Monday, March 28, 2022

நாளை தேய்பிறை பிரதோஷம் 29.03.2022

 நாளை தேய்பிறை பிரதோஷம் 29.03.2022

செவ்வாய் பிரதோஷம்
செவ்வாய் கிழமை செய்யும் பிரதோஷ வழிபாடு உடல் நோய்களை போக்குகின்ற அற்புதமான வழிபாடு ஆகும்... செவ்வாய் பிரதோஷம் மனிதனுக்கு வரும் ருணம் அதாவது கடன் தொல்லைகள் மற்றும் ரணத்தை அதாவது உடல் பிணிகள் நீக்கக் கூடிய பிரதோஷம் என்பது கூடுதல் சிறப்பு இதனால் செவ்வாய் கிரகத்தால் ஏற்படும் கெடுபலன் நீங்கும் மேலும் பித்ரு மற்றும் சகோதர தோஷமும் விலகும்.
சந்திரன் காரகத்துவமான ஜலத்தில் கடகத்தில் செவ்வாய் நீசம் செவ்வாய் பிரதோஷத்தன்று ஜல பொருட்களான பால் பன்னீர் கொண்டு நந்தி தேவருக்கும் சிவபெருமானுக்கும் அபிஷேகம் செய்திட பகைவர்கள் விலகுவர் சகோதர ஒற்றுமை மேலோங்கும் கடன் தொல்லைகள் நீங்கும் உடல் ஆரோக்கியம் மேம்படும் நில மனை சேர்க்கைகள் உண்டாகும்.

No comments:

Featured Post

சிறந்த கேட்கும் திறன் கொண்ட மரம்

"சிறந்த கேட்கும் திறன் கொண்ட மரம்" இந்த உயிரினம் எதற்காக இறைவன் படைத்திருப்பான் இதனால் என்ன பயன் என்று சில உயிரினங்களை...