Monday, July 7, 2025

பழனி முருகன் இரகசியம்..

பழனி முருகன் இரகசியம்..
ஒரு சொட்டு வியர்வை துளியை குடிக்க விழுந்து கிடக்கும் பக்தர்கள்...

அறிமுகம் ஏதும் தேவையில்லாத உலகப் பிரசித்தி பெற்ற ஊர் பழநி. திரு-ஆவினன்-குடி என்ற பழமையான பெயர் சிறப்பு கொண்ட இந்தப் பழநி மலை மேலே வீற்றிருக்கும் தண்டாயுதபாணி சிலை நவபாஷணம் என்ற ஒன்பது வகையான மூலிகைகளால் செய்யப் பட்டது. போகர் சித்தர், தனது சீடர் புலிப்பாணி உட்பட மற்ற சீடர்களின் உதவியுடன் கன்னிவாடியில் உள்ள மெய் கண்ட சித்தர் குகையில் இந்த நவபாஷண சிலை செய்யப் பட்டுள்ளது. லிங்கம், குதிரைப் பல், கார்முகில், ரச செந்தூரம், வெள்ளை பாஷணம், ரத்த பாஷணம், கம்பி நவரசம், கௌரி பாஷணம், சீதை பாஷணம் என ஒன்பது வகையான மிக ஆபூர்வமான மூலிகைகளை கொண்டு கடினப் பிரயாசையுடன் இந்த சிலையை உருவாக்கிய போகர், இந்த சிலையை வைக்க செவ்வாயின் ஆதிக்கம் அதிகம் உள்ள பகுதியாகத் தேடிய போது, அதற்கு பொருத்தமான இடம் இந்த பழனி மலை என்பதை தேர்வு செய்து, இங்கு பிரதிஷ்டை செய்துள்ளார்.

நவபாஷணம் என்ற இந்த தண்டாயுதபாணி சிலையின் பிரதான அம்சம், இரவில் இந்த சிலைக்கு வியர்க்கும். அது தான் இந்த நவபாஷண சிலையின் சிறப்பம்சம்..
அந்த வியர்வை பெருக்கெடுக்கும். அந்த ஒவ்வொரு வியர்வைத் துளியிலும், அறிவியலை மிஞ்சும் மருத்துவத் தன்மை இருக்கிறது. அதனால் தான், இங்கு தினந்தோறும் ராக்கால பூஜையின் போது, இந்த சிலை முழுவதிலும் சந்தனம் பூசப்படும்.மேலும், சிலைக்கு அடியில் ஒரு பாத்திரமும் வைக்கப்படும்.
மறுநாள் அதிகாலை சந்தனம் கலையப்படும் போது, அந்த சந்தனத்தில் வியர்வைத் துளிகள் பச்சை நிறத்தில் ஒட்டிக் கொண்டிருக்கும். கீழே வைக்கப்பட்ட பாத்திரத்திலும் வழிந்து வரும் வியர்வை நீரானது கேசகரிக்கப் படும். இதனைக் கௌபீனத் தீர்த்தம் என்று சொல்கிறார்கள். இது உலகில் வேறெங்கும் காண இயலாத அதிசயம். இந்த சந்தனமும், கௌபீன தீர்த்தமும், அரு மருந்தாகக் கருதப்படுகிறது. அதனால், இதைப் பிரசாதமாகப் பெறுவதற்காக, இந்த விபரம் தெரிந்தவர்கள் நூற்றுக் கணக்கில், காலை 4 மணிக்கு கோவிலில் குவிந்து விடுவார்கள். கி.மு. 500- லிருந்தே இம் மலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் மக்கள் வாழ்ந்ததற்கான தடயங்கள் அதிக அளவில் கிடைத்துள்ளன.

சங்க கால இலக்கியங்களில் பழனியைப் பற்றியும், பழனியை ஆண்ட மன்னர்களைப் பற்றியும் குறிப்புகள் உள்ளன. இந்த ஊரின் பழமையான பெயர் பொதினி. இப் பகுதியை ஆவியர்குடியைச் சேர்ந்த வேள் ஆவிக்கோப்பெரும் பேகன் என்ற மன்னர் ஆட்சி செய்துள்ளார்.

இப்பகுதியில் ஆவியர்குடி என்னும் தனி இனக் குழுவினர் மிகுதியாக இருந்துள்ளனர். எனவே அவர்களின் தலைவன் ஆவியர் கோமான் எனப் பெயர் பெற்றுள்ளான். அதனால் ஆவி நாடு என்றும், பின்னாளில் வைகாவூர் நாடு என்ற பெயரிலும் இப்பகுதி அழைக்கப் பட்டிருக்கிறது. இன்றும் இந்த ஊரின் நடுவே உள்ள குளம், வையாபுரிக் குளம் என்றே அழைக்கப்படுகிறது.

தற்போது, மலை மீது காணப்படும் கோயில்; பிற்காலப் பாண்டிய மன்னர்களின் கட்டுமானப் பாணியில் உள்ளது. கி.பி.ஒன்பதாம் நூற்றாண்டில் சேர மன்னர்களால் கோயிலின் திருப்பணிகள் துவக்கப்  
பட்டதாகக் கூறப்படுகிறது.
கோயில் கருவரையின் வடபுறச் சுவரில் உள்ள சடையவர்மன் வீரபாண்டியன் கல்வெட்டு, கி.பி. 13-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்கலாம் எனக் கருதப் படுகிறது.

கருவறைச் சுவர்களில் உள்ள நான்கு கல்வெட்டுக்களில் ஒன்று கிருஷ்ண தேவராயர் காலத்தைச் சார்ந்தது (கி.பி. 1520). இந்தக் கல்வெட்டில் தான் ஸ்ரீபழனிமலை வேலாயுதசாமி எனப் பெயர் இடம் பெற்றுள்ளது. மற்ற கல்வெட்டுகள் இங்குள்ள மூலவரை இளைய நயினார் (சிவபெருமானின் இளைய மகன்) என்றே சுட்டிக் காட்டுகின்றன.விஜயநகர மன்னர் மல்லிகார்ஜூனர் காலத்தில் (கி.பி. 1446), அவரது பிரதிநிதியாக அன்னமராய உடையார் என்பவர் இந்தப் பகுதிக்கு நிர்வாகியாக இருந்துள்ளார்.

அந்தக் காலத்தில் மூன்று சந்தி கால பூஜைக்கும் திருவமுது, நந்தா விளக்கு, திருமாலை, திருமஞ்சனம் சாத்துவதற்கான செலவுகளுக்காக ரவிமங்கலம் என்ற ஊர் நன்கொடையாக வழங்கப் பட்டிருக்கிறது. இந்த ரவிமங்கலத்தில் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த முற்காலப் பாண்டியர் காலப் பாடல் பொறிக்கப்பட்ட கல்வெட்டு ஒன்று கண்டு பிடிக்கப்பட்டு, தற்போது, அந்தக் கல்வெட்டு பழனி அருங்காட்சியகத்தில் வைக்கப் பட்டுள்ளது.

இந்தப் பழனி மலைக் கோயிலில் தினமும் ஆறு கால பூஜைகள் நடைபெறுகின்றன. ஊருக்கு வட மேற்கே உள்ள பெரிய நாயகி அம்மன் கோயிலும் மிகப் பழமையானது. பிரசித்தி பெற்றது. தமிழ் நாட்டிலேயே ரோப் கார், மற்றும் வின்ச் எனப்படும் மலை இழுவை ரயிலும் பக்தர்களின் வசதிக்காக இங்கு மட்டும் தான் அமைக்கப் பட்டிருக்கிறது.

அறிவியல், விஞ்ஞானம் ஒரு புறம் வளர்ச்சி அடைந்தாலும், அதையும் தாண்டி ஆன்மீகமும் வளர்ந்து கொண்டிருப்பதற்கு, இங்கு வரும் பக்தர்களின் கூட்டமே சாட்சி..

தமிழ்நாட்டில் பட்டி என்று முடியும் ஊர் பெயர்கள்

தமிழ்நாட்டில் பட்டி என்று முடியும் ஊர் பெயர்கள் 

சோளகம்பட்டி
பஞ்சப்பட்டி
வடுகப்பட்டி
இராவுத்தான்பட்டி
ஆண்டிப்பட்டி
ஆலமரத்துப்பட்டி
கோடங்கிப்பட்டி
களத்தூர்பட்டி
காவல்காரன்பட்டி
பள்ளபட்டி
தாளியம்பட் வேங்காம்பட்டி
மேட்டுப்பட்டி புதுப்பட்டி
பாலப்பட்டி கொம்பாடிபட்டி
சீரகம்பட்டி குட்டபட்டி வீரகுமாரன்பட்டி
மத்திபட்டி அரப்புளிபட்டி
கணக்கன்பட்டி
நாகிரெட்டி பட்டி
புனவாசிபட்டி
மகிளிபட்டி
கண்ணமுத்தான்பட்டி
ஈச்சம் பட்டி
வளையப்பட்டி
உடுமலைப்பேட்டை பகுதியிலும் பல ஊர்ப்பெயர்கள் பட்டி என்றே முடியும்.

