பயணிகளின் கனிவான கவனத்திற்கு திருநெல்வேலியிலிருந்து தாதர் வரை செல்லும் அதிவிரைவு ரயில்....
Articles on Interesting things in science, tamil culture and traditions and national updates,தமிழர்களின் கலாச்சாரம் கட்டுரை,வியக்க வைக்கும் தமிழர் அறிவியல்,புவி அறிவியல்,பிரபஞ்ச அறிவியல்
Saturday, February 22, 2025
திருநெல்வேலியிலிருந்து தாதர் வரை செல்லும் அதிவிரைவு ரயில்
ரயில் நேரம்
Kovilpatti
ARR 08:09 DEP 08:10
Virudunagar Jn
ARR 09:03 DEP 09:05
Madurai Jn
ARR 09:50 DEP 09:55
Dindigul Jn
ARR 11:05 DEP 11:10
Karur
ARR 12:18 DEP 12:20
Erode Jn
ARR 13:20 DEP 13:30
Tiruppur
ARR 14:13 DEP 14:15
Coimbatore Jn
ARR 15:07 DEP 15:10
Palakkad Jn
ARR 16:17 DEP 16:20
Shoranur Jn
ARR 17:05 DEP 17:10
Kozhikkode
ARR 18:22 DEP 18:25
Kannur
ARR 19:52 DEP 19:55
Mangaluru Jn
ARR 22:00 DEP 22:10
Udupi
ARR 23:41 DEP 23:42
Honnavar
ARR 01:31 DEP 01:32
Karwar
ARR 02:43 DEP 02:44
Madgaon
ARR 04:05 DEP 04:15
Thivim
ARR 05:01 DEP 05:02
Kankavali
ARR 06:41 DEP 06:42
Ratnagiri
ARR 09:00 DEP 09:05
Chiplun
ARR 11:01 DEP 11:02
Roha
ARR 13:35 DEP 13:40
Panvel
ARR 14:59 DEP 15:00
Thane
ARR 15:54 DEP 15:55
Dadar
ARR 16:40 End
சனிபகவானை நேருக்கு நேர் நின்று வழிபடலாமா?
சனிபகவானை நேருக்கு நேர் நின்று வழிபடலாமா?
சனிபகவான் புராணக்கதை :
Friday, February 21, 2025
பாலக்காடு 1 ~ Nelliyampathy hills view point
பாலக்காடு 6 ~ Nelliyampathy hills view point
பல மலைகள் குட்டி குட்டி நீர் ஓடைகள்
"பாலக்காட்டின் ராணி" என்று அழைக்கப்படும் நெல்லியம்பதியின் மலை உச்சிக்கு சென்று கொண்டிருக்கிறோம் , வளைவான மலைப்பாதை...
பப்பாளியை உப்பு நீரில் ஊற வைத்திருப்பதையோ கட்டஞ்சாயா கிடைக்கும் கடையென்றாலோ
ரவி எல்லாரையும் விழித்தெழ வைத்திடுவான், நல்லவேளை பொத்துண்டி அணைக்கட்டிற்குப் பிறகு எங்கும் கடைகள் இல்லை..
நகரத்தின் கூச்சலையும் , புறச்சூழலில் ஏற்படுகின்ற மனஅழுத்தத்தையும் மறந்து, மலைக்குப் பயணம் செல்வது ஒரு தெய்வீக உண்ர்வுதான்,
காரில் பயணிக்கும்போது சட்டென்று கண்ணாடியை இறக்கும்போது காதுகளுக்குள் நுழையும் குளிராய் , இதயத்தை சில்லிட வைக்கும் மெல்லிய பனியோடுடனான காற்றின் வாசனையில், மலையில் மிதப்பதாய் உணரவைத்தது...
வழியில் எங்களை அழைத்துச் செல்லும் ITL டிராவலின் ரெஸ்ட்ராரெண்டில் ஒரு தேநீர் அருந்திவிட்டு மலை மேலேறிச் சென்றோம்,
வீவ் பாயிண்ட் செல்ல சிறிய நடக்க வேண்டும், முதியவர்கள் தவிர்த்துக் கொள்ளுதல் நலம்..
