Monday, March 28, 2022

கேது தரும் தொழில்களும்

 கேது தசாவும்

✈கேது தரும் தொழில்களும்
நவகிரகங்களில் மிகமிக வலிமையான கிரகம் கேதுவாகும்.
கேதுவுக்கு சொந்த வீடு இல்லாததால் அமர்ந்த இடம்,இணைந்த கிரகம், பார்வை செய்த கிரகம் ஆகியவற்றை கொண்டு பலன் அறிய வேண்டும்.
எல்லாம் அவன் செயல் என்று பற்று இல்லா நிலையையும்
ஆன்மீக எண்ணத்தையும் வாரி வழங்கும் கேது பகவான்
7 வருடங்கள் சுபத்துவமாக இருந்தால் நல்ல பலனையும்
பாவத்துவமாக இருந்தால்
விரக்தி, பைத்தியம்,வறுமை
தற்கொலை,தொழுநோய்,
நாய்கடி,பாம்புகடி மணமுறிவு
போன்ற கெடுபலனையும் வழங்குவார்.
கேது என்றால் சிதைத்தல் என்று பொருள் கொள்ளலாம் அதாவது எந்த பாவத்தில் உள்ளாரோ அந்த பாவக பலனை குறைக்கும்.
💢கேது எங்கு எப்படி அமர்ந்தால் யோகம்:
🌹லக்னத்துக்கு 3,6,11 ஆம் இடங்களில் கேது அமர்தல்
🌹கன்னி,விருட்சிகம்,கும்பத்தில் கேது அமர்தல்
🌹மேஷம்,கடகம்,சிம்மம்,விருட்சிகம்
தனுசு,மீனத்தை லக்னமாக கெண்டவர்களுக்கு பெரிய பாதகம் இருக்காது.
🌹கேதுவுக்கு இடம் கொடுத்த கிரகம் வலிமை அடைய வேண்டும்
🌹இயற்கை சுபர்களான குரு,சுக்கிரன்,வளர்பிறை சந்திரன் (கெடாமல்) கேதுவை பார்வை செய்தல்
💢கேது தரும் தொழில் அமைப்பு
ஒருவருடைய லக்னத்துக்கு
🌷 10மிடத்தில் கேது இருந்தாலோ (அ)
🌷பத்தாமிட அதிபதியுடன் இணைந்து இருந்தாலோ(அ)
🌷பத்தாம் அதிபதி கேதுவை பார்த்தாலோ
கீழ்கண்ட தொழில் செய்தால் வெற்றி பெறலாம்.
வேறு கிரகங்களின் தொடர்பு இருந்தால் சிறிது மாறுபடும்.
இதில் ஆன்மீகம் என்றால் ஆன்மீக சம்மந்தமான அனைத்து விஷயங்கள் அதாவது
யோகிகள்,அருளாளர்கள்,ஆன்மிக பொருள் விற்பனையாளர், கடவுள் சிலை வடித்தல், கோவில் திருப்பணி செய்யும் ஸ்தபதியார்,பூசகர்,பக்தி பாடல் பாடும் பாடகர்... என்று அனைத்து விஷயங்களையும் விரிவாக்கி கொள்ள வேண்டும்.
🌺ஆன்மீகம்
🌺வெளிநாடு
🌺தலை முடி
🌺மருத்துவம்
🌺எலக்டிரிகல்
🌺புலனாய்வு துறை
🌺சன்னியாசம்
🌺போதைப்பொருள்
🌺நூற்பாலை
🌺மாந்தீரிகம்
🌺ஐல்லி
🌺சட்ட விரோத தொழில்
🌺வெடி மருந்து
🌺போதைப் பொருள்
அடிமைத் தொழிலா,சுயதொழிலா என்று கண்டறிந்து செயல்பட்டால் முன்னேற்றம் அடையலாம்.
கேது தசாவால் துன்ப படுபவர்கள் கேதுவின் அதிதேவதையான வினாயகரின் காயத்திரி மந்திரத்தை பாராயணம் செய்தால் கெடுபலன் குறையும்.
மயிலாடுதுறை அருகில் உள்ள கீழ்பெரும்பள்ளம் கேது ஸ்தலத்தில் பரிகாரம் செய்து பலன் பெறலாம்.
நன்றி.

No comments:

Featured Post

உணவு முறைல முடிஞ்ச அளவு மாற்றம் பண்ணுங்க.

  நாம ஏன் சோணகிரியா இருக்கோம்? தொத்த பாடியா இருக்கோம்? பழங்கால மக்களுக்கு மட்டும் எப்படி திமில் கொண்ட தோளும், மதர்த்த நெஞ்சும் வந்தது? உணவு ...