Friday, April 22, 2022

நலமாக வாழ = மெய்பிரான் ஞான சித்தர்

 இறைவன் ஞானவெளி மெய்பிரான் ஞான சித்தர் அவர்கள் அருளியது.

3. நலமாக வாழ
என் உறவே...
நீ நலமாக வாழவேண்டும்
வாழ்ந்து வாழ்வை
வெல்ல வேண்டும்.
உன் தேவைகளுக்கு
உதவ நான் தயார்
நீ தேடிக்கொண்டிருந்தவன்
இதோ நான்.
உற்றுப் பார்
வானத்தைத் தொட்டுவிடலாம்.
கற்றுப் பார் தமிழை
காலத்தை முடக்கிவிடலாம்.
உன் உயிர் சுரத்தை மீட்டும்
ராக சுரங்களைக் கொண்டது தமிழ்.
பற்றோடு படி
பற்றிப்பிடி
அத்துப்படி ஆகும்
ஆயக்கலையும்.
சாகா கலையை
நோகாமல் சொல்லும்
தந்திரம் தெரியும்
தமிழுக்கு.
கற்க
கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக
சுழுமுனை ஏற்றத்தை
சுருதி காட்டும்
சூத்திரம் பார்.
இல்லாததில்லை
இந்த தமிழில்.
கல்லாதவனுக்கோ
சொல்லத் தெரியவில்லை.
கற்பனைக்கு இடமே இல்லை.
மனதை ஆளவிடவில்லை
அருந்தமிழன்
மனதை ஆண்டவன்.
அறிந்தடங்கிப் போனதினால்
மௌனியானான்.
வாய் பேசத் தெரியாத
ஊமை இல்லை
கண் பேசத் தெரிந்த
காந்தர்வன்.
மாயத்தை மாயத்தால் மறைக்கும்
மதி உண்டு
சதி இல்லை
கதியின்றி கிடக்கவில்லை
காட்டாறு.
நாட்டாரை வாழவைத்துப் பார்க்க
சிறுத்து ஓடும்
சிறுத்தை யல்ல சிங்கம்
வேண்டலே வேண்டாமென்று
வேடிக்கைப் பார்க்கும் கூட்டம்
ஆதியும் இவனே
அந்தமும் இவனே
ஆருயிரை மீட்கும்
அருமருந்து தேனே
அகமகிழ்ந்து வாழ
அருள்கொண்ட வள்ளல்
பொருள் தேடி பிழைக்க
ஊர்நாடிச் செல்லான்
கருதேடி ஆய்ந்து
கருத்தாளன் ஆனான்
உன் குலம்
சித்த குலம்
மனித இனத்தில்
தோற்ற குலமல்ல
மனித இனத்தின்
தோற்ற குலம்.

No comments:

Featured Post

உணவு முறைல முடிஞ்ச அளவு மாற்றம் பண்ணுங்க.

  நாம ஏன் சோணகிரியா இருக்கோம்? தொத்த பாடியா இருக்கோம்? பழங்கால மக்களுக்கு மட்டும் எப்படி திமில் கொண்ட தோளும், மதர்த்த நெஞ்சும் வந்தது? உணவு ...