மேலே செல்லச் செல்ல எல்லாம் தொலைந்து போய்க்கொண்டே இருக்கிறது , செல்போன் சிக்னல் உட்பட எல்லாமும் துண்டிக்கப்பட்டு விட்டது , கீழிருந்து சுமந்து வந்த பாரங்கள் கூட,
மரங்கள் சிலிர்த்து எங்கள் முடி கலைத்து வரவேற்றது.. நடந்தே மலை உச்சியில் உள்ள view point க்கு சென்றோம்.
அங்கிருந்து கீழே பார்த்தவுடன் கொல்லங்கோடு முழுவதும் எங்கள் கண்களுக்கு தெரியத் தொடங்கியது, ஒவ்வொரு வீடும், பசுமை நிலங்கள், தூரத்தில் தண்ணீர் விழாத அருவி, எல்லாம் ஒரு பெரிய ஓவியத்தைப் போல்!
மலையில் கொஞ்சம் உலவிவிட்டதால் மனசு இலகுவாயிற்று, அமைதியான ஒரு அனுபவம்.
மலை இறங்கி வந்து அங்குள்ள கடையில் ஜிஞ்சர் க்ரஷ் ஒன்று குடித்தோம் , அங்குள்ள கிராமங்களிலேயே தயாரிப்பார்கள் போல் நல்ல சுவை. ஒருவேளை மலை,பசுமை, காற்று, நிலம்—இவை கலந்தால் இப்படித்தான் சுவையாக இருக்குமோ?
மொபைல் தொடர்புக்கு அப்பால் சென்றாலே இயற்கை நம்மோடு இணைய ஆரம்பிக்கிறது
ஜுன் ஜூலையில் இந்த நெல்லியம்பதி மலைப்பாதையில் வந்து பாருங்கள், வாழ்க்கையின் அழகை முழுமையாய் உணரலாம்!
பல நோய்களுக்கான ஒரு மருந்து!!!-1
பல நோய்களுக்கான ஒரு மருந்து!!!
* வெந்தயம். - 250gm
* ஓமம் - 100gm
* கருஞ்சீரகம் - 50gm
* மேலே உள்ள 3 பொருட்களையும் சுத்தம் செய்து அதை தனியாக கருகாமல் வறுத்து, தூள் செய்து ஒன்றாக கலந்து ஒரு கண்ணாடி குடுவையில் வைத்துக்கொள்ள வேண்டும்.
இதை சாப்பிட்ட பின்பு எந்த உணவும் சாப்பிடக் கூடாது.
தினசரி இந்த கலவையை சாப்பிடுவதால் நம் உடலில் தேங்கி இருக்கும் அனைத்து நச்சு கழிவுகளும் மலம், சிறுநீர் மற்றும் வியர்வை மூலம் வெளியேற்றப்படுகிறது.
தெளிவடைகிறது.
கேட்கும் திறன் அதிகரிக்கிறது.
மேஜிக்கல்சீட்ஸ் என்று சொல்லப்படும் வெந்தயம்!!
#மேஜிக்கல்சீட்ஸ் என்று சொல்லப்படும் வெந்தயம்!!
#அத்தனைக்கும் #அரு #மருந்து:
வெந்தயம் என்ற சமையல் அறையில் இருக்கும் விதைகள் இத்தனை நன்மைகள் உடையதா? என்று வியப்படைய வேண்டி இருக்கிறது. சிறுவயதில் அடிவயிற்று வலி என்றால் கொஞ்சம் வெந்தயத்தை கொடுத்து வாயில் போட்டுக்கொண்டு தண்ணீர் குடிக்க சொல்வார்கள் என் தாயார் .
