Thursday, January 16, 2025

அகத்திக்கீரை !

 அகத்திக்கீரை !

அகத்திக்கீரையில் இருக்கிறது விஷத்தை முறிக்கும் ஆற்றல்
அகத்திக்கீரை உடல் சூடு தணிக்கிற, வயிற்றுப்புண்ணை ஆற்றுகிற, மனக்கோளாறுகள் உள்ளிட்ட பல நோய்களை குணமாக்கும், அருங்குணங்கள் கொண்டது. இது மொத்தம், 63 வகை சத்துக்களை கொண்டதாக, சித்த மருத்துவம் கூறுகிறது. அகத்திக்
கீரையில், 8.4 சதவீதம் புரதச்சத்து, 1.4 சதவிகிதம் தாது உப்புகள் மட் டுமின்றி, மாவுச்சத்து, இரும்புச்சத்து, வைட்டமின், ஏ, சி ஆகிய சத்துக்களும் உள்ளன. அகத்தி என்றால், 'அகம் தீ' என்று பொருள்.
அகத்திக்கீரை உடலில், ரத்த ஓட்டத்தை சமப்படுத்தி, சீரான ரத்த ஓட்டத்தை தருவதாலேயே, அதற்கு 'அகத்தி' என்று பெயர் வந்ததாக ஒரு கருத்து உண்டு. இந்தக்கீரை உடலின் உள் உறுப்புகளையும் சுத்தப்படுத்தும் பணியினைச் செய்கிறது. இந்தக்கீரை பெரும்பாலும், வெற்றிலைக்கொடிக்கால்களில், வெற்றிலைக்கொடி படவர்வதற்கும், மிளகுத்தோட்டத் தில் மிளகுக்கொடி படர்வதற்காகவும் துணையாக, சிறுமரமாக வளர்க்கப்படுகிறது. அகத்தி, சாழை அகத்தி, சிற்றகத்தி, சீமை அகத்தி, பேய் அகத்தி என பல வகை இருந்தாலும், பொதுவாக இதில் 2 வகை உண்டு.
ஒன்று வெள்ளை நிறப்பூக்களையும், மற்றொன்று சிவப்பு நிறப்பூக்களையும் கொண்டது. இவற்றின் இலை, பூ, பட்டை மற்றும் வேரும் மருந்தாக
பயன்படும் அருங்குணங்களை கொண்டதாகும்.
அகத்தியின் அருங்குணம்: இந்த அகத்திக்கீரையை சமைத்து சாப்பிட்டால், எளிதாக ஜீரணமாகும். பித்த நோய்கள் நீங்கும். உடல் சூடு தணிந்து, கண்கள் குளிர்ச்சியாகும். சிறுநீர், மலம் சிக்கலின்றி வெளி யேறும். மன இறுக்கம் தளர்ந்து மனக்கோளாறுகளும் சரியாகும். 'அல்சர்' குணமாக அருமையானதொரு மருந்தாகும். கீரையுடன், சின்ன வெங்காயம்,மிளகு, சீரகம் சேர்த்து சூப் செய்து சாப்பிட்டு வந்தால், வயிற்றுப்புண் எளிதாக குணமடையும்.
இந்த கீரையின் சாற்றை, சேற்றுப்புண்களில் பூசி வந்தால், விரைவில் ஆறிவிடும். நாள்பட்ட புண்களின் மீது, கீரையை மட்டும் அரைத்துத்தடவி வந்தால், விரைவில் ஆறிவிடும். தேமல் வந்த இடத்திலும், அகத்தி இலையை தேங்காய் எண்ணெய் விட்டு, வதக்கி சிறு சிறு விழுதுகளாக அரைத்துப்பூசி
வந்தால், விரைவில் குணமடையும். இந்தக்கீரையின் சாற்றில் கடல் சங்கை இழைத்து, மருக்களின் மீது தொடர்ந்து பூசிவந்தால், அவை காய்ந்து உதிர்ந்து மறையும். அகத்திப்பூவை பொரியல் செய்து சாப்பிட்டால், கண் எரிச்சல், தலைசுற்றல், நீர்கக்கடுப்பு சரியாகும். பீடி, சிகரெட் குடிப்பவர்கள் இந்த அகத்திக்கீரை மற்றும் பூவை சமைத்து சாப்பிட்டு வந்தால், அவர்களது உடலில் ஏறியிருந்த விஷம் மலத்துடன் சேர்ந்து வெளியேறும்.
புகைப்பிடிக்கும் ஆர்வமும் குறையும். அகத்திக்கீரையுடன், சீரகம், மிளகு, பூண்டு, வெங்காயம் சேர்த்து சமைத்து சாப்பிட்டால், இதய படபடப்பு, இதயவீக்கம், சிறுநீரக நோய்கள், புற்றுநோய் கூட கட்டுக்குள் வரும். அகத்திப்பட்டையை 50 கிராம் எடுத்து, இடித்து, 8 டம்ளர் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து ஒரு டம்ளராக சுண்டக்காய்ச்சி, வடிகட்டிக் குடித்தால், அம்மை நோய் கூட இறங்கி விடும்.
அகத்தி, மருந்துகளை முறிக்கும் தன்மை கொண்டது. எனவே, சித்தமருந்துகள் சாப்பிடும் போது, அகத்திக்
கீரையை சாப்பிடக்கூடாது. இந்தக்கீரையுடன், கோழிக்கறி சாப்பிடக்கூடாது. மது அருந்தி விட்டு அகத்திகீரையை சாப்பிட்டால், மாரடைப்பு ஏற்படும். தகுந்த சித்த மருத்துவரின் ஆலோசனையின் பேரில் மட்டுமே, மேற்கண்ட மருத்துவ ஆலோசனைகளை பின்பற்ற வேண்டும்.