மானுப்பட்டி, தீபாலபட்டி, மொடக்குப்பட்டி, போடிபட்டி, தும்பலப்பட்டி, உரல்பட்டி, சாமராயபட்டி, மருள்பட்டி, சாளரப்பட்டி, போளரப்பட்டி, பாலப்பம்பட்டி, வேடபட்டி, ஜோத்தம்பட்டி, சீலநாயக்கன்பட்டி, பணத்தம்பட்டி, குப்பநாயக்கன்பட்டி, பெல்லம்பட்டி, பெரியபட்டி, அம்மாபட்டி, பெதப்பம்பட்டி, வெனசுப்பட்டி, சோமவாரப்பட்டி, கூலநாயக்கன்பட்டி, பாப்பம்பட்டி, நெய்க்காரபட்டி, தொட்டம்பட்டி, கொண்டம்பட்டி.
நடுப்பட்டி
பனிக்காம்பட்டி
குப்புரெட்டிபட்டி
திம்பம்மம்பட்டி
குளித்தலை ஆரியம்பட்டி, வலையபட்டி 
பணிக்கம்பட்டி 
குப்பு ரெட்டிபட்டி  
கருங்கல்பட்டி 
காகம்பட்டி புதுப்பட்டி ஓந்தாம் பட்டி ஈச்சம்பட்டி 
நடுப்பட்டி 
காவல்காரன்பட்டி
பூலாம்பட்டி ..முத்தம்பட்டி.. சோனம்பட்டி.. பாரப்பட்டி ..முத்ரங்கம் பட்டி ..மஞ்சநாயக்கன்பட்டி ..நத்தம்பட்டி ..பம்பரம் முத்தம்பட்டி ..தண்ணீர் பட்டி.. கரட்டுப்பட்டி ..கோணிசிப்பட்டி.. மயிலம் பட்டி ..சிந்தாமணிப்பட்டி..

பொன்னமராவதி பகுதியில். வலையப்பட்டி புதுப்பட்டி பரியாமருதுபட்டி பனையப்பட்டி வேகுப்பட்டி கொப்பனாபட்டி வேந்தன் பட்டி குமாரபட்டி புரந்தன்பட்டி கட்டையாண்டிபட்டி கொண்ணத்தான்பட்டி மகிபாலன்பட்டி கண்டவராயன்பட்டி ஒவளிப்பட்டி ஒழுகமங்கலப்பட்டி பள்ளத்துப்பட்டி ___ __இவைகளெல்லாம் 20 கி.மீ. சுற்று பகுதியில் மட்டும் உள்ள ஊர்கள்!!!

கஸ்தூரி குரும்பபட்டி.. பூசாரி பட்டி.செங்காட்டுபட்டி .கவரபட்டி .அத்தி குளத்து பட்டி.தூளிபட்டி.ஆலமரத்துபட்டி.ரெட்டியபட்டி.குளக்கரான்பட்டி.சின்னாம்பட்டி.களுத்திரிக்கபட்டி..மோளபட்டி.சீத்தபட்டி.குருணிகுளத்துபட்டி.வீரணம்பட்டி.ஆனைக்கவுன்டன்பட்டி.மாலப்பட்டி..சிந்தாமணிபட்டி.மைலம்பட்டி.முத்துரெங்கபட்டி.காணியாளம்பட்டி
ரெட்டி பட்டி.
எரிசினம்பட்டி. 
கூலநாயக்கன் பட்டி.
முல்லு பட்டி .
ஆச்சி பட்டி.

பெரிய பட்டி.
தீபால பட்டி.
மொடக்கு பட்டி.
சேர்வைக்காரன் பட்டி 
 வீர கவுண்டன்பட்டி 
 தவளை வீரன் பட்டி 
 செட்டியபட்டி 
 குலக்காரன் பட்டி 
 ரெட்டியபட்டி 
 மட்ட பாறைப்பட்டி 
 தரகம்பட்டி
 சென்னம்பட்டி
 மயிலம் பட்டி 
 குருணிகுளத்துப்பட்டி 
 ஆலமரத்துப்பட்டி 
 பஞ்சப்பட்டி🙏
ஈச்சங்காட்டுப்பட்டி செம்பாறைக்கல்லுப்பட்டி ராக்கம்பட்டி சங்காயிப்பட்டி நாட்டார் கோவில்பட்டி குன்னாக்கவுண்டம்பட்டி
பள்ளப்பட்டி , கொல்லப்பட்டி , சத்திரப்பட்டி , சேர்வைக்காரன்பட்டி , கோவில்பட்டி , சீத்தப்பட்டி,
  குருணிகுளத்துப்பட்டி , மாலபட்டி , சரக்கம்பட்டி ,
வீரணம்பட்டி , கொள்ளுதண்ணிப்பட்டி , சிந்தாமணிப்பட்டி , மைலம்பட்டி , காவல்காரன்பாட்டி , உடையாபட்டி , மாமரத்துப்பட்டி , கரட்டுப்பட்டி , பஞ்சப்பட்டி , சுண்டுக்குழிப்பட்டி , காணியளம்பட்டி , மஞ்சநாயகன்பாட்டி , முத்துரங்கம்பட்டி , பாப்புணம்பட்டி , விரலிப்பட்டி ,  
மேட்டுப்பட்டி , மோளப்பட்டி ,     

துலுக்கம்பட்டி சடையம்பட்டி குரும்பபட்டி ராமலிங்கம் பட்டி சூகமடைப்பட்டி கள்ளிக்காட்டுப்பட்டி சீத்தப்பட்டி சீகம்பட்டி நடுப்பட்டி கல்பட்டி சக்கம்பட்டி பொன்னம்பலம் பட்டி பாலப்பட்டி சரளப்பட்டி கோவில்பட்டி தட்டாரப்பட்டி புளியம்பட்டி வையம்பட்டி வைரம் பட்டி ரெட்டியபட்டி மணியாரம் பட்டி அணைக்கரைப்பட்டி தரகம்பட்டி குருணிகுளத்துப்பட்டி மேட்டுப்பட்டி சிங்கம்பட்டி கவரப்பட்டி செங்காட்டுப்பட்டி நடுக்காட்டுப்பட்டி பூலாம்பட்டி ஒத்தப்பட்டி மட்டப்பாறைப்பட்டி வீர கவுண்டம்பட்டி பெரிய பட்டி பெரிய குளத்துப்பட்டி குளத்தூரான் பட்டி காரியாபட்டி 
நாகம நாயக்கன்பட்டி 
 தாசவ நாயக்கன்பட்டி
 இலக்கன் நாயக்கன்பட்டி
கம்பிளியம்பட்டி
கொல்லபட்டி
சாலரபட்டி
Kulithalai 
மேலபட்டி.. பணிக்கம்பட்டி குப்புரெட்டி பட்டி.... காகம்பட்டி.... வலையப்பட்டி... மேட்டுப்பட்டி.... காவல்காரன் பட்டி.... கவுண்டம்பட்டி... பாறைப் பட்டி. .. தெற்குபட்டி.... முதலைபட்டி.....புதுப்பட்டி... தாளியம்பட்டி... வேங்காம் பட்டி.... மத்திப்பட்டி... இரும்பூதிப்பட்டி..... பாப்பாக்காப்பட்டி..... புனவசிப்பட்டி... எழுதியாம்பட்டி... பிச்சம்பட்டி... ஈச்சம்பட்டி.... சுக்காம்பட்டி.... மலைப்பட்டி
திருச்சி மாவட்டம் துறையூர் தாலுகா பகுதிகளில் பட்டி என முடியும் ஊர்கள் நிறைய உள்ளன.
கொப்பம்பட்டி 
முருங்கப்பட்டி
வெள்ளாள பட்டி
மங்கப் பட்டி
ஈச்சம் பட்டி
பாலகிருஷ்ணன் பட்டி
நெட்டவேலம்பட்டி
பச்சபெருமாள் பட்டி
புதுப்பட்டி
காவேரி பட்டி
கலிங்கமுடையான்பட்டி...,.....................................
கொக்காட்டிபட்டி, பால்வார்பட்டி, கணக்கு வேலன் பட்டி, கழுமேட்டுப்பட்டி, குரும்பபட்டி, கரடி பட்டி, இராசாப்பட்டி, திருமாணிக்கம்பட்டி, ஓந்தாம் பட்டி, நிமிந்தபட்டி, கொக்கம்பட்டி, நல்லாம் பட்டி, கோடங்கிபட்டி, உத்திராசப் பட்டி, மாலப் பட்டி, கரியாம்பட்டி, குப்பமேட்டுப்பட்டி, ஆண்டிபட்டி, பாறைப் பட்டி, ஆலமரத்துப்பட்டி, மாமரத்துப்பட்டி, தோப்பு பட்டி, புதுப்பட்டி, வரிக்காபட்டி, வெங்கக்கல் 
பட்டி, தோரணக்கல் பட்டி, குள்ளம் பட்டி, வெரிச்சனம் பட்டி, இடையபட்டி, தரகம் பட்டி, லெட்சுமணப் பட்டி, எருமார்பட்டி, மூலப் பட்டி, வலையபட்டி, கேத்தம்பட்டி...
பாலப்பட்டி. வேங்காம்பட்டி. தாளியாம்பட்டி. புனவாசிப்பட்டி. மத்தி பட்டி. அந்தரபட்டி.கணக்கன்பட்டி. கொம்பாடி பட்டி.குட்டப்பட்டி. புதுப்பட்டி
ஒட்டப்பட்டி தந்திரிப்பட்டி நாதிபட்டி சுக்காம்பட்டி மஞ்ச புலிபட்டி கட்டபுலிபட்டி இரும்புலி பட்டி கம்பளியம்பட்டி காணிக்காலம் பட்டி மைலம்பட்டி உடையாபட்டி பொசியம்பட்டி அணைக்கரைப்பட்டி மற்றும் கூமாபட்டி 