#சர்க்கரைகுறைபாட்டை
#அக்கறையோடுவிரட்டும்:
வெந்தயத்தை அப்படியே போட்டுக் கொண்டு தினமும் விளங்குவது ஒரு சிலர் பழக்கம் இன்னும் சிலர் வெந்தயத்தை லேசாக வறுத்து பொடி செய்து தினம் ஒரு ஸ்பூன் அளவில் சாப்பிடுவது என்ற பழக்கத்தை உடையவர்கள் ஆனால் இதையெல்லாம் தாண்டி கொஞ்சம் மெனக்கெட்டு வெந்தயத்தை முளைகட்டி பயன்படுத்தும் பழக்கத்திற்கு நாம் வரவேண்டும்.
தினமும் 20 கிராம் அளவு முளைக்கட்டிய வெந்தயம் உங்கள் சர்க்கரையை இரண்டு மாதங்களில் கட்டுக்குள் கொண்டு வந்து விடும் இதை நானே பரிசோதித்து பார்த்தேன் என் நண்பர்களுக்கு சொல்லி அவர்களும் பலன் கண்டிருக்கிறார்கள் என்பதால் என் முகநூல் நண்பர்களுக்கும் சொல்ல வேண்டும் என்ற முனைப்பில் இதை எழுதிக் கொண்டிருக்கிறேன்.
#ஊறவைத்தவெந்தயம் #ஊருக்கேநல்லது:
வெந்தயத்தை தேவையான அளவு எடுத்துக் கொண்டு ஆறு மணி நேரங்கள் ஊற வைக்க வேண்டும் பிறகு அதை சுத்தமான துணியில் வடிகட்டி எடுத்து கட்டி 8 மணி நேரம் வைத்தால் முளைப்பு வந்துவிடும் ஒன்றரை சென்டிமீட்டருக்கும் சற்று அதிகமாக முளைப்பு வந்து விட்டால் அதில் இருக்கும் உங்களுக்கு பிடிக்காத கசப்பு சுவை நீங்கிவிடும் ஆனால் பலன் அதேதான் சாப்பிடுவதற்கு அவ்வளவு அருமையாக இருக்கும் ஆனால் 20 கிராம் அளவு போதுமானது இதை இரவு நேரங்களில் படுப்பதற்கு முன்பு சாப்பிடலாம் அல்லது காலையில் உணவு உண்ட பிறகு சாப்பிடலாம் ஏனென்றால் இரவில் சாப்பிட்ட உணவுக்கு வேலை இல்லை என்பதால் சர்க்கரை அதிகமாகும் அதை கட்டுக்குள் வைக்க இது மிகவும் பயன்படும்.
காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் லோ சுகர் ஆகும் என்பதால் காலை சிற்றுண்டி முடித்த பிறகு கூட சாப்பிடலாம்.
#இதயபாதுகாப்பின் #இதயம்:
சில ஆய்வு முடிவுகள் இதய பாதுகாப்பிற்கு இது மிகப் பெரிய உறுதுணையாக இருக்கிறது என்று சொல்கிறது முக்கியமாக ரத்தக் குழாய்களில் கொழுப்பு சேருவதை இது தடுக்கிறது.
#உங்களையார்என்று #எடைபோடும்:
உங்கள் உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்க வெந்தயம் பயன்படுகிறது அது மட்டுமல்ல அதிகப்படியான எடை இருப்பவர்கள் தொடர்ந்து சாப்பிட்டால் எடை குறைந்து உங்களை ஸ்லிம் அண்ட் பிட்டாக காட்டும் அற்புதத்தை செய்யும் முளைகட்டிய வெந்தயம்.
#முடிஉடைவேந்தர்கள்:
பள்ளிச்செல்லும் மாணவ மாணவிகளுக்கு கூட முடி உதிர்தல் பிரச்சனை இப்பொழுதெல்லாம் ஆரம்பித்து விடுகிறது அதேபோல பொல்லாத பொடுகு தொல்லை தருகிறது இந்த இரண்டு பிரச்சனைகளுக்கும் உள்ளுக்கு எடுத்துக் கொள்ளும் வெந்தயமும் சரி செய்யும் அதே சமயம் வெந்தயத்தை ஊற வைத்து அரைத்து தலைக்கு தடவிக் கொண்டாலும் இந்த பிரச்சனை தீர்க்கப்படும் நீங்கள் முடி உடைய வேந்தர்களாக உலா வரலாம் என்பதற்கு இது கேரண்டி.
