Saturday, March 8, 2025

போல குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு-2.3.2025

 



இயற்கையின் சொர்க்கம் போல காட்சியளிக்கிறது தென்காசியும் குற்றால அருவியும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளும்....

தமிழ்நாட்டில் நேற்று முதல் கோடைக்காலம் துவங்கியுள்ள நிலையில் தென் மாவட்டங்களில் மட்டும் பருவமழை காலம் போல தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக நெல்லை தென்காசி மாவட்டங்களில் விட்டு விட்டு கனமழை தொடர்கிறது....
மார்ச் ஏப்ரல் மாதங்களில் குற்றால அருவி வறண்டு காணப்படும் வெறும் பாறை மட்டுமே காட்சி தரும்...
ஆனால் இயற்கையின் அருட் கொடை போல குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதமான தென்றல் காற்று மேற்கு தொடர்ச்சி மலையை தவழும் மேககூட்டங்கள் குளுகுளு காற்று கனமழை என சொர்க்கம் போல காட்சியளிக்கிறது தென்காசி.

No comments:

Featured Post

சிறந்த கேட்கும் திறன் கொண்ட மரம்

"சிறந்த கேட்கும் திறன் கொண்ட மரம்" இந்த உயிரினம் எதற்காக இறைவன் படைத்திருப்பான் இதனால் என்ன பயன் என்று சில உயிரினங்களை...