Sunday, April 24, 2022

ராகு

 ஆளுமை, அரசன் (முதல்வர்/பிரதமர் போன்ற பதவிகள்), அதிகாரம், ஆட்சி போன்ற காரகங்கள் நவகிரகங்களில் சூரியனை குறிக்கும், புகழ், பிரம்மாண்டம், சொகுசு வாழ்க்கை, ஈர்ப்பு, போன்ற காரகங்கள் ராகுவை குறிக்கும், இவ்விரண்டும் ஒன்றிணைந்தால் தான் அந்த நபர் மிகப்பெரிய ஆளுமை கொண்ட அரசியல் பிரமுகர் எனும் அந்தஸ்த்தை பெற முடியும், இங்கே ராகுவுக்கு எதிர் கிரகம் சூரியன், சூரியனுக்கு ராகுவை கண்டால் ஆகாது ஏனெனில் அவரையே கிரகணம் செய்துவிடுவார், ராகு இல்லாத சூரியனை சனி எனும் மக்கள் ஏற்பதில்லை என்பதே இங்கே எதார்த்தம், அதாவது ஈர்ப்பில்லா (ராகு) ஆளுமையை (சூரியன்) மக்கள் (சனி) விரும்புவதில்லை இதற்கு பல உதாரணங்களை கூறலாம், அதே நேரத்தில் ஈர்ப்பும்+ஆளுமையும் ஒன்று சேர்ந்து ஆளும்போது அங்கே ஆசை எனும் ராகு ஆளுமையை (சூரியனை) தனக்கு ஏற்றபடி ஆட்டிவைத்து விழுங்க (கிரகணம்) பார்ப்பார், விழுங்கியதும் உண்டு, அப்படி விழுங்கும் போதெல்லாம் மக்கள் (சனியால்) ஆளுமை எனும் சூரியன் தூக்கி எரியப்படுகிறார், இதில் என்ன விந்தை என்றால் இரு எதிர் காரக கிரகங்கள் ஒன்றிணைத்தால் தான் ஆளுமையான அரசன் உருவாகிறான், அதே நேரத்தில் ஆளுமையான அரசன் (ஈர்ப்பு+அதிகாரம்) இரண்டிலும் சமநிலை தவறாமல் ஆட்சி செய்யும் போது நேர்மறையான அரசனாகிறார் அதே நேரத்தில் அவரது வாழ்நாள் (ஆட்சியின் ஆயுள்) சுருங்கிவிடுகிறது காரணம் ராகு, ஆக கிரகங்களின் பகையிலும் மனிதனுக்கு அத்தியாவசிய தேவையும் நன்மையும் உண்டு என்பதற்கு இதைவிட ஒரு உதாரணம் அவசியமில்லை என்றெண்ணுகிறேன்,

No comments:

Featured Post

பொய்யூர் கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்

அற்புதமான பொய்கைநல்லூர் (பொய்யூர்) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்  வடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர். நாகை...