#இந்தியாவின்இரும்பு #மனிதர்கள்:
இரும்பு மனிதர் என்று போற்றப்படும் சர்தார் வல்லபாய் பட்டேல் போன்று நீங்களும் உடலில் இரும்பு சத்து அதிகமான மனிதராக போற்றப்படுவீர்கள். வெந்த+அயம்
என்ற சொல் சமைத்த இரும்புச் சத்து என்ற பொருளை தருகிறது என்று சித்த மருத்துவம் சொல்கிறது அதாவது இரும்புச்சத்தை நீங்கள் சமைத்து சாப்பிடுகிறீர்கள் என்று பொருள் அந்த அளவிற்கு உங்கள் இரும்பு சத்து அளவை சரி செய்து உங்களை இரும்பு மனிதர்களாக உலா வரச் செய்யும் மேஜிக்கை செய்கிறது வெந்தயம்.
#அந்தமூன்றுநாட்கள்:
மாதவிடாய் காலங்களில் அடிவயிற்று வலி வயிற்றுக் கடுப்பு போன்றவற்றால் அவதியுறும் பொழுது அந்த நாட்களில் வெந்தயம் பலன் தரும் என்ற சிந்தனை பெண்களுக்கு பெண் குழந்தைகளை வைத்திருப்பவர்களுக்கு வர வேண்டும் இதை நீங்கள் முன்கூட்டியே முளைகட்டி வைத்து திட்டமிட வேண்டும்.
#கண்ணானகண்ணன்:
கண்ணான கண்ணன் என்று போற்றப்படும் அளவிற்கு உங்கள் கண் பாதுகாப்பிற்கு கண்ணுக்கு குளிர்ச்சி தரும் அற்புத பொருளாக முளை கட்டிய வெந்தயம் திகழ்கிறது.
#மூலநோய்க்குகாலன்:
மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து ஆரம்பித்து அதன் முற்றிய நிலையான மூலநோய் வரை சரி செய்யும் வேலையை செய்கிறது முளைக்கட்டிய வெந்தயம்.
#மூன்றுமுக்கியசத்துக்கள்
வைட்டமின் சி,இரும்பு சத்து, பொட்டாசியம் ஆகிய மூன்றும் மிகவும் அவசியமான ஒன்று இந்த மூன்றும் ஒரு சேர உங்களுக்கு கிடைக்கிறது என்றால் அது முளைக்கட்டினால் மாத்திரம் சாத்தியம் அதனால் முளைகட்டிய வெந்தயம் உங்களுக்கு இந்த கூடுதல் பலனை தருவதற்காக காத்திருக்கிறது.
#உடல்சூட்டிற்குஉலை #வைக்கும்:
தொடர்ந்து முளைகட்டிய வெந்தயம் சாப்பிட்டு வர உடல் சூடு குறைந்து கட்டுக்குள் வரும் என்பதால் இதுவும் ஒரு கூடுதல் பலன் ஆனால் மேற்கண்ட எல்லா விஷயங்களையும் சரிசெய்யும் வெந்தயத்தை சைனஸ் பிரச்சனை உள்ளவர்கள் மட்டும் யோசித்து சாப்பிட வேண்டும். அல்லது அவர்கள் வறுத்து பொடி செய்து வெந்தயத்தை பயன்படுத்தலாம். ஏனென்றால் அந்த அளவிற்கு குளிர்ச்சியை அள்ளி வழங்கக் கூடியது முளைகட்டிய வெந்தயம் என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள்.
#மளிகைலிஸ்டில்
#நம்பர்ஒன்:
என்ன இந்த மாசம் மளிகை லிஸ்டில் முதல் மரியாதை இதற்குத்தானா?
ஒரு கிலோ வெந்தயம் வாங்கினால் போதுமா?
சாப்பிட ஆரம்பியுங்கள் இரும்பு சத்துக் கூடும் அப்புறம் மளிகை சாமானை தூக்குவதற்கு அந்த வெந்தயமே உங்களுக்கு உதவிடும்
.
