Wednesday, January 29, 2025

திருமூர்த்தி மலையை

 

உடுமலைப்பேட்டையில் இருந்து 21 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த பகுதிக்கு உடுமலைப்பேட்டை பேருந்து நிலையத்தில் இருந்து நாள் முழுவதும் பல பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

🛕இங்கு அமைந்துள்ள பஞ்ச லிங்க அருவியில் குளியலுக்காகவும், அமணலிங்கேஸ்வரர் தரிசனத்திற்காகவும் இங்கு ஏராளமான பக்தர்களும், சுற்றுலாப்பயணிகளும் வந்து செல்கின்றனர். வார இறுதி நாட்கள் என்றால் இரண்டு மடங்கு சுற்றுலாப்பயணிகள் இங்கு குவிந்து விடுகின்றனர்.
🚶🚶‍♂️கோவிலில் இருந்து சற்று மேல் நோக்கி நடந்தால் திருமூர்த்தி அருவியை அடையலாம், மூலிகை நிறைந்த நீர் சில்லென்று கொட்டும் அருவியில் குளித்தால், அனுபவம் சொல்ல வார்த்தைகள் இல்லை,
🍛உணவு தயார் செய்து எடுத்து போய் விட்டால் அருமையாக இந்த இடத்தை அனுபவிக்கலாம், காரணம் நிறைய கடைகளில் உணவு தரமானதாக இல்லை என்பதே, அருகில் உள்ள அமராவதி அணைக்கு சென்றால் மீன் சாப்பாடு சுட சுட கிடைத்து எனக்கு, உங்கள் அனுபவங்கள் இருந்தால் சொல்லுங்க தெரிந்துகொள்வோம்,
🚙நீங்கள் எங்கு இருந்து பயணப்பட்டாலும்
கோவை காந்திபுரத்தில் இருந்து சரியாக 82 கிலோ மீட்டர் பயணித்தால் திருமூர்த்தி மலையை அடைந்துவிடலாம்.
🚌திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து 84 கிலோ மீட்டர் தூரத்தில் இந்த தலம் அமைந்துள்ளது. வார இறுதியில் குழந்தைகளுடன், பெரியவர்களும் ஜாலியாக சென்றுவர ஏற்ற ஸ்பாட் இது

No comments:

Featured Post

சிறந்த கேட்கும் திறன் கொண்ட மரம்

"சிறந்த கேட்கும் திறன் கொண்ட மரம்" இந்த உயிரினம் எதற்காக இறைவன் படைத்திருப்பான் இதனால் என்ன பயன் என்று சில உயிரினங்களை...