சிங்கம்பட்டி. குப்பிரெட்டிபட்டி. பஞ்சப்பட்டி. கோடாங்கி பட்டி. அரப்புள்ளி பட்டி. மகளி பட்டி . வீரணம் பட்டி.மேட்டுப்பட்டி. வளையப்பட்டி. பணிக்கம்பட்டி. திம்மம்பட்டிஉப்புளியப்பட்டி. பெருமாள்கவுண்டன்பட்டி. கெ டிச்சிண்ணம்பட்டி. சுக்காம்பட்டி. வெம்பத்திரன்பட்டி. பிள்ளைக்கூடங்கப்பட்டி. பாதிரிப்பட்டி. மகாலிப்பட்டி. முனையம்பட்டி. வெந்தப்பட்டி.
உப்புளியப்பட்டி. பெருமாள்கவுண்டன்பட்டி. கெ டிச்சிண்ணம்பட்டி. சுக்காம்பட்டி. வெம்பத்திரன்பட்டி. பிள்ளைக்கூடங்கப்பட்டி. பாதிரிப்பட்டி. மகாலிப்பட்டி. முனையம்பட்டி. வெந்தப்பட்டி.
வீரமலைப்பட்டி, பொத்தப்பட்டி, கடப்பமரத்துப்பட்டி, பூலாம்பட்டி, நடுப்பட்டி, வெள்ளப்படி, தவளைவீரன்பாட்டி, மாட்டாப்பாறைப்பட்டி,
குரும்பப்பட்டி அத்திகுளத்துப்பட்டி சிங்கம்பட்டி செங்காட்டுப்பட்டி கவரப்பட்டி குளக்காரன் பட்டி சின்னாம்பட்டி தூளிப்பட்டி தவளவீரன்பட்டி டி.இடையபட்டி சுக்காம்பட்டி குளத்தராம்பட்டி தரகம்பட்டி மைலம்பட்டி சிந்தாமணி பட்டி குள்ளரங்கம்பட்டி காணியாளம்பட்டி வெள்ளாளப்பட்டி சேர்வைக்காரன்பட்டி கஸ்தூரி குரும்பப்பட்டி வீரகவுண்டம்பட்டி சுண்டுகுலிபட்டி மோளப்பட்டி மேட்டுப்பட்டி சாந்துவார்பட்டி ஆலமரத்துப்பட்டி மட்ட பாரப்பட்டி கம்பளியாம்பட்டி சடையம்பட்டி ராக்கம் பட்டி மாமரத்துப்பட்டி கரட்டுப்பட்டி ஜோனம்பட்டி
தரகம்பட்டி சேர்வைக்காரனூர் a களத்துப்பட்டி ஒத்தப்பட்டி மந்திரிக்கோன்பட்டி எரு திக்கோன்பட்டி மேட்டுப்பட்டி பால்மடைப்பட்டி குருணிகுல ளத்துப்பட்டி சீத்தப்பட்டி கோவில்பட்டி
வெள்ளரிப் பட்டி
வெள்ளாளப்பட்டி
தாளப்பட்டி
கொல்லபட்டி
பிச்சம் பட்டி
வடுகப்பட்டி
புளியம்பட்டி,புதுப்பட்டி,பள்ளப்பட்டி, மோலயாண்டிபட்டி,லிங்கம்நாயகன்பட்டி, மலைப்பட்டி,குறும்பப்பட்டி,கோட்டப்பட்டி, கல்வார்பட்டி,தெத்துப்பட்டி,கழுமேட்டுப்பாட்டி,
கோவில்பட்டி மடத்துபட்டி எட்டக்காபட்டி ராஜாபட்டி பெத்துரெட்டிபட்டி மஜ்ஜாநாயக்கன்பட்டி சுரைகாபட்டி எட்டுநாயக்கன்பட்டி முதலிபட்டி சக்கிலிபட்டி
வெந்தப்பட்டி முனையம்பட்டி மாகாளிபட்டி காக்காயம்பட்டி குன்னாக்கவுண்டம்பட்டி ஈச்சம் பட்டி ஒனாப்பாறைப்பட்டி கரையாம்பட்டி வில்லுக்காரன்பட்டி குப்பாச்சிபட்டி பெம்மநாயக்கன்பட்டி கண்ணமுத்தாம்பட்டி
சாலிக்கரைப்பட்டி,சின்னாண்டிபட்டி,விராலிப்பட்டி,சீத்தப்பட்டி, ஆணைப்பட்டி, குருனி குளத்துப்பட்டி,மேட்டுப்பட்டி, காளப்பட்டி,காணியாளம்பட்டி,வீரியப்பட்டி,கொள்ளுத்தன்னிபட்டி, தரகம்பட்டி, மைலம்பட்டி, சரக்கம்பட்டி, வீரணம்பட்டி,வெள்ளாளப்பட்டி, இலுப்பபட்டி,கோவில்பட்டி,மஞ்சநாயக்கன்பட்டி, சுக்காம்பட்டி,மாலப்பட்டி,ஆலமரத்துப்பட்டி,உடையாப்பட்டி,குள்ளம்பட்டி,காச்சக்காரன்பட்டி,முத்தனம்பட்டி, ௭ரகாம்பட்டிஜோத்தியம்பட்டி, குப்பநாயக்கன்பட்டி, முண்டுவேலம்பட்டி, ஆத்துகிணத்துபட்டிபெரியபட்டி, ஜல்லிபட்டி,பிச்சம்பட்டி மார்க்கம்பட்டி கொரவபட்டி , கத்தாழ பட்டி, கரடி பட்டி, கேத்தம்பட்டி, தாளப்பட்டி
பஞ்சப்பட்டி கரட்டுப்பட்டி மூத்திரத்தம்பட்டி வெள்ளப்பட்டி உடையாபட்டி மாமரத்துப்பட்டி காணி ஆலம்பட்டி போத்துராதம்பட்டி உன்னுடைய கவுண்டம்பட்டி கரையாம்பட்டி மலப்பட்டி செம் பாரப்பட்டி ரெட்டிபட்டி பணிக்கம்பட்டி குட்டப்பட்டி ஒடுகம்பட்டி மைலம்பட்டி ஓனா பாரப்பட்டி கொசவம்பட்டி குளத்துப்பட்டி பாரப்பட்டி வையம்பட்டி விராலிப்பட்டி
ஆட்டையாம்பட்டி பாலம்பட்டி கொம்பாடிபட்டி சின்னப்பம்பட்டி மாட்டையாம்பட்டி ராக்கி பட்டி பெத்தாம்பட்டி ஆண்டிபட்டி பாப்பாரப்பட்டி இருசானம்பட்டி செவந்தாம்பட்டி எட்டிமாணிக்கம்பட்டி நைனாம்பட்டி கல்பாறைபட்டி நடு பட்டி ஆலமரத்துபட்டி
பனமரப்பட்டி கம்மாளபட்டி கொண்டலாம்பட்டி கொண்டப்பநாயக்கன்பட்டி அஸ்த்தம்பட்டி முத்தன்நாயக்கன்பட்டி 
ஆரூர் பட்டி துட்டம் பட்டி அக்கரைபட்டி 
முனியம்பட்டி திருவளிபட்டி இன்னும் இருக்கிறது சேலத்தில் பட்டிகள் அதிகம்
வேடசந்தூர் வட்டம் கல்வார்பட்டி கோடங்கிபட்டி விராலிப்பட்டி தேவி நாயக்கன்பட்டி கோலார் பட்டி சிங்கிலிக்காம்பட்டி கருதி கவுண்டன்பட்டி வெள்ளையம்பட்டி கல்வார்பட்டி கூவக்காபட்டி விறுதலைப்பட்டி
தம்மா நாயக்கன் பட்டி
நெச்சிப் பட்டி
வெடிக்காரன் பட்டி
செல்லாண்டிபட்டி
அனை பட்டி
காணியாளன் பட்டி
மாமரத்து பட்டி
சீத்தப்பட்டி
திருமாணிக்கம்பட்டி
ஒந்தாம்பட்டி
சின்ன என்டி பட்டி
சீத்தப்பட்டி
பள்ளப்பட்டி 
கருவேடம்பட்டி
நல்ல குமாரன் பட்டி 
மலைக்கோவிலூரின் பழைய பெயர் ஓந்தாம்பபட்டி
குப்பைமேட்டுப்பட்டி 
மூலபப்பட்டி
கரடிப்பட்டி
பஞ்சப்பட்டி, வடுகபட்டி, சொரக்காபட்டி, நடுப்பட்டி, தேவசிங்கம்பட்டி, பாம்பன்பட்டி, போத்துராவுத்தன்பட்டி, பாப்பகாப்பட்டி, கோடாங்கிப்பட்டி, குழந்தப்பட்டி, மேட்டுப்பட்டி, அரப்புளிப்பாட்டி, குரும்பப்பட்டி, கணக்கன்பட்டி, மத்திப்பட்டி, புணவாசிப்பட்டி, அந்தரப்பட்டி, மகிளிப்பட்டி, கொம்பாடிபட்டி, பாலப்பட்டி, மேட்டுப்பட்டி, வேங்காம்பட்டி, தாளியாம்பட்டி, குட்டப்பட்டி, சீகம்பட்டி, திம்மம்பட்டி, சடையம்பட்டி, இரும்பூதீபட்டி,,,,,,,,,,,,,,,,,,,
ஆண்டிபட்டி, நெய்காரனோட்டி, ஆணைபட்டி, பிசம்பட்டி, ஆலமரதுபட்டி, பாப்பனாயக்கண்பட்டி, காளபட்டி, குள்ளம்பட்டி, தாழைப்பட்டி, k k பட்டி, பந்துவார்பட்டி, முதுதேவென்பட்டி, அம்மாபட்டி, வயல்பட்டி,சங்ககொணம்பட்டி, பள்ளப்பட்டி, ஆசரிபட்டி, கொறதிபட்டி, திம்மரசனாயங்க்கண்பட்டி, மாலைப்பட்டி, அரபடிதேவென்பட்டி, கருவெல்நாயக்கண்பட்டி, தொப்பாரபட்டி, ஆதிபட்டி, தெப்பம்பட்டி, 
ஜோகிபட்டி‌‌ குரும்பபட்டி பருமரத்துப்பட்டி கல்லுப்பட்டி காளாஞ்சிபட்டி ஜவ்வாதுபட்டி முத்துநாயக்கன்பட்டி செம்மடைப்பட்டி மஞ்சநாயக்கன்பட்டி அத்தாம்பட்டி விருதலைப்பட்டி தேவிநாயக்கன்பட்டி குளிப்பட்டி நாகனம்பட்டி
,,,

