Friday, February 21, 2025

குருராம் சுரத்குமார் நினைவு தினம்(20.02.2001)

 தலைமீது கைவைத்து தாமுணர பெரும்சக்தி அலைபோலே மேலெழுப்பும் ஆசானே குருயோகி!!

இலைபூ காய்கனியாக ஏற்றமதை நாளும்தந்து இருக்கின்றேன் உம்முடனே என்றுரைக்கும் குருயோகி!!
விலையாக பெரும்பக்தி விருப்பமுடன் ஏற்றுநிற்கும் வேதாந்த இறைமகனார் வெற்றியருள் குருயோகி!!
மலையருணை தலம்வாழ்ந்து மலர்க்கரத்தில் விசிறிகொண்டு மனத்தாலே வினையோட்டம் மாஜோதி குருயோகி!!
பிழையேதும் யான்செய்யும் பெருங்குற்றம் கருதாது இலகுவாக அதைவிலக்கி ஏற்றிடும் எம்குருயோகி!!
குலம்வாழ நலமாக குறைவின்றி நிறைவாக குருவாக வழிநடத்தி இறைசேர்ப்பாய் குருசுரத்யோகி!!!
குருராம் சுரத்குமார் நினைவு தினம்(20.02.2001)

No comments:

Featured Post

உயிர் மேலே ஏறி கண்களை அடையும் அதன் பிறகு தான் இறைவனை காண முடியும்

ஆசைகள் இருந்தால் உடலுக்குள் இருக்கும் உயிரை கண்கள் வரை மேலே கொண்டு செல்ல முடியாது!! ஆசையை ஒழித்தால் தான்!!.. உயிர் மேலே ஏறி கண்களை அடையும் அ...