Monday, July 8, 2024

விளையாடக் கூப்பிட்டால்தான்நீங்கள் உண்மையான கிழவன்..!

அறுபதைத் தொட்டால்
பயணத்தைக் குறையுங்கள்.
எழுபது ஆனால்
எங்குமே போகாதீர்கள்..!

நீங்கள் போன வீடுகளில்
அவர்களின் பிள்ளைகள்
அழைப்புக் கொடுத்தால்.
உங்கள் பிள்ளைகள் போகட்டும்.

நீங்கள் அத்தோடு
நட்பையும் உறவுகளையும்
மறக்கக் கற்றுக் கொள்ளுங்கள்..!

நினைவுகள் 
கூடிக்கொண்டே போவது 
மனதுக்கு நல்லதல்ல..!
மறதி தான் 
மனதுக்கான நல்ல மருந்து...!

பட்டங்களை பதவிகளை
அதனால் கிடைத்த
பாராட்டுக்களை பரிசுகளை
அடியோடு மறந்துவிட்டு 
மலர்களைப் போல
தினசரி புதிது புதிதாய்
பூத்துக் குலுங்கி
சிரிக்கப் பழகுங்கள்..!

முதுமை என்பது வரம்.
அது எல்லோருக்கும்
கிடைப்பதில்லை.
கிடைத்தவர்கள்
பழையதை நினைத்து
முதுமையை
பாழ்படுத்திக் கொள்ளாதீர்கள்..!

பேரனோ பேத்தியோ
ஓடிவந்து உங்களை...
விசில் அடிக்கச் சொல்லி
விளையாடக் கூப்பிட்டால்தான்
நீங்கள் 
உண்மையான கிழவன்..!

No comments:

Featured Post

பொய்யூர் கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்

அற்புதமான பொய்கைநல்லூர் (பொய்யூர்) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்  வடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர். நாகை...