Monday, March 28, 2022

ஒரு ஜாதகத்தில்

 t

பலன் சொல்ல 10 டிப்ஸ்
1.ஒரு ஜாதகத்தில் புதன் மறைவு ஸ்தானங்களான 6, 8,12 போன்ற இடங்களில் பலம் பெற்றிருக்கும் போது ஜாதகரால் புரிந்து கொள்ளப்பட முடியாத விஷயங்களை இல்லை என்றும் அளவிற்கு மறைபொருள் ஞானத்தினை தருவார்.
2.வாக்கு ஸ்தானமான இரண்டாம் வீட்டில் சூரியன் வலுப்பெற்று தொடர்பில் இருந்தால் ஜாதகர் மனதில் பட்டதை தைரியமாக பேசும் சுபாவம் உடையவராக இருப்பார்.
3.கடக லக்னகாரர்களுக்கு நான்கில் சனி உச்சம் பெற்றிருந்தால் 7ஆம் அதிபதி நான்காம் வீட்டில் உச்சம் பெறுகிறார் என்ற நிலையில் திருமணத்திற்கு பின்பு வீடு மனை வாகன வசதிகள் அமைவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
4.கன்னி மற்றும் மீன லக்னகாரர்களுக்கு தாய் எப்படியோ அதைப்போலவே தாரம். ஏனெனில் ஒருவரே 4 மற்றும் 7க்கு அதிபதி.
5.லக்னத்திற்கு 5ஆம் இடமான ஆழ்மன ஸ்தானத்தில் வலுப்பெற்ற குரு அமர்ந்திருக்கும் பொழுது ஜாதகருக்கு தான் செய்வது சரியா? தவறா? என்பதை மனசாட்சியின் வாயிலாக உணர்த்திக் கொண்டே இருப்பார்.
6.ஒரு கிரகம் ஆறாம் அதிபதி (அ) எட்டாம் அதிபதி சாரம் வாங்கி இருந்தாலும் சாரநாதன் ,சுபர்களின் வீட்டில் நின்றால் சுபர்களின் தொடர்பு பெற்றால் நன்மை.. கெடுதல் குறைவே.
7.ராணுவம் தொடர்புடைய பணிகளுக்கு 10-ம் வீடு (அ)அதிபதியுடன் செவ்வாய் மற்றும் ராகு தொடர்பு இருக்க வேண்டும்.
அது தொடர்புடைய தசைகளும் நடைமுறையில் இருக்க வேண்டும்.
8.ஒரு கிரகம் லக்னம் யோக இருப்பினும் நீனின் வீட்டில் இருக்கும்பொழுது யோகத்தினை செய்யும் தகுதியை சற்று இழக்கவே செய்யும்.
9.நவாம்சத்தின் குருவின் வீட்டில் நின்ற புதன் ஜாதகருக்கு நல்ல புத்திசாலித்தனத்தை தந்தே தீருவார்.
10.இலக்னம், இலக்னாதிபதியுடன் வலுப்பெற்ற சூரியன் தொடர்பு (அ)
பத்தாம் அதிபதி, பத்தாம் வீட்டுடன் சூரியன் தொடர்பில் இருக்கும் பொழுது குறிப்பிட்ட நேரத்திற்குள் வேலையை முடித்தாக வேண்டும் என்ற எண்ணம் உடையவராக ஜாதகர் இருப்பார். நேரம் தவறாமையை ஜாதகர் அதிகம் கடைபிடிப்பார்.சூரியன் ஒரு பொழுதும் உதிக்க மறப்பதில்லையே..

No comments:

Featured Post

உணவு முறைல முடிஞ்ச அளவு மாற்றம் பண்ணுங்க.

  நாம ஏன் சோணகிரியா இருக்கோம்? தொத்த பாடியா இருக்கோம்? பழங்கால மக்களுக்கு மட்டும் எப்படி திமில் கொண்ட தோளும், மதர்த்த நெஞ்சும் வந்தது? உணவு ...