Wednesday, June 25, 2025

ஆத்திகோயில் எனும் புண்ணிய ஸ்தலம்,

ஆத்திகோயில்: மந்திரவாதியும் மகான் பெரியசுவாமிகளும்!
முன்னொரு காலத்தில், இன்றைய ஆத்திகோயில் எனும் புண்ணிய ஸ்தலம், ஆதிகோயில் எனப் பழைய பெயருடன் சிறப்புற்று விளங்கியது. கேரள தேசத்திலிருந்து வந்த ஒரு மந்திரவாதி, தினமும் ஆகாய மார்க்கமாக வந்து, அக்கோயிலில் பூஜை செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தான். அவனது அமானுஷ்ய சக்தியால், மற்ற எவரும் அறியாத வண்ணம் அவன் மாத்திரமே கோயிலுக்குள் பிரவேசித்துப் பூஜித்து வந்தான்.
ஒருநாள், தவவலிமை மிக்க பெரியசுவாமிகள் அக்கோயிலுக்கு விஜயம் செய்தார். பூட்டப்பட்டிருந்த கோயில் கதவுகளின் மேல் தனது திருக்கரத்தை வைத்ததும், கதவுகள் மந்திரம்போல் தானாகவே திறந்து கொண்டன. உள்ளே சென்ற சுவாமிகள், அமைதியாய் பூஜைகள் செய்து முடித்துவிட்டுத் திரும்பினார். அவர் வெளியேறியதும், கதவுகள் மீண்டும் தாமாகவே தாளிட்டுக் கொண்டன.
வழக்கம் போல பூஜை செய்ய வந்த மந்திரவாதி, கதவைத் திறந்து உள்ளே நுழைந்தான். சுவாமிக்கு முன்பே பூஜைகள் நடந்திருப்பதைக் கண்டதும் அவன் குழப்பமடைந்தான். "பூட்டிய கதவுகள் அப்படியே இருக்க, யார் உள்ளே வந்திருக்க முடியும்?" என வியந்து, கோயில் அருகில் தங்கியிருந்த பெரியசுவாமிகளிடம் சென்று, "இங்கு பூஜை செய்தது யார்?" எனக் கேட்டான். அதற்கு சுவாமிகள், தான் தான் என்பதை அமைதியாய் ஒப்புக்கொண்டார். மந்திரவாதிக்குக் கோபம் மேலிட, "இனிமேல் இந்த மாதிரி பூஜை செய்யக்கூடாது!" என மிரட்டிவிட்டுச் சென்றான்.
மறுநாள் பூஜை செய்ய வந்த மந்திரவாதி, முதல் நாள் போலவே கோயிலில் பூஜை நடந்திருப்பதைக் கண்டதும் கோபம் உச்சிக்கு ஏறியது. மீண்டும் சுவாமிகளிடம் சென்று, "நேற்றே நீ பூஜை செய்யக்கூடாது என்று கூறினேன். அப்படியிருந்தும் ஏன் பூஜை செய்தாய்?" எனக் கேட்டான். அதற்கு சுவாமிகள், "கோயில் திறந்து இருந்தது. நான் பூஜை செய்தேன். நீர் கோயிலை நன்றாகப் பூட்டிச் செல்லும்!" என அமைதியாகக் கூறினார்.
சுவாமிகளின் பதிலைக் கேட்டு மந்திரவாதி சற்று திகைத்தான். கோயிலுக்குச் சென்று கதவுகளை நன்றாகச் சாத்தி, வலுவாகப் பூட்டி சரிபார்த்துவிட்டுச் சென்றான். மறுநாள் அவன் வந்தபோது, கோயில் மீண்டும் திறந்திருப்பதையும், பூஜை நடந்திருப்பதையும் கண்டு கடும் கோபம் கொண்டான். சுவாமிகளிடம் சென்று, "நீ இந்த இடத்தை விட்டுச் சென்றுவிடு! இல்லாவிட்டால் நீ கடுமையான விளைவுகளைச் சந்திக்க வேண்டும்!" என்று வாக்குவாதம் செய்தான். அதற்கு சுவாமிகள், "நான் பூஜை செய்த முறைகள் தவறா? அல்லது திறந்திருந்த கோயிலில் பூஜை செய்தது தவறா? இதில் எதுவும் தவறில்லை. எனவே, எனக்கு எந்தத் தீங்கும் நேராது!" என்றார்.
இதைக் கேட்ட மந்திரவாதி கோபமுற்று, சுவாமிகளைப் பழிவாங்க வேண்டுமெனத் தீர்மானித்தான். தனது குருவிடம் நடந்ததைக் கூறி, சுவாமிகள் மீது ஏவல் பூஜை செய்து அவரைக் கொல்லுமாறு பூதம் ஒன்றைப் பணித்தான்.
சுவாமிகள் தன்னை கொல்ல வந்த பூதத்தைப் பார்த்து, "சாந்தி!" என சொல்லவும், அந்தப் பூதம் சுவாமிகளின் காலடியில் அமைதியாக மண்டியிட்டு அமர்ந்தது. சென்ற பூதம் திரும்பி வராததால், மந்திரவாதி மேலும் ஒரு கொடுமையான பூதத்தைப் பழிவாங்க அனுப்பி வைத்தான். அந்தப் பூதமும் சுவாமிகள் "சாந்தி!" எனச் சொல்ல அமைதியாகிவிட்டது.
அனுப்பிய பூதங்கள் செயலற்றுப் போனதால், மந்திரவாதி மிகுந்த கோபம் கொண்டு, யாராலும் வெல்ல முடியாத "ருத்ரபூதத்தை" அனுப்பி வைத்தான். ருத்ரபூதம் சுவாமிகளைக் கொல்ல, விண்ணுக்கும் மண்ணுக்கும் தீப்பிழம்பாய் கொடூரமாகச் சென்று சுவாமிகளை நெருங்கியது. சுவாமிகள் "சாந்தி!" என்றார். ஆனாலும், பூதம் அடங்கவில்லை; மேலும் தீவிரமாகியது. அதைக் கண்ட சுவாமிகள் பதறினார். உடனே, அன்னை மீனாட்சியம்மையை (பெரிய பிராட்டி) நினைத்து வணங்கினார்.
உடனே அவ்விடம் வந்த அன்னை, மிகவும் பலம் வாய்ந்த அந்தப் பூதத்தைப் பார்த்து "ஆற்றி இரு!" (அதாவது "ஆத்தி இரு" அல்லது ஆறுதலாக இரு) எனக் கட்டளையிட்டாள். பூதம் சற்று அமைதியானது. பூதத்தைப் பார்த்து அன்னை, "நீ வந்த காரணமென்ன?" என்று வினவினார். அதற்கு ருத்ரபூதம், அருகில் இருந்த சுவாமிகளைக் காட்டி, "இவரைக் கொன்று வர எனக்கு உத்தரவிடப்பட்டுள்ளது!" எனக் கூறி, "இவர் தங்களின் பக்தன் என எனக்குத் தெரியாது. தெரிந்திருந்தால் நான் வந்திருக்கவே மாட்டேன்!" எனக் கூறி மன்னிப்புக் கோரியது.
அன்னை கருணையுடன் பூதத்தை மன்னித்து, "நீ இங்கேயே கோயிலில் 'ஆத்தி இரு'. உனக்கு இரு வகை படையல் உண்டு!" என அருளினாள். ருத்ரபூதமும் அன்னையை வணங்கி அப்படியே ஏற்றுக்கொண்டு, "தான் இப்பொழுது எழும்பியதால் எப்படியும் நரபலி கொள்ளவேண்டும். அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?" எனக் கேட்க, அன்னை "உன்னை அனுப்பியவனையே பலி கொள்ளுமாறு" சொன்னாள். ருத்ரபூதம் தன்னை அனுப்பிய மந்திரவாதியை நரபலி கொண்டு அமைதியாகியது. பின்னர், அன்னையிடம் கொடுத்த வாக்கின்படி இங்கு வந்து அமர்ந்தது.
அன்னையின் வாக்குப்படி, ஆத்திகோயிலில் மற்ற பணிவிடைகளோடு "மச்ச பணிவிடையும்" "கீரிச்சுட்டான்" பணிவிடையும் சேர்த்து இன்றளவும் கொடுக்கப்பட்டு வருகிறது. இத்தலம் அன்னை மீனாட்சியின் கருணையையும், பெரியசுவாமிகளின் தவவலிமையையும் போற்றும் புனிதத் தலமாக இன்றும் விளங்கி வருகிறது.

