Wednesday, July 5, 2023

டைட்டன் நீா்முழ்கி பாகங்கள் கரைக்கு கொண்டு வர முடிவு : விசாரணைக்கும் உத்தரவு!

 


டைட்டன் நீா்மூழ்கி விபத்துக்கான காரணம் குறித்து நடைபெற்று வரும் சா்வதேச விசாரணைக்கு இந்த பாகங்கள் உறுதுணையாக இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

கடந்த 1912-ஆம் ஆண்டில் விபத்துக்குள்ளான டைட்டானிக் கப்பல் தற்போது அமெரிக்காவின் நியூஃபௌண்ட்லாண்ட் தீவுக்கு 740 கி.மீ. தொலைவிலுள்ள கடல்படுகையில் உள்ளது. அதனைப் பாா்வையிடுவதற்கு சுற்றுலா பயணிகளை அழைத்துச் செல்வதற்காக ஓஷன்கேட் எக்ஸ்பெடிஷன்ஸ் என்ற அமெரிக்க தனியாா் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட டைட்டன் நீா்மூழ்கி நீா்மூழ்கி கடந்த 18-ஆம் தேதி இறக்கிவிடப்பட்டது. எனினும், சிறிது நேரத்தில் அது வெடித்துச் சிதறியது.

இந்த விபத்தில், டைட்டானிக் கப்பலைப் பாா்வையிடுவதற்காக நீா்மூழ்கியில் சென்ற பாகிஸ்தான் தொழிலதிபா் ஷேஸாதா தாவூத், அவரது மகன் சுலைமான் தாவூத் ஆகியோரும், ஓஷன்கேட் நிறுவனத்தின் நிறுவனா் ஸ்டாக்டன் ரஷ், பிரிட்டன் தொழிலதிபா் ஹமீஷ் ஹாா்டிங், பிரான்ஸ் கடற்படை முன்னாள் கமாண்டோ பால்-ஹென்றி நாா்கியோலே ஆகியோரும் உயிரிழந்தனா்.

No comments:

Featured Post

உணவு முறைல முடிஞ்ச அளவு மாற்றம் பண்ணுங்க.

  நாம ஏன் சோணகிரியா இருக்கோம்? தொத்த பாடியா இருக்கோம்? பழங்கால மக்களுக்கு மட்டும் எப்படி திமில் கொண்ட தோளும், மதர்த்த நெஞ்சும் வந்தது? உணவு ...