Thursday, February 13, 2025

கீரையாக சந்தையில் ஆராக்கீரை

ஆரை...

செங்குத்தாக வளர்ந்த தண்டில் நான்கு கால்வட்ட இலைகளைக் கொண்ட மிகவும் சிறிய நீர் தாவரம் ..
கீரையாக சந்தையில் ஆராக்கீரை அல்லது ஆழக்கீரை என்ற பெயரில் விற்பனைக்கு வருவதுண்டு..
தமிழகமெங்கும் நீர்நிலைகளிலும் வாய்க்கால்களிலும் தானே வளர்வது..
இலை மருத்துவப் பயனுடையது வெப்பம் நீக்கி தாகம் தணிக்கும் செய்கை உடையது ...
#கீரையை சமைத்துண்ண #தாய்ப்பால் சுரப்பை நிறுத்தும் ...
@கீரையை சமைத்துண்ண பகுமூத்திரம் போகும் ...
@இலையை நிழலில் உலர்த்தி பொடி செய்து 30 கிராம் தூளை அரை லிட்டர் நீரில் போட்டு பாதியாக காய்ச்சி பாலும் பனங்கற்கண்டும் கலந்து காலை மாலை பருகிவர பகுமூத்திரம், அதிதாகம், சிறுநீரில் ரத்தம் போதல் ஆகியவை தீரும். ..

No comments:

Featured Post

சிறந்த கேட்கும் திறன் கொண்ட மரம்

"சிறந்த கேட்கும் திறன் கொண்ட மரம்" இந்த உயிரினம் எதற்காக இறைவன் படைத்திருப்பான் இதனால் என்ன பயன் என்று சில உயிரினங்களை...