Sunday, June 22, 2025

தாம்பரத்தில் இருந்து திருச்செந்தூர் அதிவேக விரைவு ரயில்

 பயணிகள் கனிவான கவனத்திற்கு வண்டி எண் 20605 தாம்பரத்தில் இருந்து திருச்செந்தூர் அதிவேக விரைவு ரயில் தாம்பரம் : 4:27pm செங்கல்பட்டு :4:58pm மேல்மருவத்தூர் : 5:13pm திண்டிவனம் : 5:38pm விழுப்புரம் : 6:45pm பண்ருட்டி : 7:14pm திருப்பதிரிபுலியூர் :7:34pm சிதம்பரம் : 8:08pm சீர்காழி : 8:15pm மயிலாடுதுறை : 9:10pm குத்தாலம் : 9:21pm ஆடுதுறை : 9:30pm கும்பகோணம் : 9:40pm பாபநாசம் : 9:54pm தஞ்சாவூர் :10:33pm பூதலூர் : 10:52pm திருச்சிராப்பள்ளி :11:45pm திண்டுக்கல் :1:02Am மதுரை : 2:00Am விருதுநகர் :2:43Am கோவில்பட்டி :3:18Am திருநெல்வேலி :4:15Am செய்துங்கநல்லூர்:4:34 AM ஸ்ரீவைகுண்டம் : 4:44Am நாசரேத் : 4:54Am குரும்பூர் : 5:02Am ஆறுமுகநேரி: 5:09Am காயல்பட்டினம்:5:19Am திருச்செந்தூர் : 6:00Am குறிப்பு ( இந்த ரயில் 20/06/25 முதல் 18/08/25 வரை சென்னை எழும்பூர் இருந்து புறப்படாது அதற்கு மாற்றாக தாம்பரத்தில் இருந்து தான் புறப்படும்) தேவைப்படுவோர் பயன்படுத்திக் கொள்ளுங்கள்

காசிக்குச் சென்றால் எதை விட்டு வரவேண்டும்?

 

💥காசிக்குச் சென்றால் எதை விட்டு வரவேண்டும்?
காசி, ராமேஸ்வரம் என்றதுமே, அது வயதானப் பின் செல்ல வேண்டிய இடம் என்பது பொதுவாக பெரும்பாலான மக்களின் எண்ணம். வாழ்க்கையில் தங்களின் கடமைகளை நிறைவேற்றியவர்கள், இதற்கு மேல் தங்களுக்கு வாழ்க்கையில் எதுவும் இல்லை என்று காசி, ராமேஸ்வரப் புனிதப் பயணம் மேற்கொள்வது வழக்கம். ஆனால் இந்த கடமைகளை முடித்தவர்கள் மட்டுமே செல்ல வேண்டும் என்ற நியதி ஏதுமில்லை. காசியும், ராமேஸ்வரமும் ஆன்மிக அதிர்வலைகள் அதிகமுள்ள திருத்தலங்கள். இன்றைக்கும் நாட்டின் பல பகுதிகளில் இருந்து அனைத்து வயதினரையும் காசி, ராமேஸ்வர தளங்களில் பார்க்க முடியும்.
காசி என்பது முக்தி தலமாக போற்றப்படுகிறது. பிறவா வரம் வேண்டி இறைவனின் திருத்தலங்களை நாடிச் செல்லும் பக்தர்கள், புண்ணிய நதியான கங்கையில் நீராடி விட்டு, முன்னோர்களுக்காக பிண்டம் வைத்து வேண்டுதல் செய்வர். காசியில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தால் அவர்களின் ஆசி பரிபூரணமாக கிட்டும் என்பது நமது இந்து மத நம்பிக்கை. இந்துக்களின் புனிதத்தலமாக விளங்கும் காசியில் ஓடும் கங்கையில் நீராடினால், நாம் செய்த பாவங்கள் அனைத்தும் தொலையும் என்பது மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.
கங்கையில் நீராடிவிட்டு பாபங்கள் நீங்கி புது மனிதனாக பிறப்பெடுக்கும் போது, மீண்டும் இவ்வுலக சுக போகங்களில் பற்று கொண்டு விடக் கூடாது. மீண்டும் அழியும் பொருளின் மீதும் அதிகப் பற்றோ அல்லது விருப்பமோ வந்துவிடக் கூடாது. இனி இறைவன் ஒருவனை கதி என மனதில் தியானித்து இருக்க வேண்டும் என்கிற அர்த்தத்தில் தான், பழையவைகள் அனைத்தையும் விட்டுவிட்டு வந்துவிட வேண்டும் என்றார்கள். எந்த ஒரு பொருளின் மீதும் அதிக ஆசையோ, பற்றோ வைக்காமல் வாழப் பழகுபவனுக்கு, ஆணவமும், அகம்பாவமும் தானாகவே அழிந்து விடும்.
இதன் பொருட்டு தான் காசிக்குச் சென்றால், அழியும் பொருட்களின் மீது தங்களுடைய பிடிப்பை விட்டுவிட்டு வர வேண்டும் என்பார்கள். இதுவே நாளடைவில் காசிக்குச் சென்றால் எதையாவது விட்டு வர வேண்டும் என்று மாறியது. விட வேண்டியது பிடித்த உணவுகளையோ அல்லது காய் கனிகளையோ மட்டுமல்ல. காமக்குரோத மனமாச்சர்யங்களை அக அழுக்குகளை விட்டு வந்து மீண்டும் பிறவாத பெரும் வரம் பெறுவோம்.
ஓம் நமச்சிவாய 🙏
தென்னாடுடைய சிவனே போற்றி...🙏
All reacti
15

