Wednesday, July 5, 2023

உள்நாட்டு புரட்சி தோல்வியில் தான் முடியும்: அதிபர் புடின் எச்சரிக்கை

 












ரஷ்யாவில் உள்நாட்டு புரட்சி ஏற்பட்டால், அது தோல்வியில் தான் முடியும் என அதிபர் விளாடிமிர் புடின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு மிகவும் நெருக்கமான யேவ்கெனி பிரிகோஷின், வாக்னெர் என்ற தனியார் ராணுவத்தை நடத்தி வருகிறார். புடினுக்காக, கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்துள்ள போரில், இந்த தனியார் படையும் ஈடுபட்டு வந்தது. இந்நிலையில், சமீபத்தில் பிரிகோஷின் கிளர்ச்சியில் ஈடுபட்டார். ரஷ்யாவின் முக்கிய நகரான ரோட்ஸ்வான் டானை அவரது படைகள் கைப்பற்றின.

தலைநகர் மாஸ்கோ நோக்கி முன்னேறும்படி தன் படைக்கு அவர் உத்தரவிட்டுஇருந்தார். ஆனால், சில மணி நேரங்களிலேயே, இந்த உத்தரவை அவர் திரும்பப் பெற்றார். அண்டை நாடான பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ உடன் நடந்த பேச்சுக்குப் பின், ரஷ்ய அரசுக்கு எதிரான போராட்டத்தை அவர் கைவிட்டதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, பிரிகோஷின் உடன் ரஷ்ய அரசு சமரசம் செய்ததாக கூறப்படுகிறது.

இதன்படி, ரஷ்யாவில் இருந்து பிரிகோஷின் வெளியேறி, பெலாரசில் தஞ்சமடைவார் என்றும், அவர் மற்றும் அவரது தனியார் ராணுவ அமைப்பின் மீதான வழக்குகள் திரும்பப் பெறப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், புரட்சி முறியடிக்கப்பட்டதை அடுத்து, ரஷ்ய அதிபர் புடின் நாட்டு மக்களிடம் உரையாற்றினார்.

அவர் பேசியதாவது: ரஷ்ய ராணுவ வீரர்கள் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டு சாக வேண்டும் என மேற்கு நாடுகள் விரும்புகின்றன. ரஷ்யாவில் உள்நாட்டு கிளர்ச்சி உருவாகினால், அது தோல்வியில் தான் முடியும். வேக்னர் படை ரஷ்ய ராணுவத்தில் இணையலாம் அல்லது பெலாரஸ் நாட்டிற்கு செல்லலாம். இவ்வாறு அவர் பேசினார்.

No comments:

Featured Post

உணவு முறைல முடிஞ்ச அளவு மாற்றம் பண்ணுங்க.

  நாம ஏன் சோணகிரியா இருக்கோம்? தொத்த பாடியா இருக்கோம்? பழங்கால மக்களுக்கு மட்டும் எப்படி திமில் கொண்ட தோளும், மதர்த்த நெஞ்சும் வந்தது? உணவு ...