Friday, April 22, 2022

தமோ + ரஜோ குணங்களே ஆசைக்கு காரணம்

 ஆசையே துன்பத்திற்கு காரணம் என்று புத்தர் சொல்லிவிட்டு சென்று விட்டார். எனவே, ஆசைகளை அகற்றுவதற்கு உங்களுக்கு வேறு ஒரு குரு தேவைப்படுகிறார்.*

*உடலும் மனமும் தானென எண்ணும், நமது தாத்தா பாட்டி அப்பா அம்மா இவர்களை ரோல் மாடலாக எண்ணியே நாமும், வாழ தொடங்குகிறோம். அவர்கள் பயணித்த இந்த தவறான பாதையில் தான் நாமும் நீண்ட தூரம் பயணித்து விட்டோம் !!! நீங்களே சொல்லுங்கள் !!!! தவறான பாதையில் நீண்ட தூரம் பயணிப்பவன் இறுதியில் காணாமல் போவானல்லவா? அவ்வாறு தான், நம்மில் நாமே தொலைத்து விட்டோம்.*
*நான் இந்த உடல் என்கிற தமோ குணமும், நானிந்த மனம் என்கிற ரஜோ குணமும், போன்ற தவறான குணங்கள், பசுமரத்தாணி போல நச்சென்று நம் மனதில் ஆழமாக பதிந்து விட்டது. இதன்காரணமாகவே சாத்வீக குணத்தில் நமக்கு பஞ்சம்/பற்றாக்குறை ஏற்பட்டு விடுகிறது*
*ஆக, இந்த தமோ + ரஜோ குணங்களே ஆசைக்கு காரணம் !!!*
*இவ்வுடலும் நானல்ல !!! இந்த மனமும் நானல்ல என்கிற அறியாமையில் வாழ்ந்ததெல்லாம் போதுமடா சாமி !!! ஆசைப்பட்டு ஆசைப்பட்டு அவதிப் பட்டதெல்லாம் போதுமடா சாமி !!!*
*உன்னுள் உயிர்ப்பாய் இருப்பதும், உடலை முறையாக இயக்கி, சீராக வளர்ப்பதும் இந்த உயிர் தானே !!! அந்த உயிர்தான் ஆத்மா !!! அந்த ஆத்மாவே நீ !!! THATS ALL.!!!*
*HERE, THE SOUL WISDOM BEGINS: தமோ ரஜோ குணங்களிலிருந்து விடுபட்ட ஒருவன் சாத்வீக குணத்தை அடைவதும் இங்கேதான் !!! ஆசைகளில் இருந்து விடுபட்டவன் ஆத்ம ஞானத்தை அடைவதும் இங்கே தான் !!!*
*உன்னுடைய உடல் உட்பட, இவ்வுலகில் உள்ள அனைத்து பொருட்களுக்கும் ஐம்பூதங்களால் (நிலம்நீர் தீக்காற்றாகாயம்) அழிவு உண்டு !!! ஆனால், உயிர் எனப்படும் ஆன்மாவை கத்தியால் வெட்ட முடியாது !!! நீரால் மூழ்கடிக்க முடியாது !!! நெருப்பால் வேகவைக்க முடியாது !!! காற்றால் உலர வைக்க முடியாது என கீதை கூறுகிறது.*
*எனவே, அந்த ஆத்மாவையும் ஆத்மஞானியையும் எவராலும் வீழ்த்தவே முடியாது !!!*
*நீங்களே சொல்லுங்கள் !!! வீழ்த்தவே முடியாதவருக்கு (ஆத்மஞாணிக்கு= உனக்கு) எதிரிகள் எவ்வாறு இருக்க முடியும் ?*
*எதிரிகளே இல்லாத ஆத்மஞாணிக்கு பயம் எவ்வாறு இருக்கும்?*
*எதற்கும் பயப்படாத ஆத்மஞாணி எங்ஙனம் கவலை கொள்வான் ?*
*ஆம் !!! கவலையற்ற ஆத்மஞானி எப்போதும் மனம்-நிரைந்தவனாக தன்னில் சந்தோஷமாக இருப்பான்.*
*ஆக, 1. நான் உடலல்ல என்ற ஞானம் உடல்மீதுள்ள பற்றை குறைத்து கவலைகளை நீக்கும்.*
*நான் இந்த மனமல்ல என்ற ஞானம் நான், எனது போன்ற possessive ness தன்னலத்தைக் குறைத்து அகந்தையை அழிக்கின்றது !!!*