Historical Places of Tamilnadu ஆதிச்சநல்லூர்




அகழ்வாராய்ச்சி
உலகத்தின் பல பகுதிகளில் வாழ்ந்த பண்டை மக்கள்,
தனித்தும் பிறரோடு கலந்தும் பலவகை நாகரிகங்களையும்
பண்பாட்டையும் வளர்த்து வந்தனர். கற்காலமக்கள் செம்பைப்
பயன்படுத்தத் தொடங்கியதும் கல்லால் செய்யப்பட்ட பல
பொருள்களைப் புறக்கணித்துவிட்டனர். பயன் இல்லாத
மண்பாண்டங்களை விலக்கினர். இவ்வாறு நீக்கப்பட்ட
அப்பொருள்கள் கவனிப்பு இல்லாமல் நாளடைவில் மண்ணுக்குள்
புதையுண்டன.
மேலும் பண்டையமக்கள் நல்லிடங்களைத் தேடி அடிக்கடி
இடம் மாறித் திரிந்தனர். ஆதலின் ஆங்காங்குப் பழுது அடைந்த
பொருள்களை விட்டுவிட்டுச் சென்றனர். அப்பொருள்கள்
நாளடைவில் மண்ணுக்குள் புதைந்தன. ஆற்று ஓரங்களிலும்
கடற்கரை ஓரத்திலும் வாழ்ந்த மக்கள் இயற்கை சீற்றத்திற்கு
அஞ்சி இடம் பெயர்ந்தனர். இயற்கைச் சீற்றத்தாலும் பல்வேறு
காரணங்களினாலும் மக்கள் பயன்படுத்தியவை மண்ணுள்
மறைந்தன. ஆற்றின் அடியில் புதையுண்டன. பல சமவெளிகளில்
மண்மேட்டினுள் புதைந்தன.
இங்ஙனம் புதைந்து கிடப்பவற்றைக் கண்டுபிடிக்க
மண்மேடிட்ட இடங்களைத் தோண்டிப் பார்த்தனர்.
அவ்விடங்களில் காணப்படும் பல திறப்பட்ட பொருள்களை
ஆய்ந்தனர். அவற்றைப் பற்றிய உண்மை அவற்றைப் மற்றும்
பயன்படுத்திய மக்களின் வாழ்க்கை முறை ஆகியவை பற்றி அறிய
முயன்றனர். இத்தகைய முயற்சியே அகழ்வாராய்ச்சி.
அகழ்வாராய்ச்சிகளின் பயன்
அகழ்வாராய்ச்சியின் வாயிலாக உண்மைச் செய்திகளையும்
அவற்றைப் பயன்படுத்திய பண்டைய மக்களைப் பற்றிய
செய்திகளையும் அறிந்து கொள்ள முடியும்.
அகழ்வாராய்ச்சியின் அடிப்படையில் தொல் பழங்கால
மக்களின் பண்பாட்டுக் கூறுகளான வாழ்க்கை முறை, நம்பிக்கை,
சடங்கு, வழிபாடு, பேசிய மொழி, கலையார்வம் முதலியவற்றைத்
தெரிந்து கொள்ளலாம்.
4.3.1 மொகஞ்சதாரோ - ஹரப்பா உணர்த்தும் பண்பாடு
கி.பி. 1922-ஆம் ஆண்டுவரை வேத கால நாகரிகமே
இந்தியாவின் தொல் பழங்கால நாகரிகமெனக் கூறப்பெற்று வந்தது.
ஆனால் 1922-ஆம் ஆண்டு இந்தியத் தொல்லியல் துறையினர்
சிந்து மாநிலத்தில் மொகஞ்சதாரோ என்னும் இடத்திலிருந்த ஒரு
பெரிய மண்மேட்டைத் தோண்டி அகழ்வாராய்ச்சி நிகழ்த்தினர்.
அதன் வாயிலாக, அங்கு மண்ணுக்கு அடியில், ஓர் அழகிய நகரம்
புதைந்து கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதேபோல மேற்குப்
பஞ்சாப் மாநிலத்தில், ஹரப்பா என்னும் நகரம் புதைந்து
கிடப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இவ்விடங்களில் தொடர்ந்து
அகழ்வாராய்ச்சி நடத்தி, மண்ணுக்கு அடியில் புதைந்து கிடந்த
இந்த இருநகரங்களைப் பற்றிய செய்திகளை உலகறியச் செய்தவர்,
தொல்பொருள் ஆய்வியல் அறிஞர். சர். ஜான் மார்சல் (Sir John
Marshall) என்பவர். இப்புதையுண்ட நகரங்களைப் பற்றிய
செய்திகளின் தொகுப்பு. பிற்காலத்தில், "சிந்துவெளி நாகரிகம்"
(Indus Valley Civilization) என்றும் "ஹரப்பா பண்பாடு"
(Harappan Culture) என்ற தலைப்புகளில் அறியப்படலாயின
என்றும் அழைக்கப்பட்டன.
சிந்துவெளி நாகரிமும் தமிழர்களும்
சிந்துவெளி நாகரிகத்தைத் திராவிடர் நாகரிகம் (தமிழர்
நாகரிகம்) என்று கூறுவதற்கு அங்குத் தோண்டி எடுக்கப்பட்ட
பொருட்களும், வெளிப்பட்ட கட்டட அமைப்பும், பயன்படுத்திய
நாணயங்களும் சான்றாக அமைந்துள்ளன. இவ்வுண்மையை, சர்.
ஜான் மார்ஷல், சர். மார்டிமர் வீலர் (Sir Mortimer Wheeler),
ஹிராஸ் பாதிரியார் (Father Heros) போன்ற தொல்லியல்
அறிஞர்கள் தங்கள் ஆய்வு முடிவுகளாக வெளியிட்டுள்ளனர்.
மேலும் டாக்டர் எச்.ஆர். ஹால் (Dir. H.R. Hall) என்ற வரலாற்று
அறிஞர். "சமீப கிழக்கின் தொன்மை வரலாறு" (Ancient History
of the near east) என்ற நூலிலும் பல சான்றாதாரங்களுடன்
நிறுவியுள்ளார்.
தொல்லியல் அறிஞர், ஜராவதம் மகாதேவன் என்பவரும்,
மொகந்சதாரோ முத்திரைகளில் பொறிக்கப்பட்டுள்ள எழுத்துகள்
தமிழ் - பிராமி எழுத்துகளை ஒத்திருக்கின்றன என்று
குறிப்பிடுகின்றார். மேலும் அங்குக் கிடைத்துள்ள பல தகவல்கள்
எந்த வகையில் தமிழோடும் தமிழர்களோடும் தொடர்புடையன
என்பதையும் தம் ஆய்வுகள் மூலம் நிறுவியுள்ளார்.
மேற்குறிப்பிட்டவற்றிலிருந்து சிந்துவெளி நாகரிகம் தமிழர்
நாகரிகம் எனவும், தமிழர் நாகரிகமும் பண்பாடும் இந்திய நாடு
முழுவதும் பரவியிருந்தது எனவும் வரலாற்றுப் பேராசிரியர்
கே.கே. பிள்ளை போன்றோர் குறிப்பிடுகின்றனர்.
சிந்துவெளி புலப்படுத்தும் தமிழ்ப்பண்பாடு
சிந்து வெளியில் அகழ்ந்து எடுக்கப்பட்ட நகரங்களின்
இல்லங்கள் வரிசையாகக் கட்டப்பட்டுள்ளன. மாட மாளிகைகள்,
மண்டபங்கள், நீராடும் குளம், கழிவு நீர்ப்பாதைகள் ஆகியவையும்
காணப் பெறுகின்றன. எளியமையான வீடுகளிலும் தனித்தனியே
சமையல் அறை, படுக்கை அறை, குளியல் அறை முதலியன இடம்
பெற்றிருந்தன.
கற்பனையும், அழகும், தொழில் நுட்பமும் பொருந்திய
கட்டடக் கலை மனிதனின் பண்பாட்டு வளர்ச்சியைப்
புலப்படுத்தும் என்பதை முன்னரே பார்த்தோம். மனிதன், தன்
வாழ்க்கை நோக்கத்தையும், அழகு உணர்வோடு கூடிய
பயன்பாட்டையும், தான் அமைக்கும் கட்டடங்களில்
வெளிப்படுத்துகின்றான். இது அவனது பண்பாட்டுக் கூறுகளில்
சிறப்புடையது. சிந்துவெளி நாகரிகம் வாயிலாக வெளிப்படும்
தமிழர் பண்பாடு இதைத்தான் நமக்குப் புலப்படுத்துகிறது.
4.3.2 அரிக்கமேடு அகழ்வராய்ச்சி உணர்த்தும் பண்பாடு
புதுச்சேரிக்கு அருகாமையில் உள்ள அரிக்கமேடு என்ற
இடத்தில் நிகழ்த்திய அகழ்வாராய்ச்சியும் தமிழர் பண்பாட்டுக்
கூறுகளை வெளிப்படுத்துகின்றது.
அரிக்கமேடு அகழ்வராய்ச்சியில் கிடைத்தவை
இங்கு மண்பாண்டங்கள் பல கிடைத்துள்ளன. விற்பனைச்
சாலைகள், பண்டகச் சாலைகள், முதலியவை இருந்ததற்கான
அடையாளங்கள் காணப்படுகின்றன. இவற்றிலிருந்து என்ன
புலப்படுகிறது? தொல் பழங்காலத் தமிழ் மக்கள் செம்மைப்பட்ட
வாழ்க்கை முறையை மேற்கொண்டிருந்தனர் என்பது புலப்படுகிறது.
இத்தகைய வாழ்க்கை முறை அவர்களது தொன்மையான
பண்பாட்டை வெளிப்படுத்துகிறது.
4.3.3 ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சி உணர்த்தும்
பண்பாடு
இந்தியாவிலேயே மிகப் பெரிய அகழ்வாராய்ச்சியாகக்
கருதப்படுவது, திருநெல்வேலி பக்கத்திலுள்ள ஆதிச்சநல்லூரில்
நடைபெற்ற அகழ்வாராய்ச்சியாகும். இங்கு மனித
எலும்புக்கூடுகள், மெருகிட்ட மண்பாண்டங்கள், இரும்பாலான சில
கருவிகள், பொன்னாலும் வெண்கலத்தாலும் செய்யப்பட்ட
அணிகலன்கள், சிறு வேல்கள் ஆகியவை அடங்கிய தாழிகள் பல
கிடைத்துள்ளன.
தமிழர்களின் பண்பாட்டுக் கூறுகளில் ஒன்று தாழிகள்
அமைத்தல். இறந்தோரைப் புதைப்பதற்காகத் தாழிகளை நம்
முன்னோர் பயன்படுத்தியுள்ளனர். அத்தாழிகளில் இறந்தோரைப்
புதைக்கும் பொழுது, அவர்கள் பயன்படுத்திய பொருள்களையும்,
விரும்பிய பொருள்களையும், இறந்தோர் உடலுடன் புதைத்த
பழைய மரபை அத்தாழிகளில் அறிய முடிகிறது. இன்றைக்கும் சில
இடங்களில் இந்தப் பழைய மரபு பின்பற்றப்படுகிறது.
தாழிகளைத் தோண்டி எடுத்ததின் மூலம், தமிழர்
பண்பாட்டுக் கூற்றை வெளிப்படுத்தும் பழக்க வழக்கத்தையும்,
நம்பிக்கையையும் அறிய முடிகிறது.