வண்டி எண் 20672 பெங்களூரு cantonment இருந்து மதுரை வந்தே
பயணிகள் கனிவான கவனத்திற்கு வண்டி எண் 20672 பெங்களூரு cantonment இருந்து மதுரை வந்தே பாரத் விரைவு ரயில் உள்ளது பெங்களூரு cantonment:1:30pm
கிருஷ்ணராஜபுரம்:1:43pm
சேலம்:4:42pm நாமக்கல்:5:23pm
கரூர்:5:48pm
திருச்சிராப்பள்ளி:7:20pm
மதுரை :9:40pm குறிப்பு ( பெங்களூரு cantonment கட்டணம் இருந்து மதுரை கேட்டரிங் சேர்த்தால் 1432 உங்களுக்கு கேட்டரிங் தேவையில்லை என்றால் 1068 மட்டும் செவ்வாய் கிழமைகளில் கிடையாது ) தேவைப்படுவோர் பயன்படுத்திக் கொள்ளுங்கள் 






திரிபலா பொடி மலச்சிக்கல் தீரும், குடல் புண் ஆறும்-1
திரிபலா பொடி
மலச்சிக்கல் தீரும், குடல் புண் ஆறும். இரத்தச் சோகை அதிக உடல் எடை குறையும். உடலில் அதிகப்படியாக உள்ள கொழுப்பு , வெளியேறும்.
நன்றாக காய வைத்த நெல்லி வற்றல்,கடுக்காய்த்தோல், மற்றும் தான்றிக்காய்த்தோல் பொடிகள் ,சம அளவில் கலந்ததே ,திரிபலா சூரணம்.
இதை, இரவில் ஒரு தேக்கரண்டி அளவு சுடுதண்ணீரில் கலந்து தினமும் சாப்பிட்டு வர , குடல் புண் ஆறும். இரத்தச் சோகை அதிக உடல் எடை குறையும்.உடலில் அதிகப்படியாக உள்ள கொழுப்பு , வெளியேறும்
உடல் முதுமை மாறி, இளமைப்பொலிவு ஏற்படும். மலச்சிக்கல் தீரும்.திரிபலாவில் க்ரீன் டீயை விடவும் அதிக ஆண்டி ஆக்ஸிடெண்டுகள் உள்ளதாக ஆய்வு கூறுகிறது
ஆங்கில மருந்துகள் நிறைய உட்கொள்பவர்கள், இம்மருந்தினை காலை- இரவு உணவுக்குப்பின் சாப்பிட்டு வர, ஆங்கில மருந்துகளால் உண்டாகும் பக்க விளைவுகளைக் குறைத்துக் கொள்ளலாம்.
திரிபலா குடல் அழற்சிக்குக்கூட நல்ல மருந்து.
திரிபலாவை புறக்காயங்களுக்கு மருந்தாகவும் பயன்படுத்தலாம். திரிபலா கலந்த கொதிக்கவைக்கப்பட்ட நீரால் காயங்களைக் கழுவதும் நல்ல பயன் தரும்.
அதேபோல வாய்ப்புண் வருகிற போதும் இதைப் பயன்படுத்தலாம்மேலும் சர்க்கரை நோய்க்கு இணை மருந்தாய் பயன்படுத்த லாம்
தொண்டை வலி:
சளி பிடிக்கிறதுக்கு ஒரு நாலைஞ்சு மணி நேரத்துக்கு முன்னாடி பாத்தீங்கன்னா தொண்டை ஒரு மாதிரி கரகரக்கும். அப்பவே தெரியணும், நமக்கு நாளைக்கு சளி பிடிக்கப் போவுதுன்னு. அந்த மாதிரி நேரத்துல நான் என்ன செய்வேண்டுமென்றல், கொஞ்சம் திரிபலாவை எடுத்து சுடுதண்ணியில போட்டு, நல்லா வாய் கொப்பளிக்க . சளி வராது. தொண்டைக்கும் இதமா இருக்கும். பிள்ளை அவ்வப்போது பள்ளிக்கூடத்திலிருந்து கொண்டுவரும் மற்ற தொண்டை வலிகளுக்கும் இது நல்ல மருந்து. வாய் கொப்புளிச்சுத் துப்பத் தெரிந்த குழந்தைகளுக்கும் கொடுக்கலாம். முழுங்கினாலும் பெரிய பிரச்சினை இல்ல, இருந்தாலும் ரொம்ப சின்ன பிள்ளைங்களுக்கு வேணாம்.