*3. நான் ஆத்மா என்ற ஞானம் நான் மரணமற்றவன் + நான் எதிரியற்றவன் + நான் பயமற்றவன் + நான் கவலையற்றவன் + நான் மரணகவலை இல்லாதவன் + நானர மனநிறைவு கொண்டவன் + நான் தன்னில் ஆனந்தமாக இருப்பவன் போன்ற நல்லுணர்வுகளை இந்த அந்த ஆத்ம ஞானம் தருகின்றன !!!*
*எந்தவொரு ஞானத்தை நீ பெற்றால், அதற்கும் மேலான சிறந்ததொரு ஞானத்தை நீ பெற வேண்டியதில்லை என்கிற பரிபூரண-மனநிறைவை உனக்கு தருகிறதோ அந்த ஞானமே ஆத்ம ஞானமாகும் !!!*
*எந்த ஒரு ஞானத்தை நீ பெறுவதால்*
*உன் மரணத்தின் போது கூட உன்மனம் சந்தோஷமாக இருக்குமோ* ... —> *ஆச்சர்யத்தைத் தரும் அந்த ஞானமே ஆத்மஞானமாகும் !!!*
*அந்த ஆத்மாவைப் பற்றிய ஞானம் தான் எது ? அதாவது, ... ஆத்மா என்றால் என்ன ? ஞானம் என்றால் என்ன ?*
*மொத்தத்தில், ஆத்மஞானம் என்றால் என்ன ? LET US LISTEN CAREFULLY THE 2 EQUATIONS !!!*
*ஆத்மா = உயிர் !!! (1)*
*ஞானம் =அறிவு !!! (2)*
--------------------------------
*Adding, (1) + (2) we get,*
*ஆத்மஞானம் = உயிரைப் பற்றிய அறிவு.*
--------------------------------
*Yes, It Remains To Learn About The Soul !!!*
*இப்போதிருக்கும் உனது இந்த உடலில் தங்கியிருக்கும் உயிர் எனப்படுவதும் ஆத்மாவே !!!*
*மனித-ஜீவன்களின் உடல்களிலும்*, ...
*அனைத்து விலங்கு உடல்களிலும், வாசம் செய்து கொண்டு இருப்பதும் உயிர் எனப்படுவதும் ஆத்மாவே !!!*
*பஹவான் ஸ்ரீகிருஷ்ணரின் பரமாத்மாவும் அஃதே !!!*
*அந்த ஆத்மாவே நான் !!! ஆக, ஒருவன் தன்னை அறிதலும், ஆத்மாவை அறிதலும் பரமனை அறிதலும் ஒன்றுதான் !!!*
*ஆம் !!! எனதருமை ஆன்மீக ஆன்மாக்களே !!! முதலில் தன்னை அறிய முயல்பவன் நானாத்மா என உணர்ந்து, இறுதியில் 'தானே' பராமாத்மாவின் ஒரு அங்கம் என உணர்கிறான்*
*ஆக ஒருவன்,பொருட்கள் மீது பற்றில்லாமல், எதன்மீதும் வெறுப்பின்றி, பிறருக்கு ஹிம்சை செய்யாமல், கருணையோடு உதவுகின்ற எண்ணங்களோடு தன் மனதை கட்டுப்படுத்தினால், நான் ஆன்மா என உணர்வதும் சாத்தியம் !!! அவன் இறைவனை அடைவதும் சத்தியம் !!!*
*இங்கு, நாமே, நம்முயிரைப் பற்றி கற்கும் ஞானம்தான் ஆத்ம ஞானம் !!!*
*ஆத்மாவுக்கு என்றும் அழிவில்லை* (3)
*நானே ஆத்மாவாக இருக்கின்றேன்(4) என இவ்விரண்டையும் 4 முறை சொல்லிப் பாருங்கள் !!!*
*அதாவது, எந்த ஆத்மாவுக்கு என்றுமே அழிவில்லையோ ... அந்த அழிவற்ற ஆத்மாவாகவே நான் இருக்கின்றேன் !!!*
*ஆனால், எல்லோரையும் போல, ... எப்போதும் போல பிடிவாதமாக, நானே உடல் என்கிறீர்களா ?*
*Wait A Minute Bro !!! "உடலை - நான்" என்பவனுக்கு நிச்சயம் மரணமுண்டு !!! மரண-பயமும் உண்டு !!! மரணக் கவலையும் உண்டு !!! உடல்மீது அதீத பற்றுதல் உள்ள காரணத்தால், அவனது மரணம் கொடுமையாகவும் இருக்கும் !!!*
