Wednesday, February 19, 2025

காலை எழுந்ததும் மலச்சிக்கல் இல்லாமலும்.,

 

காலை எழுந்ததும் மலச்சிக்கல்

இல்லாமலும்.,
இரவு தூங்கப் போகும் போது
மனச்சிக்கல் இல்லாமலும்
எவர் தன் பொழுதுகளை அமைத்துக்
கொள்கிறாரோ அவரே பூரண
ஆரோக்கியவான்
இரவு படுக்கப் போவும் போது குடித்து
விட்டுப் படுத்தால் விடி காலை அது
எழுப்பி விட்டு விடும். மலச்சிக்கலுக்கு
துத்தி இலை கை கண்ட மருந்து.
ஒரு ஆளுக்குப் பத்து துத்தி இலையை
ஒரு தம்ளர் நீர் விட்டுக் கொதிக்க
வைத்து பனைவெல்லம் தேங்காய்ப்
பால் கலந்து குடித்து விட்டுப் படுக்க
வேண்டியதுதான்...
இது மருந்து போல் கஷ்டப்பட்டுக்
குடிக்க வேண்டியதில்லை. ரசித்து
ருசித்து குடிக்கலாம். கிட்டத்தட்ட
பாதாம் பால் குடிப்பது போல் இருக்கும்.
இதற்கு ஒரு சித்தர் பாடல் கூட
உண்டு.
" மூலநோய் கட்டி முளைப்புழுப்
புண்ணும் போகும்
சாலவதக்கிக் கட்டத்தையே -
மேலுமதை எப்படியேனும்
புசிக்க எப்பிணியும் சாந்தமுறும்
இப்படியிற் துத்தி யிலைக்கே... "இரவு வணக்கங்கள்..

No comments:

Featured Post

உயிர் மேலே ஏறி கண்களை அடையும் அதன் பிறகு தான் இறைவனை காண முடியும்

ஆசைகள் இருந்தால் உடலுக்குள் இருக்கும் உயிரை கண்கள் வரை மேலே கொண்டு செல்ல முடியாது!! ஆசையை ஒழித்தால் தான்!!.. உயிர் மேலே ஏறி கண்களை அடையும் அ...