ரிஷியாக மாறிய மார்கண்டேயன்

 "இந்த மரணம் என்னை என்ன செய்யும்"?

#மிருகண்டர் என்பவர் ஒரு மகரிஷி. அவருடைய மனைவி #மருதவதி. அவர்களுக்கு நீண்ட காலமாக குழந்தைச்செல்வம் இல்லை.
அதற்காக #சிவபெருமானை வேண்டினார்கள். ஒருநாள் மகரிஷி முன் தோன்றிய சிவபெருமான், "மிருகண்டா, உன்னால் நான் மனம் குளிர்ந்தேன். சொல், நீண்ட காலம் வாழும் #முட்டாள்களாக இருக்க போகும், #நூரு குழந்தைகள் வேண்டுமா? அல்லது #பதினாறு_வருடங்களே வாழப்போகும் #புத்திசாலியான ஒரு குழந்தை வேண்டுமா?" என்று கேட்டார்.
அதற்கு மகரிஷி "கடவுளே, அந்த #புத்திசாலி_மகனை மட்டும் கொடுங்கள்", என உடனடியாக கூறினார். "நல்லது! உனக்கு அவன் கிடைப்பான்!" என சிவபெருமான் கூறிமறைந்தார். விரைவிலேயே மகரிஷிக்கு மகன் பிறந்தான் அவனுக்கு #மார்கண்டேயன் என பெயரும் வைத்தார். அந்த சிறுவனும் புத்திசாலியாகவும் அழகானவனாகவும் வளர்ந்தான், வேத சாஸ்திரங்களை அவன் சுலபமாக கற்றுக் கொண்டான். அனைவருக்கும் அவனை பிடித்திருந்தது.
அந்த சிறுவன் 16 வயதை நெருங்கி கொண்டிருந்த போது, மிருகண்ட மகரிஷியின் கவலையும் அதிகரித்துக் கொண்டே போனது. ஒரு நாள் மார்கண்டேயன் தன் தந்தையை பார்த்து "#தந்தையே, ஏன் சோகமாக இருக்கிறீர்கள்?" என கேட்டான்.
அதற்கு "மகனே, நான் உன்னிடம் என்ன சொல்வது? உன்னை எங்களுக்கு சிவபெருமான் அளிக்கையில் நீ 16 வருடங்கள் மட்டுமே உயிருடன் இருப்பாய் என கூறினார்! நீ இப்போது அந்த வயதை அடைய போகிறாய்! இந்த வருடம் முடியும் போது நீ எங்களை விட்டுச்சென்றால் உன் இழப்பை நாங்கள் எப்படி தாங்குவோம்" என மகரிஷி #கண்ணீருடன் கூறினார்.
உடனே மார்கண்டேயன் "தந்தையே! இது தான் காரணமா? சிவபெருமானுக்கு அவரின் பக்தர்களின் மீது நீங்காத #அன்பு உண்டு, அதை நீங்களே என்னிடம் கூறியுள்ளீர்கள்! அவர் பலரையும் சாவில் இருந்து இதற்கு முன் காப்பாற்றி இருக்கிறார். அதை நான் #புராணங்களில் படித்து இருக்கிறேன். அதனால் இன்றிலிருந்து இரவும் பகலுமாக நான் சிவபெருமானை வணங்க ஆரம்பிக்கிறேன். கண்டிப்பாக அவர் என்னையும் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது." என மார்கண்டேயன் கூறினான்.
தன் மகனின் வார்த்தைகளை கேட்ட மிருகண்ட மகரிஷி சந்தோஷம் அடைந்தார். தன் மகனுக்கு ஆசி வழங்கினார். #கடற்கடையில் சிவலிங்கம் ஒன்றினை மார்கண்டேயன் கட்டினான். காலை, மாலை, இரவு என எந்நேரம் ஆனாலும் சிவபெருமானை வழிபட தொடங்கினான்.
கடைசி தினத்தன்று, மார்கண்டேயன் பஜனைகள் பாட தொடங்கும் போது, மரணத்தின் கடவுளான #எமன் ஒரு எருமையின் மீது ஏறி அங்கு வந்து, மார்கண்டேயனிடம் "உன் பஜனையை நிறுத்து சிறுவனே! இந்த பூலோகத்தில் உன் வாழ்க்கை முடிவடைந்து விட்டது. #மரணத்திற்கு_தயாராக_இரு" என எமன் கூறினார். இதை கேட்ட மார்கண்டேயன் பயப்படவில்லை. தன் தாயை குட்டி எப்படி பற்றிக்கொள்ளுமோ அதே போல் அவன் சிவலிங்கத்தை இறுக்கி கட்டிப்பிடித்துக் கொண்டான்.
சிறுவனின் கழுத்தில் எமன் பாசக்கயிற்றை வீசினார்! அவனை சிவலிங்கத்தை விட்டு இழுக்க முயன்றார். அப்போது பாசக்கயிறு சிவலிங்கத்தில் பட்டு அந்த #சிவலிங்கம்_வெடித்தது! அதனுள் இருந்து சிவபெருமான் வெளியேறி எமனை #நெஞ்சில் எட்டி உடைத்த சிவபெருமான்....
"எமா, போய் விடு. இந்த சிறுவனை தொடாதே! இவன் என் #மனம்_கவர்ந்த_பக்தன். இவன் என்றும் 16 வயது முடியாத #சிரஞ்சீவியாக வாழ்வான்" என கூறினார்.
எமன் நிலை குலைந்து போனார். எப்போதும் போல் இல்லாமல் இன்னும் பக்தியுடன் சிவபெருமானை வணங்கினான் மார்கண்டேயன். அந்த #ஜெபத்தின் ஒவ்வொரு வாக்கியத்தின் முடிவிலும் "இந்த மரணம் என்னை என்ன செய்யும்" என முடியும்.
இப்போதும் கூட பலரும் இதனை ஜெபிப்பார்கள். வீட்டிற்கு வந்த மார்கண்டேயன் தன் பெற்றோரின் கால்களில் விழுந்தான். அவனை கட்டித்தழுவிய அவர்கள் ஆனந்தத்தில் கண்ணீர் விட்டனர். மிகப்பெரிய #ரிஷியாக மாறிய மார்கண்டேயன் நீண்ட நாட்கள் வாழ்ந்தார்...

