Friday, March 3, 2023

தேன் & துளசியின் மருத்துவ பலன்கள் :

 


மூளை சோர்வு, மூளை பலம்: 


10 துளசி இலையை எடுத்து ஒரு குவளை நீரில் போட்டு காய்ச்சி ஏலக்காய் 2, தேன் 2 டீஸ்பூன், சிறிது பசும்பால் கலந்து பருகினால் களைப்படைந்த மூளை சோர்வு நீங்கி சுறுசுறுப்படையும். சிறிது துளசி இலையை ஒரு டம்ளர் நீரில் போட்டு ஊற வைத்து அந்தத் தண்ணீரை குடித்தால் மூளை பலம் பெரும்.

புகைப்பிடிப்பதால் வரும் கேட்டிற்கு: 

துளசி இலை தூதுவளை கண்டங்கத்திரி இம்மூன்று இலைகளையும் ஒவ்வொரு கைப்பிடியளவு எடுத்து லேசாக எடுத்து ஒரு லிட்டர் நீரில் போட்டு அத்துடன் சுக்கு மிளகு திப்பிலி மூன்றிலும் பத்து கிராம் எடுத்து இடித்து கலந்து காய்ச்ச வேண்டும். அக்குடிநீர் கால் லிட்டராக வற்றியதும் வடித்து சிறிது தேன் கலந்து வைத்து கொண்டு காலை மாலை 18நாள் சாப்பிட குணமாகும்.

நெஞ்சுவலி குணமாக: 

அரைக்கைப்பிடியளவு துளசி இலையுடன் அரை கைப்பிடியளவு கற்கண்டை பொடித்து போட்டு 2ஸ்பூன் தேன்விட்டு அடுப்பில் வைத்து அதனுடன் 400மில்லி தண்ணீர் விட்டு 200மில்லியாக வற்ற வடிகட்டி வேளைக்கு 2 தேக்கரண்டி வீதம் 2 வேளை பருகிவர நெஞ்சுவலி குணமாகும்.

No comments:

Featured Post

உணவு முறைல முடிஞ்ச அளவு மாற்றம் பண்ணுங்க.

  நாம ஏன் சோணகிரியா இருக்கோம்? தொத்த பாடியா இருக்கோம்? பழங்கால மக்களுக்கு மட்டும் எப்படி திமில் கொண்ட தோளும், மதர்த்த நெஞ்சும் வந்தது? உணவு ...