பல்லிடுக்குப் பிரச்சினை:
சில நேரம் பல்லிடுக்கில் உணவுத் துகள் மாட்டிக் கொள்கிறது. காரட் துண்டு, ஆட்டுக்கறி இப்படி. அப்போது கவனிக்காம விட்டுட்டா, அடுத்த நாள் வலிக்கும். அப்போ அந்தத் துணுக்கை floss போட்டு எடுத்துட்டாலும் வலிக்கும். அந்த நேரத்தில் திரிபலாவை சுடுதண்ணியில போட்டு வாய் கொப்பளிச்சா, அல்லது அந்த இடத்தில் வைத்து லேசாக பல் தேய்ப்பது போலத் தேய்த்தால் வலி மாயமாய்ப் போகிறது. மற்ற வகை பல்/ஈறு வலிகளுக்கும் இதைப் பயன்படுத்திப் பார்க்கலாம்.
திரிபலா எப்படி நமக்கு உதவுகின்றது?
திரிபலா என்பது அற்புதமான ஆயுர்வேத மருத்துவத் தயாரிப்பு ஆகும். ஆயுர்வேத மருத்துவர்களால், உலகம் முழுவதும் பரவலாக எந்த நோய்க்கும் மருந்தாகப் பயன்படுத்தப்படுவது திரிபலா. சர்க சம்ஹிதா என்னும் ஆயுர்வேத நூலில் முதல் அத்தியாயத்திலேயே திரிபலாவைப் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது என்பது ஆச்சரியமான விஷயமாகும். நெல்லிக்காய், கடுக்காய் மற்றும் தான்றிக்காய் ஆகிய இம்மூன்றின் கலவையானது அற்புதமான காயகல்பமாகி, தேவர்களின் அமிர்தத்தினைப் போல் எந்த ஒரு வியாதியையும் தீர்க்கும் அற்புத சக்தியினைப் பெற்றுள்ளது.
நோய் எதிர்ப்புச் சக்தி
ஆயுர்வேதத்தில் திரிபலா என்பது இளமையை பாதுகாக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது நமக்கு முதுமைத் தன்மையை நீக்கி இளமைத் தன்மையை அதிகரிக்கச் செய்யும் என்று பொருள். இது உடல் ஆரோக்கியத்தினை அதிகரிக்கவும், நோய் எதிர்ப்புச் சக்தியைக் கூட்டவும் உதவுகிறது. ஆரோக்கியமான வாழ்வில் நோய் எதிர்ப்புச் சக்தி என்பது ஒரு முக்கியமான அங்கமாகும். இது எப்போதுமே அதிகமாகவே இருக்க வேண்டும். நமது உடலில் இயற்கையாகவே அமைந்திருக்கும் தடுப்பு அரண்களைத் தாண்டி, உடலின் உள்ளே நுழையும் கிருமிகளை எதிர்த்துப் போராடும் ‘ஆன்டிபாடி’ (antibodies) எனப்படும் நோய் எதிர்ப்பு சக்திகளை அதிக அளவில் உற்பத்தி செய்ய, இந்த திரிபலா உதவுகிறது.
ஆன்டி-ஆக்ஸிடன்ட்
உடலில் செல்களுக்கிடையில் நடைபெறும் வளர்ச்சிதை மாற்றத்தில், சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்டாக திரிபலா செயலாற்றுகிறது. நமக்கு முதுமையைத் தரும் முக்கியமான காரணியான “கட்டற்ற காரணிகளை” (free radicals) உற்பத்தி செய்யும் வாய்ப்பைக் குறைக்கிறது. மேலும் செல்கள் முறையாகச் செயல்படுவதற்கு முக்கியமாகத் தேவைப்படும் மைட்டோகாண்டிரியா, கோல்கை உறுப்புகள், உட்கரு ஆகியவை சிறப்பாகச் செயல்படுவதையும் திரிபலா தூண்டுகிறது.
