Sunday, March 27, 2022

நிலக்கடலையில்

இதுவே இயற்கையின் நியதி!!!
நமது உடலுக்கு தேவையான ஊட்டசத்துக்கள் நாம் சாதரணமாக நினைத்து வாங்காமல் செல்லும் விலை குறைவான பொருளில்தான் அதிகம் உள்ளது!!!
பள்ளி செல்லும் பிள்ளைகள் தினமும் 50 முதல் 100கிராம் வரை நிலகடலை சாப்பிட்டால் புரதசத்து குறைபாடு, வளர்ச்சி குறைபாடும் அவர்களுக்கு வராது!!! நல்ல ஆரோக்கியமாக வாழ்வர்!!!
நிலக்கடலையில் ரெஸ்வரெட்ரால் என்ற சத்து நிறைந்துள்ளது. இது இதய வால்வுகளை பாதுகாக்கிறது. இதய நோய்கள் வருவதையும் தடுக்கிறது. இதுவே மிகச் சிறந்த ஆண்டி ஆக்சிடென்டாக திகழ்கிறது. இளமையைப் பராமரிக்கவும் பயன்படுகிறது.
மனிதனுக்கு நன்மை செய்யும் கொழுப்புதான் நிலக்கடலையில்உள்ளது. நிலக்கடலையில் உள்ள தாமிரம் மற்றும் துத்தநாக சத்தானது நமது உடலின் தீமை செய்யும் கொழுப்பை குறைத்து நன்மை செய்யும் கொழுப்பை அதிகமாக்குகிறது. 100 கிராம் நிலக்கடலையில் 24 கிராம் மோனோஅன் சாச்சுரேட்டேட் வகை கொழுப்பு உள்ளது. பாலிஅன் சாச்சுரேட்டேடு 16 கிராம் உள்ளது.
இந்த இருவகை கொழுப்புமே நமது உடம்புக்கு நன்மை செய்யும் கொழுப்பாகும். பாதாமை விட நிலக்கடலையில் நன்மை செய்யும் கொழுப்பு அதிகமாக உள்ளது. நிலக்கடலையில் உள்ள ஒமேகா-3 சத்தானது நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
கடந்த 20 வருடமாக இந்தியாவில் நிலக்கடலையின் விலையில் பெரியமாற்றம் ஏதும் இல்லாமல் விற்பனை செய்யப்படுகிறது என்பது கவனிக்கத்தக்கது. ஆனால் இதே கால கட்டத்தில் மற்ற நாடுகளில் உணவில் நிலக்கடலையின் பங்கு 15 மடங்கு கூடி இருப்பதுடன் விலையும் கூடிஇருக்கிறது. இந்தியர்கள் அனைவரும் நிலக்கடலை சாப்பிட ஆரம்பித்தால் அமெரிக்கர்கள் நிலக்கடலை அதிகம் விலை கொடுத்து சாப்பிட வேண்டும் என்று கருதிதான் இந்தியர்களிடம் நிலக்கடலை குறித்து தவறான தகவல்கள் பரப்பப்பட்டுள்ளது என்பதே உண்மை.
100 கிராம் நிலக்கடலையில் நிறைந்துள்ள சத்துக்கள்:
கார்போஹைட்ரேட்- 21கி.
நார்சத்து- 9 கி.
கரையும் கொழுப்பு – 40 கி.
புரதம்- 26 கி.
ட்ரிப்டோபான்- 0.24 கி.
திரியோனின் – 0.85 கி
ஐசோலூசின் – 0.85 கி.
லூசின் – 1.625 மி.கி.
லைசின் – 0.901 கி
குலுட்டாமிக் ஆசிட்- 5 கி
கிளைசின்- 1.512 கி
விட்டமின் -பி1, பி2, பி3, பி1, பி2, பி3, பி5, பி6, சி
கால்சியம் (சுண்ணாம்புச்சத்து) – 93.00 மி.கி.
காப்பர் – 11.44 கி.
இரும்புச்சத்து – 4.58 மி.கி.
மெக்னீசியம் – 168.00 மி.கி.
மேங்கனீஸ் – 1.934 மி.கி.
பாஸ்பரஸ் – 376.00 மி.கி.
பொட்டாசியம் – 705.00 மி.கி.
சோடியம் – 18.00 மி.கி.
துத்த நாகச்சத்து – 3.27 மி.கி.
தண்ணீர்ச் சத்து – 6.50 கிராம்.
எனவே நமது மரபு சார்ந்த நிலக்கடலை உணவு உண்பதை வழக்கத்திற்குக் கொண்டு வரலாமே!

No comments:

Featured Post

உணவு முறைல முடிஞ்ச அளவு மாற்றம் பண்ணுங்க.

  நாம ஏன் சோணகிரியா இருக்கோம்? தொத்த பாடியா இருக்கோம்? பழங்கால மக்களுக்கு மட்டும் எப்படி திமில் கொண்ட தோளும், மதர்த்த நெஞ்சும் வந்தது? உணவு ...