Historical Places of Tamilnadu தொண்டை மண்டலத்தின் இதயம் போலிருந்த செங்குன்றம்,

 தொண்டை மண்டலத்தின் இதயம் போலிருந்த செங்குன்றம்,

தூம்படைப்பூர் என்ற அழகியதொரு சிற்றூர். பசுமை போர்த்திய வயல்வெளிகளும், பொன்னிறக் கதிர்களும் நிறைந்திருந்த அந்த நிலப்பரப்பில், கதிரவனின் கிரணங்கள் பட்டுத் தெறிக்கும் நீர்நிலைகளும் நிறைந்திருந்தன.
மாலையின் இளங்காற்று வயல்வெளிகளில் அலை அலையாய் தவழ்ந்து வரும் வேளையில், கால்நடைகளின் மேய்ச்சல் சத்தம் அந்த ஊரின் தினசரி இசையாக ஒலிக்கும். அந்த ஊரின் அமைதிக்குக் காவலாய், மனதிற்கு இதமளிக்கும் மனிதர்களாய் வாழ்ந்தனர் நம் கதையின் நாயகர்கள், தன்மசெட்டியின் மகன் சாத்தையன், சாத்தையன் திருவூறல் மற்றும் அவனின் அடியான் ஊர்ப்பேரயன் முத்தரையன் காரி.
அவர்கள் மூவரும் – சாத்தையன், சாத்தையன் திருவூறல், மற்றும் முத்தரையன் காரி – வெவ்வேறு சமூகங்களைச் சேர்ந்தவர்களாயினும், அவர்களைப் பிணைத்திருந்தது அசைக்க முடியாததொரு தோழமை.
சாத்தையன், ஊரின் செல்வந்த செட்டி மரபில் வந்தவன். அவனது தோள்களில் இருந்த உறுதி, மனதிலும் குடிகொண்டிருந்தது. வீரம் என்றால் அவனுக்கு உயிர். ஊருக்கு ஒரு தீங்கு நேர்ந்தால், முன்நின்று காக்கத் துடிக்கும் மனம் அவனுடையது.
சாத்தையன் திருவூறல், தக்கோலத்தின் பழைய பெயரைத் தன் பெயரில் சுமந்தவன். அவன், ஊரின் அறிவிப்பாளன்; பறை அறையும் கலை அவனுக்கு அத்துப்படி. அவனது கம்பீரமான குரலும், பறையின் ஓசையும் தன் வீரர்களுக்கு உணர்ச்சி தூண்டுவனவாக, பகைவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும், சிம்ம சொப்பனமாய் இருக்கும்.
முத்தரையன் காரி, சாத்தையனின் அடியான், ஆனால் அவனுக்கும் சாத்தையனுக்கும் இடையே இருந்த உறவு வெறும் எஜமானன்-அடியான் என்ற எல்லைகளைத் தாண்டி, ஒரு குடும்ப உறுப்பினரின் அணுக்கத்தை ஒத்திருந்தது. காரியின் விசுவாசமும், துணிவும், சாத்தையனுக்கு எப்பொழுதும் ஒரு பலமே.
கி.பி. 953-ஆம் ஆண்டு, வீரம் செறிந்த ஆதித்த கரிகால சோழனின் மூன்றாவது ஆட்சிக்காலம். தமிழ் தேசம் தனது பொற்காலத்தை நோக்கி அடியெடுத்து வைத்துக் கொண்டிருந்த நேரம் அது. ஆனால், அமைதிக்கு எப்போதும் ஒரு சோதனை வந்துதானே தீரும்? ஒரு நாள், நள்ளிரவின் இருளைப் பிளந்துகொண்டு வந்த மரண ஓலமும், மாடுகளின் பீதி நிறைந்த அலறலும் தூம்படைப்பூர் மக்களை உலுக்கியது. அமைதியாய் உறங்கிக் கொண்டிருந்த ஊர், நொடிப்பொழுதில் போர்க்களமாய் மாறியது.
கொன்னூர் என்ற சிற்றூரைச் சேர்ந்த கள்வர்கள், ஊரைச் சூறையாடி, அங்கிருந்த கால்நடைகளைத் திருடச் சென்றனர்.
அந்த செய்தியைக் கேட்டதும், சாத்தையனின் ரத்தம் கொதித்தது. தனது குடிமக்களின் உடைமையைப் பாதுகாக்க வேண்டிய கடமை, ஒரு போர்வீரனின் உள்ளுணர்வு, அவனது நரம்புகளில் மின்னலாய் பாய்ந்தது. "கள்வர்களா! என் ஊர் மக்களின் உடைமையைச் சூறையாடவா?" என சீறினான். தன்மசெட்டியின் மகன் சாத்தையன், தனது குறுவாளையும், வில்லையும் ஏந்தி, போருக்குத் தயாரானான்.
அவன் புறப்படும் வேளையில், சாத்தையன் திருவூறல், தன் பறையை முழக்கி, ஊர் மக்களை எழுப்பினான். "கொட்டுப் பூசல்! கொட்டுப் பூசல்!" என்ற அவனது கம்பீரமான குரல், இருளின் அமைதியைக் கிழித்தது. "மாடுகளை மீட்போம்! ஊரைக் காப்போம்!" என அவன் முழங்கியது, ஒவ்வொரு வீரனின் மனதிலும் அனலைக் கிளப்பியது. அவர்களுடன் இணைந்தனர், காரி. சாத்தையனின் நிழலாய், அவன் காலடி எடுத்து வைத்தான். அவர்கள் யாவரும், தனிப்பட்ட வீரர்களாய் அல்ல, ஒரு இலக்கை நோக்கிய, ஓர் உயிராய் இணைந்திருந்தனர்.
ஊரழிவின் கோரத்தையும், மாடுகளின் இழப்பையும் உணர்ந்த சாத்தையன், "மாடுகளை மீட்காமல் ஒருபோதும் திரும்புவதில்லை!" என்று சபதம் கொண்டான். கையில் வில்லுடன், கூர்மையான அம்புகளை நாணேற்றி, முதல் அடியை அவன் எடுத்து வைத்தான். அவனுக்குப் பக்கபலமாய், பறை முழக்கத்துடன் திருவூறல் எதிரிகளை அச்சுறுத்தினான். காரி, தனது குறுவாளைச் சுழற்றி, எதிரிகளை நெருங்கவிடாமல் சாத்தையனுக்குக் காவலாய் நின்றான்.
அந்தப் போர், வெறும் மாடுகளை மீட்கும் சண்டையாய் இருக்கவில்லை. அது, தன்மானத்தைக் காக்கும் போர்; தங்கள் நிலத்தின் மீதான உரிமையை நிலைநாட்டும் போர். கள்வர்களின் கூட்டம், எதிர்பாராத இந்த எதிர்ப்பால் திகைத்தது. சாத்தையனின் அம்புகள், இலக்கு தவறாமல் எதிரிகளைத் துளைத்தன. திருவூறலின் பறை முழக்கம், கள்வர்களின் மனதைக் கலங்கடித்தது. காரியின் வாள்வீச்சு, எதிரிகளை நிலைகுலையச் செய்தது. பலரும் வெட்டுப் பட்டுவீழந்தனர். இவனை முதலில் தீர்க்க எண்ணிய கள்வர்கள், இவன் மீது அம்பினை எய்தனர்.
முன்னேறிக்கொண்டிருந்த சாத்தையன், எதிரிகளின் அம்புகளுக்கு இலக்காய் மாறினான். அவனது கழுத்தில், நான்கு அம்புகள் ஆழமாகப் பாய்ந்தன. "சாத்தையா!" என காரி கதறினான். ஆனால், வீழ்ச்சியிலும் அவனது பார்வை, மீட்கப்பட வேண்டிய மாடுகள் மீதே இருந்தது. அவன் நிலைகுலைய, காரி அவனுக்குப் பக்கபலமாய் நின்றான். ஆனால், எதிரிகளின் ஒரு அம்பு காரியின் உடலையும் துளைத்தது.
தனது எஜமானனுக்குக் காவலாய் நின்று, அவனும் சரிந்தான். "நண்பா!" என சாத்தையன் திருவூறல் கதறினான். தனது நண்பர்களும், அடியானும் வீழ்வதைக் கண்ட திருவூறல், தனது பறையை மேலும் உக்கிரமாய் முழக்கி, வீரர்களுடன் எதிரிகளை நோக்கி முன்னேறினான். அவர்கள் மாடுகளை மீட்டுவிட்டான், ஆனால், போரின் உக்கிரத்தில் அவனும் கள்வர்களால் சுழப்பட்டான்.
அந்தப் போர்க்களம், இரத்தம் தோய்ந்த மண்ணாகவும், கண்ணீர் பெருக்கெடுத்த கண்களாகவும் மாறியது. ஆம், மாடுகள் மீட்கப்பட்டன. ஆனால், அந்த வெற்றிக்குக் கிடைத்த விலை, மூன்று விலைமதிப்பற்ற உயிர்கள்.
வெங்கட்டூர் கிராமம், தன் மகன்களை இழந்த துயரத்தில் ஆழ்ந்தது. ஆனாலும், அவர்களின் வீரம் மறையவில்லை. ஆதித்த கரிகால சோழனின் மூன்றாவது ஆட்சிக்காலத்தில், கி.பி. 953-ல், அந்த மூன்று வீரர்களுக்கும் தனித்தனியே நடுகற்கள் எழுப்பப்பட்டன.
சாத்தையனுக்கு எழுப்பப்பட்ட நடுகல், அவனது வீரத்தை இன்றும் பறைசாற்றுகிறது. இடக்காலை முன்வைத்து, வலக்காலைப் பின்வைத்து, வலக்கையில் குறுவாளும், இடக்கையில் வில்லும் ஏந்தியபடி, அவன் நிற்கும் காட்சி, அவனது தீரத்தை வெளிப்படுத்துகிறது. அவன் உடலில் பாய்ந்த நான்கு அம்புகள், அவன் கடைசி மூச்சு வரை போரிட்டான் என்பதற்கான சான்று. அவனது காலடியில் மாடுகள், அவன் மாடுகளை மீட்டான் என்பதற்கான குறியீடு.
சாத்தையன் திருவூறலுக்கு எழுப்பப்பட்ட நடுகல், அவனது தியாகத்தையும், ஊர் மீதான பாசத்தையும் எடுத்துரைக்கிறது. அவனது பறை முழக்கம், இன்றும் காற்றோடு கலந்திருப்பது போல உணர்வு.
முத்தரையன் காரிக்கு எழுப்பப்பட்ட நடுகல், விசுவாசத்தின் இலக்கணமாய் உயர்ந்து நிற்கிறது. கச்சையுடன், குறுவாளை உயர்த்தியபடி நிற்கும் அவனது உருவம், தனது எஜமானனுக்காக அவன் எந்த எல்லைக்கும் செல்வான் என்பதைப் பறைசாற்றுகிறது. அவனது உடலில் பாய்ந்த இரண்டு அம்புகள், அவனது கடைசி மூச்சு வரை தனது நண்பனையும், எஜமானனையும் காக்கப் போராடினான் என்பதற்கான அடையாளம்.
இந்த நடுகற்கள், வெறும் கல்லில் செதுக்கப்பட்ட சிற்பங்கள் அல்ல. அவை, ஒரு காலத்தின் வீரத்தைப் பேசும் சாட்சிகள். ஒரு ஊரின் மானத்தைக் காக்க, உயிரையும் கொடுக்கத் துணிந்த அந்த மூன்று நண்பர்களின், மூன்று வீர்ர்களின் வீரத்தையும், விசுவாசத்தையும், தோழமையையும் அவை இன்றும் உணர்த்துகின்றன.
வெங்கட்டூரின் அந்த மூன்று நடுகற்களும், தமிழ் மண்ணின் வீர வரலாற்றுப் பக்கங்களில், என்றென்றும் நிலைத்திருக்கும்.

