Sunday, April 24, 2022

வடிவேல்துணை கொள்வேன்

 


வந்து வழிபட்டேன்! வல்வினைகள் இனியில்லை!! வாராது ஒருதொல்லை!!!

நிந்தை விலகுற்றேன்! நிலைமை உயர்வுற்றேன்!! நின்பத பிடிபெற்றேன்!!!
சிந்தை ஏற்றிட்டேன்! சிவன்மகன் மனம்பெற்றேன் !! சீர்காணும் பேறுற்றேன்!!!
மந்தம் மறந்திட்டேன்! மலர்ச்சி யான்பெறுவேன்!! மனதால்குடி செய்வேன்!!!
நந்த வனமாவேன்! நாளும் அன்பூப் பூப்பேன்!! நாதன்தோள் சேர்வேன்!!!
வந்தபயன் அறிவேன்! வையம்பெயர் நிலைவேன்!! வடிவேல்துணை கொள்வேன்!!!
கந்தாதினம் சொல்வேன்! காலேகதி பெறுவேன் !!கருணைப் புகழாவேன்!!!
முந்தி அடியாராய்!! முதன்மை முழுபெறுவேன்!! முருகவொளி அமர்வேன்!!!

No comments:

Featured Post

பொய்யூர் கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்

அற்புதமான பொய்கைநல்லூர் (பொய்யூர்) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்  வடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர். நாகை...