மூணார் ஆனைமுடி சிகரம்..

 


தென்னிந்தியாவிலேயே மிக உயரமான சிகரம் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள #மூணார் ஆனைமுடி சிகரம்..

ஆனைமுடி சிகரம் இரவிக்குளம் நேஷனல் பார்க் வரையாடு பூங்கா பகுதியில் தான் உள்ளது...
தமிழ்நாட்டின் மாநில விலங்கான #வரையாடு இந்தப் பகுதியில்தான் அதிகமாக காணப்படுகிறது...
ஆனை முடி சிகரத்தின் மொத்த உயரம் 2695 மீட்டர் உயரமும் அதாவது 8,842 அடி உயரமும் கொண்டது...
ஏறத்தாழ ஆணை முடி சிகரமும் தமிழ்நாட்டில் உதகை மாவட்டத்தில் உள்ள தொட்டபெட்டா சிகரமும் உயரத்தில் கொஞ்சம் தான் மாறுபடும்‌
தொட்டபெட்டா சிகரம் 2637 மீட்டர் உயரமும் அதாவது 8632 அடி உயரமும் கொண்டது..
இதில் சிறப்பு என்னவென்றால் உதகையில் உள்ள தொட்டபெட்டாவை எளிதில் சென்று அழகாக சுற்றிப் பார்க்கலாம்...
ஆனால் ஆணை முடி சிகரத்தை எளிதாக சென்று சுற்றிப் பார்க்க முடியாது.

