Sunday, April 24, 2022

கேதுவை அறிவோம்

 



கேதுவை அறிவோம்..!

துறவறத்தை கேது என்போம், துறவரத்திலும் பற்றுண்டு, அதாவது துறக்க வேண்டும் என்கிற பற்றே துறவரத்தை மேற்கொள்ள செய்கிறது, ஆக இங்கே தனக்கென்ன வேண்டும் என்பதை தேர்ந்தெடுத்து அதனை அடைய பயணிக்கிறார் கேது என்றே கூற முடியுமே தவிர கேது முற்றுமாக துறக்கிறார் என்று கூற முடியாது, ஆனால் கேது ஒரு புஜ்ஜியம் அதாவது எதனுடனும் கூட்ட முடியும் ஆனால் கழிக்க இயலாது, அதாவது எந்த காரகத்துடனும் கேதுவை இணைக்கலாம், ஆனால் எந்த காரகத்திலிருந்தும் கேதுவை பிரிக்க இயலாது என்கிறேன், கேதுவை துறவி/சித்தர் என்று ஒப்பிடுவதெல்லாம் ஒரு உவமைக்கே, கேது ஒரு புஜ்ஜியம் அதாவது ஒன்றுமில்லை என்பதே கேது, கேதுவுடன் இணைந்த கிரகங்கள் ஒன்றுமில்லா நிலைக்கே ஈர்க்கப்படும் அதன் காரணமாகவே துறவு எனும் பற்றற்ற நிலையை கொடுக்கிறார் கேது, ஆனாலும் பற்றற்று இருக்க வேண்டும் என்று எண்ணுவதே ஒரு பற்றாகும் என்பதை சாமர்த்தியமாக மறைக்கிறார் எனலாம், இப்படி தான் இருக்கும் கேதுவின் செயல்பாடும் எல்லாவற்றையும் துறந்துவிடு என்று ஏதோ ஒன்றை பிடித்துக்கொள்ள வைத்து விடுவார் கேது, அதுவும் சும்மா அல்ல அவரால் பிடித்துக்கொள்ளப்படும் காரகம் வாழ்நாள் முழுவதும் பின்தொடரும், ஆக கேதுவை சுயநலவாதி என்று கூறினால் பொறுத்தமாகவே இருக்கும், என் அனுபவத்தில் கேதுவுடன் ஒரே ராசியில் இணைந்த கிரக உயிர் காரக உறவுகள் சுயநலவாதிகளாகவே இருந்துள்ளனர், கேதுவின் பலமே துறவு துறவு என்று தனக்கான (கர்மம்) குறிக்கோளை (பலன்) அடைய கூட்டிசெல்வார், இதனை உணர்வதற்கு வழியே கிடையாது, சித்தர்கள் துவங்கி ஆசாமிவரை கேதுவை உணர முயற்சிக்கத்தான் முடியுமே தவிர, உணர்ந்துகொள்ள முடியாது ஆனால் கேது தன் பணியை முடித்த பின்னர் உணர்த்துவார் அதுவே கர்மமாகும், பொதுவாகவே கேது நின்ற வீட்டின் காரகங்களில் இந்த அனுபவத்தை ஒவ்வொருவரும் பெற்றுக்கொண்டே தான் இருப்போம், அதாவது ஜாதகத்தில் கேது நின்ற பாவத்தின் கேதுவுடன் இணைந்த கிரக காரகங்களை நாம் அணுக நினைக்கும்படி அணுகவே முடியாது, நினைத்தது ஒன்று நடந்தது ஒன்றாகவே இருக்கும் நடந்து முடிந்த பின்னர் தான் தெரியும் அது சாதக பலனா பாதக பலனா என்பதே, ஆக இனி கேதுவை கணிக்கும் போது நான் பதிவில் கூறிய காரகங்களை மனதில் வைத்து கணித்தால் 5% அவரை புரிந்துகொள்ள முடியும், கேது விருப்பப்பட்டால் இந்த பதிவை மேலும் சில பதிவுகளாக தொடர்வேன், கேதுவுக்கு எது விருப்பம் இந்த பதிவு பெரும்பான்மையானவருக்கு போய் சேர வேண்டும் என்பதே, ஆக ராகுவின் ஆசியால் அது நடக்கும், இப்படி தாங்க கேது உள்குத்து வைத்து வார்த்தையை விடவைக்கிறார் ஏனெனில் எனக்கு கேது+புதன் சேர்க்கை, மீண்டும் சந்திப்போம்..!

No comments:

Featured Post

உணவு முறைல முடிஞ்ச அளவு மாற்றம் பண்ணுங்க.

  நாம ஏன் சோணகிரியா இருக்கோம்? தொத்த பாடியா இருக்கோம்? பழங்கால மக்களுக்கு மட்டும் எப்படி திமில் கொண்ட தோளும், மதர்த்த நெஞ்சும் வந்தது? உணவு ...