க்கை_என்பது_என்ன...?

 வாழ்க்கை_என்பது_என்ன...?

கோபத்தில் உள்ள நபரிடம் கேட்டுப் பாருங்கள்.
வாழ்க்கை என்பது வீணான ஒன்று என்று கூறுவார்.
கவலையில் உள்ள நபரிடம் கேட்டுப் பாருங்கள்.
வாழ்க்கை மிகவும் மோசமான ஒன்று என்று கூறுவார்.
விரக்தியில் உள்ள நபரிடம் கேட்டுப் பாருங்கள்.
வாழ்க்கை வலிகள் நிறைந்தது என்று கூறுவார்.
தோல்வியில் உள்ள நபரிடம் கேட்டுப் பாருங்கள்.
வாழ்க்கை ஏமாற்றம் நிறைந்தது என்று கூறுவார்.
அதேபோல,
மகிழ்ச்சியாக உள்ள நபரிடம் கேட்டுப் பாருங்கள்.
வாழ்க்கை மிகவும் அழகானது என்று கூறுவார்.
வெற்றிபெற்ற நபரிடம் கேட்டுப் பாருங்கள்.
வாழ்க்கை கொண்டாட்டம் நிறைந்தது என்று கூறுவார்.
வாழ்க்கையை புரிந்துகொள்ள முயற்சி செய்யும் நபரிடம் கேட்டுப் பாருங்கள்.
வாழ்க்கை மிகவும் புதிரானது என்று கூறுவார்.
அனுபவம் நிறைந்த நபரிடம் கேட்டுப் பாருங்கள்.
வாழ்க்கை இன்பம், துன்பம் என இரண்டின் கலவை என்று கூறுவார்.
இதுதான் வாழ்க்கை, இப்படித்தான் வாழ்க்கை என்பது நமது சூழலும், அந்த சூழலில் நமக்குள் உருவான உணர்வுகளும், அந்த உணர்வுகள் வெளிப்படுத்தும் கண்ணோட்டமும் தான் முடிவு செய்கிறது.
எனவே, நாம் மாற்ற வேண்டியது நமது கண்ணோட்டத்தைத் தான்.
வாழ்க்கை பற்றிய நமது கண்ணோட்டம் சரியாக இருக்கும் எனில், நமது சூழல் மற்றும் உணர்வுகளும் சரியாக மாறிவிடும்.
இந்த உண்மையை நாம் உணர்ந்தால் மன அமைதியுடன் நம்‌ வாழ்க்கையை வாழலாம்.

No comments:

Featured Post

உணவு முறைல முடிஞ்ச அளவு மாற்றம் பண்ணுங்க.

  நாம ஏன் சோணகிரியா இருக்கோம்? தொத்த பாடியா இருக்கோம்? பழங்கால மக்களுக்கு மட்டும் எப்படி திமில் கொண்ட தோளும், மதர்த்த நெஞ்சும் வந்தது? உணவு ...