சர்க்கரை வியாதி விரல்

 



சர்க்கரை வியாதி என்று உங்களை ஏமாற்றியவன் இறுதியில் உங்கள் விரல் அல்லது காலை எடுக்க சொல்வான்


அவர்களுக்காக ஒரு பதிவு!
விரலை வெட்ட வேண்டாம்:👌
சக்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் விரல்களில் ஏற்பட்ட புண் ஆறவில்லை என
ஆங்கில மருத்துவத்தின் ஆலோசனை படி விரலை எடுக்க வேண்டும் என்ற அவசியமில்லை.!
நாட்டு மருத்துவத்தில் விரைவாக ஆறிவிடும்.🌷
மேலும் விபரங்கள் கீழே.!
👇👇👇👇👇👇👇👇👇👇
சா்க்கரை வியாதிக்காரா்களுக்கு காலில் ஏற்படும் குழிப்புண்களுக்கு
மருத்துவாிடம் சென்றால்,
சிலநாட்கள் அதற்கு மருத்துவம் செய்துப்பாா்த்து விட்டு அந்த புண்கள் ஆறவில்லை என்றால்,
விரலில் புண் இருந்தால் விரலை துண்டித்து விடுவதும்,
காலில் இருந்தால்
காலை துண்டித்து விடுவதும்,
தற்போதைய சூப்பா் ஸ்பெசாலிட்டி ஆஸப்பிடல்களின் தனித்திறமை.
காலையும்,விரலையும், அதோடு காசையும் இழந்தவனுக்குத்தான் தொியும், அதனுடைய வலி இதற்கு ஒப்பில்லா மருத்துவம் ஒன்று உள்ளது,
எனக்கு தெரிந்தவரின் காலில் ஏற்பட்ட குழிப்புண்ணுக்கு டாக்டா்கள்,
புண் ஏற்ப்பட்ட இடத்தில் விரல் கருப்பாபாகிவிட்ட காரணத்தினால் விரலை வெட்டிவிட வேண்டுமென்று கூறிவிட்டனா்.
எனக்கு ஒன்று தோன்றியது மிளகு அளவு உள்ள குழிப்புண்ணையே ஆற்ற முடியாதவா்கள் விரலையோ காலையோ வெட்டியபின் அதனால் ஏற்படும் இரணத்தை இவா்கள் ஆற்றிவிடவா போகிறாா்கள்.
முடிவில் மரணத்தைதான் தழுவ வேண்டும். இதுதான் நிலை.🏨
இதற்கு கண்கண்ட மருந்து👀
ஆவாரம்_இலை 🌿🌿🌿🌿🌿🌿🌿
இந்த இலையை அம்மியில்,மிக்ஸியில்,அரைத்து அதன் விழுதை ஒரு கரண்டியில் இட்டு அதனுடன் சிறிது நல்லெண்ணை விட்டு சிறுதனலில் ஆவாரம் விழுதை வதக்கி அதை சுத்தமான காட்டனில் வைத்து கட்டிவிடவேண்டும்.
இதுபோல் ஒருநாள்விட்டு ஓருநாள் கட்டிவர குழிப்புண்கள் மாயமாக மறைந்துவிடும்.
இதை அதிகம் பகிர்ந்தால் பலரின்
கால்களையும் விரல்களையும் காப்பாற்றுவோம்.!
படித்தேன்...பகிர்ந்தேன்..

பூம்பாறையும் ஒன்னா ஆயிடுச்சு

 

எப்பவும் மனசுக்கு நெருக்கமான இடங்கள்ல,

இதுவும் ஒன்னு...
பூம்பாறை💚
கொடைக்கானலோட மகுடம்னு சொல்லலாம்...
மலை முகடுகளை உரசி செல்லும் முகில் கூட்டங்கள்,
இந்த பூம்பாறையின் அழகான அடையாளம்...
பைன் மரங்கள், தைல மரங்கள் மற்றும் சொகுசு விடுதிகளின் ஆக்ரமிப்புக்கு தப்பிய,
சொச்ச சோலைக்காடுகள் இங்கு பேரழகு...
வருசத்துல அதிகமா மழை பெய்யற இடமும் இது தான்...
பல நீருற்றுகளுக்கு ஆதாரமும் இது தான்...
கோடை காலங்கள்ல கூட,
இங்க பனி மூட்டத்தை காணலாம்...
இது எல்லாத்தையும் விட,
குழந்தை வேலப்பர் கோயில்...
பூம்பாறைக்கு உரிய தனிச் சிறப்பு...
இன்னும் இப்படி பல சொல்லிட்டே போகலாம்...
இதனாலயே,
என் மனசுக்கு நெருக்கமான இடங்கள்ல,
பூம்பாறையும் ஒன்னா ஆயிடுச்சு🥰

தென்னக இரயில்வேயின் புதிய அட்டவணையில் 01.01.2025 முதல்

 தென்னக இரயில்வேயின் புதிய அட்டவணையில், முக்கிய இரயில்கள்...

சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் நேரம்: 01.01.2025 முதல்....
20627 நாகர்கோவில் வந்தே பாரத் (புதன் தவிர) காலை 5 மணி.
22671 மதுரை தேஜஸ் காலை 6.00 மணி.
16127 குருவாயூர் காலை 10.20 மணி.
12635 மதுரை வைகை மதியம் 1.45 மணி.
20665 நெல்லை வந்தே பாரத் (செவ்வாய் தவிர) மதியம் 2.45 மணி.
12605 பல்லவன் மதியம் 3.40 மணி.
20605 செந்தூர் மாலை 4.00 மணி.
12642 திருக்குறள் - கன்னியாகுமரி (வாராந்திர Sun & Tue) மாலை 4.10 மணி.
12652 மதுரை - சம்பர்க் கிராந்தி (வாராந்திர Wed & Fri) மாலை 4.10 மணி.
16101 கொல்லம் மாலை 5.00 மணி.
12633 கன்னியாகுமரி மாலை 5.20 மணி.
22661 இராமேஸ்வரம் மாலை 5.45 மணி.
16751 இராமேஸ்வரம் மாலை 7.15 மணி.
12693 முத்து நகர் இரவு 7.30 மணி.
20635 அனந்தபுரி இரவு 7.50 மணி.
12661 பொதிகை இரவு 8.10 மணி.
12631 நெல்லை இரவு 8.40 மணி
12665 கன்னியாகுமரி (வாராந்திர Tue) இரவு 9.05 மணி.
12637 பாண்டியன் இரவு 9.40 மணி.
12653 மலைக் கோட்டை இரவு 11.30 மணி.
அவசியம் #Share செய்யுங்கள் இது ஒருவருக்கு பயனுள்ளதாக இருக்கும்

Friday, January 10, 2025

குடிப்பதற்கு ஒரு வாசனை வெந்நீரை


 கேரளாவில் எந்த ரோட்டுக்கடையாக இருந்தாலும், மதிய உணவு ஓட்டல், நட்சத்திர ஓட்டல் என்று எங்கு போனாலும் குடிப்பதற்கு ஒரு வாசனை வெந்நீரை கொடுக்கிறார்கள். வெளியூரிலிருந்து வந்து நாசுக்கு பார்க்கும் வாடிக்கையாளரைக் கூட நம்பிக்கையுடன் குடிக்க சொல்கிறார்கள். வாட்டர் பாட்டிலை நீட்டுவதில்லை .

சரி கடைகள்தான் என்றால் கோயில் அன்னதானத்திலும் இதுதான். வீடுகளிலும்..... எங்கும். எதிலும். 🥀🍂
கொஞ்சம் விசாரித்ததில் எவருக்கும் ஏன் செய்கிறோம் என்று தெரியவில்லை. அந்தளவு பல காலமாக நடைமுறையில் பழகிவிட்டது. குடிதண்ணீர் என்றாலே அவர்களுக்கு மூலிகை தண்ணீர்தான். பருவம் மாறும்போது தண்ணீரினால் நோய்வராமல் இருக்க என்று ஒரு ஒட்டல்காரர் சொன்னார்..
சரி என்று அவர்கள் என்னதான் போடுகிறார்கள் என்று தீர விசாரித்து அதையே மளிகை கடையில் கேட்டதில் கிடைத்தது இந்த 4 வித மூலிகை பொட்டலங்கள்.இதில் அப்படி என்ன இருக்கிறது ?
அ) பதிமுகம் பட்டை (அதுதான் சிவப்பு வண்ணத்தை கொடுக்கிறது). (சிறுநீரக தொல்லை நீங்கும்)
ஆ) சொர்க்க மரம் (சைமரூபா கிளாக்கா). கான்சர் வராதாம்.
இ) கங்களி இன்ன பிற மூலிகைகள்.🌱🍃
பழக்கத்தில் (ஜீரோ பாக்டீரியா) பன்னாட்டு கம்பெனியின் மினரல் வாட்டர் பாட்டிலை கேட்டாலும் அவர்கள் அதை நமக்கு விற்காமல் இதை இலவசமாக குடிக்க சொல்கிறார்கள். மெச்ச வேண்டும்.
எங்கேயோ பூமிக்கு பின்புறத்தில் இருக்கும் அமெரிக்காவை காப்பியடிக்கும் நமக்கு பக்கத்து ஊரில் இருக்கும் மலையாளத்தானை நல்ல விஷயத்துக்கு அட்டை காப்பி அடிப்பது தவறா ? அடிப்போம் ?
இந்த பொட்டலங்கள் ஒவ்வொன்றும் 25/- முதல் 60/- வரை விற்கிறது. 5 லிட்டர் வெந்நீரில் ஒரு ஸ்பூன் போட்டால் போதும்.
பொது நலன் கருதி வெளியீடு.. இயற்கையாகவே வாழப் பழகு இயற்கை உணவை உட்கொண்டு.

