Sunday, March 27, 2022

புதன் தரும் சில புரிதல்கள் ..

 புதன் தரும் சில புரிதல்கள் ..

1.புத்திசாலித்தனம், பகுத்தறிவு தன்மை ,ஆராய்ச்சி, நகைச்சுவை, எழுத்து, தொலைத் தொடர்பு என அனைத்திற்கும் காரகம் வகிப்பவர் புதன்.
2.ஒருவர் எவ்வளவு ஏழ்மை நிலையில் பிறந்திருந்தாலும் கூட புதனின் புத்திசாலித்தனம் நன்றாக இருந்தால், மேன்மை நிலை அடைய இயலும் ..
3.புதன் ராகுவுடன் தொடர்பு பெரும்பொழுது, பெரிதுபடுத்தும் நல்லவை அல்லது கெட்டவை எந்த ஆதிபத்தியம் வாங்கியுள்ளது அதன் சார்ந்த விஷயங்களை பெரிது படுத்துவார்.
4.புதன் கேதுவுடன் இணையும் பொழுது, சிறந்த ஞானத்தை கொடுத்தாலும், பெரிய அளவில் இடத்திற்கு தகுந்தார் போல் பயன்படுத்த முடிவதில்லை.
5.கன்னியில் சுக்கிரன் நீச்சம் அடைந்தாலும், அங்கே புதனுடன் நீசபங்கம் அடையும் நிலையில், புதன் சுக்கிரன் எவ்வளவு அதிகமாக நீசபங்கம் படுகிறாரோ அந்த அளவிற்கு தன்னுடைய சுபத்தன்மை புதன் இழந்து விடுகிறார்...புதனின் முதன்மை நண்பராக கருதப்படும் சூரியன், பரிவர்த்தனை அமைப்பிலும், வாங்கியுள்ள ஆதிபத்திய தைப் பொறுத்து மிகுந்த நற்பலன்களை செய்கிறார்.
6.புதன், சனி 14 டிகிரிக்குள் இணைந்து பாவத்துவமான அமாவாசை யோகத்தில் மாட்டிக் கொண்டு,சுபர் தொடர்பு பெறவில்லையெனில் ஜாதகருக்கு அலித்தன்மை உருவாக்கி விடுகிறார்.
7.மனித உடலில் ஹார்மோனல் பிரச்சனைகளை உருவாக்குவதும் புதன் ராகு இணைவு பெற்று சுபத்துவம் பெறவில்லையெனில் ஏற்படுகிறது ..நரம்புகளை இயக்குபவர் புதன்.
8.முதுகு தண்டுவடம் நரம்பு சார்ந்த பிரச்சனைகள், Fits என்று சொல்லக்கூடிய வலிப்பு நோய் போன்றவை காரகம் வகிப்பவர் புதன்.
9.ஒருவருடைய சாமர்த்திய தன்மை, சமயோசித புத்தி, புத்திகூர்மை கணிதம், எழுத்து ஆற்றல், கவிதை (புதனுடன் சுக்கிரன் தொடர்பு) ஒரு இளைஞனை போன்றவர் புதன்.
10.தனித்த புதன் என்பது, சுபர் தன்மை பெற்றிருந்தாலும் 33% ஒளி தன்மை இருக்கும். அதாவது குருவை காட்டிலும், (குரு 100 சதவிகித ஒளி தன்மை என்றால் தனித்த புதன் 33 சதவிகித ஒளி தன்மையுடன் இருப்பார்) புதனின் அம்சமாக கருதப்படும் கடம்ப வாகினியான மதுரை மீனாட்சி அம்மன் ...வழிபாடு மற்றும் பச்சை மரங்களை நட்டு வளர்த்தல் அதற்கு நீர் ஊற்றுதல் போன்றவை புதனுக்கான சிறந்த பரிகாரங்கள் ஆகும்

No comments:

Featured Post

உணவு முறைல முடிஞ்ச அளவு மாற்றம் பண்ணுங்க.

  நாம ஏன் சோணகிரியா இருக்கோம்? தொத்த பாடியா இருக்கோம்? பழங்கால மக்களுக்கு மட்டும் எப்படி திமில் கொண்ட தோளும், மதர்த்த நெஞ்சும் வந்தது? உணவு ...