Sunday, March 27, 2022

கந்தர்அலங்காரம் - பாடல் 47

 


#ஓம் #சரவணபவ
🌷#மகான் #அருணகிரிநாதர் அருளிய
🌷#கந்தர்அலங்காரம் - பாடல் 47
#பத்தித் திருமுக மாறுடன் பன்னிரு தோள்களுமாய்த்
#தித்தித் திருக்கு மமுதுகண் டேன்செயன் மாண்டடங்கப்
#புத்திக் கமலத் துருகிப் பெருகிப் புவனமெற்றித்
#தத்திக் கரைபுர ளும்பர மாநந்த சாகரத்தே.
🌷#சொற்பிரிவு
#பத்தித்திருமுகம் ஆறுடன் பன்னிரு தோள்களுமாய்த்
#தித்தித்து இருக்கும் அமுது கண்டேன் செயல் மாண்டு அடங்கப்
#புத்திக்கமலத்து உருகிப் பெருகிப் புவனம் எற்றித்
#தத்திக்கரைபுரளும் பரம ஆனந்த சாகரத்தே.
🌷#பதவுரை .........
திருமுருகப்பெருமானின் வரிசையான அழகிய திருமுகங்கள் ஆறோடு பன்னிரண்டு தோள்களுமான இனிய அமுதத்தை அடியேன் கண்டேன். ஜீவனுடைய செயல்கள் கெட்டு ஒடுங்கியபோது அறிவாகிய தாமரை
மலரில் கரைந்து பெருக்கெடுத்து எல்லா உலகங்களையும் கடந்து அவற்றின் கரை மீது புரளுகின்ற மேலான இன்பக் கடலில் [திருமுருகப்பெருமானின் வரிசையான அழகிய திருமுகங்கள் ஆறோடு பன்னிரண்டு தோள்களுமான இனிய அமுதத்தைக்] கண்டேன்.
🌷#ஓம்_முருகா
🌷#ஓம்_சரவணபவ
🌷#ஓம்_சரவணஜோதியே_நமோ_நம
🌷#ஓம்_முருகப்பெருமான்_திருவடிகள்_போற்றி
🌷#ஓம்_அருணகிரிநாதர்_திருவடிகள்_போற்றி

No comments:

Featured Post

உணவு முறைல முடிஞ்ச அளவு மாற்றம் பண்ணுங்க.

  நாம ஏன் சோணகிரியா இருக்கோம்? தொத்த பாடியா இருக்கோம்? பழங்கால மக்களுக்கு மட்டும் எப்படி திமில் கொண்ட தோளும், மதர்த்த நெஞ்சும் வந்தது? உணவு ...