ஹெர்னியா’ என்னும் குடலிறக்கம் ஏற்படாமல் தண்ணீரை

 


*ஹெர்னியா’ என்னும் குடலிறக்கம் ஏற்படாமல் தண்ணீரை இப்படி குடிங்க!*

தண்ணீர் குடிக்கும் போது உட்கார்ந்து குடிக்க வேண்டும். ஏனென்றால் நின்று கொண்டு தண்ணீரை குடிக்கும் போது தண்ணீர் வயிற்றிற்கு அதி வேகமாக செல்லும். அதனால் ஹெர்னியா ஏற்படும்
நின்று கொண்டே தண்ணீரைக் குடிக்கும் போது, நீரானது குடலில் நேராக பாய்வதோடு, குடல் சுவற்றை வேகமாக தாக்குகிறது. இப்படி தாக்குவதால் குடல் சுவர் மற்றும் இரைப்பை குடல் பாதை முழுவதும் பாதிக்கப்படும். இப்படியே நீண்ட நாட்கள் நின்றவாறு நீரைக் குடித்து வந்தால், இரைப்பை குடல் பாதையின் மீள்தன்மை அதிகரித்து, அதனால் செரிமான பாதையில் செயல் பிறழ்ச்சி ஏற்படக்கூடும்.
சிறுநீரக பாதிப்பு
தண்ணீரை நின்றவாறோ அல்லது நடந்தவாறோ குடித்தால், சிறுநீரகங்களின் வடிகட்டும் செயல்முறை குறைந்துவிடும். இப்படி சிறுநீரகத்தின் செயல்முறை பாதிக்கப்பட்டால், அதனால் சிறுநீரங்கள், சிறுநீர்ப்பை அல்லது இரத்தத்தில் நச்சுக்கள் அப்படியே தங்கி, அதனால் சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப்பை தொடர்பான நோய்களின் தாக்கம் அதிகரிக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது. ஆனால் அதுவே உட்கார்ந்து குடித்தால், நீரானது உடலின் அனைத்து இடங்களிலும் நுழைந்து நச்சுக்களை அடித்துக் கொண்டு சிறுநீரகங்களுக்கு கொண்டு சென்று, நச்சுக்களை உடலில் இருந்து முறையாக வெளியேற்றிவிடும்.
ஆர்த்ரிடிஸ்
சில ஆய்வுகளில் நின்று கொண்டே தண்ணீர் குடிப்பதால், ஆர்த்ரிடிஸ் ஏற்படும் வாய்ப்பு அதிகரிப்பதாக சொல்கிறது. அதுவும் தண்ணீரை நின்றவாறு குடிப்பதால், அது உடலின் மூட்டுப் பகுதிகளில் உள்ள நீர்மங்களின் சமநிலைக்கு இடையூறை ஏற்படுத்துகிறது. இப்படியே நீண்ட நாட்கள் இப்பழக்கத்தைக் கொண்டால், நாளடைவில் அது மூட்டு வலிக்கு உட்படுத்தி, ஆர்த்ரிடிஸ் ஏற்பட வழிவகுத்துவிடும்.
நரம்புகள் டென்சன் ஆகும்
பொதுவாக நின்று கொண்டிருக்கும் போது சிம்பதெடிக் நரம்பு மண்டலமானது செயல்பட ஆரம்பிக்கும். சிம்பதெடிக் நரம்பு மண்டலம் செயல்பட ஆரம்பித்தால், இதயத் துடிப்பு அதிகமாகும், இரத்த நாளங்கள் விரியும், நரம்புகள் அதிகமாக டென்சனாகும், கல்லீரலில் இருந்து சர்க்கரை வெளியேற்றப்படுவது என்று உடலே சுறுசுறுப்புடன் வேகமாக இயங்கும். அந்நேரம் குடித்தால், நீரானது நேரடியாக சிறுநீர்ப்பையை அடைந்து வெளியேறும். ஆனால் உட்கார்ந்து இருக்கும் போது பாராசிம்பதெடிக் நரம்பு மண்டலம் செயல்பட ஆரம்பித்து, உடல் ரிலாக்ஸ் ஆகி, செயல்பாடுகளின் வேகம் குறைந்து, நரம்புகள் அமைதியாகி, உண்ணும் உணவுகள் மற்றும் குடிக்கும் நீரை அனைத்தும் மெதுவாக செரிமான மண்டலத்தில் இருந்து வெளியேற்றப்படும்.
அண்ணாந்திச் குடித்தால் காது நோய் ஏற்படுத்தும்
டம்ளரில் வாய்வைத்துக் குடித்தால், காதில் வருகிற நோய்கள் தள்ளிப் போகும். தண்ணீரைத் தலை அண்ணாந்திச் குடித்தால் காது நோய்களுக்கு வழிவகுக்கும். தண்ணீரை அண்ணாத்திக் குடித்தததால் ஏற்பட்ட பாதிப்பால் சிலருக்கு விரைந்து காது நோய்கள் தோன்றுகின்றன. நமது உடம்பில் காது,மூக்கு,தொண்டை வழிகள் ஒரே பாதையில் அடுத்தடுத்து உள்ளன.
சில குறிப்புகள்
உடலின் மெட்டபாலிசம் சீராக நடைபெற, போதிய அளவில் தண்ணீரை உட்கார்ந்து குடிக்க வேண்டும். அதிலும் கீழே கொடுக்கப்பட்டுள்ளவாறு குடித்து வந்தால், நல்ல பலனைப் பெறலாம்.
காலையில் எழுந்ததும் 1-3 டம்ளர் தண்ணீர் குடிக்கவும்.
மதிய உணவுக்கு முன் 1 மணிநேரத்திற்கு முன் 2-3 கப் குடிக்கவும்.
இரவு உணவு உண்பதற்கு 1 மணிநேரத்திற்கு முன் 2-3 கப் குடிக்கவும்.
டம்ளரில் நன்றாக வாய் வைத்துக் குடிக்க வேண்டும்.
அவசரமின்றி மெதுவாகக் குடிக்க வேண்டும்.
வாய் நிறைய தண்ணீரை வைத்திருந்து கொஞ்சம், கொஞ்சமாக வயிற்றுக்குள் இறக்குதல் வேண்டும். அப்பொழுது எச்சிலுடன் குதப்பி தண்ணீரை வயிற்றில் இறக்குவது உண்ட உணவு ஜீரணிக்கும்.
நம்மில் பலரும் நின்று கொண்டு நீர் அருந்துவதும் , இடது கையால் அருந்துவதும், ஒரே மூச்சில் அவசரமாக அருந்துவதும் சர்வ சாதாரணமாகவே செய்கிறோம்.

