Thursday, January 16, 2025

பூம்பாறையும் ஒன்னா ஆயிடுச்சு

 

எப்பவும் மனசுக்கு நெருக்கமான இடங்கள்ல,

இதுவும் ஒன்னு...
பூம்பாறை💚
கொடைக்கானலோட மகுடம்னு சொல்லலாம்...
மலை முகடுகளை உரசி செல்லும் முகில் கூட்டங்கள்,
இந்த பூம்பாறையின் அழகான அடையாளம்...
பைன் மரங்கள், தைல மரங்கள் மற்றும் சொகுசு விடுதிகளின் ஆக்ரமிப்புக்கு தப்பிய,
சொச்ச சோலைக்காடுகள் இங்கு பேரழகு...
வருசத்துல அதிகமா மழை பெய்யற இடமும் இது தான்...
பல நீருற்றுகளுக்கு ஆதாரமும் இது தான்...
கோடை காலங்கள்ல கூட,
இங்க பனி மூட்டத்தை காணலாம்...
இது எல்லாத்தையும் விட,
குழந்தை வேலப்பர் கோயில்...
பூம்பாறைக்கு உரிய தனிச் சிறப்பு...
இன்னும் இப்படி பல சொல்லிட்டே போகலாம்...
இதனாலயே,
என் மனசுக்கு நெருக்கமான இடங்கள்ல,
பூம்பாறையும் ஒன்னா ஆயிடுச்சு🥰

No comments:

Featured Post

சிறந்த கேட்கும் திறன் கொண்ட மரம்

"சிறந்த கேட்கும் திறன் கொண்ட மரம்" இந்த உயிரினம் எதற்காக இறைவன் படைத்திருப்பான் இதனால் என்ன பயன் என்று சில உயிரினங்களை...