செரிமானமின்மை
செரிமானக் கோளாறுகளை திரிபலா அற்புதமாக குணப்படுத்துகிறது. அதிலும் உணவுப்பாதையில், மலத்தினை வெளித்தள்ளும் குடலியக்கத்தை சீராக செயல்பட வைக்கிறது. மேலும் இரத்தத்தில் உள்ள கொழுப்பினை கரைக்க தேவைப்படும் பைல் (Bile) திரவத்தினை கல்லீரலிலிருந்து சுரக்கவும் உதவுகிறது. உணவுப்பாதையில் தேவையான கார அமிலநிலையை (pH level) தேவையான நிலையில் பேணுவதற்கும் துணை புரிகிறது.
மலச்சிக்கல்
திரிபலா ஒரு சிறந்த குடல் சுத்திகரிப்பானாகச் செயல்படுகிறது. மலச்சிக்கலுக்கு அதிகமாகப் பரிந்துரைக்கப்படும் இயற்கை மருந்து திரிபலாவாகும். உடலிலுள்ள நச்சுப்பொருட்களை நீக்கும் நச்சு நீக்கியாகவும் இது செயலாற்றுகிறது. சிறந்த மலமிளக்கியாகவும் பயன்படுகிறது.
வயிற்றுப் பூச்சிகளும் தொற்றுகளும்
வயிற்றில் பூச்சி வளர்வதையும், தொற்றுக்களையும் கட்டுப்படுத்தும் சக்தி வாய்ந்தது தான் திரிபலா. குறிப்பாக வயிற்றிலிருந்து நாடாப்புழுக்களையும், வளையப்புழுக்களையும் வெளியே அகற்றுவதற்கு பெரிதும் உதவுகிறது. மேலும் உடலில் பூச்சிகளும், நுண்கிருமிகளும் வளர்வதற்கு உதவாத நச்சு நிலையை உடலில் பேணுவதற்கு திரிபலா உதவுகிறது.
இரத்தசோகை
இரத்தத்தில் இரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையினை அதிகரிக்க திரிபலா உதவுகிறது. இதன் மூலம் இரத்த சோகை என்னும் நோயைத் தீர்க்க முடியும். (இரத்த சோகை என்பது இரத்தத்தில், ஹீமோகுளோபின் எனப்படும் இரத்த சிவப்பு அணுக்களின் அளவு குறைந்து காணப்படும் நிலையாகும்).
சர்க்கரை நோய்
திரிபலா சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துவதில் சிறப்பு மிக்கது. நமது கணையத்தினைத் (pancreas) தூண்டி, இன்சுலினை சுரக்கச் செய்கிறது. கணையத்தில்தான் இன்சுலினைச் சுரக்கும் லாங்கர்ஹான் திட்டுக்கள் (langerhans) எனப்படும் சுரப்பிகள் உள்ளன. மேலும் உடலில் குளுகோஸின் அளவை சமநிலையில் பேணுவதில் பெரும் பொறுப்பு வகிப்பது இன்சுலின் ஆகும். மேலும் திரிபலா கசப்புச் சுவையுடன் இருப்பதனால், சர்க்கரை நோயின் ஒரு நிலையான ஹைப்பர்கிளைசீமியா (hyperglycemia) எனப்படும் அதிக சர்க்கரை நிலையில், இதனை எடுத்துக் கொள்வது சிறப்பானது.
உடல்பருமன்
இயல்பை விட உடல் பருமனானவர்கள், திரிபலாவை உட்கொள்வது மிகவும் பயன்தரும். இதனுடைய மருத்துவக் குணத்தினால் உடலிலுள்ள கொழுப்பின் அளவினைக் குறைக்க முடியும். நமது உடலில் கொழுப்பு படிவதற்குக் காரணமான அடிபோஸ் செல்களைக் குறி வைத்து செயல்படுவதால், கொழுப்பின் அளவு குறைகிறது. இதன் மூலம் உடல் பருமன் கட்டுப்படுத்தப்படுகிறது.