மனதால் நீ தனித்திரு, குருவருளால் நீ உயிர்த்தெழு!

 
தனிமையின் தத்துவம்: மனதிற்கு அப்பால் சென்றால்தான் அந்த அருளுக்கு உரியவன் ஆக முடியும்

🔥
🧘‍♂️ தனிமை என்பது ஒருவனுக்கே உரித்தான சக்தி பீடம்!
👉 ஆனால் அந்த தனிமை, மனதின் கட்டுப்பாடுகளுக்குள் சிக்கியவருக்கு, ஒரு கனவாகவே திகழ்கிறது.
👉 நம் உள்ளத்தை நிரப்பும் எண்ணங்களின் இரைச்சல் மையத்தில் அமைதி என்பது எளிதாகக் கிடைக்கும் வகையல்ல.
👉 எனவே தான், ஒருவன் உண்மையான தனிமை என்ற சக்தியை உணர வேண்டுமென்றால், மனதிற்கு அப்பால் செல்ல வேண்டிய அவசியம் உள்ளது.
👉 இதனை சாதிக்க ஒரே வழி - குருவின் அருள்.
🌺 தனிமையின் இலட்சியம் என்ன?
தனிமை என்பது தவிர்க்க வேண்டிய பாழான நிலை அல்ல. அது வாழ்க்கையின் உச்சமான ஆன்மீக நிலையைக் குறிக்கும்.
🕉️ தனிமை என்பது:
அகப்பார்வையின் ஆரம்பம்
சுழற்றும் சிந்தனைகளின் முடிவு
'நான்' எனும் அஹங்காரத்தின் முறிவு
ஆன்மா மற்றும் பரமாத்மா இடையே உள்ள பக்தியின் பாலம்
நம்முள் நாமே இறங்கும் வழிதடம்
தனிமை என்பது சாமர்த்தியமற்ற நிலை அல்ல, அது சக்தியின் பிறவி!
🕯️ மனதின் வஞ்சகங்களை வெல்வதற்கான போராட்டம்
மனதோடு தனிமை சகிப்பது எளிதல்ல.
மனது பயப்படக்கூடிய ஒன்று:
பழைய நினைவுகள்
வருங்காலப் பயங்கள்
என்னை உற்றுப் பார்க்கும் உலகத்தின் பார்வை
என்ன செய்வேன்? எனும் அச்சம்
👉 தனிமையில் உட்காரும் போது, முதலில் மனது ஏமாற்றங்களை கிளப்பும்.
👉 ஆனால் ஒவ்வொரு முறையும் அதை தாண்டி அமைதியை நோக்கிச் செல்லும் பயணம், நம்மை உண்மையான நமக்கே எடுத்துச் செல்கிறது.
🧘‍♀️ தனிமையில் தோன்றும் உளவியல் எதிரொலிகள்
FOMO (Fear of Missing Out): நம் தோழர்கள் எங்கே? சமூகத்துடன் நாம் தொடர்பில்லையா?
Self-Doubt: இந்தப் பாதை சரியா?
Loneliness vs Aloneness: தனிமை (loneliness) என்பது இழப்பின் உணர்வு. ஆனால் 'அலைனெஸ்' என்பது ஆன்மீக சங்கமம்.
🌿 இந்த யுத்தத்தில் வெற்றி பெற மனதை விட அழுத்தமான சக்தி தேவை. அதுதான் குரு.
🛕 குரு: மனதிற்கு அப்பாற்பட்ட வாசல் திறப்பவர்
குரு என்கிறவர்,
🔱 “மனதை விட்டு மேலே கொண்டு செல்லும் ஒளியின் வழிகாட்டி.”
🔱 குருவின் அருள் என்பது உண்மையான தனிமையின் வாசல்.
🔱 அவர் சொல்லும் வழி மனதின் சுழற்சிகளை கலைத்து, விழிப்புணர்வை நமக்குள் வளர்க்கும்.
குருவருள் இல்லாமல் தனிமை என்பது நம்மை சிதைக்கக்கூடிய புழுதிப் புயலாக மாறிவிடும்.
✨ தனிமையின் பயணம் – 5 கட்டங்கள்
1. இழப்பு – அன்பும், உறவுகளும், சமூக ஆதரவும் விலகும் புள்ளி.
2. எதிர்ப்பு – மனது அதை ஏற்க மறுக்கும்.
3. அறிதல் – தனிமை நமக்கு ஓர் அர்ப்பணமாக இருக்கலாம் என்று புரிந்து கொள்வது.
4. பரிசுத்தம் – உள்ளடக்கம் வெளிச்சமாக மாறுவது.
5. சக்தி பீடம் – உண்மையான தனிமையில் தியானமும், ஆன்மீக சக்தியும் உயிர் பெறும்.
🕊️ குருவின் அருள் – உயிர் எழும் சக்தி
🔥 "மனதால் தனித்திரு, குருவருளால் உயிர்த்தெழு" என்பது உளவியல் மட்டும் அல்ல.
இது ஆன்மிக மரபில் ஒரு தத்துவத்தின் எச்சம்.
👉 குருவின் அருள் மனதின் சிதைவை தீர்க்கும் மருந்து.
👉 அவர் தரும் மௌனத்தின் வாசல், உண்மை அமைதிக்கு வழிகாட்டும் நுழைவாயில்.
👉 குருவின் ஒரு பார்வைதான் – உன்னை உன்னிடமே கொண்டு செல்லும் வலிமை.
🌄 தனிமையின் ஞானப் பரிணாமம் – மகான் வழியில்
தெய்வத் தரிசனம் தனிமையில் தான் தோன்றும்.
தபஸ், தியானம், ஜபம் – எல்லாம் தனிமையின் பிள்ளைகள்.
நம்மை மறந்து, இறைவனை உணரும் பயணம் தனிமையில் தான் ஆரம்பிக்கிறது.
🎇 சித்தர்கள், ஞானிகள், மகான்கள் — யாரும் கூட்டத்துடன் வாழவில்லை.
அவர்கள் உள்ளே சென்று, உலகிற்கே வெளிச்சம் கொடுத்தவர்கள்.
📿 உண்மையான தனிமையின் பயன்:
1. நம் உண்மையான இயல்பை கண்டறிதல்
2. அஹங்காரத்தை உருக்குதல்
3. உணர்ச்சிகளின் அடிமை நிலையை ஒழித்தல்
4. மனதின் பயங்களைப் பிழித்து வெளியேற்றுதல்
5. இறைவனுடன் நேரடி உறவினை பெறுதல்
🌟 வாழ்வில் நம்மால் தொடக்கூடிய வழி
✅ தினமும் 30 நிமிடங்கள் மௌனத்தில் இருங்கள்
✅ மொபைல், இன்டர்நெட் இல்லாமல், ஒரு தியான அறையை உருவாக்குங்கள்
✅ ஜபம், சுவாசம் மற்றும் குரு உபதேசத்தில் உறுதி பூண்டு பயணம் தொடருங்கள்
✅ மனதிற்கு நமக்கே தலைவர் ஆக முடியாது. அதை விட்டுவிட்டு குருவிடம் ஒப்படையுங்கள்
🔱 மனதிற்குப் புறம் செல்வோம், நமக்குள் கடவுளை உணர்வோம்!
தனிமை என்பது சோகத்தின் அடையாளம் அல்ல.
அது தான் உனக்குள் இறைவனாக மாறும் வாய்ப்பாகும்.
அந்த வாய்ப்பை பெற, குருவின் அருள் தேவையான உந்துதலாக இருக்கிறது.
மனதால் நீ தனித்திரு,
குருவருளால் நீ உயிர்த்தெழு!

Featured Post

பொய்யூர் கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்

அற்புதமான பொய்கைநல்லூர் (பொய்யூர்) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்  வடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர். நாகை...