சர்க்கரைவள்ளி கிழங்கு (Sweet Potatoes)


 *ஏறக்குறைய சாகாவரம் தரும் ஒரு உணவு என்ன தெரியுமா?*

மிக மிக மலிவு விலையில் கார்த்திகை, மார்கழி, மாதங்களில் தெருக்களில் கொட்டி விற்கப்படும் சர்க்கரைவள்ளி கிழங்கு (Sweet Potatoes) தான் அது.
நாம் உண்ணும் உணவுகள் கலப்படமா? சுகாதாரமானதா? ஆரோக்கியமானதா? என்று தெரியாமலேயே சாப்பிட்டுக்கொண்டே இருக்கிறோம்.!
அவ்வாறு சாப்பிடும்போது உணவு செரித்து அதை சக்தியாக்கிய பிறகு நமது உடலில் தங்கும் கழிவுகள் தான் Free Radicals எனும் கேன்சரை உண்டாக்கும் நஞ்சு!
அத்தகைய நஞ்சு நமது வாகனங்களில் நீண்ட தூரம் அதிக நாட்கள் பயணித்த பிறகு சைலன்சரில் படிந்திருக்கும் கரிக்கழிவு போன்றது தான் அந்த Free Radicals.
எப்படி வண்டியை சர்வீஸ் விட்டு சைலன்சரை சுத்தம் செய்கிறோமோ அதற்கு இணையானது தான் நாம் உண்ணும் சர்க்கரைவள்ளி கிழங்கு (Sweet Potatoes).
அது நமது உடலில் தேங்கும் கேன்சரை உண்டாக்கும் கழிவுகளை சுத்தமாக துடைத்து எடுத்து ஒழிக்கிறது.
நீங்கள் உங்கள் வாழ்நாள் முழுக்க கேன்சர் பற்றிய பயமே இல்லாமல் வாழவேண்டும் என்று நினைத்தால் சீசனில் கிடைக்கும் சர்க்கரைவள்ளி கிழங்கை தேவையான அளவு சாப்பிடுங்கள்.

தேன்சோலை ங்கற அழகான இடம்...

 




பழனி to கொடைக்கானல் போற வழில...