சருமப் பிரச்சனைகள்
இது இரத்தத்தினைச் சுத்தம் செய்து இரத்தத்திலுள்ள நச்சுப்பொருட்களை வெளியேற்றும் தன்மை கொண்டிருப்பதால், சரும நோய்களுக்கான மருத்துவத்தில் பெரும் பங்காற்றுகிறது. இரத்தத்தினைச் சுத்திகரிக்கும் தன்மை கொண்டிருப்பதால், தொற்று நோய்களையும் தீர்க்கும் குணம் கொண்டுள்ளது.
சுவாசக் கோளாறுகள்
சுவாசப் பாதையிலுள்ள அடைப்புகளை நீக்கி சீரான சுவாசம் ஏற்பட பெரிதும் உதவுகிறது. சைனஸ் என்னும் நோயைத் தீர்க்கும் மருந்தாகவும் இது செயல்படுகிறது. மேலும் நமது சுவாசப்பாதையிலுள்ள சளியில் பாக்டீரியாக்கள் வளராமலும் இது தடுக்கிறது.
தலைவலி
தலைவலிக்கு நிவாரணமாகவும் திரிபலா பயன்படுகிறது. குறிப்பாக வளர்சிதை மாற்றத்தின் இடையூறுகளால் உண்டாகும் தலைவலிக்கு சிறப்பான நிவாரணத்தை அளிக்கிறது.
புற்று நோய்
புதுடில்லியிலுள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மேற்கொண்ட சமீபத்திய ஆய்வுகளின் படி, திரிபலாவுக்கு புற்றுநோயைக் குணப்படுத்தும் திறன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புற்றுநோய் செல்களில் மைட்டேடிக் நிலையில் ஸ்பிண்டில் வடிவத்தோற்றம் உண்டாவதைக் குறைக்க உதவி செய்கிறது. அதன்மூலம், புற்றுநோய் செல்களில் மெடாஸ்டேடிஸ் (metastasis) வளரும் அபாயத்தையும் குறைக்கிறது.
குருராம் சுரத்குமார் நினைவு தினம்(20.02.2001)
தலைமீது கைவைத்து தாமுணர பெரும்சக்தி அலைபோலே மேலெழுப்பும் ஆசானே குருயோகி!!
இலைபூ காய்கனியாக ஏற்றமதை நாளும்தந்து இருக்கின்றேன் உம்முடனே என்றுரைக்கும் குருயோகி!!
விலையாக பெரும்பக்தி விருப்பமுடன் ஏற்றுநிற்கும் வேதாந்த இறைமகனார் வெற்றியருள் குருயோகி!!
பிழையேதும் யான்செய்யும் பெருங்குற்றம் கருதாது இலகுவாக அதைவிலக்கி ஏற்றிடும் எம்குருயோகி!!
குலம்வாழ நலமாக குறைவின்றி நிறைவாக குருவாக வழிநடத்தி இறைசேர்ப்பாய் குருசுரத்யோகி!!!
குருராம் சுரத்குமார் நினைவு தினம்(20.02.2001)
Subscribe to:
Comments (Atom)
Featured Post
சிறந்த கேட்கும் திறன் கொண்ட மரம்
"சிறந்த கேட்கும் திறன் கொண்ட மரம்" இந்த உயிரினம் எதற்காக இறைவன் படைத்திருப்பான் இதனால் என்ன பயன் என்று சில உயிரினங்களை...
-
ரசவாதம் -தங்கம் தயாரிக்கும் முறைகள் ரசவாதம் -தங்கம் (மூலிகைத் தங்கம்) தயாரிக்கும் முறைகள் Rasavatham ரசவாதம் – Alchemy in Siddha Syste...
-
அற்புதமான பொய்கைநல்லூர் (பொய்யூர்) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம் வடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர். நாகை...

