Saturday, October 14, 2023

வாய்மை எனப்படுவது யாதெனின்

 இப்படி ஒரு குறளை எழுதியதற்காக வள்ளுவருக்கு ஆயிரம் கோடியில் கூட சிலை வைக்கலாம்.

சமீபத்தில் ஒரு பேருந்து பயணம், ஓட்டுநர் இருக்கைக்கு பின்புறம் உள்ள பலகையில் ஒரு திருக்குறள் ஒன்று எழுதி இருந்ததை பார்த்தேன்.
"வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும் தீமை இலாத சொலல்"
இதன் பொருள் என்னவென்று தேடிப்பார்க்கிறேன்.
. இதன் விளக்கத்தை கேட்டு வியந்து நிற்கிறேன். இதை எல்லோரும் உணர்ந்தால் போதும் நீயா நானா போட்டி இருக்காது, கூட்டணி சண்டைகள் இருக்காது, விவாகரத்துகள் இருக்காது, உலகமே அமைதி பூங்காவாக மாறிவிடும். இதயத்தில் வைக்க வேண்டிய திருக்குறள் இது. இதன் பொருள் இதுதான்
"பிறருக்கு எள் முனை அளவு கூட தீங்கு விளைவிக்காத சொற்களை பேசுவது தான் வாய்மை" என்கிறார்,வள்ளுவர்.
திருக்குறள் எக்காலத்திற்கும் பொருத்தமானது!
திருவள்ளுவர் எப்போதும் போற்றப்பட வேண்டியவர்!

No comments:

Featured Post

சிறந்த கேட்கும் திறன் கொண்ட மரம்

"சிறந்த கேட்கும் திறன் கொண்ட மரம்" இந்த உயிரினம் எதற்காக இறைவன் படைத்திருப்பான் இதனால் என்ன பயன் என்று சில உயிரினங்களை...