*எனவே, மரண பயத்தை தவிர்க்க வேண்டுமா ? It Is Very Simple !!!*
*இத்தகைய சிக்கலான பிரச்சனைக்கும், ஆன்மீகத்தில் மிக எளிமையான தீர்வு உள்ளது !!! Such A Complicated Problem Also Has A Very Simple Solution In Spirituality !!!*
*இவ்வுடல் நானல்ல & நானிந்த மனமல்ல". என்கிற ஞானத்தை உடனே அப்பியாசம் செய்ய வேண்டும் !!!* (அடிக்கடி நினைவு கூர்ந்து அதை மனதில் நிலை நிறுத்துதல்)* *That's All.*
*எவ்வாறு செய்வது? ஆத்மா நிறமற்றவது !!! குணமற்றது என்ற நான் சென்னால், உடனே நீங்கள் அறிவு ஸ்வரூபமாக விளங்குகின்ற உயிர் எனப்படும் ஆன்மாவாகிய நானும்* ....
*1. நிறமுமற்றவன் !!!*
*2. குணமுமற்றவன் !!! என்று சொல்ல வேண்டும் !!!*
*ஆத்மா ஆணுமல்ல !!!* *பெண்ணுமல்ல !!! இரண்டும் அல்லாததும் அல்ல என்று நான் சென்னால், உடனே நீங்கள் அறிவு ஸ்வரூபமாக விளங்குகின்ற உயிர் எனப்படும் ஆன்மாவாகிய நானும்*....
*ஆணுமல்ல.*
*பெண்ணுமல்ல.*
*இரண்டும் அல்லாததும் அல்ல என்று சொல்ல வேண்டும்.*
3. *ஆத்மா சிவப்பானவனும் அல்ல கருப்பானவனும் அல்ல நெட்டையானவனும் அல்ல குட்டையான வனும் அல்ல, என்று சொன்னால், உடனே நீங்கள்* ... ... ... *என்று சொல்ல வேண்டும் !!!*
4. *இதைப் போலவே, நீங்கள் அறிவு ஸ்வரூபமாக விளங்குகின்ற உயிர் எனப்படும் ஆன்மாவாகிய நானும்* ....
*பொறாமை, ஹிம்சை செய்தல், சுயநலம், தற்பெருமை, கர்வம் என அனைத்து தீயகுணங்களும் இல்லாதவன் என்று சொல்ல வேண்டும் !!!*
*பொறாமை, ... , கர்வம் என அனைத்து தீயகுணங்களும் நம் மனதிற்கு தான் அவ்வப்போது தோன்றுவது உண்டு !!! ஆனால், ஆன்மா குணமற்றது !!! எனவே, ஆன்மாவாகிய நானும் எந்த குணமும் இல்லாதவன் !!!*
*ஒன்றும் இல்லாதவனாகிய ... அதே சமயத்தில், எங்கும் நிறைந்தவனாகிய ... எல்லாமுமாகிய* ... *ஆன்மாவாகிய நான் எதன்மீதும் எவர் மீதும் பற்று கொள்ளாதவன். அந்த ஆன்மாவாகிய நான் எவர்மீதும் விருப்பு வெறுப்பு கொள்ளாதவன் !!!*
*ஞானம் இருப்பது என்பது வேறு !!! ஞானம் நிலைப்பது என்பது வேறு !!!*
*எனவே, இந்த ஆத்ம ஞானத்தை அறிவதோடு நில்லாமல் ... இந்த ஞானத்தில் என்றும் நம் மனம் நிலைத்து நிற்குமேயானால் (அதற்கான பயிற்சியே நிதித்தியாசனம்) நான் என்கிற நீ ஒரு ஆத்மஞாணி ஆவாய் !!!*
*இவ்வாறாக, அத்மஞானத்தில் உன்மனம் நிலைபெற்று, எந்த கவலையுமில்லாமல் (இதுவே உயிரோடு இருக்கும் போதே மோட்சம் பெறுவது) "தன்னுள்" ஆனந்தமாக வாழ்வதே ஜீவன் முக்தி !!!*

No comments:

Featured Post

உணவு முறைல முடிஞ்ச அளவு மாற்றம் பண்ணுங்க.

  நாம ஏன் சோணகிரியா இருக்கோம்? தொத்த பாடியா இருக்கோம்? பழங்கால மக்களுக்கு மட்டும் எப்படி திமில் கொண்ட தோளும், மதர்த்த நெஞ்சும் வந்தது? உணவு ...