மேல்பள்ளம் தாண்டி...
வடகவுஞ்சி கிராமத்துக்குள்ள போனா...
அங்க...
பெரும்பள்ளம் போற வழில இருக்கு...
இந்த தேன்சோலை ங்கற அழகான இடம்...
Main roadல இருந்து தள்ளி 10 km இருக்கறதுனால...
இங்க சுத்தமாவே ஆள் நடமாட்டம் இருக்காது...
யூகலிப்டஸ் மரங்களும் பைன் மரங்களும் நிறைஞ்ச,
குட்டி காடு இது...
இங்க நிறைய தேன் கூடுகள் இருக்கு...
நாலு மரங்களுக்கு ஒரு மரம்னு தேனீக்கள் கூடு கட்டி இருக்கு...
அதனாலயே இந்த இடத்துக்கு தேன்சோலைனு பெயர் வந்துச்சாம்...
கழுகும், குட்டி குட்டி பறவைகளையும் இங்க பார்க்கலாம்...
கொஞ்சம் பட்டாம்பூச்சிகளையும் ரசிக்கலாம்...
Week end தவிர...
மத்த எல்லா நாட்களிலும்...
இந்த இடம் ஆள் நடமாட்டம் இல்லாம அமைதியா இருக்கும்...
இங்க இருக்கற குட்டி pine forestல...
கொஞ்ச நேரம் படுத்து தூங்க கூட செய்யலாம்...
அவ்ளோ அமைதியா அவ்ளோ சுத்தமா இருக்கும்...
காட்டோட பேசவும்...
காற்றோட பாடவும்...
மரங்களின் பாஷை அறியவும்...
அடிக்கடி இந்த இடத்துக்கு வந்திடுவேன்...
Machine மாதிரியான நம்ம வாழ்க்கைல...
கொஞ்ச break எடுக்க...
இந்த மாதிரி இடங்கள், அவசியம் தேவை...
Routine ah எல்லாரும் போற park, boatingனு போனா...
அங்க நாம இயல்பா இருக்க முடியாது...
குழந்தைதனத்தை expose பண்ண முடியாது...
மனிதர்கள் சத்தத்தை கடந்து, இயற்கையின் மொழியறிய முடியாது...
அதனால...
இப்படிபட்ட இடங்களை தேடுங்க...
அங்க மௌனமா இயற்கையோடு பேசுங்க🥰

அமேசான் ஆற்றின் மீது ஏன் பாலங்கள் இல்லை?

 


அமேசான் ஆற்றின் மீது ஏன் பாலங்கள் இல்லை?

தென் அமெரிக்காவில் 4,345 மைல்கள் (7,062 கிலோமீட்டர்) நீளம் ஓடுகிறது.
சில பகுதிகளில் 11 கிலோமீட்டர் (7 மைல்கள்) அகலம்.
.
சதுப்பு நிலப்பரப்பு, அடர்த்தியான மரங்கள், செடி, கொடிகள் போன்றவற்றால் சுற்றுச்சூழல் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கிறது,
காலநிலையை ஒழுங்குபடுத்துகிறது.
பல்லுயிர் பெருக்கத்தை வளர்க்கின்றது.
ஆற்றின் அகலம், ஆழம், பெரும் அளவிலான நீரோட்டம்.
வெள்ளப்பெருக்கு,
ஆற்றின் போக்கில் அடிக்கடி தடம் மாறுதல் மற்றும் பல காரணங்களால்,
அமேசான் ஆற்றில் பெரிய பாலங்கள் கட்ட முடியவில்லை.
நதியே ஒரு இயற்கையான நெடுஞ்சாலையாக இருக்கின்றது.
பயணிகள் படகுகள் மற்றும் பெரிய சரக்குக் கப்பல்கள் போக்குவரத்து பெருமளவில் நடைபெறுகின்றது.
பாலம் தேவைப்படக்கூடிய இடங்களில், படகுகள் மற்றும் படகுகளின் உள்கட்டமைப்பு போக்குவரத்தது சிறப்பாக உள்ளது.
அமேசான் கரையில் உள்ள மனாஸ் மற்றும் பெலேம் ஆகிய நகரங்களில் ஆற்றைக் கடக்க படகுகள். சில இடங்களில் சிறிய பாலங்கள் உள்ளன.
அமேசான் ஆற்றின் மீது ஒரு பெரிய பாலம் கட்டுவது உள்ளூர் வாழ்விடங்கள் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தும்.
செலவு கூடுதல் ஆகும், தொடர்ந்து பராமரிக்க முடியாது.
டிரான்ஸ்-அமேசானியன் நெடுஞ்சாலை போன்ற இடங்களில் சாலைகள் மற்றும் உள்கட்டமைப்புகளுடன் சில வளர்ச்சிப் பணிகள் நடைபெறுகின்றன.
அமேசான் நதியின் துணை நதிகள் அல்லது ரியோ நீக்ரோ மற்றும் மடீரா நதி போன்ற அருகிலுள்ள ஆறுகளைக் கடக்கும் சில சிறிய பாலங்கள் உள்ளன.

Featured Post

சிறந்த கேட்கும் திறன் கொண்ட மரம்

"சிறந்த கேட்கும் திறன் கொண்ட மரம்" இந்த உயிரினம் எதற்காக இறைவன் படைத்திருப்பான் இதனால் என்ன பயன் என்று சில உயிரினங்களை...