Saturday, February 22, 2025

காற்றும் நம்மை அடிமை என்று விலகவில்லையே

 

காற்றும் நம்மை அடிமை என்று விலகவில்லையே

கடலும் நீரும் அடிமை என்று சுடுவதில்லையே ?
காலம் நம்மை விட்டு விட்டு நடப்பதில்லையே ?
காதல் பாசம் தாய்மை நம்மை மறப்பதில்லையே ?
ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம் !
தோன்றூம்போது தாயில்லாமல் தோன்றவில்லையே ,
சொல்லில்லாமல் மொழியில்லாமல் பேசவில்லையே ?
வாழும்போது பசியில்லாமல் வாழ்வதில்லையே
போகும்போது வேறுபாதை போவதில்லையே ?
ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம் !
கோடி மக்கள் சேர்ந்து வாழ வேண்டும் விடுதலை ,
கோவில் போல நாடு காண வேண்டும் விடுதலை
அச்சமின்றி ஆடிப்பாட வேண்டும் விடுதலை !
அடிமை வாழும் பூமி எங்கும் வேண்டும் விடுதலை
ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம் !
- கவியரசு கண்ணதாசன் .

No comments:

Featured Post

சிறந்த கேட்கும் திறன் கொண்ட மரம்

"சிறந்த கேட்கும் திறன் கொண்ட மரம்" இந்த உயிரினம் எதற்காக இறைவன் படைத்திருப்பான் இதனால் என்ன பயன் என்று சில உயிரினங்களை...